இன்று நண்பன் ஒருவன் எனக்கு மதுரை மாநகரின் பழைய தோற்றம் பற்றிய சில படங்களை மெயிலில் அனுப்பி வைத்து இருந்தான் ... எனக்கு மதுரை மாநகரம் மிகவும் பிடித்த ஒரு ஊர். அதற்க்கு பல காரணங்கள் உண்டு , சிறு வயதில் இருந்தே எனக்கு அந்த ஊரின் மேல் ஒரு பிரமிப்பு உண்டு , அது இன்னும் என்னை விட்டு அகலவில்லை... தெற்கு வாசல் , பெரியார் நிலையம் , கோரிப்பாளையம் , மாட்டுத்தாவணி , அண்ணா நகர், பசுமலை, பழங்காநத்தம் , திருப்பரங்குன்றம், காளவாசல், ஆரப்பாளையம் , புதூர் , அவனியாபுரம் என்று மதுரையில் ஊர் சுற்ற நிறைய இடங்கள் , நிறைய நண்பர்கள் எனக்கு உண்டு ...
எனக்கு தெரிந்து இரவு எத்துனை மணிக்கு நீங்கள் மதுரையில் வந்து இறங்கினாலும் உங்களுக்கு எங்கு செல்ல வேண்டுமானாலும் பேருந்து இருக்கும் , நீங்கள் வயிறார சாப்பிட சுவையான சாப்பாடு கிடைக்கும். இந்த பெருமை மதுரையை தவிர தமிழ்நாட்டில் வேறு எந்த ஊருக்கும் கிடையாது...பக்தி மார்கத்திலும் மிக சிறந்த ஊர் எங்கள் மதுரை , மீனாட்சி அம்மன் கோவில் , திருப்பரங்குன்றம் முருகன் கோவில் , பெரிய பள்ளி வாசல் , செயின்ட் மேரி கத்தோலிக்க சர்ச் என்று அனைத்து மத கடவுள்களுக்கும் பிரபலமான ஊர் எங்கள் ஊர். என்னை போன்று மதுரையை நேசிக்கும் அனைவருக்காகவும் நம் மதுரையின் பழைய தோற்றம் அடங்கிய புகைப்படங்கள் இதோ ,
புது மண்டபம் மற்றும் ஏழு கடல் தெரு
தாமரை குளம் மற்றும் ராஜ அம்மன் சன்னதிகள்
திருமலை நாயக்கர் மகாலின் ஒரு பகுதி (தற்போது மாவட்ட பதிப்பாளர் அலுவலகம் )
தெப்பகுளம்
யானைமலை
விளக்குத்தூண்
வைகை கல்பாலம்
வைகை நதி மண்டபம்
ராணி மங்கம்மா அரண்மனை (தற்போது காந்தி மியூசியம்)
162 அடி தெற்கு கோபுரம்
எழுகடல் தெரு - ராஜ கோபுரம் - புது மண்டபம்
மேல இருக்கும் ஒவ்வொரு இடங்களை பற்றியும் தனித்தனியே ஒரு பதிவே போடலாம் , அவ்வளவு விஷயங்கள் உள்ளன அந்த இடங்களில், முடிந்தால் சில இடங்களை பற்றி மட்டும் எனக்கு தெரிந்த விபரங்களை இனி வரும் பதிவுகளில் தர முயற்சி செய்கிறேன்.
பிடிச்சிருந்தா இந்த புகைப்படங்கள் நிறைய பேரை சென்றடைய வோட்ட போடுங்க...
பிடிச்சிருந்தா இந்த புகைப்படங்கள் நிறைய பேரை சென்றடைய வோட்ட போடுங்க...
6 comments:
NICE!
நல்லா முயற்சி
தொடருங்கள்.......
Thanks for sharing :-)
I think the photos must be more than 40 years old. Anyway thanks for sharing.
நன்றி யூர்கன் க்ருகியர்
நன்றி SUNIL KUMAR PILLAI உங்கள் ஆதரவு இருந்தால் தொடரலாம்
நன்றிங்க லேகா அக்கா
ஆமாம் தங்கவேல் சுதந்திரத்துக்கு முந்திய மதுரை .. தவறுக்கு மன்னிக்கவும்
நான்: நாங்களும் மதுர காரங்க தான்லெ...
சந்தானம்: அப்போ நாங்க மட்டும் மலேசியா காரங்களா...
ஹிஹி...
பகிர்வுக்கு நன்றி... என்ன அழகு... இன்றும் இந்த இடங்கள் நல்ல பராமரிப்புடன் இருந்தால் நன்று. :)
Post a Comment