(இந்த வருடத்திலிருந்து இந்த வலைபூவில் வேறு சில நண்பர்களையும் எழுதவைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்னுடைய சிந்தனைகளை மட்டுமே இங்கு எழுதிக்கொண்டிருந்தால் மிக விரைவில் இதை படிக்கும் நண்பர்களுக்கு போர் அடித்துவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு. இதன் முதல் கட்டமாக எனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் கடவுள் பற்றிய அவர்களின் கருத்துகளை எழுதசொல்லி ஒரு தொடராக அவற்றை வரிசையாக இந்த வலைபூவில் வலையேற்றலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த வரிசையில் என்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியரும் , நண்பருமான வினோத் அவர்களின் கட்டுரை இந்த பதிவில். அவர் இதை ஒரு முன்னோட்டமாக என்னுடைய வலைபூவில் பதிவேற்றுகிறார். அவரின் எழுத்து நடை உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட்டில் அவரை ஊக்கபடுத்துங்கள், ஏதேனும் பிழைகள் இருந்தாலும் தெரியபடுத்துங்கள் நாங்கள் திருத்திக்கொள்ள)
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இவ்வுலகில் பல விஷயங்கள் நமது அறிவுக்கு எட்டாதவையாகவே உள்ளது. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அது கடவுள் தானா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. அந்த சக்தியைதான் இவ்வுலகில் உள்ள மக்கள் கடவுளாக வழிபடுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். பல விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும் அதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்றால் அதை நீருபிக்க வேண்டும். பல விஷயங்களை நிரூபணம் மூலம் நம் அறிவியல் அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். கடவுள் இருக்கிறார் என்று சொல்ல தெரிந்த அவர்களுக்கு கூட நிரூபிக்க தெரியவில்லை. எனது கோணத்தில் பல விஷயங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது அதில் கடவுளும் ஒன்று என்றே நான் கருதுகிறேன். இதற்கு உதாரணமாக பூமிக்கு கீழே என்ன உள்ளது, அகாயத்துற்கு மேல என்ன உள்ளது என்று எல்லாம் நாம் பார்க்க இயலாது. ஆனால் மற்றவர்கள் கருத்தை நாம் நம்புகிறோம் அவன் நாதீகன் ஆகட்டும் அல்லது ஆத்திகன் ஆகட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிவியல் கொண்டோ அல்லது கணிதம் கொண்டோ நிரூபிக்க இயலாது. ஏன் என்றால் கடவுள்(ஒரு சக்தி) என்பவரை ஒரு குறுப்பிட்ட வட்டதிற்குள் அடைக்க இயலாது. பல விஷயங்களில் நாம் நம் முன்னோர்களேயே கடைபிடிக்குறோம். இவ்வுலகில் பெரும்பான்மையான விஷயங்கள் உறுதி செய்ய நாம் கடைபிடிப்பது பெரும்பாலானோர் சொல்வதிலிருந்தே நாம் அதனை உறுதி செய்கிறோம். அது போல இவ்வுலகில் பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடிப்பதை கொண்டு நாம ஒரு முடிவுக்கு வருவோம். இவ்வுலகில் நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது அது கடவுளாகவும் இருக்கலாம் என்று.
இவ்வுலகில் பலர் நிம்மதியை தேடி அலைகின்றனர் அதற்கு பெரும்பாலானோர் தேர்வு செய்யும் இடம் கோவில்களும் ஆலையங்களுமே அதற்கு காரணமும் உள்ளது. அங்குதான் அவர்களுக்குள்ள ஆனவத்தையும் தலைக்கனதையும் சிறிது ஒதுக்கி வைக்கின்றனர். இவ்வுலகில் தேடல்கள் அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் அதிகரிக்கதான் செய்கின்றன. அதற்காக நான் தேடாமல் இருக்க சொல்லவில்லை கடவுளை பற்றி ஆராய்ச்சி செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறேன் ஏனென்றால் அதை ஆராயும் அளவுக்கு நமக்கு அறிவு போதுமா என்றுதான் எனக்கு தெரியவில்லை. ஒன்றுமே படிக்காதவனிடம் போய் விஞ்ஞானம் பற்றி விவரிக்க இயலாது அது போலதான் கடவுளை பற்றி தெரியாதவனிடம் போய் கடவுளை பற்றி விவரிக்க இயலாது. இவ்வுலகில் பல விஷயங்கள் சூட்சமமாகவே உள்ளன அதில் கடவுளும் ஒன்று என்றே நான் நம்புகிறேன். பிறகு வேறு வழிதான் என்ன கடவுளை பற்றி தெரிந்து கொள்ள என்று நீங்கள் கேட்கும் கேள்வியின் ஆதங்கம் எனக்கு புரிகிறது.
இவ்வுலகம் முழுவதும் அணுக்கலால் ஆக்கபட்டது இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு சக்தி உள்ளது. அது போல நம் கற்பனைக்கும் சக்தி உள்ளது எண்ணங்கள் மிக வலிமையானவை நம் எண்ணத்தின் மூலம் ஒரு பொருள் இருப்பதாக நினைத்தால் அப்பொருள் இல்லை என்றாலும் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளது. அதுபோல் கடவுள் இருக்கிறார் / இல்லை என்று நினைத்தாலும் அது அவரவர் மன நிலையை பொறுத்தே கடவுள் உருவாகலாம் அல்லது உருவாகமலும் போகலாம். அதற்காக கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்று சொல்ல இயலாது. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அதைத்தான் இக்கட்டுரையில் நான் கடவுளாக உருவகப்படுத்தி உள்ளேன். அச்சக்தியை பற்றி ஆராயும் அளவுக்கு நமக்கு அறிவு போதாமையால் அதை இல்லை என்று சொல்லிவிட முடியாது. எண்ணங்கள் மிக வலிமையானவை அந்த எண்ணங்களில் இருந்து சொல் உருவாகிறது சொல்லில் இருந்து செயல் உருவாகிறது செயலில் இருந்து பழக்கம் உருவாகிறது அப்பழக்கதில் இருந்து பண்பாடு உருவாகிறது. நம் பண்பாடு அனைத்தும் நம் எண்ணத்தை சார்ந்தே உள்ளது. ஆகையால் நம் எண்ணத்தை தூய்மையாக வைத்திருப்போம். நம் பண்பாட்டை உயர்த்த பாடுபடுவோம்.
************************************************************************
No comments:
Post a Comment