தலைப்பை பார்த்து யாரும் கான்டாக வேண்டாம், இப்ப இப்படி தலைப்பு வக்கிறதுதான் fashion ...இது விஜய் படம் என்பதால் படம் பேர் வைக்கப்பட்ட அன்றே நான் படத்தில் பெரியதாக ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.. கொஞ்சமேனும் ரசிக்கும்படியான ஒரு திரைகதை , குத்துபாட்டுக்கள் , தமன்னாவின் கவர்ச்சி , வழக்கமான வடிவேலுவின் காமெடி இதாவது படத்தில் இருந்தால் போதும் என்றுதான் நேற்று படம் பார்க்க சென்று இருந்தேன்...
வகுப்புல டாப் மார்க் எடுக்குற மாணவன்கிட்ட தொண்ணூறு மார்க் நூறு மார்க் எதிர்பார்க்கலாம் , மக்கு பையன்கிட்ட அவ்ளோ எதிர்பார்த்தா அதுநம்ம தப்புதான் ஒரு முப்பது மார்க்கோ நாற்பது மார்க்கோ எடுத்தாகூட அவன நாம பாராட்டலாம் , ஆனா அதுகூட எடுக்கலைனா நமக்கு கண்டிப்பா கடுப்புதான் வரும்... சுராவும் அப்படிதான் , நம்ம ரசனையை எவ்வளவுதான் கீழ்மட்டதுக்கு இறக்கி படத்த பார்த்தாலும் கடைசியில கடுப்புதான் மிச்சம்...
விஜயோட அறிமுக காட்சி முதல் கடுப்பு , அப்புறம் அவர் நடந்து வரும் பொது பின்னாடி சுனாமி வர்றதும் , சூரகாத்து சுத்து சுத்து அடிக்கிறது மாதிரி காட்டுற காட்சி ரெண்டாவது கடுப்பு , விஜய ரெண்டாவது தடவ பாக்கும்போதே தமன்னா காதல் வயபடுவது மூணாவது கடுப்பு... அவங்க காதல விஜய் ஏத்துக்கிற அந்த ராத்திரி சீன் நாலாவது கடுப்பு, வில்லன் தேவ் கில் வர்ற சீன் எல்லாமே கடுப்பு , அவர் சும்மா சும்மா விஜய அழிசிடுவேன் அழிச்சிடுவேன்னு கடைசி வரைக்கும் பெசிகிட்டேதான் இருக்காரு, அதுவும் அந்த இடைவேளை சீன் , விஜய நெருப்புக்குள்ள தூக்கி போடுறதும் , எல்லாரும் விஜய் செத்துட்டாருன்னு நம்பி வில்லன் பின்னாடி போறதும் , விஜய் நெருப்புல இருந்து தப்பி வந்து (எப்படி தப்புராருங்கிரத திருட்டி VCD வாங்கி பாருங்க செம காமெடி) மக்களை வசனம் பேசியே திருத்துறதும் , இன்னும் எத்தன படதுலதாண்டா காட்டுவீங்க. குப்பத்து மக்கள் எல்லாம் விஜய்கிட்ட வந்து நீதான் எங்க குல தெய்வம் ,, நீதான் ராசா எங்கள காப்பாத்தனும்னு முறையிடுற சீன பாக்கும்போது தமிழ் படத்துல வர்ற "இனிமே இப்படிதான் , இனிமே எல்லாமே இப்படிதான்" என்கிற வசனம் ஞாபகம் வராதவர்கள் எல்லாம் விஜய் ஆரம்பிக்க போகும் கட்சியில் அடிமட்ட தொண்டனாக சேருவதற்கான எல்லா தகுதியும் உடையவர்கள்..
