Followers

Copyright

QRCode

Thursday, September 16, 2010

நண்பேண்டா

  

DISKI: இது நட்புக்குள் எந்தவிதமான ஈகோவும் பார்க்காமல் பழகும் உண்மையான நண்பர்களுக்கான பதிவு 



நேற்று பாஸ் என்கிற பாஷ்கரன் படம் பார்க்க நேர்ந்தது ... படத்தோட trailor பார்த்த பொழுதே புரிந்து விட்டது  இந்த படம் சிவா மனசுல சக்தி படத்தோட இரண்டாம் பாகம் என்று... சிவா மனசுல சக்தி படம் எனக்கு மிகவும் பிடிக்கும் ..... அதற்க்கு காரணம் அதில் வரும் ஜீவா சந்தானம் நட்பு மற்றும் ஜீவா அனன்யா காதல் ... இந்த படத்தில் இரண்டாவது மேட்டர் மொக்கையாக  போனாலும் முதலாவது மேட்டர் செமையா வொர்க் அவுட் ஆகிருக்கு ... அதிலும் அந்த நன்பேண்டா வசனம் வரும்போதெல்லாம் தியேட்டர் அதிருது .. காரணம் நாம எல்லாருமே அப்பப்ப கோபமாவோ இல்ல பெருமையாவோ நம்மளோட நண்பர்களை பார்த்து பேசுற வசனம் அது ... இந்த படம் வந்த நாளில் இருந்து இந்த வசனத்த வச்சி நெறைய மொக்கை SMSகள் எனக்கு வந்துகிட்டு இருக்கு... அதுல மரண மொக்கையா (except the last one which is really a nice one) சில SMSகள் இங்கே ...

நேர்முக தேர்வுல கலந்துகிட்டு வெற்றியோட திரும்புறப்ப ....
அப்பா : எவ்வளவுடா சம்பளம் இந்த வேலையில 
அண்ணன் : டெம்ரவரியா பெர்மனேன்டாடா?
அம்மா : வேல எங்கடா சென்னையா பெங்கலூராடா?

ஆனா நண்பன் : மச்சி எத்தன பிகர்டா உன்கூட சேந்து செலக்ட் ஆச்சி... உன்கூட ஒண்ணா வேலை பார்க்க 

என்ன வேல பாக்க போறோம்கிறது முக்கியம் இல்ல நம்ம கூட எத்தன பிகர் வேலை பாக்க போராங்கங்கிரதுதான் முக்கியம்னு நெனைக்கிற  நம்மோட பிஞ்சி மனச சரியாய் புரிஞ்சிகிட்டு இந்த கேள்விய கேக்குற நண்பன பாத்து நாம சத்தமா சொல்லலாம் "நண்பன்டா"   

ஒரு மாசமா இரவு பகலா கஷ்டப்பட்டு வேலை பார்த்து மொத மாச சம்பளம் வாங்குனவுடனே 

அப்பா   : காச செலவு பண்ணிராதடா ... திருப்தி உண்டியலுல போடுறதா     வேண்டி இருக்கேன் 
தங்கை : அண்ணா எனக்கு புது மாடல் சுடி ஒன்னு வாங்கி கொடுடா?
தம்பி : டேய் எனக்கு ஒரு பைக் வாங்கி கொடுடா?

ஆனா நண்பன் : மச்சி ஒரு குவாட்ட்டர் சொல்லேன் .. நாம ரெண்டு பேரும் சேந்து தண்ணி அடிச்சி என்ஜாய் பண்ணி எத்தன நாள் ஆச்சி

காசு கைல இருந்தா நமக்கு தண்ணி அடிக்க ஒரு கம்பெனி தேவப்படும்கிரத சரியாய் புரிஞ்சிகிட்டு இத சொல்லுற நண்பன பாத்து நாம பெருமையா சொல்லலாம் "நண்பேண்டா"

மாச கணக்குல நம்மளோட ஒண்ணா ஊர் சுத்தி நம்ம பர்ஸ  காலி பண்ணுன பிகர் நம்மள கழட்டி விட்டப்ப    
மத்தவன் : டேய் அவளோட சேந்து நீ ஓவரா சீன போட்டப்பவே தெரியும்டா அவ ஒரு நாள் உன்ன கழட்டி விடுவான்னு ... உனக்கெல்லாம் இது தேவையா?
ஆனா நண்பன் : மச்சி ECE departmentல சுதர்ஷினின்னு  ஒரு சூப்பர் பிகர் ஜாயின்ட்  பண்ணிருக்குடா.. இந்தாடா அவ செல் நம்பர் டிரை பண்ணு மச்சி உனக்கு கண்டிப்பா மாட்டும்  

தனக்கு பிகர் மாட்டலேனாகூட அத பத்தி கவலைபடாம நமக்கு பிகர் செட் ஆகணும்னு கவலைபடுற நண்பன பாத்து பெருமிதமா சொல்லலாம் "நண்பேண்டா"


  காலேஜ் லேப்ல பிகர்கூட சாட் பண்ணி மாட்டிகிட்டா என்கொரில 

பிகர் : சார் இவன்தான் என்ன ஒருவாரமா  follow பண்ணிகிட்டே இருக்கான் ... இப்படிலாம் என்  பின்னாடி சுத்துனா  ...HODகிட்ட போட்டு கொடுத்திடுவேன்னுதான் அவனுக்கு மெசேஜ் அனுப்புனேன் அவன்தான் விடாம மெசேஜ் மேல மேசெஜ்ஜா  அனுப்புனான் ...  

