Followers

Copyright

QRCode

Saturday, May 29, 2010

மீண்டு வருவார் விஜய் ....இன்று அவரை மிரட்டுபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அவரின் படத்தை எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் வாங்க தயாராக வரிசையில் நின்றவர்கள்தான் ... மறுபடியும் இவர்கள் அனைவரும் அதே வரிசையில் நிற்கத்தான் போகிறார்கள்... அது நடக்க வேண்டுமானால் விஜய் கொஞ்சம் மாறினால் போதும் ..


விஜயின் இந்த நிலைமைக்கு காரணம் சினிமாவில் வெற்றி பெற்ற தன மகனை அரசியலிலும் வெற்றி கோடி நாட்ட வைக்க வேண்டும் என்ற அவர் தந்தையின் பேராசைதான்... கில்லி , திருப்பாச்சி, சிவகாசி என்று வெற்றி படிக்கட்டில் ஏறி கொண்டு இருந்தவரை சடாரென்று தோல்வி பாதையில் இறக்கி விட்டது அவரின் இந்த ஆசை ....

விஜய் ஒன்றும் எந்த திறமையும் இல்லாதவர் இல்லை .. அவரின் கில்லி படம் பெற்ற பெரிய வெற்றிக்கு அவரின் துள்ளலான நடனம் , இளமையான நடிப்பு , சண்டைகாட்சிகளில் அவர் காட்டிய வேகம் எல்லாமும் ஒரு காரணங்கள் .. அடித்து சொல்லலாம் அவரை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் அந்த படம் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று இருக்காது....அந்த விஜயைதான் மக்களும் அவரின் ரசிகர்களும் எதிர்பார்கிறார்கள் ... 

இவ்வவளவு தோல்விகளுக்கு பிறகும் விஜய் திரை துறையில் இன்னமும் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறார் என்றால் அவரின் ரசிகர்கள்தான் காரணம் ... இரண்டு தோல்விகளிலே முடங்கி போன எத்தனையோ ஹீரோக்கள் உண்டு நம் தமிழ் திரை உலகில் ... அவரை வாழ வைத்து கொண்டு இருப்பவர்கள் அவரது ரசிகர்கள்தான் என்று அவர் வாய் வழியாக மட்டும் சொல்லாமல் மனதளவில் நினைத்து சொல்லுகிறார்  என்றால் அந்த ரசிகர்களுக்கு பிரதி உபகாரமாக அவர் இனி நல்ல  கதைகளை தெரிவு செய்து நடிக்க வேண்டும் ... உங்களால் பணம் சம்பாதித்து இன்று உங்களையே தூற்றுபவர்களை  மீண்டும் உங்கள் பின்னால் வர வைத்து உங்கள் ரசிகர்களை தலை நிமிர செய்யுங்கள் ... அரசியல் ஆசையை கொஞ்சம் ஓரங்கட்டி வையுங்கள் தலைவா ... உங்களை நீங்கள் முதலில் நிரூபியுங்கள் ... பதவியும் பட்டமும் தானாக தேடி வரும் உங்களை நோக்கி .. 
ரஜினியை பாருங்கள் .. எவ்வளவு வெற்றிகளை கொடுத்திருந்தாலும் அவரே சந்தரமுகி போன்ற நல்ல கதைகளைத்தான் தெரிவு செய்து நடிக்கிறார் ... மக்களுக்கு எது பிடிக்குமோ அதை கொடுங்கள் மக்கள் மீண்டும் உங்களை வெற்றி படிக்கட்டில் ஏற்றுவார்கள் ...

இந்த தடுமாற்றங்களில் இருந்து விஜய் மீண்டு வர தல ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் ...

15 comments:

"ராஜா" said...

விஜய பத்தி நல்ல விதமா எழுதுன வுடனே ஒரு follower ஓடி போயிட்டாரு...

அத்திரி said...

//அது நடக்க வேண்டுமானால் விஜய் கொஞ்சம் மாறினால் போதும் ..
//

சரியாச் சொன்னீங்க..................

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அஹ்வ்வ்வ்...கொட்டாவி தான் வருது.ஷங்கர் போன்ற பிரபலங்களும் பெரியோர்களும் அமர்ந்திருந்த பாராட்டுவிழாவில் விஜய் பேச எழுந்தார்.அனைவரும் ஆர்வமுடன் அவரை பார்க்க,அவரோ அழகென்ற சொல்லுக்கு அனுஸ்கா என ஜொல்லு பாட்டு பாட..என்னவொரு கண்றாவி காட்சி..இது எப்படி மக்கள் தலைவனாகும்...இது என்னத்த நடிச்சு..படம் ஓடி....

"ராஜா" said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்

நீங்கள் விஜய்யை கண்மூடித்தனமாக எதிர்கிறீர்கள் என்று நினைக்கிறன்.... ஒரு படம் ஹிட் கொடுத்தால் போதும் இந்த நிலைமை மாறும்

பாஸ் படம் ஓடுவதற்கு நடிகர்கள் எப்படி மேடையில் பேசுகிறார்கள், சொந்த வாழ்வில் எப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பன போன்றவை அவசியமே இல்லை... நல்லா இருந்தா மக்கள் பாப்பாங்க ... படம் ஓடிடும் .... ஏன் விஜய் படம் இதுவர எதுவுமே ஓடினது இல்லையா? அவர் கதைய மாத்துனா போதும் .... படம் ஓடிடும் ... மற்றபடி அரசியல் என்று இறங்கும்போதுதான் நீங்கள் கூறிய விசயங்களை கூட மக்கள் கூர்ந்து கவனித்து ஆப்பு அடிப்பார்கள்

RAJ said...