இடைவேளை விடுவதற்கு முன்னாள் விஜய் தன குப்பத்தை எரித்தது வில்லன்தான் என்று கண்டு பிடித்து அவரிடம் என் குப்பத்து மக்களுக்கு நல்ல வீடு கட்டி தருகிறேன் பார் என்று சவால் விடுகிறார், வில்லன் அத நான் தடுத்து காட்டுறேன் பார் என்று எதிர் சவால் விடுகிறார்.. அப்புறம் என்ன வழக்கம் போல விஜய் ஜெய்க்க அவர் கையால் வில்லன் அடிபட்டு சாக சுபம் போடுகிறார்கள்... இந்த கருமாந்திரம் பிடிச்ச கதைய ரெண்டு மணிநேரமா எடுத்து வச்சி நம்ம உயிரை வாங்குறானுக... விஜய் என்ன சொன்னாலும் நான் திருந்த மாட்டேன் என்று அவர் ரசிகர்களுக்கு மறுபடியும் பெரிய அல்வா கொடுத்து இருக்கிறார்.. விஜயின் ரசிக கண்மணிகளே அவருக்கு இப்ப தேவை தன்னை படத்துல பாத்து ரசிக்கிற ரசிகன் இல்ல தன்னை முதல் அமைச்சர் ஆக்க தன கட்சியில் சேர்ந்து , அவருக்கும் அவர் அப்பாவுக்கும் கடைசி வரை உழைக்க தொண்டர்கள்தான் அவரின் இப்போதைய தேவை , அந்த வகையான மக்களை குறிவைத்தே அவர் படங்களை தருகிறார், என்றாவது ஒருநாள் அது நடக்கவே நடக்காது என்று அவரும் அவர் தந்தையும் உணருவார்கள் அப்பொழுதுதான் அவருக்கு நீங்கள் தேவைபடுவீர்கள் ,அவர் படங்களை ஓடவைக்க ... அன்றுதான் அவரின் கடைக்கண் பார்வை உங்களை போன்ற அவரின் படத்தினை மட்டும் ரசிக்கும் ரசிகர்கள் பக்கம் விழும்.
விஜய்யின் நடிப்பு கேரியரில் மிக பெரிய கரும்புள்ளியாக இது வரை இருந்த படங்கள் புதிய கீதை , உதயா , இனிமேல் சுறா அந்த இடத்தை அன்ன போஸ்டில் கைப்பற்றி விடும் ..
சரி விஜய்இனிமேலாவது திருந்துவாரா- எனக்கு என்னமோ மாட்டாருனுதான் நினைக்கிறேன் ஏன்னா அவருக்கு பயமே இல்ல அதுக்கு வேட்டைகாரனும் சுராவும்தான் சாட்சி....

இந்த படத்துல சொல்லிக்கிற மாதிரி இருக்குற ஒரே ஒரு விஷயம் நான் நடந்தா அதிரடி பாட்டுல விஜய்யோட நடனம்,, ஆனா பீச்சுல சுனாமி வந்துகிட்டு இருக்குறப்ப நம்ம காதலியோட முத்தத நாம அனுபவிக்க முடியுமா? அப்படி ஆகி போச்சி அந்த பாட்டு படத்துல ... அப்புறம் வடிவேலுவோட காமெடி அப்பப்ப சிரிப்ப வரவைக்கிது...நிறைய சீன்ல மொக்கையாகி போய்டுது... கைபுள்ளைக்கு சரக்கு காலியாகிடுச்சி போல... பின்னணி இசை படு சொதப்பல் , விஜய்யை காட்டும் போதெல்லாம் ஒரு BGM கொடுக்கிறார்கள் , ஷாஜகான் படத்தில் வரும் உண்மையுள்ள காதலுக்கு இவன் நன்றி செய்ய பிறந்தவன் என்ற பாட்டை அப்படியே திருப்பி அடித்துள்ளார்... ஒளிபதிவு சுமார் , லோக்கேசன்ஸ் எல்லாம் படு கேவலமா தேர்வு செஞ்சி படம் புடிச்சி இருக்காங்க , சண்டை காட்சிகள் படு மொக்கை , இளவரசு படம் முழுவதும் விஜய் புகழ் பாடிகொண்டே இருக்கிறார், அவன் ஒரு அதிசய பிறவி என்று அவர் சொல்லும் காட்சியில் திரை அரங்கில் சிரிப்பலை, படம் முழுவதும் எல்லாரும் விஜய் புகழ் பாடுகிறார்கள் , ஒரு காட்சியில் விஜய் தன்னை தானே இன்றைய அறிஞர் அண்ணா என்று கூறி கொள்ளுகிறார் .. ஒரு சீன்ல கலெக்டரா வர்ற ஒருத்தர் , விஜயை பார்த்து எப்ப வேணாலும் வெடிக்க போற எரிமலை என்று கூறுகிறார் , எனக்கு நூறு ரூபா கொடுத்து கட்சி மீட்டிங்க்ல உக்காந்து இருந்த மாதிரியே இருந்துச்சி ,, படத்துல விஜய் பேசுற modulation தாங்க முடியலடா சாமி , இந்த லட்சணத்துல ஒரு சீன்ல T.Rர வேற கிண்டல் பண்ணுறாரு....சத்தியமா சொல்லுறேன் இனிமே அவர் படத்த திருட்டு VCDல கூட பாக்க மாட்டேன் ...
