2030 இல் தமிழகம் ஒரு சின்ன கற்பனை:
1. காவேரியில் தண்ணீர் தராததால் தஞ்சையில் மிக பெரிய பஞ்சம் ...அதன் காரணமாக வளர்ந்து வரும் தமிழ் தீவிரவாத இயக்கமான தமிலோயிஷ்டுக்கள் கன்னடத்தில் புகுந்து தற்கொலை படை தாக்குதல்...
2. தமிலோயிஷ்ட்டுக்கள் முற்றிலும் அளிக்கப்பட வேண்டும் - பிரதமர் ராகுல் காந்தி கருத்து.. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தமிலோயிஷ்டுக்கள் முற்றிலும் அளிக்க பட வேண்டியவர்கள் ... அவர்களை அளிக்க ராணுவ தாக்குதல் தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்... தன தந்தையை கொன்ற தமிழர்களை முற்றிலும் அழிக்கும் உள்நோக்கத்துடனே ராகுல் தமிழர்களின் மீது தாக்குதலை ஆரம்பித்து இருக்கிறார் என்று தமிழ் இன உணவாளர்கள்(no spelling mistake) கருத்து தெரிவித்துள்ளனர்...
3. தமிழர்களின் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று கோரி வடக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலும் , தெற்கு தமிழக முதல்வர் அழகிரி மதுரையிலும் உண்ணாவிரதம்... உண்ணாவிரதத்தை கை விடாவிட்டால் அவர்கள் கட்சி மத்திய அமைச்சர்கள் டிஸ்மிஸ் செய்யபடுவார்கள் என்று டெல்லி தலைமை மிரட்டியதால் உண்ணாவிரதம் வாபஸ்.. மேலும் ராகுலின் மகன் திருமண பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு எல்லா ராணுவமும் சென்று விட்டதால் தமிழ் நாட்டில் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.. இதை மறைத்து என்னுடைய உண்ணாவிரதத்தின் பயனாகவே மத்திய அரசு தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவித்து உள்ளது என்று முரசொலியில் ஸ்டாலின் மற்றும் அழகிரி தனி தனி அறிக்கை...
4. தி.மு.காவில் உச்சகட்ட பனிப்போர்... வடக்கு தமிழக துணை முதலவர் உதயநிதிக்கும் , தெற்கு தமிழக துணை முதல்வர் தாயாநிதி அழகிரிக்கும் நடுவே புகைச்சல்... ஒட்டு மொத்த தி.மு.கவின் தலைவராக அடுத்து தானே ஆகவேண்டும் என்று இருவரும் தம் தம் தந்தைகளிடம் சண்டை இட்டு வருகின்றனர்... எனவே இரண்டு தமிழக முதல்வர்களுமே குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்... தம் தந்தை ராஜ தந்திரமாக நாட்டை இரண்டாக பிரித்ததை போல கட்சியை இரண்டாக பிரிக்க முடியாமல் பிரட்ச்னைக்கு தீர்வு காண முடியாது என்று அழகிரி ஆவேச பேட்டி...
5. சன் பிக்சர்ஸ் வழங்கும் எந்திரன் பார்ட் 4ல் அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உலக அழகி ஐஸ்வர்யா ராய் மறுப்பு... மணிரத்தினத்தின் அம்பதாவது படத்தில் நடிக்க ஏற்கனவே தேதி ஒதுக்கி விட்ட படியால் என்னால் ரஜினியுடன் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது என்று வருத்தம் தெரிவித்தார்... இந்த படத்தில் ரஜினியின் பாட்டியாக முன்னாள் கவர்ச்சி கன்னி ஷ்ரேயா நடிக்கவுள்ளார்...
