பையா , சுறா , இரும்புகோட்டை , கோரிபாளையம் என்று வரிசையாக மொக்கை படங்களாக பார்த்து திரைப்படங்கள் மேலே ஒரு வெறுப்புடன் இருந்தேன் ... அந்த சமயம் என் நண்பன் ஒருவன் இந்த படத்தின் DVD கொடுத்து பாக்க சொன்னான்.. அவன் ஒரு தீவிர ஆங்கில பட வெறியன் என்பதாலும் அவன் மொக்கை படங்களை கூட நல்லா இருக்கு என்று கூறி பலமுறை என்னையும் அந்த படங்களை பார்க்க வைத்து மனரீதியாக என்னை துன்புறுத்தி இருந்ததாலும் எனக்கு இந்த படத்தின் மேல் சந்தேகமாகவே இருந்தது .. அதனால் இரண்டு வாரங்களாய் இதை நான் பார்க்கவே இல்லை ... நேற்று வேறு வழியில்லாமல் பொழுதை போக்க இந்த படத்தை பார்க்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ... வேண்டா வெறுப்புடன் பார்க்க ஆரம்பித்தேன் ... படத்தை பார்த்து முடிக்கும் பொழுது எப்படி இந்த படத்த இவ்வளவுநாள் பாக்காமல் தவற விட்டோம் என்று நினைத்து கொண்டேன் .. அப்படி ஒரு அனுபவத்தை கொடுத்தது இந்த படம்....
படம் ஒரு science fiction கதை ... "ஒரு தடவ வாழ்ந்தால்தான் அதுக்கு பேரு வாழ்க்கை ... பல தடவை வாழ்ந்தால் நமக்கு பேரு மனுஷன் இல்ல பேய்" என்று ஹீரோயின் பேசும் வசனம்தான் மொத்த படமும்... கதை நடக்கும் காலகட்டம் 2425... 2011இல் ஒரு வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்கள் அனைவரும் மடிந்து விடுகின்றனர்... ஆனால் ப்றேக்னா என்னும் நகர மக்கள் மட்டும் அந்த ஊரில் உள்ள ஒரு டாக்டரின் உதவியுடன் தப்பி பிழைக்கின்றனர்... உலகத்தின் கடைசி மனிதர்கள் அவர்கள்தான் ...
பின் கதை 2425க்கு செல்கிறது... அந்த நகரத்தை சில்ட்ஹூத் என்னும் மனிதர் ஆண்டு கொண்டு இருக்கிறார்... நகரத்தில் உள்ள மக்கள் பலர் திடீர் திடீர் என்று காணாமல் போகிறார்கள்... இதற்கெல்லாம் காரணம் அந்த சில்ட் ஹூட்தான் என்று எண்ணி அவருக்கு எதிராக ஒரு புரட்சி படை ஒன்று ஊரில் உருவாகிறது ... அதில் ஒருத்திதான் Aeon Flux... அவளுக்கு அந்த சில்ட் ஹூட்டை கொலை செய்யும் வேலை தரபடுகிறது ...... அவள் சில்ட் ஹூட்டை கொள்ள அவன் தங்கி இருக்கும் கோட்டைக்குள் நுழைகிறாள் ... அவனை அவள் கொன்றாளா , காணமல் போன மக்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்பதை பல சுவாரசியமான திருப்பங்களுடன் சொல்லி இருக்கும் படம்தான் Aeon Flux.
இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் அதன் திரைகதை ... படம் ஆரம்பிக்கும் பொழுது சில்ட் ஹூத் தான் படத்தின் வில்லன் என்பதை போல காட்டி இருப்பார்கள் ... ஆனால் படம் நகர நகர கதையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டே வரும் ... தான் ஏன் மக்களை கடத்தி கொண்டு வருகிறேன் என்று அவர் விளக்கும் அந்த ஒரே காட்சியில் படத்தின் ஹீரோவாக மாறி விடுவார் அவர்... அந்த காட்சியில்தான் நமக்கும் படத்தின் கதை புரிய ஆரம்பிக்கும் ... ஒரு சஸ்பென்ஸ் படத்தில் திரைகதை எவ்வாறு அமைய வேண்டும் என்பதுக்கு இந்த படம் நல்ல உதாரணம்...
படத்தின் இன்னொரு முக்கியமான விஷயம் ஒளிபதிவு மற்றும் படத்தில் காட்டப்படும் அந்த நகரத்தின் செட்... 2425இல் கதை நடப்பதை போல காட்டி இருப்பதால் அதற்க்கு ஏற்றார்போல செட்டிங்குகள் அமைத்து இருப்பார்கள்.. விமானங்கள் , ரயில்கள் , கட்டிடங்கள் என்று ஒவ்வொன்றும் வித்தியாசமாக காட்டி இருப்பார்கள்....
