Followers

Copyright

QRCode

Wednesday, February 17, 2010

அசல் அஜித்திற்கு வெற்றியா?

ஒரு வழியாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்கபட்ட அசல் படம் வந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற வெறி (ஏகன் அந்த அளவிற்கு அவர்களை காய போட்டு விட்டது), விஜய் ரசிகர்களுக்கோ படம் வெற்றி பெற்றுவிட கூடாது என்ற பயம் (குருவி, வில்லு, வேட்டை என்று விஜய் தொடர் தோல்விகளை கொடுக்கும் பொது அஜித் வெற்றி பெற்றுவிட கூடாதே) . இதில் யார் நினைத்தது நடந்தது?


இந்த படத்தை பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் கண்டிப்பாய் புரியும் அது என்னவென்றால் இது அஜித் முழுக்க முழுக்க அவருடைய ரசிகர்களுக்காக எடுத்த படம் என்பது. பில்லா படம் வந்த பிறகு அவருடைய ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது ஸ்டைலிஷான படமே. போன sunday இமயம் டீ.வீ யில் சரணின் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி காண்பித்தார்கள், அதில் சரண் ஒரு விசயத்தை தெளிவாய் கூறினார், இந்த படத்தை ஆரம்பிக்கும் போது சரணிடம் ஒரு சின்ன தயக்கம் இருந்ததாம் , கதை ரொம்ப சாதாரணமான பழிவாங்கள் கதைதானே என்று, ஆனால் அஜித் அவரிடம் நீங்கள் இந்த படத்தை ரொம்ப ரிச்சா காட்டுங்க என்னுடைய ரசிகர்கள் கண்டிப்பாய் பார்ப்பார்கள் என்று ரொம்ப நம்பிக்கையாய் கூறினாராம். இதிலிருந்தே தெரிகிறது அவர் யாரை நம்பி இந்த படத்தை எடுத்தார் என்று. சரி அஜித் ஏன் தன்னுடைய ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்க வேண்டும், ஏன் எல்லோரும் பார்த்து ரசிக்கும்படியான ஒரு ஜனரஞ்சகமான படம் எடுக்க வேண்டியதுதானே? அவரால் அப்படி படம் எடுக்க முடியாதா? முடியும் வரலாறு , கிரீடம் எல்லாம் அப்படி பட்ட படங்கள்தானே. ஏன் அசல் தன ரசிகர்களுக்கான படம் என்று முடிவு செய்தார். எல்லாம் ஒரு ஆசைதான், முதலில் ஒரு சாக்லேட்பாயாக நடித்து கொண்டு இருந்தவர் அப்படியே நடித்து கொண்டு இருந்தால் காணமல் போய் விடுவோம் என்று எண்ணி ஆக்சன் ஹீரோவாக ஆசைப்பட்டு சில படங்களில் நடித்தார். முதலில்(உல்லாசம் ) அவருக்கு தோல்வி கிடைத்தாலும், சில முயற்சிகளுக்கு பின் அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைத்தன (அமர்க்களம்  , தீனா), ஆனால் அதன் பின்னால் அவரால் காதலை மையமாக கொண்ட   படங்களில் வெற்றியை தர முடியவில்லை. பூவெல்லாம் உன் வாசம் , ராஜா போன்ற படங்கள் பெரிய அளவில் பேச படவில்லை, இதில் பூவெல்லாம் உன் வாசம் பாடல்கள் நன்றாக இருந்தும் தோல்வியை சந்தித்த படம். காரணம் அவர் ரசிகர்கள் படத்தை முதல் நாளே பார்த்து விட்டு அவர்களுக்கு திருப்தி அளிக்காத காரணத்தினால் செய்த எதிர்மறை விமர்சனங்கள். ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை படம் குப்பை போல என்று நினைத்து மற்றவர்களும் படத்தை கண்டுகொள்ளவில்லை. பின்னர் அவர் நடித்த வில்லன், அட்டகாசம் போன்ற படங்கள் அவர் ரசிகர்களை பெரிய அளவில் ரசிக்க வைத்ததினால் படமும் வெற்றி பெற்றது. அதே சமயம் ரசிகர்களுக்காக அவர்  நடித்த ஆஞ்சநேயா, ஜனா போன்றவை மிக பெரிய தோல்விகளை தந்தது. அந்த படங்களை பார்த்தால் ஒரு விஷயம் தெளிவாக தெரியும் , அந்த படங்களிலும் அவர் ரசிகர்கள் ரசிக்கும் படியான காட்சிகள் இல்லை (சண்டை காட்சிகளை தவிர).சரி அப்படி என்றால் அவர் ரசிகர்கள் எதை விரும்புகிறார்கள்? அவரே குழம்பி போய் இருந்த சமயத்தில் சரண் அதற்க்கு விடை கொடுத்தார் அட்டகாசம் மூலமாய். காட்சிக்கு காட்சி தல வசனங்கள், அதிரடியான பாடல்கள், தல புகழ் பாடும் ஒரு துதி பாடல் , அந்த படம் முதல் பத்து நாட்களிலேயே பெரிய வசூலை அள்ளி தந்தது. second release செய்யும் திரை அரங்குளளிலும் பெரிய ஒப்பெநிங்கை கொடுத்தது படம்.