6. அஜித் இனி எனக்கு தேவை இல்லை .. கௌதம் மேனன் கடுப்பு பேட்டி.. தொடர்ந்து பத்தாவது முறையாக அஜித்தை வைத்து படம் இயக்க முடிவு செய்து வழக்கம் போல கடைசி நேரத்தில் படம் கைவிடபட , அவர் இவ்வாறு ஆனந்த விகடனில் பேட்டி அளித்து உள்ளார்.. இதற்க்கு பதில் அளித்த அஜித் அவர் இல்லாமல் நான் நூறு படம் பண்ணி விட்டேன் , நான் இல்லாமல் அவர் இருபது படம் பண்ணி விட்டார் யாருக்கும் யாரும் தேவை இல்லை என்று கூறினார்..
6. தொடர்ந்து பத்து படங்கள் தோல்வி அடைந்ததால் அம்பது கோடி வரை நஷ்டம்.. இளைய (அப்ப கூடவா) தளபதி விஜய் மீது தயாரிப்பாளர் சங்கம் புகார்... நஷ்டத்தை திருப்பி தாராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை விஜய்க்கு தரக்கூடாது என்று தடை உத்தரவு அளித்து விடுவோம் என்று மிரட்டியதால் விஜய் கலக்கம்.. இந்நிலையில் விஜயின் அடுத்த படம் சூலாயிதத்தில் அவருடன் ஜோதிகாவின் மகள் தியா முதன் முதலாக ஜோடி சேருகிறார்...
7. குஷ்பூவின் மகள் தி.மு.காவில் இணைந்தார்.. தன அன்னையை போலவே தானும் கட்சி தலைமைக்கு கடைசி வரை உண்மையாய் சேவை செய்வேன் என்று பேட்டி அளித்தார்...
8.மானாட மயிலாட கின்னஸ் ரெக்கார்ட்... உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சி ஐமபது சீசன்களை கடந்து இன்னும் ஒளிபரப்பபடுவது இதுவாகத்தான் இருக்கும் என்று கலா மாஸ்டர் பெருமிதம்... இந்த நிகழ்ச்சியையும் விடாமல் (வேறு வழி இல்லாமல்) அம்பது வருசத்திற்க்கும் மேல் பார்த்து வரும் தமிழ் மகா ஜனங்களுக்கு சகிப்புத்தன்மைக்கான நோபல் பரிசு விரைவில் வழங்கப்படும் என்று நோபல் கமிட்டி அறிவிப்பு...
9. நடிகை எயிட்தாரா தனது எட்டாவது காதலன் நடிகர் பரத்துடன் திருப்பதியில் ரகசிய திருமணம்.. பரத்தின் மூன்றாவது மனைவி போலீசில் புகார்..
10. 2031 இல் நான்தான் முதல்வர் ... ஸ்டாலினின் ஊழல் அரசாங்கத்தை ஒழித்து கட்டி மக்கள் என்னை ஆட்சிபீடத்தில் ஏற்றுவார்கள் என்று விஜயகாந்த் அறிக்கை... இந்நிலையில் அவர் இயக்கி நடித்து கொண்டிருக்கும் விருதகிரி படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளி வந்து விடும் என்று அவர் பீதியை கிளப்பி உள்ளார்..
10. தமிழ் பதிவுலகில் புனைவு எழுத தடை... தமிழ் நாட்டிலேயே அதிகம் மக்களால் விரும்பி படிக்கப்படும் வலைபூக்களில் யாரும் யாரையும் தாக்கி புனைவு எழுதகூடாது... ஒருவரை தாக்கி புனைவு எழுதுவது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதற்கு சமம் என்பதால் புனைவு எழுதுபவர்களுக்கு ஏழு வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு...
மக்கா நான் மேல சொன்னதெல்லாம் வெறும் கற்பனைன்னு சொல்லி ஒதிக்கிற முடியாது .. நாட்டுல நடக்குற கூத்த பாத்தா இதெல்லாம் உண்மையிலேயே நடந்தாலும் நடக்கும் .. பின்னால நாம சொல்லிகலாமல இதெல்லாம் நடக்கும்னு நாங்க இருபது வருசத்துக்கு முன்னாலேயே கணிச்சிட்டோம்னு... அதுக்காகத்தான் இந்த பதிவு...