Followers

Copyright

QRCode

Wednesday, February 24, 2010

தல தலைதான் பாகம் -2

பதிவுலகிற்கு நான் வந்து கிட்டதட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டது, வந்த புதுசுல எல்லாம் அஜீத்த பத்தியும் விஜயபத்தியும்தான் நெறைய எழுதிகிட்டு இருந்தேன், எல்லாம் என்னோட கடைய பிரபலபடுத்தனும்தான். இப்ப அதுல ஓரளவு வெற்றியும் கெடச்சிருக்கு. நான் எழுதுன எல்லா பதிவுகளுக்கும் அறநூறு ஹிட்ச்க்கு மேல வாரி வழங்கிய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என்னோட நன்றி. அதுவும் ஒரு அஜித் ரசிகனா அவர பத்தி எழுதிய எல்லா பதிவுகளுமே தமிளிஷ் தளத்துல பிரபல பதிவுகளாய் நெறைய ஓட்டுகள பெற்று முண்ணனியில வந்துருக்கு, அதுல நெறைய ஓட்டுகளை தல ரசிகர்கள்தான் போட்டுருப்பாங்க,அவங்களுக்கு நன்றின்னு வெறும் மூணு எழுத்துல சொல்ல எனக்கு மனசு வரல, கண்டிப்பா அஜீத்த பத்தி எனக்கு தெரிஞ்ச நெறைய விசயங்கள தொடர்ந்து நான் எழுதுவேன், அதுக்கு உங்களோட ஆதரவ தொடர்ந்து கொடுப்பீங்கன்னு நம்புறேன்.


தல தலதான் பார்ட்-1 படிக்க இங்க போங்க...எல்லா மனுசனுக்கும் ஒரு turning point வாழ்கையில இருக்கும் , அது அவன நல்ல வழியிலயும் கொண்டு போகும் சில சமயம் அவன அழிவு பாதையிளையும் கொண்டு போய் விடும். அது மாதிரி உனக்கு ஒரு நல்ல வழிய அமைத்து கொடுத்த படம் தீனா அந்த வழியில உனக்கு ஒரு மைல்கல்லா அமைந்த படம் சிட்டிசன்.
ஆனா உன்கூட இருந்த சில ஜால்ரா கூட்டங்கள் உன்ன அழிவு பாதையில வழி நடத்த ஆரம்பித்தார்கள். அப்ப அவங்க உனக்கு காட்டிய வழி , சூப்பர் ஸ்டார் வழி... ஆக்சன் ஹீரோவா வெற்றி பெற்ற நீ அடுத்த இலக்கா தேர்ந்து எடுத்தது மாஸ் ஹீரோவா மாறனும்கிறது.

மாஸ் ஹீரோக்களுக்கு ரொம்ப தேவையான விஷயம் ரசிகர் படை, அது உங்கிட்ட நெறயவே இருந்தது , ஆனா அது ஒன்ன மட்டும் வச்சிகிட்டு மாஸ் ஹீரோவா ஆக முடியாதே! சாதாரண சினிமா ரசிகனும் ரசிக்கிற மாதிரியான ஒரு கதை , அதை சரியான விதத்துல ப்ரெசென்ட் பண்ணுற ஒரு திரைக்கதை, படத்த மக்கள்கிட எடுத்துகிட்டு போக publicity வித்தை தெரிந்த ஒரு தயாரிப்பாளர், இப்படி எல்லாமே வேணும். இந்த விசயங்களுள நீ சறுக்குன ஒரு படம்தான் ரெட்... படத்துக்கு உன்னோட கெட்-அப் அட்டகாசமா இருந்தது, அது உன்னோட ரசிகர்கள் மத்தியில ஒரு பெரிய எதிர்பார்ப்ப தூண்டி விட்டது.

 படம் வெளிவந்தது 2003 பொங்கல், கண்டிப்பா கிங் ஆப் ஒப்பெநிங் அப்டிங்கிற பட்டம் அந்த படத்தோட ஒப்பெநிங்க பாத்துதான் உனக்கு திரை உலகத்துல கெடச்சிருக்கும்.. அதும் மதுரையில அந்த படத்தோட வெளியீட்ட ஒரு திருவிழா மாதிரி உன்னோட ரசிகர்கள் கொண்டாடினாங்க... ஆனா மேல சொன்ன கதை, திரைக்கதை, publicity இந்த மூணு விசயங்களில சருக்குனதுனால படம் சாதாரண சினிமா ரசிகன்கிட்ட போய் சேரல...

அந்த படம் செய்த ஒரே ஒரு சாதனை, உனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்காங்களா? அப்படின்னு எல்லாரையும் திகைக்க வைத்தது. படம் சரி இல்ல அப்படின்னு எல்லாரும் சொன்னாலும் , மதுரை அண்ணாமலை திரை அரங்குல நூறு நாட்கள் ஓடியது படம். அருப்புக்கோட்டை மகாராணி திரை அரங்கில் தோல்வி என்று சொல்லபட்ட அந்த படம் எழுபது நாட்கள் ஓடி வசூலை அள்ளி தந்தது.(அந்த ஊருல எழுபது நாட்களுக்கு மேல ஓடிய படங்கள் ரஜினியின் படையப்பா, சிவாஜி அப்புறம் விஜயின் கில்லி விக்ரமின் தூள் ஆனா இது எல்லாமே பெரிய ஹிட்).


