தலைய பத்தி பதிவு எழுதி ரொம்ப நாள் ஆச்சி ... அதான் என்னை போன்ற தீவிர தலை ரசிகர்களுக்காக ஒரு பதிவு எழுதலாமேன்னு முடிவு பண்ணிட்டேன் ... இனி அடுத்து வருவது எல்லாம் முழுக்க முழுக்க தலை ரசிகர்களுக்கு மட்டுமே ... அவரை பிடிக்காது பிடிக்காதுன்னு சொல்லிட்டு அவர் படத்தை முதல் நாளே பார்த்துவிட்டு வீம்புக்காக திட்டுவதை போல , இந்த பதிவையும் முழுவதும் படித்து விட்டு பின்னூட்டத்தில் ஏடா கூடமாக ஏதாவது எழுதி சண்டைக்கு வரும் அன்பர்கள் வரவேற்க படுகிறார்கள்
அவர் எந்த நேரத்துல மங்காத்தான்னு அவர் படத்துக்கு பேர் வச்சாரோ படமும் பேருக்கு ஏத்த மாதிரியே இழுத்துக்கோ பறிச்சிக்கொன்னு மங்காத்தா ஆட்டம் ஆடுது... தொடர்ந்து ஆறு படம் ப்ளோப் கொடுத்த நடிகர்கள் கூட அடுத்தடுத்து படம் காட்டிகிட்டு இருக்க , தல ஏன் இவ்வளவு டிலே பண்ணுதுன்னு ரசிகர்களுக்கு ஒன்னும் புரியல ... கடைசியா மெகா ஹிட் படம் கொடுத்து இவ்வளவு லேட் பண்ணுனாகூட பரவா இல்லை , அதுவும் சரியா ஓடல ... காஞ்சி போய் கெடக்குறோம் தல ரசிகர்கள் எல்லாம் ... நடுவுல வேற இந்த கௌதம் மேனன்கூட சண்ட ...இப்படி சண்ட போட்டு தல விட்ட நல்ல படங்கள் நெறைய இருக்கு ... நந்தால ஆரம்பிச்சி நான் கடவுள் வரைக்கும் ... அந்த படங்களை எல்லாம் பார்க்கும் போது இன்னைக்கு வரைக்கும் வயிறு எறியும் எனக்கு ... ஒவ்வொரு சீன்லயும் ச்சே தல இந்த சீன்ல வந்திருந்தா சும்மா பட்டய கெளப்பி இருக்கும் அப்படின்னு தோணும் ... குறிப்பா நந்தால சிவாஜியும் அஜித்தும் நடிக்கிறதா இருந்தது முதலில் .. சும்மா கற்பனை பண்ணி பாத்தாலே என் உடம்பெல்லாம் சிலிர்கிறது .. அது மட்டும் நடந்திருந்தா கமலுக்கு ஒரு தேவர் மகன் மாதிரி ஏன் அதவிட பயங்கர கெத்தா தலைக்கு அந்த படம் அமைந்திருக்கும் ... அதேமாத்ரிதான் மிரட்டல் படமும் ... தலைய வச்சி ஷூட்டிங்க்லாம் ஆரம்பம் ஆகிடுச்சி .. எல்லா ஊருலயும் போச்டேர்லாம் ஒட்டிட்டாணுக விரைவில் அப்படின்னு ... சும்மா ஒவ்வொரு போஸ்டரும் பட்டய கெளப்புது ... அதும் அஜித் பப்பூன் வேசத்துல இருக்கிற போஸ்டர் பயங்கர ஹிட் அந்த சமயத்துல .. ஹ்ம்ம் அது மட்டும் நடந்திருந்தா இன்னைக்கு தலையோட ரேஞ்சே வேற ... அந்த ரெண்டு படத்துலையும் நடிச்சி ஒண்ணுமே இல்லாம இருந்த ஒரு நடிகர் இன்னைக்கு முன்னணி நடிகரா வளந்துட்டார் ... அந்த குறிப்பிட்ட படங்கள் வந்த காலகட்டத்தில் அஜித்தான் இளம் தலைமுறையில் no. 1 ஹீரோ, அவர் இந்த படங்களில் நடித்திருந்தால் அவர் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றுப்பார்?.
