Followers

Copyright

QRCode

Friday, May 21, 2010

கடலை ஒரு அற்புத அனுபவம்


"ஆணும் ஆணும் வெட்டியா பேசுனா அதுக்கு பேரு அரட்டை...
பொண்ணும் பொண்ணும் வெட்டியா பேசுனா அதுக்கு பேரு புரணி...
ஆணும் பொண்ணும் வெட்டியா பேசுனா அதுக்கு பேருதான்  கடலை...."



இருபத்தியோராம் நூற்றாண்டு வந்துடுச்சி, இன்னமும் நீங்க கடலைக்கூட போட தெரியாத அப்பாவியா இருந்தீங்கன்னா நீங்க யூத்தா இருக்கிறதுல ஒரு பிரயோஜனமும் இல்லை பாஸ்... அதான் எதோ என்னால முடிஞ்ச அளவுக்கு , எனக்கு தெரிஞ்ச சில விசயங்களை வச்சி ஒரு பொண்ணுகிட்ட எப்படி கடலை போடுறதுன்னு சொல்லி கொடுக்கலாமேன்னு இந்த பதிவு... (சுய சொரிதல்)


கடலை போட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு விசயத்தை நல்லா தெரிஞ்சிக்கோங்க கடலைன்கிறது எந்த ஒரு காரணமோ ,இல்ல தேவையோ இல்லாம ஒரு குறிப்பிட்ட விசயத்துக்குள்ள நம்ம பேச்ச சுருக்கிகொள்ளாமல் எல்லை கடந்து நம்ம மனசுக்கு தோன்றிய , அவங்களுக்கு பிடிச்ச பல விசயங்களை தேவையே இல்லாம பேசுறதுதான் ... அங்க போய்கிட்டு உங்க அறிவாளிதனத்த காட்டுற மாதிரி மாவோயிஸ்டுகளை பத்தியோ , இல்ல உலக பொருளாதாரத்தை பத்தியோ பேசக்கூடாது...மீறி பேசுனீங்க கண்டிப்பா அடுத்த தடவ அவ உங்களை கூப்பிடவே மாட்டா , (அறிவாளிங்க கடலை போட தகுதி இல்லாதவங்க பாஸ்)


கடலை போடுறதுல இன்னொரு முக்கியமான விஷயம் டைமிங் ... அவ எந்த விசயத்தை பத்தி பேசி முடிச்சாலும் நாம டக்குன்னு அதுக்கு பதில் சொல்லணும் , யோசிக்கவே கூடாது , மீறி யோசிச்சீங்க அந்த சின்ன கேப்புல எவனுக்காவது மிஸ்டு கால் கொடுத்து கடலையை அங்க விளைக்க ஆரம்பிச்சிடுவாளுக.... ஆரம்பத்துல இந்த டைமிங் கொஞ்சம் மிஸ் ஆகத்தான் செய்யும் , அப்புறம் போக போக அது தானா வந்திடும் ... (வேல வெட்டி இல்லாதவங்க நெறைய பேரு திரியிறாங்க பாஸ்)


அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் கடலை போட ஆரம்பிச்சிடீங்கன்னா அதுதான் உங்க முழு நேர வேலையா இருக்கனும் ப்ரோக்ராம் எழுதுறதும் , மெசின் துடைகிறதும் மற்ற பல ஆணிகள் புடுங்கிறதும் சைடுலதான் பண்ணனும் ... அவ எப்பவாது கடலை போட விருப்பபட்டு உங்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து நீங்க வேலை பிஸில அப்புறம் பேசலாம்னு சொல்லிடீங்க , அவ்ளோதான் அப்புறம் கடைசி வரை ஆணி மட்டுந்தான் புடுங்கனும் , அடுத்து நீங்களா போய் ஏன் செல்லம் ரெண்டு நாளா பேசவே இல்லைன்னு கேட்டாலும் இல்லடா நீ பிஸியா இருப்பனுதான் உன்ன தொந்தரவு பண்ண வேணாமேன்னு கால் பண்ணலைன்னு பழிய உங்க மேல தூக்கி போட்டுடுவா...அப்புறம் அவள கூல் பண்ண தியேட்டர் , பீச் , ஷோப்பிங்க்னு அவள கூப்பிட்டுட்டு போய் சில பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டி வரும் (கடலை கொஞ்சம் காஸ்ட்லிதான் தலைவா)

அப்புறம் நீங்க தேவ இல்லாம அவள தொந்தரவு பண்ணகூடாது , அவ எப்ப கூப்புடுராளோ அப்ப மட்டும்தான் கடலை போடணும் ... (மொத்ததுல அடிமையா இருக்கணும் )


அவகிட்ட நேர்ல பேசும்போது அவ கண்ண பாத்து பேசுங்க .. கழுத்துக்கு கீழ பாத்தீங்க அவ்ளோதான் .... பேச்சு நின்னு போய் வெறும் மூச்சிதான் வரும்... (நெறைய பேரு இதுலதான் மாட்டிக்குவாணுக ஜாக்கிரதை)

