அசல் படம் ஒருவழியா வெளிவந்து விட்டது... படத்தோட ரிசல்ட் படம் ஹிட்... இந்த படம் பிடிக்காத விஜய் ரசிகர்கள்(அஜீத்த பிடிக்காதவங்க) கண்டிப்பா அஜித்தோட அடுத்த படம் வரும் போது அசல் நல்ல இருந்துச்சு , அந்த படம் அளவுக்கு இந்த படம் இல்ல என்று அசல் நல்ல படம் என்ற உண்மைய ஒத்து கொள்வார்கள்(இப்பதான் ஏகன் ஒரு தடவ பாக்கலாம்னு ஒத்துகிறாங்க).
ஒரு அஜித் ரசிகனாய் எனக்கு இந்த படத்தில் பிடித்த விசயங்கள் நெறைய சொல்லலாம்
தலையோட stylishஆனா தோற்றம் ...,பில்லா மாதிரியான கேமெரா...சண்டை காட்சிகள்....அப்பா அஜித்தோட அமைதியான நடிப்பு ....வசனமே பேசாம ஹீரோஇசம் பண்ற தல ...சமீரா ரெட்டி & பாவனா glamour....இடைவேளைக்கு முன்னாடி வர்ற வில்லன் ஷெட்டி ... யூகிசெதுவோட சின்ன சின்ன டைமிங் காமெடிகள்...டொட்ட டிங் பாட்டு...படத்த ரொம்ப இழுக்காம டக்குன்னு முடிச்சது .... பல இடங்களில் வரும் "தல" வசனம் .... second halfல தலைய காட்டுறதுக்கு முன்னாடி புகைய காட்டுற சீன இது எல்லாம் சேந்து என்ன படத்த மூணு தடவ பாக்க வட்சிருசி... மூணு தடவையும் நான் படத்த என்ஜாய் பண்ணுனேன்.... ஒவ்வொரு தடவையும் படத்த பார்த்து முடிக்கும் பொழுது படத்த அடுத்து எப்ப பாக்கலாம் என்றுதான் நினைக்க தோன்றியது ... கண்டிப்பா எனக்குள் இருந்த ரசிகனுக்கு தீனி போட்ட தலைக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும் ...
இருந்தாலும் படத்தில் நிறைய குறைகளும் இருக்கத்தான் செய்தன ... முதல் குறை கதை ரொம்ப பழசு... வில்லன்களை இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணி இருக்கலாம்.... இரண்டாம் பாதி வேற மாதிரி எடுத்திருக்கலாம்... பாட்டு இன்னும் நல்லா இருந்திருக்கலாம்.... கடத்திட்டு போய் blockmail பண்ற மாதிரியான மொக்கையான climax... அதும் தல கட்ட அவுத்துக்கிட்டு வந்து சண்ட போடுறது மனோகரா காலத்து சீன... ஆனா இது எல்லாத்தையும் தாண்டி படத்துல ரசிக்க நிறைய இருக்கு அஜித் ரசிகர்களுக்கும் , சினிமா ரசிகர்களுக்கும் (சில படங்களை பார்க்கும் போது நமக்கு கடுப்பாய் இருக்கும் அது மாதிரி இந்த படத்தின் எந்த காட்சியிலும் உணர மாட்டீர்கள் ) ... ஆனா உங்களுக்கு அஜீத்த பிடிக்கவே செய்யாதுனா தயவுசெஞ்சி இந்த படத்துக்கு போய்டாதீங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்காது...
கடைசியா ஒரு ரசிகனா எனக்கு இது போதாது தல ,இது vegitable பிரியாணிதான் .... நான் இன்னும் நெறைய எதிர்பாக்குறேன்... உங்க அடுத்த படம் நல்ல காரமான சிக்கென் பிரியாணியா கொடுங்க....
பி. கு:எந்த ஒரு மீடியா துணையும் இல்லாமல் பெரிய opening கெடைக்குதுனா அது தலைக்கு மட்டும்தான் .... அதுக்கு அசலே சாட்சி
3 comments:
100%
good
ஏறக்குறைய உங்கள் கருத்துக்களுடன் நான் ஒத்துப் போகிறேன். :)
இதோ, எனது விமர்சனம். படித்துவிட்டு, கமெண்ட் போடுங்கள். நன்றி.
http://thalafanz.blogspot.com/
Post a Comment