அசல் அஜித்தும் போலி அரசியலும்
தலைமகனுக்கு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழாவில் தல அஜித் பேசிய பேச்சுதான் இப்ப தமிழ்நாட்டு அரசியல்ல ஹாட் டாபிக். அதில் அவர் பேசிய பேச்சுக்கு பல இடங்களில் இருந்து பாராட்டுகளும் பல இடங்களில் இருந்து திட்டுகளும் வந்து கொண்டே இருக்கின்றன. அப்படி என்ன அவர் பேசினார்? பொதுவா பாராட்டு விழாவுக்கு போய் மைக்க புடிக்கிறவங்க எல்லாம் யார பாராட்டுரோமோ அவர பத்தி தெரியுமோ தெரியாதோ நல்ல விதமா நாலு வார்த்த பேசிட்டு வந்துருவாங்க.. அதும் அவர் அரசியல்வாதியா இருந்தா கேட்கவே வேணாம் எங்கள் தெய்வமே , எங்கள் தலைவனேனெல்லாம் புகழ்ந்து தீத்துடுவாங்க . ஆனா உண்மையிலேயே பாத்தோம்னா அவங்க யாருக்குமே அங்க வந்து பேசுறதுக்கு இஷ்டம் இருந்திருக்காது. சில பல அரசியல் காரணங்களாலும் இல்லை தங்களுக்கு பின்னாடி எந்த பாதிப்பும் வந்து விட கூடாது என்றும் ஒப்புக்கு வந்து பேசிட்டு போய்டுவாங்க. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது என்று பொது மேடையிலே ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே தைரியமாய் சொன்ன ரஜினிகூட இப்பொழுது எல்லா பாராட்டு விழாவிற்கும் வேறு வழி இல்லாமல் வந்து விடுகிறார். அவருக்கு கடந்த காலத்தில் கிடைத்த சில கசப்பான அனுபவங்களே அவரை கட்டி போட்டு வைத்திருக்கிறது. ஏனென்றால் சினிமா எப்பொழுதும் அரசியல்வாதிகளின் கைபொம்மைதான். அரசியலை சினிமா ஆண்டதெல்லாம் புரட்சி தலைவரின் காலத்தோடு முடிந்து விட்டது. அன்றைய நிகழ்ச்சியும் அப்படிதான் ஒப்புக்கு சப்பாணியாய் போய்கொண்டு இருந்தது ,
அஜித் மைக் பிடிக்கும் வரை. அவர் மேடை நாகரீகத்தின் காரணமாய் தலைமகனை பற்றி கொஞ்சம் புகழ்ந்து பேசி விட்டு தன சரவெடியை ஆரம்பித்தார் . யாருமே சொல்லுவதற்கு தயங்கிய அல்லது பயந்த ஒரு விஷத்தை தைரியமாய் கூறினார். எங்களில் பலருக்கு இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமில்லை , எங்களை மிரட்டித்தான் இங்கே வர செய்கின்றனர் , நீங்கதான் இத தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் மனதில் பட்ட விசயத்தை போட்டு உடைத்தார். அவர் கூறியதை ஆமோதிக்கும் வகையில் ரஜினியும் உடனே எழுந்து நின்று கைதட்டி தன் ஆதரவை தெரிவித்தார், பூனைக்கு தான் கட்ட வேண்டிய மணியை அஜித் கட்டிவிட்டதை அவர் உடனே பாராட்டினார். ரஜினிக்கு தெரியும் தான் இந்த பூனைக்கு மணி கட்டினால் பூனை யானை ஆகிவிடும் பின் அதை கட்டி மேய்பதற்க்கு பல மன்னிப்புகளை அள்ளி வழங்க வேண்டும் என்று. இப்பொழுது அந்த யானையை அஜித் கட்டி மேய்த்து கொண்டு இருக்கிறார்.
