Followers

Copyright

QRCode

Thursday, April 29, 2010

சுறா - ஹிட்டு இல்ல மச்சி அட்டு


நாளைக்கு வரபோவுது நம்ம தளபதியின் சுறா.... தமிழ் மக்கள் எல்லாம் இந்த படத்தோட tarilor பாத்துட்டு வாந்தி பேதி வந்து ஆஸ்பத்திரியில கெடக்குராங்கன்னு நெறைய பேரு இப்பவே வதந்திய கெளப்பி வுட்டுகிட்டு இருக்கானுக... அத எல்லாம் நம்பாதீங்க, நம்ம இளைய தளபதிய நீங்க எல்லாம் குடும்பத்தோட டீவீயில பாத்து ரசிக்கிறவங்க , அப்படியே நாளைக்கு திரை அரங்கத்திற்கும் குடும்பத்தோட போய் சுராவ பாருங்க... நம்ம தளபதி கண்டிப்பா உங்கள ஏமாத்த மாட்டாரு... 
உங்களுக்கு என்ன வேணும் , நீங்க எல்லாம் என்ன உலக படமா பாக்க போறீங்க , அந்த அளவுக்கு உங்களுக்கு அறிவு இருக்கா ? (உங்களுக்கெல்லாம் அது இருந்தா அங்காடி தெருவும் , நான் கடவுளும் இருநூறு நாள் ஓடி இருந்திருக்குமே?)உங்களுக்காகவே நம்ம தளபதி சுறா படம் எடுத்து வச்சிருக்காரு .... படம் ஆரம்பிச்ச உடனே தளபதி ஒரு பொண்ண காப்பாத்த பொருக்கிககூட சண்டைய போடுவாரு .... சண்ட முடிஞ்சதும் இவ்வளவு நாளா உங்க வீட்டுல பொடி பசங்க அடிக்கடி DVDஇல போட்டு கேட்டுகிட்டு இருந்த குத்து பாட்டு வரும் அதுல தளபதி வெறும் முண்டா பனியனும் முக்கா பேண்டும் போட்டுகிட்டு ஆடுவாரு ... அத பாத்துட்டு உங்க வீட்டு நண்டு சுண்டு எல்லாம் போடுற ஆட்டத்த பாத்தா உங்களுக்கும் சந்தோசமா இருக்கும் ... (காசு கொடுத்து படம் பாத்தா சந்தோசமா இருக்கனும்ல... நம்ம தளபதி படம் பாத்த உங்களுக்கு அது கண்டிப்பா இந்த வழியில கெடைக்கும் )


பாட்டு முடிஞ்சதா அப்புறம் என்ன நீங்க எல்லாம் ஆவலா எதிர்பாத்துகிட்டு இருந்த தளபதியோட வலது கை அண்ணன் வடிவேலு வருவாரு... அவரும் அண்ணனும் சேந்து நெறைய காமெடி பண்ணுவாங்க.. அது நல்லா இருக்கோ இல்லையோ நீங்க சிரிப்பீங்க , நமக்கு அந்த அளவு நகைசுவை உணர்வு கெடையாது பாருங்க ... வடிவேலு முகத்த டீவீயில பாத்தாலே சிரிக்கிற மக்கள்தான நாம , அது தெரிஞ்சிதான தளபதி முக்கியமான படங்களுள எல்லாம் வடிவேலுவ கூட சேத்துகுவாறு ... அப்புறம் தமன்னா அக்கா வருவாங்க அவங்கள பாத்த வுடனே இவ்வளவு நேரமும் கடுப்பா உக்காந்துகிட்டு இருந்த உங்க வீட்டு வயசு பசங்க குசியாகிடுவாணுக ( அவனுகளையும் குசிபடுத்தனும்ல .. சூப்பர் ஸ்டார் படம்னா எல்லாருக்கும் புடிக்கணும் ... )


அடுத்த அர மணி நேரத்துக்கு நம்ம தளபதி தமன்னா அக்காவ பாத்து வித விதமா ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாரு .... அத பாத்து அந்த பசங்களுக்கு சூடு ஏறி போகும்... அப்பறம் என்ன அந்த சூட்ட தணிக்க ஒரு ஜாலி பாட்டு வெளிநாட்டுல , அதுல தளபதி ஆடுற டான்ச பாத்து உங்க வீட்டு வயசு பொண்ணுங்க கிறங்கி போய் கெடக்குங்க .... அப்புறம் என்ன நடக்கும் , இதுகூட தெரியாதா உங்களுக்கு , எத்தன ரஜினி படம் பாத்திருப்பீங்க நீங்க , வில்லன் கோஷ்டி கதைக்குள்ள வருவானுக , 