இப்படி தன கேரியரில் டாப் கியரில் செல்ல வேண்டியவரை இந்த படங்களுக்கு பதிலாக தேர்வு செய்த படங்கள் அதல பாதாளத்தில் தள்ளி விட்டன ... நந்தாவுக்கு பதில் ரெட் , அவரின் வீழ்ச்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் , மிரட்டலுக்கு பதில் அவர் தேர்வு செய்த படம் ஜீ ... எத்தனை தோல்விகள் வந்தாலும் தாங்கி கொள்ளும் என்னை போன்ற அஜித் ரசிகர்களையே அசைத்து பார்த்த தோல்வி படம் இது ... இந்த படம் மட்டும் வெற்றி பெற்றிருந்தால் இன்று தல அசைக்கமுடியாத உயரத்தில் இருந்திருப்பார் ... அந்த படத்திற்கு அமைந்த ஒப்பெநிங் இன்னும் ஞாபகம் இருக்கிறது எனக்கு ... எங்கள் ஊரில் அன்று முழவதும் படம் ஓடிய தியேட்டரை சுற்றி traffic jam .. முதல் ஷோ பார்த்து விட்டு படம் முடிந்து நான் தியேட்டரை விட்டு வெளியேறி மெயின் ரோட்டை பிடிக்கவே ஒருமணி நேரம் ஆனது .. இத்தனைக்கும் மெயின் ரோடு ஒரு முன்னூறு மீட்டர் தூரம்தான் தியேட்டரில் இருந்து... கால் வைக்ககூட இடம் இல்லாமல் அவ்வளவு கூட்டம் .... இத்தனைக்கும் அதற்க்கு முன்னர் அஜித்தின் இரண்டு படங்கள் செம்ம ஊத்து ஜனா மற்றும் ஆஞ்சநேயா, அட்டகாசம் மட்டுமே ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருந்தது .... நாங்கள் ஜீ மேல் வைத்திருந்த எதிர்பார்ப்பு அவ்வளவு ... ஆனால் லிங்குசாமி எங்களை வகையாக ஏமாற்றி விட்டார் .. அதுகூட பரவா இல்லை அடுத்து அவர் விசாலை வைத்து சண்டைகோழி என்று ஒரு மெகா ஹிட் படம் ஒன்று கொடுத்தார் ... அதுதான் என்னை போன்ற தல ரசிகர்களுக்கு அவரின் மேல் கோபத்தை உண்டு பண்ணியது ... பின்ன தலையை வைத்து ஒரு மொக்கை படம் கொடுத்து விட்டு அடுத்து யார் என்றே தெரியாத ஒரு நடிகனை வைத்து ருசியான அதிரடி மசாலா கொடுத்தால் யாருக்குதான் கோபம் வராது... அதன் பிறகு பீமா அட்டர் பிளாப் ஆனபொழுது என்னை போல் யாரும் அவ்வளவு சந்தோசபட்டிருக்க மாட்டார்கள் ...
இன்றும் அதே போல ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது ... கௌதம் மேனன் படத்தை கை கழுவி விட்டு வெங்கட் படத்தில் தல நடிக்க போகிறார்... பழைய செண்டிமெண்ட் படி பார்த்தால் கெளதமின் அந்த படம் (வேறு யாரையாவது வைத்து இயக்கினால் ) வெற்றி பெரும் , தலையின் மங்காத்தா தோல்வி பெரும் என்று சிலர் ஆருடம் கூறுகின்றனர் ... ஆனால் தலையை ஆரம்பத்தில் இருந்து கூர்ந்து கவனித்து வருகிறவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாய் புரியும் .. அஜித் தோல்வி பாதையில் வீழும் போதெல்லாம் ஒரு எதிர்பாராத வெற்றியை கொடுத்து அவரை கைதூக்கி விடுபவர்கள் அந்த காலகட்டத்தில் பார்மில் இருக்கும் அவர்களின் நெருங்கிய நண்பர்களான இயக்குனர்களே .... வசந்த் , அகத்தியன் , சரண் , சூரியா , ரவிகுமார் என்று அந்த பட்டியல் பெரியது ... இன்றும் அஜித் துரதிர்ஷ்டவசமாக ஒரு வெற்றியை கண்டிப்பாய் கொடுக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார் , வெங்கட் இன்று பார்மில் இருக்கும் இளம் இயக்குனர் ... ஏன் அஜித்தின் பழைய "நன்பேண்டா" செண்டிமெண்ட் இவர் விசயத்திலும் work out ஆக கூடாது.... தல ரசிகர்கள் சார்பில் வெங்கட்டுக்கு ஒரு வார்த்தை "எப்பா வெங்கட் சரணோட இடம் இப்ப காலியாத்தான் இருக்கு ... இந்த படத்தை மட்டும் ஹிட் ஆக்கிட்ட , சரண் மாதிரியே தலைய வச்சி இன்னும் நாலு படம் பண்ணலாம் ... சோ வாய்ப்பை ஒழுங்கா யூஸ் பண்ணிக்கொப்பா" ... எது எப்படியோ சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிச்சி படத்த சீக்கிரம் கண்ணுல காட்டுனா நல்லா இருக்கும் ...