அதேபோல சண்டை காட்சிகள் நம்மை மிரள வைக்கும் .. பல தடைகளை தாண்டி Childhood வாழும் கோட்டைக்குள் Aeon Flux செல்லும் காட்சியில் கிராபிக்ஸில் நம்மை மிரட்டி இருப்பார்கள்... அந்த கோட்டையை சுற்றி வளர்ந்திருக்கும் ஒரு மரம் அவர்களின் கற்பனை திறனுக்கு ஒரு சின்ன உதாரணம்....வசனங்களும் பல இடங்களில் அட போட வைக்கும்
கதை தெரியாமல் போய் பார்த்தால் கண்டிப்பாக படம் ரொம்ப பிடிக்கும்... நேரமும் DVD யும் கிடைத்தால் தவறாமல் பாருங்கள்... ஒரு பக்கா ஹீரோயிநீசப்படம்(heroinism) இது... நம்ம ஊரிலும் எடுக்கிறார்களே Heroism படம் என்று .. அவர்கள் கற்று கொள்ள நிறைய பாடம் உண்டு இந்த படத்தில்
பி. கு : 2005ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை.. காரணம் இந்த படத்தின் கதை அமெரிக்க மக்களுக்கு புதிது இல்லை .. இந்த படம் ஏற்கனவே அமெரிக்க டீவீக்களில் சக்க போடு போட்ட அனிமேஷன் படம் ஒன்றின் (அதற்க்கு பெயரும் Aeon Fluxதான்) தழுவல்தான்.. அதனால் இந்த படத்தின் சஷ்பென்ஷ்கள் அவர்களை பெரியதாக கவரவில்லை... ஆனால் நமக்கு கண்டிப்பாய் இந்த படம் ரொம்ப புதியதாய் இருக்கும்.... ஒன்ற மணிநேரம் பொழுது போவதே தெரியாது உங்களுக்கு .. அதுக்கு இந்த படம் கியாரண்டீ...
ஏங்க உங்களுக்கு ஒரு நல்ல படத்த அறிமுகபடுத்தி வச்சிருக்கேன்... ஓட்டு போடாம போறீங்களே... போட்டுட்டு போங்க பாஸ் ஓட்ட... அப்படியே விமர்சனம் நல்லா இருக்கா இல்லையா? நான் ஏதாவது தப்பா எழுதிருக்கேன்னான்னு கம்மேன்ட்ல சொல்லிட்டு போங்க
6 comments:
விமர்சனம் மிக அருமை
வாழ்த்துக்கள் "அருப்புகோட்டை" முரட்டு சிங்கம்
சாரி பாஸ் நாங்க "அருப்புகோட்டை கருப்பு தங்கம் "
இப்படத்தை பார்த்துள்ளேன். இப்போது கதை ஞாபகம் இல்லை. ஒன்று மட்டும் உறுதியாகத் தெரியும். It's very advance and high-tech. நேரம் கிடைத்தால், மீண்டும் பார்க்க முயல்கிறேன். :)
ஓட்டு போட்டாச்சு. :)
@ Yoganathan.N
நண்பா நீண்ட நாளைக்கு பிறகு என் தளத்திற்கு வந்துள்ளீர்கள்...
இது மலேசியா மற்றும் சிங்கையில் சக்க போடு போட்ட படம் என்று என் நண்பன் கூறினான் .. அது உண்மையா?
தங்களின் ஓட்டிற்கு நன்றி தல...
//நண்பா நீண்ட நாளைக்கு பிறகு என் தளத்திற்கு வந்துள்ளீர்கள்...//
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நண்பா. உண்மையைச் சொல்லப் போனால், உங்கள் தளத்தையும் நண்பர் பாலாவின் தளத்தையும் மட்டும் தான் தவறாமல் தினமும் வளம் வருவேன்.
உங்கள் தளம் ' load'-ஆக நேரம் ஆகிரதே... என்னவென்று சற்று கவனியுங்கள். :)
//இது மலேசியா மற்றும் சிங்கையில் சக்க போடு போட்ட படம் என்று என் நண்பன் கூறினான் .. அது உண்மையா?//
சிங்கையைப் பற்றித் தெரியவில்லை. ஆங்கில படங்கள் பற்றியும் அதன் இதற செய்திகளையும் தொடர்ந்து கவனித்து வருபவன் நான். எனக்கு தெரிந்து இந்த படம் மலேசியாவில் திரையில் வெளியான சுவடே இல்லை. இதை நானும் DVD-இல் தான் பார்த்தேன்.
ஒரு வேளை தப்பித் தவறி, மிஸ் பண்ணியிருப்பேன் போல. ஆனால், இது பெரிய அளவில் ஓடவில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரியும்.
Post a Comment