Followers

Copyright

QRCode

Friday, May 28, 2010

சிங்கம் - நொண்டி அடிக்குது


நல்லூரில் sub inspectorஆக இருக்கும் சிங்கத்துக்கும் சென்னையை ஆட்டி படைக்கும் மயிலவாகனனுக்கும் இடையே நடக்கும் சடு குடு ஆட்டம்தான் இந்த சிங்கம் .. ஹரியின் படமாம் , நம்பி போகலாம் என்று போனேன் .. படத்தில் ஒரு காட்சியில்கூட சாமி கொடுத்த ஹரி தெரியவில்லை...

சூர்யா மசாலா போலீஸ் வேடத்தில் வருகிறார் ... ஆரம்பம்மே build up தான் .. ஜீப் கூரையை பிய்த்துகொண்டு வருகிறார் ... பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார் .... அதை தவிர வேலை ஒன்றும் இல்லை அவருக்கு... போலீஸ் வேடத்திற்காக தன்னை வருத்தி தயார் ஆகி இருக்கிறார் என்பது அவரது உடலை பார்த்தாலே தெரிகிறது .. ஆனால் ஹரி இவரை முழுமையாக பயன்படுத்தவில்லை ... காக்க காக்க மாதிரி போலீஸ் வேடம்தான் அவருக்கு பொருந்துகிறது .. விஜயகாந்த் டைப் போலீஸ் வேடம் இவருக்கு பொருந்தவே இல்லை ... better luck next time surya ...

அனௌஷகா , சூர்யா சிங்கம் என்றால் இவர் புலி ... வேட்டைகாரனில் வந்துட்டு போனது மாதிரி பாடல் தேவை படும் போது மட்டும் வருகிறார் ... ஒரு பாடலில் பில்லா நயன்தாரா மாதிரி திறந்த மார்புடன்  வருகிறார்  ...இடைவேளைக்கு பின்னர் சூர்யாவை வசனம் பேசி வில்லனுக்கு எதிராக உசுப்பேத்தி விடுகிறார் ... கடைசியில் பிரகாஷ்ராஜ் கையால் குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்து கொள்கிறார் ... அவ்வளவே ..இவருக்கும் சூர்யாவுக்கும் இடையே நடக்கும் காதல் காட்சிகள் எரிச்சல் ரகம்




பிரகாஷ்ராஜ் .. பாவம் சென்னையின் பெரிய ரவுடி கட்ட பஞ்சாயத்து , ஆள் கடத்தல் என்று எல்லா வேலைகளையும் செய்கிறார்  ... ஆனால் ஹீரோவை எதிர்த்து அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை ... கடைசி வரை வசனம் மட்டுமே பேசுகிறார்.. சோப்ளாங்கி வில்லன் ... படத்தின் பெரிய பலவீனமே இவரின் கதாபாத்திரம்தான் .... அந்த அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் இவரின் கதாபாத்திரத்தில்...

பாடல்கள் என்று பெரியதாக சொல்ல எதுவும் இல்லை ... தேவி ஸ்ரீ பிரசாத் ஏமாற்றி விட்டார் ... கடைசியில் வரும் she stole my heart பாடல் மட்டும் ok ரகம் ... பின்னணி இசையில் பெரியதாக மெனக்கெடவில்லை.. சிங்கம் சிங்கம் என்று கத்திகொண்டே இருக்கிறார்... இன்னும் கொஞ்சம் அவர் உழைத்திருக்கலாம்...

ஹரி ... இவரின் சாமி படம் இன்றும் என்னுடைய favorite படம் .. எப்பொழுது டிவியில் போட்டாலும் பார்த்து விடுவேன் ... அந்த படத்தில் இருந்த திரைக்கதையும் , கதாபாத்திர உருவாக்கமும்(குறிப்பாக விக்ரம் , வில்லன் மற்றும் த்ரிஷாவின் கதாபாத்திரங்கள்) இதில் சுத்தமாக இல்லை ...
பார்த்து பார்த்து சலித்து போன கதை , லாஜிக் ஓட்டைகள் நிறைய இருக்கிற திரைகதை... பக்கம் பக்கமாக வசனங்கள் என்று படம் பார்பவர்களை காய வைத்து விடுகிறார் ... வசனம் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது ...இவரின் படத்தில் எப்பொழுதும் சில புத்திசாலிதனமான காட்சி அமைப்புகள் இருக்கும் ... இதில் அதையும் தவற விட்டு இருக்கிறார் ...


விவேக் ... இவரை நான் பெரியதாக நம்பி போகவில்லை .. சரக்கு சுத்தமாக இல்லை என்பதை இந்த படத்திலும் நிரூபித்து உள்ளார்.... சில இடங்களில் வசனங்களில் சிரிப்பை வர வைக்கிறார் .. பல இடங்களில் வடிவேலு மாதிரி body languageல் சிரிப்பை வரவைக்கிறேன் என்று நமக்கு கடுப்பை உண்டு பண்ணுகிறார் ....

படத்தில் பாராட்ட பட வேண்டிய நபர் ஒளிப்பதிவாளர்தான் ... படம் முழுவதும் சேசிங் காட்சிகளில் அவரின் உழைப்பு தெரிகிறது .. அதை விட பாடல் காட்சிகளில் சூர்யாவை அனௌஷ்கா உயரத்திற்கு காட்டுவதற்கு நிறைய உழைத்திருப்பார் என்று எண்ணுகிறேன்...அதே போல எடிட்டரும் தன பங்கை நிறைவாக செய்து இருக்கிறார் ... சில காட்சிகளில் உள்ள வேகம் இவரின் கைவண்ணமே...
 