அவள கிண்டல் பண்ணி மொக்கை போடதீங்க , அவளுக்கு பிடிக்காத பொண்ணுங்கள நல்லா ஓட்டுங்க... அவ சொல்லுற மொக்க ஜோக்ஸ்க்கு எல்லாம் விழுந்து விழுந்து சிரியுங்க.. அடிக்கடி ஆக்சிவலி, ஸோ நைஸ்... போன்ற ஆங்கில வார்த்தையை யூஸ் பண்ணுங்க ...அது உங்கள இங்கிலிஷ் பட ஹீரோவா அவளை நினைக்க வைக்கும்....(பேசுறதுக்கு முன்னாடி அவளுக்கு இங்கிலீஷ் தெரியுமான்னு தெரிஞ்சிகோங்க)

அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம் , அப்பப்ப அவளை புகழ்ந்து பேசிக்கிட்டே இருக்கணும்... அவ போட்டுக்கிட்டு வர்ற கேவலமான டிரஸ்சகூட ஸ்ரேயா சிவாஜில போட்டது மாதிரியே இருக்குன்னு கூசாம சொல்லணும் ... ஆனா அதுவே ரொம்ப ஓவரா போய்டகூடாது , அவ கண்டிபிடிக்காத அளவுக்கு பொய் சொல்லி புகழ்ந்தா போதும் ... (ஓவர் பில்ட் அப் கடலைக்கு ஆகாது தலைவா)


ஆனா உங்களை பத்தி பெருமையா பேசிறாதீங்க, அது அவளுக்கு பொறாமைய கெளப்பி விட்டு கடலை கட் ஆகுற அளவுக்கு கொண்டு போய் விட்டுடும்... (நம்ம அளவுக்கு அவங்களுக்கு பறந்து விரிஞ்ச மனசு கெடையாது பாருங்க (நான் உள்ள இருக்கிற மனச சொன்னேன்))



அப்புறம் நேர பாத்து பேசுறப்ப காது கொடையுறது மூக்க நோண்டுவது , சொறியிறது மாதிரி குரங்கு சேட்டைகளை பண்ணாதீங்க , ஹோட்டலுக்கு போய் சாப்டுகிட்டே பேசுற மாதிரி இருந்தா அளவா, நீட்டா சாப்டுங்க... சோத்துல பாத்தி கட்டுறது , சைட் டிஷ மெயின் டிஷ் மாதிரி சாப்புடுறது எல்லாம் பண்ண கூடாது... பாத்தியெல்லாம் அவ போன பின்னாடி சரக்கடிச்சிட்டு மிலிடரி ஹோடேலுல கட்டிக்கலாம், அவ முன்னாடி உங்க பேமிலியே ரொம்ப டீசென்டான பேமிலி மாதிரி காட்டிகோங்க.... (அவளுக நம்ம முன்னாடி அப்படி நடிக்கிறப்ப நாமளும் நடிக்கலாம் தப்பில்ல)


அப்புறம் கடல போட ஆரம்பிச்சிடீங்கனா மாச மாசம் ஆயிரம் ரூபாயாவது மொபைல் பில் வரும் அத பத்தியெல்லாம் கவலை படகூடாது .... அவளுக விபரமா மாசம் ரெண்டாயிரம் ப்ரீ SMS  இருக்கிற மாதிரி மொபைல் டாப் அப் பண்ணிட்டு , மினிமம் பேலன்ஸ் மைண்டைன் பண்ணிக்கிட்டு மிஸ்டு கால் கொடுத்தே காலத்த ஓட்டுவாளுக ... அந்த மினிமம் பேலன்ஸ் கூட நீங்கதான் போட்டு விடனும் ... அவளுகளுக்கு பைசா செலவு இருக்காது .. ஆனா இத பத்தி நீங்க அவகிட்ட பேசிடவே கூடாது (அவளுகளுக்கு ஆயிரம் இளிச்சவாயர்கள் கெடைப்பானுக.. நமக்கு? அதனால செலவ பத்தி கவலைப்படகூடாது)

சரிங்க , இவ்ளோ சொல்லிட்டேன் ... பிடிச்சிருந்தா நீங்களும் சீக்கிரம் ஒரு பொண்ண பிடிச்சி விடிய விடிய கடலை போட்டு குஜாலா இருங்க... அப்படியே எனக்கு ஒரு வோட்டையும் போட்டுட்டு போங்க ... நாங்களும் குஜாலா சந்தோஷ படுவோம்ல ...

7 comments:

shrek said...

Thalaivaaa pinnitteenga.

comedy-ah solraapla irunthaalum, neenga solrathu aththanaiyum unmai. hatsoff to you.

me the first-aa. first for the first time
ha ha.. :))

vijaykanth said...

சுருக்கமா கடலை போடும் போது "கருகாமல் பார்த்துக்கனும்" என்ன சரிதானே?

விஜயகாந்த்

Yoganathan.N said...

எப்படி நண்பா இப்படி எல்லாம்... ரொம்ப அனுபவிச்சு எழுதிருக்கீங்க... :P
ஓட்டு போட்டாச்சு.

Anonymous said...

கலக்கல் பதிவு..

க.மு.சுரேஷ் said...

பாஷ் பார்ட் 2 எப்ப வரும்.

"ராஜா" said...

//பாஷ் பார்ட் 2 எப்ப வரும்.

அடுத்த பிகர் மட்டும்போது வரும் தல

ManiKandanThangaraj said...

நல்ல அனுபவம்...

LinkWithin

Related Posts with Thumbnails