ஆனால் அவர் இதுதான் தன் பாதை என்று அப்பொழுதும் முடிவு செய்யவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த படம் 'ஜி', ஹீரோயசமே இல்லாத அமைதியான படம்.பாடல்களும் நன்றாக இருந்தன , படத்தில் அஜித் தோற்பதாய் காட்டி இருப்பார் இயக்குனர் லிங்குசாமி. படம் வித்தியாசமான படங்களை ரசிக்கும் ரசிகனுக்கு பிடித்து இருந்தாலும் , தல ரசிகர்கள் ரசிக்கவில்லை. லிங்குசாமியிடம் சண்டையெல்லாம் போட்டனர் அவர்கள். படம் பெரிய தோல்வி. அதன் பின்னர்தான் அவரின் போக்கு மாறியது, இனி தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் படங்களையே தருவது என்று முடிவு செய்தார். வரிசையாய் வந்தன பரமசிவன், திருப்பதி, ஆழ்வார் என்று.வரலாறு படம் ரொம்ப நாட்களுக்கு முன்னரே எடுக்க ஆரம்பித்த படம் எனவே அது இந்த வரிசையில் சேராது. இதில் பரமசிவன் மற்றும் திருப்பதி அவர் ரசிகர்களுக்கு பிடித்து இருந்ததினால் ஓரளவு வெற்றி பெற்றன. ஆழ்வார் அவர் ரசிகர்களாலே தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் எடுத்த கிரீடம் அவரின் வித்தியாசமான படங்களில் ஒன்று, அதுவும் அவர் ரசிகர்களுக்கு பிடிக்காத காரணத்தினால் தோல்வியை தழுவியது. சென்னை பாக்ஸ் ஆபீசில் முதல் வாரத்தில் கிரீடம் வசூலித்தது முப்பத்தி இரண்டு லட்சங்கள் மட்டுமே. ஆனால் அதன் பின்னால் வந்த பில்லா அவரின் ரசிகர்களின் அதிபயங்கர எதிர்பார்ப்பின் காரணமாய் எழுபத்தி எட்டு லட்சங்களை  அள்ளி குவித்தது . இதுதான் அஜித் ரசிகர்களின் பின்னால் செல்ல காரணம். ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்றுவிட்ட அஜித் மாஸ் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசையில் தன்னுடைய அடுத்த அடியை எடுத்து வைக்க ஆசைப்பட்டு விட்டார். அதற்க்கு அவர் தெரிவு செய்தது ரஜினியின் வழியை. ரஜினியின் படங்களை பார்த்தால் அவரின் படங்களில் கதையே இருக்காது , அவர் மட்டும்தான் இருப்பார் அருணாசலம், பாட்சா  , முத்து போன்ற படங்களில் ரஜினி தவிர வேறு யாராவது நடித்து இருந்தால் என்னவாகி இருந்திருக்கும் அந்த படம்?