அப்பறம் இன்னொரு விஷயம் இந்த படத்தை பொறுத்த வரை மற்றவர்கள் கூறுவது அஜித் இந்த படத்தில் பல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க போகிறார் , அப்பறம் எப்படி இதை அஜித் படம் என்று கூறமுடியும் என்பது ... ஏன் அந்த மற்ற நடிகர்கள் மங்காத்தாவை தவிர வேறு சில படங்களிலும் நடித்து கொண்டுதான் இருக்கிறார்கள் அந்த படங்களை பற்றி இந்த அளவுக்கு யாரும் எதுவும் எழுத மாட்டேன்கிறார்கள் ... காரணம் அவர்களை பற்றி எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள் , தலையை பற்றி எழுதினால் படிக்க நிறைய பேர் இருக்கிறார்கள் .. உங்களுக்கே இவ்வளவு விடயம் தெரியும் பொழுது கோடிகணக்கில் பணம் போட்டு படம் எடுக்கும் அவர்களுக்குக்கு தெரியாதா ? யாரை நம்பி இந்த படம் எடுக்கிறோம் என்று , யாரை முன்னிலை படுத்தி படம் எடுக்க வேண்டும் என்று ...
எது எப்படியோ எங்களுக்கு உடனடியாக தேவை ஒரு மெகா ஹிட் ... ஆனா தலைய பொறுத்த வரை இந்த படம் மட்டும் நல்லா ஓடுனா போதாது .. வில்லன் படம் வரும்போது அவர் மார்க்கெட் எப்படி இருந்ததோ அதே போல ஒரு மார்க்கெட்ட பிடிக்க இன்னும் நாலு ஹிட் கொடுக்கணும் தல ... ஆனா அவர் படம் பண்ணுற வேகத்த பாத்தா இன்னும் மொத்தமே நாலு படமாவது பண்ணுவாரான்னு சந்தேகமா இருக்கு ... தமிழ்நாட்டுல ரஜினிக்கு அடுத்து பெரிய ரசிக பட்டாளம் இருக்கிறது இவருக்குதான் ... அப்படி இருந்தும் ஏன் வருசத்துக்கு ஒன்னு, ரெண்டு வருசத்துக்கு ஒண்ணுன்னு இப்படி ஆமை வேகத்துல படம் பண்ண ஆசைபடுராருன்னு தெரியல... தலைக்கிட்ட என்னை போன்ற ரசிகர்கள் எல்லாம் கேட்டு கொள்கிற அல்லது ஆசைபடுகிற ஒரு விஷயம் முன்பு போலவே வருசத்துக்கு மூன்று அல்லது குறைந்தபட்சம் ரெண்டு படமாவது பண்ணலாம் ... இல்லை என்றால் தல நாங்கள் மட்டும்தான் உன்னை ஞாபகம் வைத்திருப்போம் , சாதாரண ரசிகன் உன்னை மறந்து போய் விடுவான் ... குறுக்கு புத்தி உடையவன் , ஏமாத்தி நல்ல பேர் வாங்குபவன் எல்லாம் வெற்றி பெற்று உன்னை போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதன் தோற்று போய் நல்லவனுக்கு காலம் இல்லை என்ற நிலைமை சினிமாவிலும் வந்து விட கூடாது ...