விஜய்யின் நடிப்பு கேரியரில் மிக பெரிய கரும்புள்ளியாக இது வரை இருந்த படங்கள் புதிய கீதை , உதயா , இனிமேல் சுறா அந்த இடத்தை அன்ன போஸ்டில் கைப்பற்றி விடும் ..
சரி விஜய்இனிமேலாவது திருந்துவாரா- எனக்கு என்னமோ மாட்டாருனுதான் நினைக்கிறேன் ஏன்னா அவருக்கு பயமே இல்ல அதுக்கு வேட்டைகாரனும் சுராவும்தான் சாட்சி....
9 comments:
விஜய் அதுக்கெல்லாம் ஒத்து வரமாட்டாரு ..விட்ருங்க !
நானும் பாத்துட்டேன், உங்க தல ரசிகர்கள் தானப்பா ஓயாம விஜய் படங்கள முதல் நாளே பாக்குறீங்க.. அதனால தான் உங்க தலையோட எல்லா படங்களும் ஊத்திக்கிதோ..
சுறாவைப் பற்றி ஒரு சில கருத்துக்கள்
* பொதுவா சுறா'வைத் தேடிச் சென்றால், அதனிடம் கடி வாங்காமல் திரும்ப முடியாது
* 'சுறா'வைப் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தால் அதற்க்கு இன்சூரன்ஸ் கிடைக்காது.
* ஒரு வேட்டைக்காரன் , வில்லெடுத்து சுறாவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது. ஏனெனில் ,முட்டாள் 'சுறா' தானாகவே வீழும்.
* இருதய நோயாளிகள், குழந்தைகள், மற்றும் அறிவுள்ள எவரும் 'சுறா'வை பார்க்க வேண்டும் எனில் டிவியிலேயே பார்த்துகொல்வார்கள். முட்டாள்த் தனமாக நேரில் காண செல்ல மாட்டார்கள்.
குறிப்பு: மேலே குறிப்பிட்ட கருத்துகள் கடல் உயிரினம் 'சுறா' பற்றியது. இதனை 'விஜயின்' சூப்பர் ஹிட் படம் 'சுறா'விற்கு பொருத்திப் பார்த்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.
நன்றி யூர்கன் க்ருகியர்
வாங்க ஜின்க்குஜக்கா , விஜய்க்கு கெடைக்கிற கொஞ்சூண்டு ஒப்பென்னின்க்கும் அஜித் ரசிகர்கள்தான் காரணம்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி ..
ஆமா நாங்க விஜய் படத்த மொத நாள் பாக்குறதுக்கும் அஜித் படம் ஊத்திகிரதுக்கும் என்ன சம்பந்தம் , ஏன் இப்படி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம யோசிக்கிறது உங்க மூளை.. ஒஹ் சுறா படம் பாத்த எப்பெக்டா...
