Followers

Copyright

QRCode

Monday, February 15, 2010

தலையா? தளபதியா? யார் king of opening? ஒரு ஆராய்ச்சி....

இன்னைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு  இருக்குற மிக பெரிய சந்தேகம்,  பிரச்சனை, எதிர்பார்ப்பு என்னவா இருக்கும்? கண்டிப்பா எந்த படிப்பு படிச்சா வேலை கெடைக்கும்? எந்த படிப்பு படிச்சா "பல்பு" கெடைக்கும் ?அப்டிங்கிறதெல்லாம் கெடையாது, தல தளபதி இவங்க ரெண்டு பேருல யாரு கிங் அப்  ஒப்பெநிங்,  யாருக்கு நெறைய ரசிகர் பட்டாளம் இருக்கு அப்டிங்கிறதுதான் அவர்களின் "தல"யாய பிரச்சனை. நம்பாதவங்க இங்க போய் படிங்க.... படிச்சாச்சா ... நானும் படிச்சேன் என்னடா எல்லாரும் இப்படி சண்ட போட்டுக்கிட்டு இருக்காங்க இதுக்கு ஒரு முடிவே கெடையாதான்னு நான் வடிவேலு மாதிரி அங்க உக்காந்து யோசிச்சிகிட்டு இருக்கும் போது கண பொழுதில் ஒரு யோசனை தோன்றியது. அந்த பதிவுல பின்னூட்ட மிட்ட நண்பர் ஒரு விசயத்த சொல்லி இருந்தாரு , அது என்னனா அவரு வேட்டைகாரனை பற்றி போட்ட பதிவிற்கு 400 ஹிட்ஸ் கெடச்சதாம் , அசல் பற்றி போட்ட பதிவிற்கு வெறும் 200 ஹிட்ஸ்தான் கெடச்சதாம். அதனால தளபதிக்குதான் ரசிகர் பட்டாளம் நெறைய இருக்குன்னு ஒரு conclusion கொடுத்து இருந்தாரு. இங்கதான் நம்ம ஆராய்ச்சி மூளை டக்குன்னு முழிச்சி வெட்டியா யோசிக்க ஆரம்பிச்சது. இந்த dataவ வச்சி நம்ம ஏன் ஒரு ஆராய்ச்சி பண்ணி ஒரு முடிவ கண்டுபிடிக்க கூடாதுன்னு கண்ணா பின்னான்னு யோசிக்க ஆரம்பிச்சிடுச்சி .... இந்த ஆராய்சிக்காக நான் நெறைய literature study
பண்ண வேண்டி இருந்தது... அப்படி பண்ணுனதுல நான் தெரிஞ்சிகிட்ட விசயங்கள்

1. பதிவுலகை பத்தி நல்லா தெரிஞ்சவங்களுக்கு  ஒரு விஷயம் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்  அதுஎன்னான்னா  யாருமே  வேட்டைகாரனையும்        அசலையும்  நல்ல  விதமாவே எழுதல..
2. விஜய்யை பற்றி தர குறைவாய் எழுதும் பதிவுகளை விஜய் ரசிகர்கள் ஒரு முறைதான் படிக்கின்றனர். அதும் பாதி படிச்சிட்டு அனானியா கெட்ட வார்த்த பின்னூட்டம் இட்டு விட்டு போய் விடுகின்றனர். ஆனால் அதே பதிவை அஜித் ரசிகர்கள் பல முறை படித்து வயிறு வலிக்க சிரித்து மகிழுகிறார்கள்.. வேட்டைக்காரன் பற்றிய பதிவை ஒவ்வொரு அஜித் ரசிகனும் அதிகபட்சம் நான்கு முறையும் குறைந்த பட்சம் இரண்டு முறையும் படிகின்றார்கள். எனவே நம்முடைய ஆராய்ச்சிக்கு இவ்விரண்டின் சராசரியாய் மூன்று முறை என்று வைத்து கொள்வோம்.
இப்பொழுது அந்த பதிவை படித்த மொத்த விஜய் ரசிகர்கள் 'x' என்றும் அஜித் ரசிகர்கள் 'y' என்றும் வைத்து கொள்வோம் , நான் மேல சொன்ன விசயங்களை வைத்து கீழே உள்ள சமன்பாட்டை உருவாக்கி கொள்ளலாம்.
               x+3y=400              ------------- (1)
இதே மாதிரி அஜித்தை பற்றிய பதிவுகளை அஜித் ரசிகன் ஒரு முறை மட்டும் படித்து விட்டு கெட்ட வார்த்தை பின்னூட்டத்தை அன்பளிப்பாய் கொடுத்து விட்டு சென்று விடுவான்.ஆனால் விஜய் ரசிகன் ஒரு அற்ப சந்தோஷத்திற்காக அதை சராசரியாய் மூன்று முறை படித்து அஜித்தை திட்டி  அவன் பங்கிற்கு ஒரு பின்னூட்டம் இட்டு விட்டு செல்வான். இந்த விசயங்களை கொண்டு கீழே உள்ள சமன்பாட்டை உருவாக்கி கொள்ளலாம்
               3x+y=200              ----------------(2)௦௦
இப்ப இந்த ரெண்டு சமன்பாட்டையும் solve பண்ணுனோம்னா, x  மற்றும் , y யோட மதிப்பு நமக்கு கிடைத்து விடும்... 
x+3y=400----> equation I
3x+y=200 ---> equation II