அவர் இவ்வாறு பேசியதை வழக்கம் போல அவருடைய எதிர்பாளர்கள் திரித்து கூற ஆரம்பித்து விட்டார்கள். அதில் அவர்கள் சொன்ன முதல் குற்றசாட்டு, இவ்வாறு நடக்கும் எல்லா விழாக்களும் எதோ ஒரு சமுதாய பிரச்சனைகளுக்காக நடைபெறுபவைதானே ? இதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னால் அவருக்கு அந்த மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலை இல்லை என்றுதானே அர்த்தம் ? தன்னுடைய படம் ஓடுவதற்கு மட்டும் மக்களின் தேவை வேண்டுமாம் இவருக்கு, அதே மக்களுக்கு ஏதாவது பிரட்சனை என்றால் வந்து கலந்துகொள்ள மாட்டாராம் , இது எவ்வளவு பெரிய சுயநலம் என்பதுதான். அப்படி கூறுகின்றவர்கள் ஒரு விசயத்தை கவனிக்க வில்லை , தனக்கு சமுதாய பிரச்சனைகள் தேவை இல்லை என்று அவர் கூறவில்லை ,அந்த பிரச்சனைகளை தீர்பதாய் சொல்லி கொண்டு நடக்கும் சிலரின் சுயநலத்திற்காக மட்டுமே பயன் படுகின்ற கூட்டங்களை மட்டுமே அவர் தேவை இல்லை என்றார்.. காவேரி பிரச்சனையின் மூலமாய் யாருக்கு லாபம் கிடைத்தது? தஞ்சைக்கு அந்த காவேரி கிடைத்து விட்டதா என்ன? அதன் மூலம் சிலர் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டனர்.அவர்களுக்கு மட்டுமே அந்த பிரச்சனை , அதை ஒட்டி நடந்த கண்டன கூட்டங்கள் மூலமாய் லாபம். மக்களுக்கு கிடைத்தது வழக்கம் போல நாமம்... சரி திரை துறையினர் வந்து கண்டனம் தெரிவித்தால் எல்லா பிரச்ஷனைகளும் தீர்ந்து விடுமா? மக்கள் பிரச்சனைகளை விடுங்கள் அவர்கள் பிரச்ச்சனைகலாவது தீர்ந்ததா? திருட்டு vcd யை ஒழிக்க அவர்கள் எத்தனை முறை ஊர்வலங்கள், கண்டன கூட்டங்கள் நடத்தினார்கள், ஒழிந்ததா? சரி இவர்கள் கலைஞரை மட்டும்தான் பாராட்டி பேசுவார்களா ? நாளைக்கு அம்மா ஆட்சிக்கு வந்தால் இந்த மொத்த கூட்டமும் அம்மாவின் துதி பாட போய் விடும், இப்ப அய்யாவ புகந்து பேசுனவங்க அப்புறம் கூசாம அம்மாவ புகழ்ந்து பேசுவாங்க, முதுகெலும்பு இல்லாத கூட்டத்துக்கு வேண்டுமானால் அது சரி பட்டு வரும் , அனால் மற்றவர்களுக்கு? மத்தவங்க மிரட்டலுக்கு பயந்து இல்லை வளைந்து கொடுத்து இப்ப அய்யாவுக்கும் நாளைக்கு அம்மாவுக்கும் மாத்தி மாத்தி ஒத்து ஊதுனாநீங்க ஒத்துக்குவீங்களா அஜித் நல்லவருன்னு?
ஆனால் அஜித்தின் இந்த அதிரடி பேச்சு அவருக்கு பலவிதங்களில் தொல்லைகளை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. கலைஞர் டிவி யில் ஒளிபரப்பபடபோகும் அந்த விழாவில் அவருடைய பெயர் சொல்லபடவே இல்லை, இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் தலைமகன் அவர் மேல் எவ்வளவு கோபத்தில் இருப்பார் என்று, முன்பு வாய்கொழுப்பு நடிகர் என்று திரைதுரையினரால் கூறப்பட்டு வந்த அஜித், இப்பொழுது அரசியால் வட்டாரத்திலும் அந்த பெயரை சம்பாதித்து கொண்டுள்ளார்.அவர் கூறிய அனைத்தும் உண்மைதான் என்றாலும் இவ்வாறு உண்மையை கூறுபவர்களுக்கு நம் சமூகம் அளிக்கும் பட்டம் பிழைக்க தெரியாதவன் என்பதுதான் ....
அஜித் ஒரு பிழைக்க தெரியாத மனிதர்தான் , அதனால்தான் விளம்பரத்தினால் மட்டுமே வெற்றிகளை குவித்து கொண்டு இருக்கும் சினிமா உலகில் அவருக்கு விளம்பரங்களே கிடைப்பதில்லை, எங்களுக்கு ஜால்ரா தட்டு உன்னை பெரிய மனிதன் ஆக்குகிறோம் என்று பலர் வரும் பொழுது அவர்களை உபயோகிக்க தெரியாமல் வீணடித்து விட்டார். கலைஞர் டிவி அவரை இருட்டடிப்பு செய்து தன் வேலையை காட்டி விட்டது.கலைஞர் சினிமா தொழிலில் உள்ள அவரின் சில அடிமைகளை வைத்து அஜித்தை திட்டியும் , அவர் மேல் புகார் கொடுக்க வைத்தும் பழி வாங்க ஆரம்பித்துவிட்டார். ஆனால் நேற்று மாலை அஜித் கலைஞரை நேரில் சென்று சந்தித்து பேசிய பின் எல்லாமும் மாறி விட்டது, கலைஞர் டிவி தன் விளம்பரத்தில் அஜித் பெயரை சேர்த்து கொண்டது , அவர் மேல் கொடுக்க பட்ட புகார்கள் எல்லாம் திரும்ப பெறப்படும். கலைஞர் வழக்கம் போல் செய்யும் அரசியல் சாணக்கியத்தனத்தை இந்த விசயத்திலும் வெற்றிகரமாய் நடத்தி காட்டி விட்டார். அஜித் நேர்மையானவர் என்பது மக்களுக்கு தெரிந்து விட்டது, இனிமேல் அவர் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தாலே போதும், நிம்மதியாய் இருக்கலாம்.இல்லை என்றால் ரஜினி போல அவரும் கலைஞரின் கைப்பாவையாய் மாற வேண்டி வரும்.... அப்படி நடந்தால் அவருக்கு இருக்கும் மிஸ்டர் கிளீன் என்ற இமேஜ் பறந்து விடும்
அவர் மேல் வீசப்படும் இன்னொரு குற்றசாட்டு அவர் தமிழன் இல்லை என்பதுதான், அது உண்மைதான் தமிழனை ஏமாற்ற தெரியாதவன் எப்படி தமிழனாய் இருக்க முடியும்?
8 comments:
யோவ் அஜீத்து, திரை பட உலகிலே நீ தான், மீச வச்ச முதுகெலும்பு உள்ள ஆம்பள.
//யோவ் அஜீத்து, திரை பட உலகிலே நீ தான், மீச வச்ச முதுகெலும்பு உள்ள ஆம்பள
இது உண்மையான பாராட்டா இல்ல அஜித் பாணி வஞ்சபுகழ்ச்சியா?
வந்து படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி....
Really I appriciate Mr.Ajith Kumar.I admired for ur boldness.I am a vijay fan,But i like this attidute from u.Keep it up.
அவர் மேல் வீசப்படும் இன்னொரு குற்றசாட்டு அவர் தமிழன் இல்லை என்பதுதான், அது உண்மைதான் தமிழனை ஏமாற்ற தெரியாதவன் எப்படி தமிழனாய் இருக்க முடியும்?
i cant vent out my anger like this.GOOD Post.
. sorry for ajith being honest..
Remember a scene in the film " Mudalvan' ,where raguvaran broke a party worker's hand from in side the car... That' raguvaran is none other than our aged CM
நெஞ்சில் பட்டதை சொல்வானே, நெத்தியடியிலே வெல்வானே
தல போல வருமா?
வாழ்த்துக்கள் ராஜா:))))
@ அனானி
நன்றி
@ தமிழன்
என்ன சொல்லுறீங்க?
@ கார்த்தி
ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல
@பாலா
உங்க "அஜித் என்னும் உழைப்பாளி" பதிவு எப்ப வரும்? சீக்கிரம் போடுங்க....
superb machchi, engalaip pondra ajith (thala0 rasihahalin ullangala nee sariya padam pottu kaattura.
vaalha neee. valarha unnoda sevai.
imran
sri lanka
Post a Comment