நன்றி பொன்ராஜ்
// நீதான் ராசா எங்கள காப்பாத்தனும்னு முறையிடுற சீன//
ஒரு வேளை ரெட், சிட்டிசன் பார்த்து இய்க்குனர் காப்பியடிச்சிட்டாரோ??இருக்கும் சகா
//இந்த படத்துல சொல்லிக்கிற மாதிரி இருக்குற ஒரே ஒரு விஷயம் நான் நடந்தா அதிரடி பாட்டுல விஜய்யோட நடன/
அதுவாச்சு இருக்கே இதுல :))
//ஆனா பீச்சுல சுனாமி வந்துகிட்டு இருக்குறப்ப நம்ம காதலியோட முத்தத நாம அனுபவிக்க முடியுமா?/
ஓ நீஙக்ளும் அதிஷாவ படிப்பிஙக்ளா? நானும் சகா..ஹிஹிஹிஹி
/விஜய்யின் நடிப்பு கேரியரில் மிக பெரிய கரும்புள்ளியாக இது வரை இருந்த படங்கள் புதிய கீதை , உதயா /
பாவம் சகா விஜய். தல போல பெரிய லிஸ்ட் அவருக்கில்லை பாருஙக்ளேன்.
//ஏன்னா அவருக்கு பயமே இல்ல அதுக்கு வேட்டைகாரனும் சுராவும்தான் சாட்சி/
ஆமா சகா. ஏகன், அசலுக்கு பிறகு பயந்து போய் காரோட்ட போயிட்டாரு தல. அவருக்கு இருக்கிற பயம் துளியாவது இருக்க வேண்டாம் இந்த லூசுக்கு?
//விஜய்க்கு கெடைக்கிற கொஞ்சூண்டு ஒப்பென்னின்க்கும்/
ஆமா சகா. அசல் சென்னையில் முதல் வாரம் 61 லட்சம். பையா 65 லட்சம். சுறா 90 லட்சம். ஆதாரம் வேணுமா சகா?
அப்புறம் நான் அசல் மே 1ஆம் தேதி டிவில தான் பார்த்தேன்.இன்னும் 100 நாள் ஆகல போல? டைரக்டா அடுத்த ப்டம் டிவிலேயாவாமே?
/// நீதான் ராசா எங்கள காப்பாத்தனும்னு முறையிடுற சீன//
ஒரு வேளை ரெட், சிட்டிசன் பார்த்து இய்க்குனர் காப்பியடிச்சிட்டாரோ??இருக்கும் சகா ////
தளபதி தன்னை இன்றைய எம்.ஜி.ஆர்ரா நெனச்சி , குடியிருந்த கோயில் , ஆயிரத்தில் ஒருவன் ரேஞ்சுக்கு காப்பியடிச்சிருக்காரு... நீங்க இப்படி சொல்லிப்புடீங்க...
////இந்த படத்துல சொல்லிக்கிற மாதிரி இருக்குற ஒரே ஒரு விஷயம் நான் நடந்தா அதிரடி பாட்டுல விஜய்யோட நடன/
அதுவாச்சு இருக்கே இதுல :))///
அது மட்டும்தான் இருக்கு இதுல ....
////ஆனா பீச்சுல சுனாமி வந்துகிட்டு இருக்குறப்ப நம்ம காதலியோட முத்தத நாம அனுபவிக்க முடியுமா?/
ஓ நீஙக்ளும் அதிஷாவ படிப்பிஙக்ளா? நானும் சகா..ஹிஹிஹிஹி///
அவரு வேட்டைகாரன்ல சொன்னது , இப்ப சுராவுக்கும் பொருந்துது , அடுத்த படத்துக்கும் யாரவது இப்படி எழுதுவாங்க சகா.... அவர மாற சொல்லுங்க, நாங்களும் மாத்தி எழுதுறோம்....