மொத்தத்தில் வீறு நடை போட வேண்டிய சிங்கம் ரொம்ப பழைய கதை  சொதப்பலனா திரைகதை ,வீக்கான வில்லனால் நொண்டி நடை போடுகிறது.... சிங்கத்தை டிவிலையே பாத்துக்கோங்க...

10 comments:

EMMANUEL said...

good comand

SShathiesh-சதீஷ். said...

நல்ல விமர்சனம். படம் அப்போ ஆறுதலாய் பார்ப்பம்...

ILLUMINATI said...

//விவேக் ... இவரை நான் பெரியதாக நம்பி போகவில்லை .. சரக்கு சுத்தமாக இல்லை என்பதை இந்த படத்திலும் நிரூபித்து உள்ளார்.... //

உண்மை.

//அதை விட பாடல் காட்சிகளில் சூர்யாவை அனௌஷ்கா உயரத்திற்கு காட்டுவதற்கு நிறைய உழைத்திருப்பார் என்று எண்ணுகிறேன்...//

ஹாஹஹா....

Yoganathan.N said...

என்னங்க இது, 'ஈனப்பிறவி' நடிகர் படம் எல்லாம் பார்க்க ஆரம்பிசுட்டீங்க... :(

Yoganathan.N said...

இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், இந்த நடிகர் இத்துப் போன மசாலா படங்களில் நடித்தாலும், சிலர் இவர் ஒரு 'class' நடிகர், இவர் தான் அடுத்த கமல் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள்.
பி, சி செண்டர்களில் தனக்கென ஒரு பெயரை உண்டாக்க, இது போன்ற படங்கள், இந்த 'கிளாஸ்' நடிகருக்கும் தேவைப்படுகின்றது பாருங்களேன்.
இதையே அஜிதோ அல்லது விஜயோ செய்தால், குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.
இதைத் தான் ஒரு கண்ணில் வெண்ணை மற்றொன்றில் சுண்ணாம்பு என்பார்களோ... :P
It's high time some realize that Sivakumar's son is not an exception who eyes for 'Mass', after all he's just another actor TFI produced and no need to thalayila thookivachufying him... The sooner they realize the better.

Bala said...

இயக்குனர் ஹரியிடமிருந்து சில்ரன் ஆப் ஹெவனை எதிர்பார்த்து படம் பார்க்க செல்வீர்களேயானால் உங்களுக்கு மூளையில் ஏதோ கோளாறாக இருக்கலாம். அல்லது தமிழ்ப்படங்கள் பார்க்காதவராக இருக்கலாம்.
- உபயம் அதிஷா

"ராஜா" said...

@ யோகநாதன்
//இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால், இந்த நடிகர் இத்துப் போன மசாலா படங்களில் நடித்தாலும், சிலர் இவர் ஒரு 'class' நடிகர், இவர் தான் அடுத்த கமல் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள்.
அடுத்த கமலா... என்ன கொடும இது....

//என்னங்க இது, 'ஈனப்பிறவி' நடிகர் படம் எல்லாம் பார்க்க ஆரம்பிசுட்டீங்க... :(

நானும் போன வருஷம் விஜய் அவார்ட்ஸ் பார்க்கும் பொது இப்படிதான் நெனச்சேன்... நெறைய விசயங்களில் நீங்கள் என்னுடன் ஒத்து போகிறீர்கள் நண்பா

//இதையே அஜிதோ அல்லது விஜயோ செய்தால், குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.
இதைத் தான் ஒரு கண்ணில் வெண்ணை மற்றொன்றில் சுண்ணாம்பு என்பார்களோ... :ப

இவரோடா படம் ஒன்னு இருக்கு ஆறுன்னு .. அத போல ஒரு படம் நம்ம ரித்தீஷ் ஆல கூட முடியாது ... சிங்கமும் அந்த லிஸ்ட்டுதான்...

"ராஜா" said...

@ பாலா

நான் "தமிழ் படம்" பாத்துருக்கேன் தல .... ஹரி படம்னா மூளைய கலட்டி வச்சிட்டுதான் போகனுமா? அவரோட சாமி , தாமிரபரணி எல்லாம் எனக்கு புடிச்சி இருந்தது .. அந்த படங்களில் இருக்கிற ஏதோ ஒன்னு இதுல இல்ல தல.... என்னால ரசிக்க முடியல ... மத்தபடி எனக்கு மூளை இருக்கா இல்லையான்னு நீங்க ஹரியோட படத்த வச்சிதான் முடிவு பண்ணுவேன்னு சொன்னீங்கன்னா சாரி தல உங்க மூலையில்தான் எதோ ஒண்ணு இல்லைன்னு அர்த்தம்... இது சொன்ன அவருக்கும் சேத்துதான்

DHANS said...

Ibeleive you some what dont like surya

being an ajith Fan and also surya has got an oppertunity to work with bala in the movie nandha which is initially said for ajith.

i am a fan of ajith and the same time like surya too.

singam movie is pakka masala movie and you dont need anything special for this movie. but i enjoyed the movie.

for abreak everyone needs this kind of masala movie.

i accept all the logic confusions everything but still it attracts many.

i dont want you to like surya but i want a fair review from you.

Yoganathan.N said...

@DHANS,
Ajith rasigar-A? Welcome to the club. :) :) :)

LinkWithin

Related Posts with Thumbnails