தளபதி அவனுகள பாத்து பஞ்ச் வசனமெல்லாம் பேசுவாரு ... நீங்களும் அத கேட்டு வெறி ஏறி போய் கெடப்பீங்க (பேசுற தளபதி மேல இல்லீங்க , அவருக்கு கெடுதல் பண்ணுற வில்லங்க மேல) , இந்த நேரத்துலதான் வில்லனுக சூழ்ச்சி பண்ணி நம்ம தளபத்திய தோற்கடிச்சிராணுக... நம்ம தளபதி வீடு , காதல் , சொத்து சுகம் எல்லாத்தையும் விட்டுட்டு நடு தெருவுல நிப்பாரு ... அத பாத்துட்டு உங்க குடும்பமே கண்ண கசக்கிகிட்டு உக்காந்து இருக்கும் ... அந்த ஸீன் வரும் போது படம் ஆரம்பிச்சி ஒன்னே கால் மணி நேரம் ஆகிருக்கும் , உங்க வீட்டு குட்டி பையன் மம்மி பாத்ரூம் போகணும்னு அடம் பிடிக்க ஆரம்பிப்பான், கரெக்டா அந்த நேரத்துல நம்ம தளபதி வில்லன் வீட்டுக்குள்ள புகுந்து பஞ்ச் வசனம் பேசி அவன்கிட சவால் விட்டுட்டு வீட்ட விட்டு வெளிய வருவாரு இடைவேளை விட்டுடுவாணுக.... (பின்ன சூப்பர் ஸ்டார் ஆகணும்னா மக்களோட மனச மட்டும் இல்ல அவங்களுக்கு எப்ப எப்ப பாத்ரூம் வரும் . எப்ப தம் அடிக்க போவாங்க இப்படி எல்லாத்தையும் புரிஞ்சி வஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி படம் தரனும்ல... நம்ம தளபதி அதுல கில்லாடி)


அப்பறம் என்ன pop corn, ice cream, cool drinks , முட்ட போண்டா இப்படி எல்லாத்தையும் சாப்டுட்டு , நம்ம தளபதி அடுத்து என்ன பண்ண போறாரோன்னு ஆவலா உக்காந்துகிட்டு இருப்பீங்க... பக்கத்து தியேட்டருல அங்காடி தெரு படம் ஓடிகிட்டு இருக்கும் , அந்த சத்தத கேட்டுட்டு , ச்சே போன வாரம் அந்த படத்துக்கு போனதுக்கு போகாமலே இருந்திருக்கலாம் , ஒரு பாட்டும் சரி இல்ல , நல்ல சண்ட இல்ல , குடும்ப செண்டிமெண்ட் இல்ல , குத்துபாட்டு இல்ல இந்த வாண்டு படமே பாக்கல தூங்கிட்டான் ,என்ன படம் எடுத்து வட்ச்சிருக்காங்க, இன்னைக்கு பாரு எப்பிடி குதிச்சிகிட்டு இருக்கான்னு நீங்க சொல்லிக்கிட்டு இருக்கும்போதே தளபதி டாட்டா சுமோல வந்து எறங்குவாறு ... சங்கர் மகாதேவன் குரலுல பேக் கிரௌன்ட்ல தளபதி ரசிகர்கள உசுப்பேத்துற மாதிரி ஒரு பாட்டு வரும் ,, சும்மா தியேட்டரே அதிரும் விசில் சத்தத்தில,, அத கேட்டு உங்க வீட்டு குட்டி வாலும் மம்மி நானும் விசில் அடிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு வாயில கைய வச்சி ஊதிகிட்டு இருப்பான்.. வெறும் காத்துதான் வரும் இருந்தாலும் அவன பாத்து ஈன்ற பொழுதிலும் பெருதுவக்கும் தாயா மாறி போய் இருப்பீங்க , 

அந்த ஒரே பாட்டுல தளபதி வில்லனுக்கு இணையா பெரிய ரௌடியா வளந்திடுவாறு... தமன்னா அக்கா அவர தேடி வருவாங்க விஜய் அவங்கள யாருன்னே தெரியாதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டு கைய வானத்த நோக்கி காட்டிக்கிட்டு " இந்த உசிரு எப்ப போகும்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும் , இந்த யுத்தத்துல நான் தனியாத்தான் நின்னு போராடுவேன் , அவ பாவம்டா அவளாது நல்லா இருக்கட்டும்"ன்னு பேசுற வசனத்த மறஞ்சி நின்னு தமன்னா கேட்டுருவாங்க... அப்புறம் என்ன ஸ்லொவ் மோஷன்ல ஓடி வந்து விஜய கட்டி பிடிக்க , அங்க போடுவோம்ல ஒரு குத்து பாட்டு ... அத பாக்குற உங்களுக்கு தமன்னாவும் விஜயும் சேந்த சந்தோசம் பிளஸ் ஒரு குத்து பாட்டுன்னு டபுள் ட்ரீட்... அப்புறம் வழக்கம் போல வில்லன் விஜயோட வளர்சிய பாத்து மெரண்டு போய் கெடப்பான் , அந்த கேப்புல தளபதி வில்லன போட்டு தள்ளிட்டு தமன்னா அக்காவ தள்ளிக்கிட்டு போய்டுவாரு ... சுபம் போட்டுடுவாங்க ... 


இது போதாதா உங்களுக்கு ... உங்களை என்ன கமலஹாசன், மணிரத்னம், பாலா படங்கள பாக்கவா கூப்புடுறோம் , அந்த படங்கலஎல்லாம் பாக்குறதுக்கு மூளைன்னு ஒன்னு வேணும் ... ரொம்ப யோசிக்க வப்பாணுக படத்துல , நமக்கு அதெல்லாம் தெரியாது ... அதான் சொல்லுறேன் நீங்க பாக்குற மாதிரி படம் தமிழ் சினிமாவுல தொடர்ந்து வரணும்னா நாளைக்கு உடனே போய் சுராவ பாத்திடுங்க .. கவலைபடாதீங்க தளபதி வித்தியாசமாலாம் படம் எடுத்து உங்களை கஷ்டபடுத மாட்டாரு... காலங்காலமா ரஜினி உங்கள பழக்கபடுத்தி வச்சிருக்கிற அதே ரூட்டுலதான் இவரும் போறாரு.. அதனால உங்களுக்கு புடிக்கும்... உங்களுக்கு மட்டும்தான் புடிக்கும் ... நீங்களே பாக்கலாட்டி வேற யாரு பாப்பா இவரு படத்த? ஆனா உங்க குடும்பத்துல தப்பி தவறி யோசிக்க தெரிஞ்ச ஒருத்தன் இருந்தான் அவன் செத்தான் .... அவனும் படத்த ரசிக்க முடியாது உங்களையும் ரசிக்க விட மாட்டான் அதனால படம் பாக்குறதுக்கு முன்னாடியே அவன கழட்டி விட்டுடுங்க , இல்லாட்டி உள்ள வந்து உங்க ரசனைய குறை சொல்லுவான்...தளபதியின் சுராவை குடும்பத்துடன் கண்டு எல்லாரும் முக்தி நிலை அடிய எல்லாம் வல்ல கலாநிதி மாறன் அருள் புரிவாராக... 


7 comments:

யூர்கன் க்ருகியர் said...

விஜயும் திருந்தமாட்டான் தமிழ்நாட்டு மக்களும் திருந்த மாட்டாங்க...
இந்த சன் டிவி காரனுங்க வேற மணிக்கு முப்பது முறை விஜய் படத்த ஆஸ்கார் அவார்ட் வாங்க போற மாதிரியே பில்டு அப் பண்றானுவ... கடைசில சொம்பு கூட கிடைக்காது !!
வாழ்க தமிழ் சினிமா .... வளர்க வருகால முதல்வர்

"ராஜா" said...

@ யூர்கன் க்ருகியர்

y blood same blood?
விடுங்க தல விஜய் ஆச்சியிலதான் தமிழ்நாடு சுபிச்சமா இருக்க போகுதாம்.. சொல்லிக்கிறாங்க....

SShathiesh-சதீஷ். said...

கலக்கல் லேட்டா வாறன்.