////விஜய்யின் நடிப்பு கேரியரில் மிக பெரிய கரும்புள்ளியாக இது வரை இருந்த படங்கள் புதிய கீதை , உதயா /
பாவம் சகா விஜய். தல போல பெரிய லிஸ்ட் அவருக்கில்லை பாருஙக்ளேன்.///
சகா காமெடி பண்ணாதீங்க , ஒண்டிக்கு ஒண்டி போட்டி வச்சா இதுல தளபத்திய அடிச்சிக்க யாரும் இல்ல சகா, உங்க வெற்றி படங்களைத்தான் தேடி புடிச்சி போடணும்
////ஏன்னா அவருக்கு பயமே இல்ல அதுக்கு வேட்டைகாரனும் சுராவும்தான் சாட்சி/
ஆமா சகா. ஏகன், அசலுக்கு பிறகு பயந்து போய் காரோட்ட போயிட்டாரு தல. அவருக்கு இருக்கிற பயம் துளியாவது இருக்க வேண்டாம் இந்த லூசுக்கு?///
சகா நாங்க ஆழ்வாருக்கு அப்புறமும் அட்டகாசம் பண்றவங்க ஏகன் எல்லாம் எங்களுக்கு ஜுஜூப்பி , உங்க தளபதி உண்மையிலேயே பயம் அறியான்தான்... இல்லனா மலையாளத்தில பிளாப் ஆன படத்த ரீமேக் பண்ணிக்கிட்டு இருப்பாரா? ஆனா தலையோட மாஸ பாத்து தளபதி பயந்து கெடக்கிறதா ஊருக்குள்ள பேசிகிறாங்க சகா...
/////விஜய்க்கு கெடைக்கிற கொஞ்சூண்டு ஒப்பென்னின்க்கும்/
ஆமா சகா. அசல் சென்னையில் முதல் வாரம் 61 லட்சம். பையா 65 லட்சம். சுறா 90 லட்சம். ஆதாரம் வேணுமா சகா?///
பாத்துட்டு பேசாதீங்க சகா , அவனுங்க சுறா விமர்சனத்த படிச்சி பாருங்க நீங்களே சிரிப்பீங்க...
///அப்புறம் நான் அசல் மே 1ஆம் தேதி டிவில தான் பார்த்தேன்.இன்னும் 100 நாள் ஆகல போல? டைரக்டா அடுத்த ப்டம் டிவிலேயாவாமே?///
பெரிய டுபாக்கூரா இருப்பீங்க போல நீங்க... உங்க வீட்டுல மட்டும் அசல் படம் கலைஞர் டீவீயில தெரிஞ்சதோ?
////விஜய்க்கு கெடைக்கிற கொஞ்சூண்டு ஒப்பென்னின்க்கும்/
ஆமா சகா. அசல் சென்னையில் முதல் வாரம் 61 லட்சம். பையா 65 லட்சம். சுறா 90 லட்சம். ஆதாரம் வேணுமா சகா?///
sify.com பாத்துட்டு பேசாதீங்க சகா , அவனுங்க சுறா விமர்சனத்த படிச்சி பாருங்க நீங்களே சிரிப்பீங்க...
http://lh5.ggpht.com/_e-_vqdqqLPg/S-CaW87Zz1I/AAAAAAAAAbk/rpNyLIJLPdk/s1600-h/Bilde0062[1].jpg
யார் டுபாக்கூர்ன்னு பாருங்க சகா.. எனக்கே லேட்டாதான் விஷயம் தெரிஞ்சிச்சு
//ஆனா தலையோட மாஸ பாத்து தளபதி பயந்து கெடக்கிறதா ஊருக்குள்ள பேசிகிறாங்க சகா.../
இருங்க சகா.. ஒரு 10 நிமிஷம் சிரிச்சிட்டு வறேன் :)
நம்ம நிலமைய பாத்தீங்களா சகா .... மாறி மாறி சிரிக்க வேண்டியதா போச்சி....
சகா அது படம் இல்லையாம் ... விசாரிச்சேன்..எதோ அஜீத்த பத்தின நிகழ்ச்சியாம் அதுக்கு அசல்னு பேர் வச்சிருக்கானுக...
... ... அதுக்குள்ளே படத்த பாத்தேன்னு அள்ளி விடுறீங்களே....இதெல்லாம் ஓவரு...
Post a Comment