first multiply I by 3

-> 3x+9y=1200

multiply II by minus one

-> -3x-y=-200
add this two equations

-> 3x+9y-3x-y=1200-200

-> 8y=1000

-> y= 125
substitute y=125 in equation I

-> x+(3*125)=400

-> x+375=400

-> x=400-375

-> x=25
நம்ம ஆராய்சியில x -> விஜய் ரசிகர்களையும் y -> அஜித் ரசிகர்களையும் குறிக்கும்....
எனவே அந்த பதிவை படித்த மொத்த விஜய் ரசிகர்கள் வெறும் 25 பேர் மட்டுமே.. அதை படித்த அஜித் ரசிகர்கள் மொத்தம் 125  பேர். எனவே என்னுடைய ஆராய்ச்சியின் முடிவில்  நான் தெரிந்து கொண்டது அஜித்துக்கே  ரசிகர்கள் அதிகம் .ஒரு விஜய் ரசிகன் இருந்தால் ஐந்து அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். 

அப்படி என்றால் அஜித் படங்கள் விஜய் படத்தை விட ஐந்து மடங்கு ஓட வேண்டுமே என்று நீங்க சந்தேகமா கேக்கலாம். நான் என்னுடைய ஆராய்ச்சிக்கு!!!??? எடுத்து கொண்ட input data  வலைபதிவு வாசகர்கள் மட்டுமே . அவர்கள் பெரும்பாலும் இருபத்து ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் , அந்த வட்டத்திற்குள் மட்டுமே இந்த முடிவு. விஜய்க்கு பெண்கள் மற்றும் குழந்தைகளின்ஆதரவு அதிகமாய் இருக்கலாம்? அந்த ஆதரவை கொண்டு இந்த வித்தியாசத்தை அவர்  tally செய்துகொண்டு இருக்கிறார். ஆனால் ரஜினி படம் வரும்பொழுது இந்த மொத்த ஆதரவும் ரஜினிக்கு சென்று விடுவதால் ரஜினி படத்தோடு வரும் விஜய் படங்கள் மண்ணை கவ்வுகின்றன.


இப்ப புரிஞ்சதா... அஜித்தா விஜயான்னு   இனிமே சண்ட போட்டுக்கிட்டு இருக்காம போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பா ......................................... 

13 comments:

Mohan said...

:-)

"ராஜா" said...

:-)

Mohan இதுக்கு என்ன அர்த்தம்

Mohan said...

ராஜா,நீங்க சொன்ன வேட்டைக்காரன் 400 ஹிட்ஸ்,அசல் 200 ஹிட்ஸ் கமென்ட்டை பேநாமூடி தளத்தில் போட்டது நான்தான்.அந்த கமென்ட்டிலேயே இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை என்றும் சொல்லியிருந்தேன்.ஆனாலும்,நீங்கள் இதை Mathematical Calculations உடன் விளக்கியிருந்தது நன்றாக இருந்தது.அதற்காகத்தான் அந்த 'Smiley' Comment.

"ராஜா" said...

சும்மா ஒரு காமெடிக்காக போட்டு இருந்தேன் ... பாராட்டுனதுக்கு நன்றி mohan sir...

Anonymous said...

One man i will think about when my energy level goes down .
Thal its you. U have shown us wat is self confidence and hard work....
We will follow u till our life end

"ராஜா" said...

//One man i will think about when my energy level goes down .
Thal its you. U have shown us wat is self confidence and hard work....
We will follow u till our life end

இத நீங்க உங்க பேர போட்டே அனுப்பிருக்கலாமே.... என்னுடைய பதிவை படித்து பின்னூட்ட மிட்டதர்க்கு நன்றி...

ஷாஜி said...

Ungala mattum eppadi ippadiyellam yosikka mudiyuthu?

"ராஜா" said...

//Ungala mattum eppadi ippadiyellam yosikka mudiyuthu?
சின்ன வயசுல இருந்தே நல்லா "கணக்கு பண்ணுவேங்க" ஷாஜி . வந்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கபடுதியதர்க்கு நன்றி

கடைக்குட்டி said...

ஆனாலும் ரொம்ப மெனக்கெடுறீங்க..(equationலாம் ஓவர்ங்கோவ்...!!:-)

ஆமா.. நீங்க யார் பக்கம்???

"ராஜா" said...

//ஆமா.. நீங்க யார் பக்கம்???

திரையில நடிக்க தெரிந்து நிஜத்தில் நடிக்க தெரியாத அசல் மனிதர்களின் பக்கம்

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹி...

அண்ணே நீங்க அறிவுக்கொழுந்துண்ணே :)))

"ராஜா" said...

கார்க்கி என்ன பண்ண ஆண்டவன் கொஞ்சம் அதிகமாவே படைச்சிட்டான் அறிவ , இது ஒரு காமெடிக்காக எழுதுனது, விஜய்யை குறைத்து எழுத நெனச்சி எழுதுனது இல்ல... நம்ம அக்ரீமெண்ட நான் மீற மாட்டேன் thala

Yoganathan.N said...

நண்பரே... ரசித்துப் படித்தேன். என்ன ஒரு கற்ப்பனை வளம் உங்களுக்கு... ஹிஹிஹி
வாழ்த்துகள் :)

LinkWithin

Related Posts with Thumbnails