Yoganathan.N said...

//வடிவேலு முகத்த டீவீயில பாத்தாலே சிரிக்கிற மக்கள்தான நாம//

இது என்னவோ உண்மை தான்... ஒரு மனுசன் அடி வாங்குறதையே இன்னும் எவ்வளவு நாள் நம்ம மக்கள் ரசிப்பாங்க்???
This made me develop an alergy towards VadivElu comedies long ago... ஹிஹி

கார்க்கி said...

ஹிஹிஹி

இன்ஃபேக்ட் ஆழ்வார், ரெட், ஜனா எல்லாம் கூட இந்த டெம்ப்ளேட் ரைட்டா செ ஆவுது பார்த்திங்களாண்ணா...

ஆனா அஜித் முதல்வர் ஆக ஆசையா படறாரு? ஏன் விஜய் மட்டும்? எனக்கு என்ன தோணுதுன்னா விஜய் வேணும்ன்னே தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்து தோல்வி நாயகன்ன்னு பேர அஜித் கிட்ட இருந்து கைப்பற்ற பார்க்கிறார்ன்னு தோணுது.. நீங்க என்ன நினைக்கறீங்க?

Yoganathan.N said...

//இன்ஃபேக்ட் ஆழ்வார், ரெட், ஜனா எல்லாம் கூட இந்த டெம்ப்ளேட் ரைட்டா செ ஆவுது பார்த்திங்களாண்ணா...//

இந்த படங்கள் எல்லாத்தையும் என்றும் நாங்கள் தலையில் தூக்கி வச்சு கொண்டாடினது கிடையாது...

//ஆனா அஜித் முதல்வர் ஆக ஆசையா படறாரு? ஏன் விஜய் மட்டும்? //

என்ன ஒரு முட்டாள்தன மான கேள்வி இது... இடையில், அரசியல் அது இதுன்னு அலஞ்சது விஜய்யோட ஆவியோ??? :P

//விஜய் வேணும்ன்னே தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்து தோல்வி நாயகன்ன்னு பேர அஜித் கிட்ட இருந்து கைப்பற்ற பார்க்கிறார்ன்னு தோணுது.. நீங்க என்ன நினைக்கறீங்க? //

தோ பாரு டா... வேணுமுன்னே ஃப்ளாப் கொடுக்குராராம்... என்ன ஒரு சப்ப கட்டு... அஜித் தோல்வி நாயகன் என்றால், மற்ற எல்லாரும் இது வரை தோல்வி படங்களே கொடுத்ததில்லையா??? இதைத் தான் ஆங்கிலத்தில் "Ignorance is a bliss" என்பார்களோ???
எனக்கு தெரிந்து பதிவுளகில் இந்த படத்தைப் பலர் கிழித்து தொங்க விட்டார்கள். அங்க போய் கூவ வேண்டியது தானே...
இது ஒரு அஜித் ரசிகன் பதிவு என்பதால், கொந்தளிக்கிறீர்கள். ம்ம்ம்

"ராஜா" said...

நன்றி கார்க்கி வருகைக்கு...

நானே என்னுடைய ஒரு பதிவில் ஆஞ்சநேயாவை கிண்டல் அடித்து எழுதி இருக்கிறேன் ...

////விஜய் வேணும்ன்னே தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்து தோல்வி நாயகன்ன்னு பேர அஜித் கிட்ட இருந்து கைப்பற்ற பார்க்கிறார்ன்னு தோணுது.. நீங்க என்ன நினைக்கறீங்க? //
ஏங்க தொடந்து வெற்றி படமா கொடுத்து சூப்பர் ஸ்டார் பட்டத்த ரஜினியிடம் இருந்து கைப்பற்ற வேண்டியதுதானே ..

அசல் படம் வெற்றி தோல்வி என்பது ஒருபக்கம் இருக்கட்டும் , அஜித் ரசிகர்களையாவது திருப்திபடுத்திய படம் அது , சுறா படம் விஜய் ரசிகர்களை எப்படி படுத்தியது என்பது நிறைய விஜய் ரசிகர்களுடன் சென்று படம் பார்த்த எனக்கு தெரியும் ...

காவல்காரன் உங்கள் அனைவரின் ஏக்கத்தை போக்க வாழ்த்துக்கள்....

LinkWithin

Related Posts with Thumbnails