ரெட் தோல்விக்கு பிறகு நீ நடித்து வெளி வந்த காதல் கதை ராஜா. முதலில் அந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்குவதாய் இருந்து பின்னர் தயாரிப்பாளர் மாறியதால் எழிலின் கைக்கு மாறியது படம். அதற்க்கு முந்தின வருடம்தான் எழில் இயக்கத்தில் நீ நடித்த பூவெல்லாம் உன் வாசம் படம் வந்திருந்தது. படத்தில் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் பேசபட்டன மீண்டும் அவரின் இயக்கம் என்றவுடன் உன்னோட ரசிகர்கள் அனைவரும் அதனை போன்ற அடுத்த இசை விருந்துக்கு தயாராகி இருந்தனர்.

ஆனால் அவர்களின் ஆசைக்கு பேரிடியாய் வந்து இறங்கிய செய்தி, இந்த படத்தில் இசை அமைப்பாளர் வித்தியாசாகர் இல்லை S .A .ராஜ் குமார் என்று. இருந்தாலும் ஒரு நம்பிக்கையில் அந்த படத்தின் பாடலை எதிர்பார்த்து இருந்தனர் ரசிகர்கள், அவர்களின் எதிர்பார்ப்புக்கு பெரிய ஆப்பு வைத்தது அந்த படத்தின் பாடல்கள். ஒரு பாடல் கூட ஹிட் ஆகவில்லை , படமும் பெரிய தோல்வி. அதே அண்ணாமலை திரை அரங்கிலேயும், அருப்புக்கோட்டையிலும் வெறும் இருபது நாட்களில் படம் தூக்கபட்டது. நம்ம ரசிகர்கள் எல்லாம் பெரிய விரக்தியில இருந்தாங்க, அஜித் அவ்வளவுதான் அழிந்தான் அப்படின்னு மறுபடியும் எல்லாரும் சொல்லிக்கிட்டு இருந்தானுக.

ஆனா நாங்க அப்பவும் உங்க மேல நம்பிக்க வச்சிருந்தோம். எங்க நம்பிக்கைய இன்னும் அதிகபடுத்துற மாதிரி பத்திரிக்கையில ஒரு செய்தி வந்தது உன்னோட அடுத்த படம் சம்பந்தமா, அது உன்னோட அடுத்த படத்த இயக்க போவது கே.எஸ். ரவிக்குமார் அப்படிங்கிற நல்ல செய்தி.
(தொடரும்)

என்னுடைய போன பதிவிற்கு 20 ஓட்டுகள் போட்டு தமிளிஷில் பிரபலமடைய செய்த அனைவருக்கும் நன்றி. இதுவும் பிடிச்சி இருந்தா மறக்காம ஓட்டு போடுங்க.

4 comments:

புதுகைத் தென்றல் said...

கொஞ்சம் பத்தி பத்தியா பிரிச்சு பதிவிட்டா படிக்க வசதியா இருக்கும். என் கருத்தை சொன்னேன்.

self made man என்பார்களே அப்படி எவரின் உதவியும் இல்லாமல் முன்னுக்கு வந்தவர். கார் ரேஸ் தளமொன்றில் அஜீத் கார் ஓட்டுவ்தைக் கண்டேன்.(4 வருடங்களுக்கு முன்பு) ஆங்கில வர்ணனையாளர் இவர் ஒரு நடிகராக இருந்துக்கொண்டு கார் ரேஸில் கலக்குகிறார் என்று சொன்னபோது பெருமிதவாகவும் இருந்தது.

15 ஆப்பரேஷன்களுக்கு அப்புறமும் கார்ரேஸ் ஆரம்பித்திருக்கும் அவருக்கு என் வாழ்த்துக்கள்

"ராஜா" from புலியூரான் said...

@ புதுகைத் தென்றல்

//கொஞ்சம் பத்தி பத்தியா பிரிச்சு பதிவிட்டா படிக்க வசதியா இருக்கும். என் கருத்தை சொன்னேன்

மாற்றி விட்டேன் நண்பரே, பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

//ஆங்கில வர்ணனையாளர் இவர் ஒரு நடிகராக இருந்துக்கொண்டு கார் ரேஸில் கலக்குகிறார் என்று சொன்னபோது பெருமிதவாகவும் இருந்தது.

தன் ரசிகர்களை பல முறை பெருமிதம் அடைய செய்தவர் அஜித். இப்பொழுதுகூட அவரின் மேடை பேச்சு நம்மை பெருமிதமடைய செய்துள்ளதே நண்பரே....

புதுகைத் தென்றல் said...

இப்ப படிக்க வசதியா இருக்கு.

நன்றி ஒரு சின்னம் திருத்தம். நண்பரே அல்ல தோழி.

:)

Yoganathan.N said...

எனக்கு தெரிந்து, அஜித் தன் ரசிகர்களை (குறிப்பாக பெண்கள்) அதிகம் இழந்த படம் 'ரெட்' தான். ஆனால், 'ரெட்' படத்திற்கு பிறகு, மதுரையில் ரசிகர் பட்டாளம் இரட்டிப்பானதென்று கேள்வி பட்டுள்ளேன்.

அடுத்த இடுகைக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails