Followers

Copyright

QRCode

Tuesday, January 10, 2012

டாக்டர் vs டாக்டர் – பொங்கல் ரேஸில் ஜெயிக்க போவது யாரு?
டிஸ்கி : இது கண்டிப்பாக டாக்டர் அவர்களை ஓட்டும் பதிவுதான். ஆனால் எந்த டாக்டர் என்பது படிக்கும் உங்கள் மனநிலையை பொறுத்தது?வரும் வியாழன் நண்பன் வெளிவருகிறதாம். நான் பிளாக் எழுத ஆரம்பித்து இதுவரை வந்த விஜய் படங்கள் அனைத்துமே மொக்கை படங்களாகவே வந்திருக்கிறது. அது ஒருவகையில் நமக்கு சாதகமான விஷயமே. விஜயை ஓட்டுவதை விட அவரின் ரசிகர்களை ஓட்டுவதில் ஒரு தனி இன்பம் இருக்கதான் செய்கிறது. காரணம் ஒவ்வொரு படமும் வருவதற்க்கு முன்னாள் சமூக இணைய தளங்களில் அவர்கள் பேசும் பேச்சுகள்தான். படம் வந்தபின்னர் ஊரே கடுப்புடன் அவர்களை பழிவாங்குவதற்க்கு காரணம் இதுதான். 

முன்பெல்லாம் தீவிர விஜய் ரசிகர்கள் அவர்கள் படம் வரும்பொழுது கூடவே அஜீத் படமும் வெளிவந்தால் பேஸ்புக் , ஆர்குட் என்று எல்லா இடங்களிலும் ஆன்டி அஜீத் இயக்கம் என்று ஒரு கம்யூனிட்டி உருவாக்கி அதில் வெளிவர போகும் அந்த அஜித் படத்தையும் அதில் அவரின் கெட்டப்பையும் நாறடிப்பார்கள். முதலில் இது அஜித் விஜய் ரசிகர்களின் சண்டையாகவே பார்க்கபட்டது, ஆனால் ரஜினியின் சந்திரமுகியும்  விஜய்யின் சச்சினும் ஒன்றாக வெளிவந்த காலகட்டங்களில் விஜய் ரசிகர்கள் ஆன்டி ரஜினி  கம்யூனிட்டிகளை உருவாக்கிய பொழுதுதான் அவர்களின் வக்கிரபுத்தி உலகம் அறியதொடங்கியது. அடுத்து அவர்கள் தனுஷ் , சூரியா , சிம்பு என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. தனுஷ் பொல்லாதவனில் அழகிய தமிழ் மகனை புரட்டி புரட்டி எடுத்ததிலிருந்து  இப்பொழுதெல்லாம் தனுஷ் படம் வெளியாகும் பொழுதெலாம் ஆன்டி தனுஷ் கம்யூனிட்டி அதிகம் உலவ ஆரம்பித்து விட்டது. வேலாயுதத்துடன் 7 ஆம் அறிவு ரிலீசாகிய  தருணங்களில் இந்த இணையதளங்களில் தீவிர விஜய் ரசிகர்களால் 7 ஆம் அறிவு எந்த அளவுக்கு நாறடிக்கபட்டது என்பதை உலகம் அறியும்...  


சரி விசயத்திற்க்கு வருவோம் , இப்படி சச்சின் , சுறா போன்ற மொக்கை படங்கள்  வெளிவரும் போதெல்லாம் அளவுக்கு அதிகமாக ஆடிய விஜய் ரசிகர்கள் இப்பொழுது 3 இடியட்ஸ படத்தின் ரீமேக்கில் , அதுவும் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் என்று விஜய்யால் அன்புடன் அழைக்கபடும் , ஹை பட்ஜெட் பேரரசு  ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் நண்பன் படம் வெளிவரபோகும் சமயம் மிக அமைதியாக எந்த ஆராவாரமும் இல்லாமல் இருக்கிறார்களே என்று பலருக்கு  சந்தேகம் வரலாம்... ஆம் அவர்கள் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவே இருக்கிறார்கள் , ஆனால் அவர்கள் திருந்திவிட்டார்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள்... அவர்கள் வேறுவழியில்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். .. நண்பன் படம் வெளிவரும் அதே நாளில் இன்னொரு நடிகரின் படமும் வெளியாகபோகிறது என்று காற்று வழி செய்திகள் இப்பொழுதே கசியதொடங்கியதான் விளைவே இவர்களின் இந்த அமைதி.. ஆம் சென்ற வருடம் வந்த பெரிய நடிகர்கள் படங்கள் நூறு நாட்கள் ஓடுவதற்கே முக்கி கொண்டிருந்த பொழுது , வெற்றிகரமாக முன்னூறு நாட்களை  தாண்டி இன்றும்   ஓடி கொண்டிருக்கும் லத்திகா படத்தின் நாயகன் பவர் ஸ்டார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடும் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை படம் பொங்கலுக்கு வெளிவரபோகிறதாம்.

இப்பொழுது புரிகிறதா விஜய் ரசிகர்களின் அமைதிக்கு காரணம்? பவர் ஸ்டாரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியாதா? ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே பவர் ஸ்டாரின் மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்து கொண்டிருப்பதை அறிந்து தன்னுடைய ராணா படத்தின் ஷூட்டிங்கை தள்ளிவைத்திருக்கிறார். அப்படிபட்ட பவர் ஸ்டாரை எதிர்க்க முடியுமா? அதையும் மீறி விஜய் ரசிகர்கள் சிலர் பேஸ்புக் ஆர்குட் என்று சில இடங்களில் பவர் ஸ்டாரை கேலிசெய்து சில கம்யூனிட்டிகளை உருவாக்கியதாகவும் , ஆனால் அதை தொடங்கியவுடனே நம் பவர் ஸ்டார் கொலைவெறி படை  பவர் ஸ்டாரின் கீழ்க்கண்ட சில படங்களை அந்த கம்யூனிட்டிகளில் அப்லோட் செய்து அவற்றை சின்னாபின்னமாக சிதைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தளபதியின் போர்படை பவர் ஸ்டார் ரசிகர்கள் நடத்தும் கம்யூனிட்டிகளில் தளபதியின் கீழ்க்கண்ட சில படங்களை அப்லோட் செய்து சிதைத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது...
படம் வெளிவருவதற்க்கு முன்னரே இவ்வளவு போட்டி என்றால் படம் வெளிவந்தால் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று தெரிந்து கொள்ள தமிழகம் மட்டுமில்லை , உகாண்டா , நபீமியா என்று பவர் ஸ்டார் ரசிகர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ரசிகர்கள் ரத்தம் சூடேறிபோய் அலைகிறார்கள்...
பொறுத்திருந்து பார்ப்போம் ஜெயிக்க போவது போலி டாக்டரா இல்லை ஒரிஜினல் டாக்டரா என்று?


விஜய் ரசிகர்கள் யாராவது இந்த பதிவை படித்து என்னை திட்டி கமெண்ட் போடும் எண்ணத்தில் இருந்தால் தயவுசெய்து   பதிவின் தொடக்கத்தில் இருக்கும் டிஸ்கியை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு கமெண்ட் போடவும்

3 comments:

மனசாட்சி said...

ம்...

சி.பிரேம் குமார் said...

ம்ம் செம சிரிப்பு பாஸ்.இயக்குனர் சங்கர் என்பதால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

படம் எப்போ வந்தா என்ன, நாமதான் எப்பவோ விமர்சனம் ரிலீஸ் பண்ணியாச்சே....?

LinkWithin

Related Posts with Thumbnails