 படம் ஓடியது ரஜினிக்காக மட்டும்தான், இதுதான் ஒரு மாஸ் ஹீரோவின் அளவுகோல்....அப்படி தனக்காக மட்டுமே ஓட வேண்டும் என்று எண்ணி அஜித் ஒரு காலத்தில் எடுத்த படம் ரெட், ஆனால் படம் பப்படம் ஆனது. ரஜினியின் படங்களை சாதாரண ரசிகனும் ரசிக்க காரணம் அதில் வரும் அவர் சார்ந்த காமெடி காட்சிகள், ஆனால் அஜித்திற்கு அது சுத்தமாய் வருவதில்லை, பிறகு எப்படி பிற ரசிகர்களை தன்னுடைய படத்தை ரசிக்க வைப்பது என்று யோசித்து கொண்டு இருந்தவருக்கு விடை கொடுத்தது பில்லா. அதனுடைய high tech presentation படத்தை எல்லோரையும் ரசிக்க வைத்தது. அட்டகாசத்தையும் பில்லாவையும் ஒரே திரையில் ஓட்டி பார்த்த பொழுது கிடைத்தது அவருக்கு மாஸ் ஹீரோவுக்கான பார்முலா. ரசிகர்களுக்காக அட்டகாசம் build ups,  மற்றவர்களுக்கு பில்லா presentation அந்த பார்முலாவில் எடுக்க பட்டதுதான் அசல் ..

ஆனால் இது அஜித் நினைத்த மாஸ் ஹீரோ இமேஜ் அவருக்கு தந்ததா என்றால் , குரங்கு பிடித்த கதைதான்... காரணம் எல்லாம் இருந்தும் உப்பு இல்லாமல் பொய் விட்ட 5 star hotel ரெசிப்பி மாதிரி , அஜித் , அவரின் ஸ்டைல், பாவனா, கண்ணுக்கு இதமான ஒளிப்பதிவு, விறுவிறுப்பான முதல் பாதி என்று எல்லாம் இருந்தும் இருக்க வேண்டிய கதை இல்லாமல் போனது பொதுவான ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே தந்து விட்டது..ஆனால் இந்த படத்தின் மூலமாய் அவருக்கு கிடைத்த பலன் அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை சற்று பெருகி இருக்கும் , (ஒருவன் ஒரு நடிகனின் ரசிகனாய் ஆவது எப்போது என்றால் அவனுக்கு பிடித்த படம் மற்றவர்களால் கிண்டல் செய்யப்படும் பொழுது, அவன் அதற்க்கு சப்போர்ட் செய்து பேசினால் மற்றவர்களால் அவன் ரசிகன் என்று முத்திரை குத்தப்பட்டு விடுவான். பின்னர் அவனே தன்னையும் அறியாமல் ரசிகன் ஆகி விடுவான். விஜய்க்கும் அஜித்திற்கும் அதிக படியான ரசிகர்கள் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அந்த வகையில் சிலருக்கு பிடித்தும் சிலருக்கு பிடிக்காமலும் போய் விட்ட இந்த அசல் அவருக்கு இன்னும் கொஞ்சம் ரசிகர்களை உருவாக்கி கொடுக்கும் என்று நம்பலாம்.)
ஆனாலும் இது அஜித் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி , சற்று சறுக்கி இருந்தாலும் இன்னும் கவனமாய் முயற்சி செய்தால் அவர் நினைத்த உயரத்தை அடைந்து விடலாம்.
மொத்தத்தில் அசல் அஜித் ரசிகர்களுக்கு வெற்றி, ஆனால் அவருக்கு தோல்வி. 


என்னுடைய போன பதிவிற்கு பதிமூன்று ஓட்டுகள் போட்டு தமிளிஷில் பிரபலமடைய செய்த அனைவருக்கும் நன்றி. இதுவும் பிடிச்சி இருந்தா மறக்காம ஓட்டு போடுங்க.

4 comments:

கார்க்கிபவா said...

சுறாவும், தல 50வது படமும் வெற்றி பெற வாழ்த்துகள்..

"ராஜா" said...

நன்றி கார்க்கி கண்டிப்பாய் வெற்றி பெற வேண்டும் இரண்டு படமுமே .... அவர்களின் ரசிகர்களுக்காக சந்தோஷத்திற்காக

pradeep said...

Both have to be success for the sake of producers.......

"ராஜா" said...

//Both have to be success for the sake of producers.......
producers never face loss by this two actors. Thats why still several producers waits on queue to get their call-sheet.

LinkWithin

Related Posts with Thumbnails