Followers

Copyright

QRCode

Thursday, May 27, 2010

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்?

இன்னைக்கு நாட்டுல நடக்கிற,, நடந்து முடிஞ்ச சில விசயங்கள பாக்குறப்ப எனக்கு இந்த வசனம் ஞாபகம் வருது... "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்" ,, என்னோட சந்தேகங்களை எல்லாம் நான் சொல்லுறேன் ... பதில் தெரிஞ்சவங்க சொல்லுங்க1. நான் கைவிட்டு விட்டால் நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார் , பிரபுதேவா உருக்கம்


எனக்கு வந்த சந்தேகம் என்னன்னா நயன்தாரா அவ்வளவு நல்லவரா? இல்ல அவர இந்த அளவுக்கு நம்புற பிரபுதேவா ஒரு அரலூசா? பல பேரு கைவிட்டுதான் கடைசில இவரு கையில வந்து விழுந்துச்சி அந்த பீசு... இவரு விட்டா பிடிக்க இன்னொரு மடையன் மாட்டாமலா போய்டுவான்?..2. கட்சியில் இருந்து ஒரு உருப்பினரைகூட இழக்க விருப்பம் இல்லை , ஜெயலலிதா கண்ணீர்அம்மாவுக்கு எல்லாம் கைமீறி போன பின்னாடிதான் கட்சின்னு ஒன்னு இருக்கிறதே ஞாபகம் வருது ... எனக்கு என்னா சந்தேகம்னா,, யாரையும் இழக்க விரும்பவில்லை என்று அன்று திருநாவுக்கரசு ஆரம்பித்து சாத்தூர் ராமச்சந்திரன், மாதவன், அரங்கநாயகம், ராஜாராம், ராம. வீரப்பன், கருப்பசாமி பாண்டியன், செல்வகணபதி, அனிதா ராதாகிருஷ்ணன் என சத்தியமூர்த்தி வரை(நான் குறிப்பட்டது சிலர் மட்டுமே, ஆனால் இந்த பட்டியலில் ஆயிரத்துக்கு அதிகமானோர் உள்ளனர்) எல்லாரையும் இழந்துவிட்டீர்களே... இனியும் கட்சிய விட்டு வெளிய போக அங்க ஆளு இருக்கா ? உங்களையும் உங்க உடன்பிறவா சகோதரியையும் தவிர...3. விஜய் படங்கள் வசூல் வரவில்லை , திரை அரங்க உரிமையாளர்கள் பலத்த நட்டத்தை சந்தித்து உள்ளனர் ... நட்டத்தை சரிகட்டாவிட்டால் அவருக்கு விரைவில் ரெட் கார்ட்-- திரை அரங்க உரிமையாளர்கள் சங்கம் மிரட்டல்ஏனுங்கண்ணா விசை ... படத்துல மட்டும்தான் சூப்பர் ஸ்டார காப்பி அடிப்பீன்களான்னா? அவர மாதிரியே பஞ்ச் அடிக்கிறீங்க .. அரசியலுக்கு வர போறேன்னு உங்க அடிபொடிகள உசுப்பி விடுறீங்க... சம்பாதிச்ச காசுல கல்யாண மண்டபமா கட்டுறீங்க... நிஜ வாழகையில அவருக்கு இருக்கிற நேர்மைய follow பண்ண  மாட்டேங்கிறீங்க? ஒரு வார்தைக்காகவது காச திருப்பி தரேன்னு சொல்ல மாட்டேங்கிறீங்களே ... அத விடுங்க அடுத்த படத்துல உங்க நஷ்டத்த ஈடுகட்டிருவேன்னு வாய் சவாடலாவது விடலாம்ல... ஏனுங்கண்ணா உங்க படம் மேல உங்களுக்கே நம்பிக்க இல்லையா?


