இன்று அவரை மிரட்டுபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவரின் படத்தை எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்க தயாராக வரிசையில் நின்றவர்கள்தான் ... மறுபடியும் இவர்கள் அனைவரும் அதே வரிசையில் நிற்கத்தான் போகிறார்கள்... அது நடக்க வேண்டுமானால் விஜய் கொஞ்சம் மாறினால் போதும் ..
விஜயின் இந்த நிலைமைக்கு காரணம் சினிமாவில் வெற்றி பெற்ற தன மகனை அரசியலிலும் வெற்றி கோடி நாட்ட வைக்க வேண்டும் என்ற அவர் தந்தையின் பேராசைதான்... கில்லி , திருப்பாச்சி, சிவகாசி என்று வெற்றி படிக்கட்டில் ஏறி கொண்டு இருந்தவரை சடாரென்று தோல்வி பாதையில் இறக்கி விட்டது அவரின் இந்த ஆசை ....
விஜய் ஒன்றும் எந்த திறமையும் இல்லாதவர் இல்லை .. அவரின் கில்லி படம் பெற்ற பெரிய வெற்றிக்கு அவரின் துள்ளலான நடனம் , இளமையான நடிப்பு , சண்டைகாட்சிகளில் அவர் காட்டிய வேகம் எல்லாமும் ஒரு காரணங்கள் .. அடித்து சொல்லலாம் அவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த படம் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்காது....அந்த விஜயைதான் மக்களும் அவரின் ரசிகர்களும் எதிர்பார்கிறார்கள் ...
இவ்வவளவு தோல்விகளுக்கு பிறகும் விஜய் திரை துறையில் இன்னமும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார் என்றால் அவரின் ரசிகர்கள்தான் காரணம் ... இரண்டு தோல்விகளிலே முடங்கி போன எத்தனையோ ஹீரோக்கள் உண்டு நம் தமிழ் திரை உலகில் ... அவரை வாழ வைத்து கொண்டு இருப்பவர்கள் அவரது ரசிகர்கள்தான் என்று அவர் வாய் வழியாக மட்டும் சொல்லாமல் மனதளவில் நினைத்து சொல்லுகிறார் என்றால் அந்த ரசிகர்களுக்கு பிரதி உபகாரமாக அவர் இனி நல்ல கதைகளை தெரிவு செய்து நடிக்க வேண்டும் ... உங்களால் பணம் சம்பாதித்து இன்று உங்களையே தூற்றுபவர்களை மீண்டும் உங்கள் பின்னால் வர வைத்து உங்கள் ரசிகர்களை தலை நிமிர செய்யுங்கள் ... அரசியல் ஆசையை கொஞ்சம் ஓரங்கட்டி வையுங்கள் தலைவா ... உங்களை நீங்கள் முதலில் நிரூபியுங்கள் ... பதவியும் பட்டமும் தானாக தேடி வரும் உங்களை நோக்கி ..
ரஜினியை பாருங்கள் .. எவ்வளவு வெற்றிகளை கொடுத்திருந்தாலும் அவரே சந்தரமுகி போன்ற நல்ல கதைகளைத்தான் தெரிவு செய்து நடிக்கிறார் ... மக்களுக்கு எது பிடிக்குமோ அதை கொடுங்கள் மக்கள் மீண்டும் உங்களை வெற்றி படிக்கட்டில் ஏற்றுவார்கள் ...
இந்த தடுமாற்றங்களில் இருந்து விஜய் மீண்டு வர தல ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...