Followers

Copyright

QRCode

Wednesday, February 24, 2010

தலைவருக்கு எதிராய் கூடும் கைபிள்ளை சங்கங்கள்


''நடிகர்கள் ரஜினி மற்றும் அஜீத்குமா‌ர்யின் படங்களை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை மார்ச் 3ஆ‌ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம்'' என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், ''தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சனைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?

அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சனை பற்றி விவாதிக்க மார்ச் 3ஆ‌ம் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம் எ‌ன்று பன்னீர்செல்வம் கூறியு‌ள்ளா‌ர்.


பாசத்தலைவனுக்கான பாராட்டு விழாவில் உண்மையற்ற பேச்சுப் பேசி திரையுலக ஒற்றுமையைக் குலைத்ததற்கு அஜித் வருத்தம் கேட்பது, அஜித் பேச்சுக்கு கைதட்டியதன் மூலம் நடிகர்களின் ஒற்றுமையைக் குலைத்த ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தது போன்ற விவகாரங்களை ஆராய்ந்து மேல்நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கூட இருக்கிறது.


பெப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடும் இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று, ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.


அதேபோல, ஜாகுவார் தங்கம் மீது கல்வீசித் தாக்கிய அஜித் (முடிவே பண்ணிட்டாங்க போல!) மற்றும் அவரது மேனேஜர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்படுமாம். இந்த விவகாரத்தில் நடிகர் சங்க உறுப்பினரான ஜாகுவார் தங்கம் புகார் கொடுத்திருப்பதால், இந்த விவகாரத்தை சாதாரணமாக விட்டுவிட முடியாது என நடிகர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது....

இதுல மொத சங்கம் ரஜினி அஜித் மாதிரி நடிகர்களின் படங்கள் ஓடுற கெடைக்கிற காசுலதான் ஓடுது, இப்ப அவனுக அவுனுகளுக்கே வேட்டு வட்சிக்க பாக்குறானுக.... அடுத்து நடிகர் சங்கம் அது உண்மையிலேயே கைப்புள்ள சங்கம்தான், சங்கமே அபராததுலதான் ஓடிக்கிட்டு இருக்கு, அடுத்து அபராதம் கட்ட ரஜினியையும் அஜித்தையும் வம்புக்கு இழுக்க பாக்குறானுக. சங்கத்து  தலைவர்  சரத் குமார் , ஜக்குபாய் படம் ஏதோ பத்து நாள் ஒடுச்சினா அதுக்கு காரணம் ரஜினி கொடுத்த விளம்பரம்தான் , நாய் நக்கி திங்கிற வரைக்கும் நக்கி தின்னுட்டு நக்குனவன் கையவே கடிக்கும் , சரத்துக்கும் அதுக்கும் வித்தியாசமே இல்ல.

அப்புறம் அந்த கூட்டத்துல கலந்துக்க போறவரு நம்ம சத்திய ராசு, அவருக்கு தலைக்கு மேலதான் ஒன்னும் இல்லைனா தலைக்கு உள்ளேயும் ஒன்னும் கெடையாது, என்னமோ இவரு மேடை ஏறி பேசிட்டா காவேரி தண்ணி அணையை பொளந்துக்கிட்டு தமிழ்நாட்டுக்குள்ள வந்துரும் , இலங்கையில சண்டைய ராஜபக்சே நிப்பாட்டிருவாருன்னு நெனப்பு, இவரு யாரோட அல்லகைகிறது ஊருக்கே தெரியும், கூட்டத்துல கலந்துக்க போற இன்னும் ரெண்டு முக்கியமான ஆளுங்க குயிலியும் மும்தாஜும் , ரெண்டு பெரும் கலைத்தாய்க்கு சேவை பண்ணி களைச்சி போய் நாட்டுக்கு சேவை பண்ண வந்துட்டாங்க,

என்னப்பா  இன்னொரு முக்கியமான ஆள விட்டுடீங்க எங்கப்பா ஷகீலா சேட்சி அவங்களையும் கூட்டிட்டு பொய் நடத்த வேண்டியதுதான, அவங்கள படம் புடிக்கவாது உங்க கூட்டத்துக்கு ஆள் வருவாங்கள?

அடுத்து வருது ஒரு பெரிய காமெடி கூட்டமே சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர்ன்னு , இவனுங்கள வச்சி என்ன காமெடி டைம் நடத்த போறாரா நம்ம சரத்குமாரு...

என்ன என்னமோ பண்ணியும் ரஜினியும் அஜித்தும் அசஞ்சிகூட கொடுக்கல இவனுங்களுக்கு , அதான் அடுத்த அஸ்திவாரமா இந்த கைபிள்ள சங்கத்த கூட்டி காமெடி பண்ண போறாரு நம்ம பாச தலைவன்... உண்மையை சொன்ன அஜித்திற்கும் அதை தைரியமாய் பாராட்டிய ரஜினிக்கும் இப்பொழுது தேவை திரை துறையில் இருந்து ஆதரவுகள் , அவர்கள் இருவரும் தங்கள் சொந்த பிரட்சனைகளுக்காக வாய் திறக்க வில்லை, திரை துறையை சேர்ந்த அனைவருக்காக்கவும்தான் அவர்கள் பேசினார்கள்... மனசாட்சி உள்ள எவரும் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும் , கட்ட பஞ்சாயத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும், இல்லை என்றால் நாளை என்ன வேண்டுமானாலும் திரை துறையில் நடக்கலாம் , உங்கள் மனைவிமார்களின் கற்பை கூட இந்த கட்ட பஞ்சாயத்து ஆட்கள் நிர்ணயம் செய்யும் காலம் கூட வரலாம் ,, இப்படியே நீங்கள் குட்ட குட்ட குனிந்து கொடுத்தால்...

7 comments:

Anonymous said...

தமிழனின் பணத்தில் தின்றுவிட்டு கர்னாடக காரனிடம்
மன்னிப்பு கேட்ட ரஜினி மற்றும் தமிழனுக்காக ஒரு சிறு
துறும்பைக்கூட கிள்ளிப்போடாத அஜித்திற்கும் குரல் கொடு-
க்கும் உனக்கும், காட்டி மற்றூம் கூட்டிக்கொடுப்பவனுக்கும்
வித்தியாசம் எதுவுமில்லை.

Yoganathan.N said...

அட விடுங்க நண்பரே... தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பதில் தான் மும்முரமாக இருப்பார்கள்...
எவனும் ரஜினியையும் அஜித்தையும் ஒன்றும் செய்ய இயலாது...

"ராஜா" from புலியூரான் said...

tanx yoganathan...

Yoganathan.N said...

நண்பரே, உங்கள் வலைப்பூவில் சேர்ந்துவிட்டேன். நேரம் இருக்கும்போது, என் வலைப்பூவிலும் சேர்ந்துக் கொள்ளுங்கள், நன்றி... :)

"ராஜா" from புலியூரான் said...

//நண்பரே, உங்கள் வலைப்பூவில் சேர்ந்துவிட்டேன். நேரம் இருக்கும்போது, என் வலைப்பூவிலும் சேர்ந்துக் கொள்ளுங்கள், நன்றி... :)


நன்றி நண்பா நானும் சேர்ந்து விட்டேன்

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

LinkWithin

Related Posts with Thumbnails