அண்மையில் நடந்த விழாவில் அஜித் பேசிய பேச்சும் அதன் பின்னர் நடந்த விசயங்களும் அனைவரும் அறிந்ததே.... விழாவில் நடுநாயகமாய் அமர்ந்து தன்னை பற்றிதான் அனைவரும் பேசுவர் என்று காது குளிர கேட்டு கொண்டு இருந்த தலைவர் , அஜித் விழாவை தன் பக்கம் இழுத்து கொண்டதையும், ரஜினி , அமிதாப் என அனைவரும் அவரை பற்றி பேசியதையும் கண்டிப்பாய் ரசித்து இருக்க மாட்டார். உள்ளுக்குள் எரிந்து கொண்டு இருந்த அந்த எரிச்சல் அஜித் அவரிடம் சரணாகதி அடைந்ததும் கண்டிப்பாய் அணைந்திருக்கும். ஆனால் அஜித் அவரை சந்தித்து பேசிய பின்பும் அவருக்கு மிரட்டல்கள் , வழக்கு பதிவுகள் என்று தொடர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் புரியவில்லை. ஒருவேளை தமிழ்நாட்டில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை பரிசோதித்து பார்க்க முடிவு செய்து விட்டார்களா? இன்றைய திரை உலகில் இருக்கும் மிக பெரிய சக்திகள் ரஜினி, கமல் தான். அவர்களுக்கு பின்னால் திரை உலகை ஆளும் சக்தி கொண்டவர்கள் இருவர் மட்டுமே அது அஜித் மற்றும் விஜய். இதில் ரஜினியின் சக்தி உலகம் அறிந்ததே, அதனால்தான் முதல்வர் அவரை பகைத்து கொள்ள விரும்பாமல் தன் அருகிலேயே வைத்து கொண்டு இருக்கிறார். கமலை பொறுத்த வரை அவரால் யாருக்கும் எந்த பாதிப்பும் வர போவது இல்லை. அடுத்து விஜய். அவர் சமீபத்தில்தான் தான் யார் என்பதை அவரே உணர்ந்து அடங்கி போய் இருக்கிறார். எனவே அடுத்த குறி அஜித்தான்... அவர் இதுவரை எந்த அரசியல் பிரச்சனைகளிலும் சிக்காதவர், எனவே அவரை யாராலும் மதிப்பிட இயலவில்லை. எனவே சமயம் பார்த்து கொண்டு இருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாய் அமைந்து விட்டது, பயன்படுத்திகொண்டு இருக்கிறார்கள். பார்ப்போம் என்ன நடக்கும் என்று....
நம்ம எல்லாருக்கும் அடுத்த வருஷம் நடக்க போற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியோட முழு அட்டவணையும் தெரியும், அடுத்த மாசம் நடக்க போற IPL போட்டியோட டிக்கெட் எங்க கெடைக்கும் எந்த எந்த போட்டி எங்க நடக்க போகிறது, எந்த டீவீயில அத ஒளிபரப்ப போறாங்ககிறதும் தெரியும். ஆனா இன்னொரு முக்கியமான விளையாட்டு போட்டு நம்ம நாட்டுல நடக்க போவுது , அது என்னாங்கிறது பாதி பேருக்கு தெரியாது... அது ஹாக்கி உலக கோப்பை போட்டி. அதுவும் நம்ம நாட்டுலதான் நடக்க போவுது... நம்ம வழக்கம் போல மறந்திடுவோம்... நம்ம மீடியா மக்களும் அந்த செய்திகளை ஏதோ கடனுக்கு போடுற மாதிரி ஒரு ஓரமா போட்டுக்கிட்டு இருக்காங்க, ஏன்னா அதுனால அவங்களுக்கு எந்த வருமானமும் கிடையாதே, ஹாக்கி உலக கோப்பை போட்டி மூலம் கிடைக்கிற மொத்த வருமானம் , கிரிக்கெட் மைதானத்தில கிடைக்கிற காண்டீன் வருமானத்த விட கம்மியாதான் இருக்கும். இத்தனைக்கும் ஹாக்கி நம்ம தேசிய விளையாட்டு, விளையாட்டுல கூட திறமைய விட பணமும் விளம்பரமும்தான் முன்னால நின்று கொண்டு இருக்கிறது.
கிரிக்கெட்ட பத்தி பேசிட்டு சச்சின்ன பத்தி சொல்லாம இருக்க முடியுமா? சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் பெரிய ஹிட்டான தேச பக்தி பாடல் ஆல்பம் மைல்சுர். அதன் முதல் வெர்சனில் சச்சின் கிடையாது. இப்பொழுது அதன் இயக்குனர்கள் அதன் மறு வெளியீட்டை இயக்கி கொண்டு இருக்கிறார்கள், அதில் சச்சின் நடிக்க உள்ளார். கண்டிப்பாய் பார்க்க வேண்டும்.
3 comments:
நன்று :)
நன்றி அசோக், வருகைக்கும் கருத்துக்கும்
சச்சின் பற்றிய செய்தி புதுசு... நன்றி பகிர்ந்து கொண்டதிற்கு
Post a Comment