இளைய தலைவலிக்கு வக்காலத்தா.. இதே மாதிரி இன்னும் ரெண்டு பதிவ போடுங்க.. இருக்கிற ஃபாலோவர் எல்லோரும் எஸ்கேப்பு...

Prasanna said...

//ஏன் விஜய் படம் இதுவர எதுவுமே ஓடினது இல்லையா// The last direct film he gave as hit is Sivakasi I believe. Other than that nothing is worth mentioning. He obviously has to change a LOT. Its easy for him to sit with Dharani or Perarasu to give another mass masala commercial blockbuster.. But he will not be ever considered by class directors. I wish he does films like "Varanam Aayiram" "Vinnaithandi Varuvaya" would be a welcome change.

"ராஜா" said...

//I wish he does films like "Varanam Aayiram" "Vinnaithandi Varuvaya" would be a welcome change.

இததான் நானும் சொல்லுறேன் ... கில்லி மாதிரி ஓவர் பில்ட் அப் இல்லாத படங்களிலும் நடிக்கலாம் ....

//இளைய தலைவலிக்கு வக்காலத்தா.

வக்காலத்து இல்லை , எப்படி இருந்த அவர் இப்படி ஆகிட்டாரே என்று ஒரு பரிதாபம்தான் ,

//இதே மாதிரி இன்னும் ரெண்டு பதிவ போடுங்க.. இருக்கிற ஃபாலோவர் எல்லோரும் எஸ்கேப்பு..

ஏங்க எல்லாருக்கும் அவர் மேல கொலைவெறி .... விஜைய பற்றி ஒரு பதிவு நல்லவிதமா போட முடியலையே

நான் இந்த பதிவு எழுதியதற்கு காரணம் , விஜய் இனிமேலாவது திருந்துவார் என்ற நம்பிக்கைதான் .... விஜய் என்று இல்லை வேறு யாராக இருந்தாலும் நான் இப்படிதான் எழுதுவேன் ...

"ராஜா" said...

//He obviously has to change a LOT. Its easy for him to sit with Dharani or Perarasu to give another mass masala commercial blockbuster.. But he will not be ever considered by class directors

மாஸ் மசாலா படங்களாவது எல்லோரும் ரசிக்கும்படி தந்தால் போதும்... கிளாஸ் படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.... ஓவர் பில்ட் அப் படத்துக்கு ஆவாது என்பதை புரிந்து திரைகதையில் கவனம் செலுத்துவாரானால் வெற்றி கிட்டும் ... இவருக்கு என்று இல்லை எல்லா மாஸ் ஹீரோக்களுக்கும் இது பொருந்தும்

SShathiesh-சதீஷ். said...

நல்ல பதிவு பல விஜய் ரசிகர்களின் குமுறல் இது...

"ராஜா" said...

@ sshathiesh
//நல்ல பதிவு பல விஜய் ரசிகர்களின் குமுறல் இது..

இதே போன்ற குமுறல்களை அஜித் ரசிகனாக நான் பல முறை சந்தித்து உள்ளேன் ... அதான் என்னால் உங்களின் எண்ணங்களை புரிந்து இந்த பதிவு எழுத முடிந்தது..... அஜித் போல விஜயும் இவ்வாறான சிக்கலில் இருந்து வெளி வந்துவிடுவார் என்று நான் சொன்னால் உங்களில் சிலர் அஜித் போல என்ற வார்த்தையை உபயோக படுத்தினதை கேலி செய்து பின்னூட்டம் இடகூடும் என்பதால் ... விஜய் கூடிய விரைவில் தன்னை மீண்டும் நிரூபிப்பார் என்று மட்டும் கூறி கொள்கிறேன்...

நியோ said...

மூணு முட்டாள்கள் தான் அடுத்த படமா தோழர் ....

"ராஜா" said...

அந்த கொடுமை எல்லாம் நடக்காது தலைவா ...

Bala said...

எலி எதுக்கு அம்மணமா போகுதுன்னு தெரியலையே?
ஏதாவது உள் குத்து இருக்கா?

Yoganathan.N said...

உண்மையைச் சொல்லுங்கள், யார் நீங்கள்?
இந்த வலைப்பூவின் உரிமையாளர், நண்பர் ராஜாவை எனக்கு ஓரளவு தெரியும். அவரது மின்னஞ்சல் முகவரி "rajakanijes@gmail.com"...
அவரது வலைப்பூவை யாரோ ஒருவர் 'heck' செய்து விட்டதாக அவருக்கு இப்போதே மின்னஞ்சல் அனுப்பவுள்ளேன்.

"ராஜா" said...

நானும் தல வழியில அடுத்தவனோட கஷ்ட காலத்துல சப்போர்ட் பண்ணலாமேன்னு சொன்னேன்... ஆனா பிள்ளையார் புடிக்க குரங்கா மாறுன கதையா போச்சே... விடுங்க சீக்கிரமே விஜய் நமக்கு வாய்ப்ப உருவாக்கி தறுவாப்புல.. அப்ப கடா வெட்டி பொங்கல் வச்சிருவோம்...

LinkWithin

Related Posts with Thumbnails