காலேஜ் லேப்ல பலான வெப்சைட் பாத்து மாட்டிகிட்டா என்கொரில 

நண்பன் : சார் நான் மட்டுந்தான் அந்த வெப்சைட் பாத்தேன் .. இவன் எனக்கு ப்ரோக்ராம்  சொல்லி கொடுக்கத்தான் எங்கிட்ட  வந்தான் ...    என்னை  வேணும்னா சஸ்பென்ட் பண்ணுங்க அவன விட்டிடுங்க  

சஸ்பென்ட் ஆனா நம்ம வீட்டுல நமக்கு சாப்பாடு கெடைக்காதுன்னு நல்லா தெரிஞ்ச நண்பன் நம்மள காப்பாத்தி விடுறப்ப அடிமனசுல இருந்து அழுத்தமா சொல்லலாம் "நண்பேண்டா "

ஆஸ்பத்திரியில இருக்கிற அப்பாவ காப்பாத்த லட்சக்கணக்குல  காசு தேவை படும் பொது 

சொந்தக்காரன் : தம்பி மனசு கஷ்டமாத்தான் இருக்கு ... ஆனா என்ன பண்ண இப்பதான் வீடு கட்டி முடிச்சிருக்கேன் .. கையில நயா பைசா கெடையாது .. மன்னிச்சிடு தம்பி 

நண்பன் : மச்சி .. நம்ம பசங்ககிட்ட எல்லாம் பேசி ரெண்டு லட்சம் ரெடி பண்ணிட்டேன்டா ... ஒரு பத்தாயிரம்தாண்டா குறையா இருக்கு ... டிரை பண்ணி பாத்தேன் மச்சி .. கடைசி வரை கெடைக்கவே இல்ல ஸாரிடா  மச்சி...

காசுக்காக வீட்டை பிரிஞ்சி  சென்னையிலயும் பெங்களூர்ரிலும்  , வாங்குற சம்பளம் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே பத்தாம இருக்கும்போதும் தங்கச்சியோட கல்யாணத்துகாகவோ இல்ல தம்பிகளோட படிப்புக்காகவோ கஷ்டப்பட்டு சேத்து வச்சிருந்த காச கொஞ்சம் கூட யோசிக்காம நமக்கு தூக்கி கொடுக்கிற அந்த நண்பர்களை பார்த்து பெருமையா அழுத்தமா கண்கலங்க அடி மனசுல இருந்து சந்தோசமா சொல்லலாம் "நண்பேண்டா

9 comments:

surivasu said...

//ஜீவா அனன்யா காதல் //
அது அனன்யா இல்ல. அனுயா. வாழ்த்துக்கல் ராஜா.

"ராஜா" said...

//அது அனன்யா இல்ல. அனுயா. வாழ்த்துக்கல் ராஜா.

typing mistake
நன்றி நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும்

வினோ said...

பார்த்து சிரிச்சு ரசிச்ச படம் இது ராஜா...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க பாஸ்.. கலக்கல்

"ராஜா" said...

@ வினோ

நன்றி நண்பா ...

@ பட்டாபட்டி..

வாங்க தல ... நல்லா இருக்கீங்களா? ... ரொம்ப நாளா உங்க கட பக்கம்கூட நீங்க வரல ....சொந்த ஊர் பயணம் நல்லா இருந்ததா தல ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லா அனுபவிச்சி எழுதியிருக்கீகப்பு! (தலைவிக்கு ஆதரவு கொடுத்தத இப்பத்தான் பாத்தேன், கலக்கிப்புட்டீங்க! நன்றி!)

அகல்விளக்கு said...

கட்டிங்குகூட காசில்லாம காய்ஞ்சுபோய் உக்காந்திருக்கும்போது 'மச்சான்! நான் பாஸ்பண்ணிட்டேன்'னு கத்திக்கொண்டு வரும் மாலைபோட்ட ஆடு...
அப்ப சொல்லலாம் "நண்பேன்டா"...

:-)

நல்லா எழுதியிருக்கீங்க தல...

"ராஜா" said...

//நல்லா அனுபவிச்சி எழுதியிருக்கீகப்பு! (தலைவிக்கு ஆதரவு கொடுத்தத இப்பத்தான் பாத்தேன், கலக்கிப்புட்டீங்க! நன்றி!)

தல நீங்க அந்த பதிவ எப்பவாவது வந்து பாப்பீங்கன்னுதான் இந்த உயிரை கையில பிடிச்சி காத்துகிட்டு இருந்தேன் ...

//கட்டிங்குகூட காசில்லாம காய்ஞ்சுபோய் உக்காந்திருக்கும்போது 'மச்சான்! நான் பாஸ்பண்ணிட்டேன்'னு கத்திக்கொண்டு வரும் மாலைபோட்ட ஆடு...
அப்ப சொல்லலாம் "நண்பேன்டா"...

கலக்குறீங்க தல ...

Yoganathan.N said...

கடைசி பத்தியில் சொன்ன நண்பர்கள் ரகம் எனக்கு அமையவில்லை. :(
நல்லா இருக்கு, வாழ்த்துகள்.

என்ன தான் நகைச்சுவையாக எழுதினாலும், பதிவில் உண்மைகள் இருந்தன. இந்த பதிவை எழுதியதற்கு உங்களுக்கொரு 'நண்பெண்டா'... :)

LinkWithin

Related Posts with Thumbnails