அப்புறம் அவரோட ரசிக கண்மணிகளுக்கு .. வசூல் சக்கரவர்த்தி ... அடுத்த ரஜினி , எங்க தளபதியால யாருமே நட்ட பட்டதில்ல அப்படி இப்படின்னு கைக்கு வந்ததெல்லாம் பதிவுல எழுதிகிட்டு இருந்தீங்களே ... இப்ப இப்படி ஆகி போச்சே? சொல்ல வேண்டியவங்களே உங்க தளபதியோட வசூல் வரலாற கிழிச்சி தொங்க விட்டாங்க.. இனிமே எப்படி உங்க பதிவுகளுள அவர பத்தி சப்ப கட்டு கட்டுவீங்க? ? இனிமேலாவது உண்மைய ஒத்துக்குவீங்களா இல்ல ஆப்ரிக்காவில் சுறா வசூல் சாதனை... நெல்சன் மண்டேலா விஜயின் செல்வாக்கை பார்த்து நடுக்கம் , அப்படின்னு ஏதாவது பதிவு போட்டு மறுபடியும் ஆரம்பிச்சிடுவீங்களா உங்க காமெடிய?4. மங்களூரு விமான விபத்துக்கு காரணம் இன்னும் தெரியவில்லை , கருப்பு பெட்டியை ஆராய்ந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும்என்ன காரணமா இந்த விபத்து நிகழ்ந்து இருந்தாலும் போன உயிர்கள் திரும்ப வராது... அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தவிர நம்மால் வேறு ஒன்றும் செய்ய இயலாது ... எனக்கு என்ன சந்தேகம்னா அந்த காரணத்தையாவது சரியா விசாரிச்சி கண்டுபிடிச்சி , மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உண்டு பண்ணி இனிமேல் இந்த மாதிரி விபத்து நடைபெறாமல் தடுப்பீர்களா? இல்லை விமானிதான் இறந்துட்டாரே , அவர் மேலே பழிய தூக்கி போட்டுட்டுவோம்னு , விமானியின் கவன குறைவே விபத்துக்கு காரணம் என்று விசாரணையை இழுத்து மூடி விடுவீர்களா? ( உலகில் விமானி இறந்த எந்த விமான விபத்துக்கும், விமானியின் கவன குறைவே காரணமாக இருக்க வேண்டும் என்பது எழுதபடாத விதி)எனக்கு இன்னொரு கேணத்தனமான சந்தேகமும் வருது .. எவவளவு பெரிய விபத்து நடந்தாலும் விமானத்தோட கருப்பு பெட்டி மட்டும் அழியாதாம்.. கூட கொஞ்சம் செலவு பண்ணி மொத்த விமானத்தையும் அந்த கருப்பு பெட்டி மாதிரியே தயாரிச்சா உயிரிழப்புகள் குறைய வாய்ப்புகள் வருமா? ( சுறா படம் பாத்ததில இருந்து  எனக்கு ஏன் இப்படிலாம் யோசனை வருது? )


பிடிச்சிருந்தா வோட்டு போடுங்க ...

3 comments:

MINNAL said...

( சுறா படம் பாத்ததில இருந்து எனக்கு ஏன் இப்படிலாம் யோசனை வருது? )


நல்ல வேளை நான் இன்னும் பார்க்கலை...

ILLUMINATI said...

//இனிமேலாவது உண்மைய ஒத்துக்குவீங்களா இல்ல ஆப்ரிக்காவில் சுறா வசூல் சாதனை... நெல்சன் மண்டேலா விஜயின் செல்வாக்கை பார்த்து நடுக்கம் , அப்படின்னு ஏதாவது பதிவு போட்டு மறுபடியும் ஆரம்பிச்சிடுவீங்களா உங்க காமெடிய?

//

இது கேள்வி....ஆனா இவனுங்க அடங்க மாட்டானுங்க....

//இனிமேல் இந்த மாதிரி விபத்து நடைபெறாமல் தடுப்பீர்களா? இல்லை விமானிதான் இறந்துட்டாரே , அவர் மேலே பழிய தூக்கி போட்டுட்டுவோம்னு , விமானியின் கவன குறைவே விபத்துக்கு காரணம் என்று விசாரணையை இழுத்து மூடி விடுவீர்களா? //

குசும்புயா உனக்கு.அதான் முடிவு உனக்கே தெரிஞ்சு இருக்குள்ள...அப்புறம்,என்ன கேள்வி....

Yoganathan.N said...

விஜய்யின் ரசிக கண்மனிகளுக்கு சொன்ன விஷயம் சூப்பர்.

//நிஜ வாழகையில அவருக்கு இருக்கிற நேர்மைய follow பண்ண மாட்டேங்கிறீங்க?//

ஒன்றும் சொல்வதற்கில்லை.

LinkWithin

Related Posts with Thumbnails