அடுத்து விஜயை வைத்து விஷ்ணுவரதனை வைத்து அடுத்தடுத்து படம் பண்ண போவதாக செய்திகள் வெளி வந்தவண்ணம் இருக்கிறது ... ஒரு சின்ன வேண்டுகோள் ரசிகர்கள் சார்பாகா , ஒரு இயக்குனரிடம் படம் பண்ணபோவது உறுதியாக முடிவான பிறகு எங்களுக்கு அதை அறிவியுங்கள் தல ... ஒவ்வொரு முறையும் இந்த இயக்குனருடன் இணைந்து படம் பண்ண போகிறேன் என்று அறிவித்து எங்களை பெரிய அளவில் கனவு காண வைத்து பிறகு மொத்தமாக அதை உடைத்து விடாதீர்கள் ... இது உங்கள் ஒவ்வொரு படங்களுக்கும் ஒரு நெகட்டிவ் எனர்ஜியை படம் வெளிவருவதற்கு முன்னரே ரசிகனிடம் உருவாக்கும் ... இனிமேலும் இந்த தவறை செய்யாமல் நல்ல படங்களை கொடுத்து எங்களுக்குள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த அந்த பழைய உற்சாகத்தை மீண்டும் உருவாக்குங்கள் ... இல்லை என்றால் ஊரே அவமானபடுத்தும் தளபதியின் ரசிகர்களிடமெல்லாம் நாங்கள் அவமானப்பட வேண்டி இருக்கும் தல
17 comments:
ha ha ha...
மங்காத்தா வெற்றி பெற வாழ்த்துகள்..
ஒரு சின்ன டவுட்டு. மிரட்டல் படம் பிளான் செய்தப்ப அஜித்தான் நம்.1 ஹீரோன்னு சொல்லியிருக்கிங்க. அதுக்கு முன்னாடி வந்த ஜனா,ஆஞ்சனேயா ஊத்தல்ன்னு வேற சொல்லி இருக்கிங்க.அப்புறமும் நம்.1ஆ? சரி, படம் தோத்தாலும் தலைதாண்டா நம்.1 சொல்றீஙக்ளா ரைட்டு..
ஜிக்கு 12 நாள் முன்னாடி வந்த திருப்பாச்சி எவ்ளோ பெரிய வெற்றின்னு தெரியும்னு நம்பறேன். அதுக்கு முன்னாடி வருஷம்தான் கில்லின்னு ஒரு சுமாரான படம் வந்துச்சு.. அதுக்கு முன்னாடி திருமலைன்னு ஒரு ஆவரேஜ் படம். அபப்வும் அஜித்த்தான் விஜயை விட கொடிகட்டி இருந்தாரா?
ஆமான்னா.. ரைட்டுங்க எசமான்... :)
அதே மாதிரி 6 படம் ஃப்ளாப்ன்னு சொல்லிட்டே இருக்கிங்க.. ரைட்டு. நாம லிஸ்ட் போடுவோம்.
அசல்.. சுறா
ஏகன் வேட்டைக்காரன்
பில்லா வில்லு
க்ரீடம் குருவி
ஆழ்வார் அழகியதமிழ்மகன்
வரலாறு போக்கிரி
திருப்பதி ஆதி
பரம்சிவன் சிவகாசி
ஜி சச்சின்
அட்டகாசம் திருப்பாச்சி
ஜனா மதுர
ஆஞ்சனேயா கில்லி
மேட்ச் பண்ணிக்கொங்கண்ணா.. யாரு பெரியாளுன்னு
http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_2921.html
@
தல கில்லியும் திருப்பாச்சியும் வெற்றி பெற்றதால் அவர்தான் no.1 ஹீரோ என்று சொல்லிவிட முடியுமா ? அப்படி பார்த்தால் இன்று சூரியாதான் no.1 என்று நீங்கள் ஒத்து கொள்ளுவீர்களா? படம் நன்றாக இருந்தால் கருணாஸ் நடித்தால் கூட மெகா ஹிட் ஆகும் ...
உங்கள் ரூட்டிலேயே வருவோம் ... ரெண்டு சூப்பர் ஹிட் கொடுத்த ஹீரோ உங்க ஆள், ரெண்டு மெகா பிளாப் கொடுத்தவர் தல ... ஆனால் அதற்க்கு அடுத்து வந்த ஜி படத்திற்கு வந்த ஒபெநிங் விஜய்க்கு இன்னும் பத்து வருடம் கழித்து கூட கிடைக்காது ... அந்த ஒபெநிங்காகத்தான் no.1 என்று சொன்னேன் , ஹிந்து நாளிதழில் ஜி வந்த பொழுது king of opening என்று அஜித்தை புகழ்ந்து ஒரு article வந்தது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்...
//தல நிமிருமா?//
என்ன கேள்வி இது? கண்டிப்பாக மீண்டு வருவார். அதுல பாருங்க, தோல்வி படங்கள் கொடுத்தாலும் அடுத்தடுத்து படம் பண்ணால் அந்த 'தோல்வி'யின் சுவடு மக்களுக்கு மறந்து போகும். நம்ம ஆளு தான் ஒரு படத்திற்கு இரண்டு வருடம் எடுத்துக் கொள்கிறாரே. அதனால் நமக்கு இது போன்ற 'feel' வருவது இயல்பே... :)
@ கார்க்கி
//அதே மாதிரி 6 படம் ஃப்ளாப்ன்னு சொல்லிட்டே இருக்கிங்க.. ரைட்டு. நாம லிஸ்ட் போடுவோம்.
அசல்.. சுறா
ஏகன் வேட்டைக்காரன்
பில்லா வில்லு
க்ரீடம் குருவி
ஆழ்வார் அழகியதமிழ்மகன்
வரலாறு போக்கிரி
திருப்பதி ஆதி
பரம்சிவன் சிவகாசி
ஜி சச்சின்
அட்டகாசம் திருப்பாச்சி
ஜனா மதுர
ஆஞ்சனேயா கில்லி
மேட்ச் பண்ணிக்கொங்கண்ணா.. யாரு பெரியாளுன்னு
சுறா அளவுக்கு அசல் அசிங்கபடவில்லை ...
ஹி ஹி வேட்டைக்காரன் ஹிட் ஏகன் பிளாப்பா போங்க பாஸ் எனக்கு சிப்பு சிப்பா வருது
பில்லாவை பார்த்து போட்டு கொண்ட சூடுதான் வில்லு மற்றும் குருவி...
கிரீடம் வந்த பொழுது உங்க ஆளுக்கு வெளி வந்த படம் அழகிய தமிழ் மகன் ... இன்னைக்கு காலையிலதான் அந்த சேட்டு காமெடி பாத்தேன் .. உங்க ஆளு பேசுன நெனச்சி நெனச்சி இன்னமும் சிரிச்சிகிட்டு இருக்கேன் ...
ஆழ்வார் போக்கிரியில் மகேஷ் பாபு மற்றும் வடிவேலு புண்ணியத்தில் உங்க ஆளு முந்திட்டாரு ...
அப்பறம் உங்க ஆதி வந்த பொழுது எங்களுக்கு வந்த படம் பரமசிவன் .. எது ஹிட்டுன்னு உங்களுக்கே தெரியும்னு நெனைக்கிறேன்...
ஜனா கில்லியில் அதே மகேஷ் பாபு மற்றும் பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் விஜய் முந்தினார்...
திருமலை ஆஞ்சநேயாவில் திருமலை முந்தியது ...
ஆனால் அதற்க்கு முன்னாள் கொஞ்சம் போய் பார்த்தால்
வில்லன் பகவதி
பூவெல்லாம் உன் வாசம் வசீகரா
சிடிசன் பத்ரி
தீனா பிரண்ட்ஸ் (வடிவேலு ஹீரோவா நடிச்சி உங்க ஆளு சைடு கேரக்டர்ல வருவாரே அந்த படம்தான்)
முகவரி கண்ணுக்குள் நிலவு
அமர்க்களம் மின்சார கண்ணா
வாலி நெஞ்சினிலே
என்று வரிசையாக தல அடித்து நொறுக்கி இருப்பார் ...
போங்க பாஸ் எங்ககிட்டயே வரலாறு தெரியாம பேசாதீங்க ..
@ கார்க்கி
//அதே மாதிரி 6 படம் ஃப்ளாப்ன்னு சொல்லிட்டே இருக்கிங்க.. ரைட்டு. நாம லிஸ்ட் போடுவோம்.
அசல்.. சுறா
ஏகன் வேட்டைக்காரன்
பில்லா வில்லு
க்ரீடம் குருவி
ஆழ்வார் அழகியதமிழ்மகன்
வரலாறு போக்கிரி
திருப்பதி ஆதி
பரம்சிவன் சிவகாசி
ஜி சச்சின்
அட்டகாசம் திருப்பாச்சி
ஜனா மதுர
ஆஞ்சனேயா கில்லி
மேட்ச் பண்ணிக்கொங்கண்ணா.. யாரு பெரியாளுன்னு
சுறா அளவுக்கு அசல் அசிங்கபடவில்லை ...
ஹி ஹி வேட்டைக்காரன் ஹிட் ஏகன் பிளாப்பா போங்க பாஸ் எனக்கு சிப்பு சிப்பா வருது
பில்லாவை பார்த்து போட்டு கொண்ட சூடுதான் வில்லு மற்றும் குருவி...
கிரீடம் வந்த பொழுது உங்க ஆளுக்கு வெளி வந்த படம் அழகிய தமிழ் மகன் ... இன்னைக்கு காலையிலதான் அந்த சேட்டு காமெடி பாத்தேன் .. உங்க ஆளு பேசுன நெனச்சி நெனச்சி இன்னமும் சிரிச்சிகிட்டு இருக்கேன் ...
ஆழ்வார் போக்கிரியில் மகேஷ் பாபு மற்றும் வடிவேலு புண்ணியத்தில் உங்க ஆளு முந்திட்டாரு ...
அப்பறம் உங்க ஆதி வந்த பொழுது எங்களுக்கு வந்த படம் பரமசிவன் .. எது ஹிட்டுன்னு உங்களுக்கே தெரியும்னு நெனைக்கிறேன்...
ஜனா கில்லியில் அதே மகேஷ் பாபு மற்றும் பிரகாஷ்ராஜ் புண்ணியத்தில் விஜய் முந்தினார்...
திருமலை ஆஞ்சநேயாவில் திருமலை முந்தியது ...
ஆனால் அதற்க்கு முன்னாள் கொஞ்சம் போய் பார்த்தால்
வில்லன் பகவதி
பூவெல்லாம் உன் வாசம் வசீகரா
சிடிசன் பத்ரி
தீனா பிரண்ட்ஸ் (வடிவேலு ஹீரோவா நடிச்சி உங்க ஆளு சைடு கேரக்டர்ல வருவாரே அந்த படம்தான்)
முகவரி கண்ணுக்குள் நிலவு
அமர்க்களம் மின்சார கண்ணா
வாலி நெஞ்சினிலே
என்று வரிசையாக தல அடித்து நொறுக்கி இருப்பார் ...
போங்க பாஸ் எங்ககிட்டயே வரலாறு தெரியாம பேசாதீங்க ..
//பேருக்கு ஏத்த மாதிரியே இழுத்துக்கோ பறிச்சிக்கொன்னு மங்காத்தா ஆட்டம் ஆடுது... //
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. படம் அக்டோபர் 20-இல் இருந்து தொடக்கம் என்று வெங்கட் சொல்லிவிட்டார். :)
//குறிப்பா நந்தால சிவாஜியும் அஜித்தும் நடிக்கிறதா இருந்தது முதலில்//
சிவாஜியா? நந்தாவிலா? எனக்கு இது தெரியாது. நடந்திருந்தா, செம்மயா இருந்திருக்கும்.
கௌதம் விசயத்தில் என்ன நடந்ததென்றே தெரியவில்லை. :(
Let's see how Mangkatha turns out. :)
:)
மங்காத்தா வெற்றி பெற வாழ்த்துகள்..
@ கார்க்கி
// திருப்பாச்சி எவ்ளோ பெரிய வெற்றின்னு தெரியும்னு நம்பறேன்
உங்க லாஜிக் படி பாத்தாலும், தில், தூள், ஜெமினி, சாமி, பிதாமகன்னு வரிசையா ஹிட் கொடுத்த விக்ரம்தானே நம்பர் ஒண்ணா இருந்திருக்கணும்?
பாலா,
பிதாமகன் - திருமலை -ஆஞ்சனேயா போட்டியில் பிதாமகன் நல்ல பேர் வாங்கினாலும் கலெக்ஷனில் திருமலை பின்னியது. அடுத்த விக்ரம் படம் அருள். செம அடி. அப்போதான் விஜய்க்கு கில்லி.. அஜித்துக்கு ஜனா..
திருப்பாச்சி வந்தபோது விக்ரமுக்கு வேறு படமே இல்லை. அஜித்துக்கு ஜி. அதனால் சொன்னேன். விஜயின் கிராஃப் உச்சியில் இருந்த நேரம் அது. அதனால் மறுப்பு சொன்னேன். மத்தபடி நம்.1 இடம் இன் த தலைமுறையில் விஜய்க்கும், அஜித்துக்கும் இடையேதான் மாறி மாறி வந்துக் கொண்டிருக்கிரது. சமீபகாலமாக சூர்யா வந்தாலும் இன்னும் முழுமையாக வந்துவிடவில்லை. மங்காத்தா, வேலாயுதம், ஏழாம் அறிவு.. இதன் வெற்றி முடிவு செய்யலாம்.
காவலன் இதில் சேர்க்க முடியாது. அதற்கு பல காரணம்.
//சமீபகாலமாக சூர்யா வந்தாலும் இன்னும் முழுமையாக வந்துவிடவில்லை.//
நம்ம சண்டையில் குளிர் காயுறது என்னுமோ இந்த பய புள்ள தான்...
//காவலன் இதில் சேர்க்க முடியாது. அதற்கு பல காரணம்.//
Why not? (சீரியசா தன் கேட்குறேன்).
//உங்க லாஜிக் படி பாத்தாலும், தில், தூள், ஜெமினி, சாமி, பிதாமகன்னு வரிசையா ஹிட் கொடுத்த விக்ரம்தானே நம்பர் ஒண்ணா இருந்திருக்கணும்?
அதான,
//நம்ம சண்டையில் குளிர் காயுறது என்னுமோ இந்த பய புள்ள தான்...
தொடர் தோல்விகள் வந்தாள்த்தான் தெரியும் அவரின் நிலைமை தமிழ் சினிமாவில் என்னவென்று...
//Why not? (சீரியசா தன் கேட்குறேன்).
அவருக்கே நம்பிக்கை இல்லை போல அந்த படத்தின் மேல்...
// மங்காத்தா, வேலாயுதம், ஏழாம் அறிவு..
ஏழாம் அறிவு இந்த வரிசையில் ஏன் வந்தது?...
காவலன். ஒரு ஃபேமிலி எண்டெர்ட்யினர். அதுல விஜயின் பங்கு ரொம்ப குறைவு.. படம் ஓடினாலும் அது டைரக்டருக்கு தன கிரெடிட்ட் போகும். ஒரு மாஸ் படம் ஓடினாதான் ஹீரோ வேல்யூ கூடும்..
ஃப்ரெண்ட்ஸ விட திருமலை பெரிய வெற்றியா? ஆனால் திருமலைக்கு பிறகு விஜயின் கிராஃப் எப்படி போச்சு?
ஏழாம் அறிவு ஏன் சொன்னேனா, அந்த சமயம் விஜயும், அஜித்தும் ஒரு ஹிட் கொடுத்துடுவாங்கன்னு நான் நம்பறேன். அண்டஹ் சம்யத்துல அவரால தாக்குப் பிடிக்க முடியுதான்னு பார்க்கணும்..
சுறாவோ, அசலோ ஹிட் ஆயிருந்தா பையாவும், சிங்கமும் கொன்ச்ஜம் அமுங்கியிருக்கும் என்பது என் கருத்து
//ஏழாம் அறிவு ஏன் சொன்னேனா, அந்த சமயம் விஜயும், அஜித்தும் ஒரு ஹிட் கொடுத்துடுவாங்கன்னு நான் நம்பறேன். அண்டஹ் சம்யத்துல அவரால தாக்குப் பிடிக்க முடியுதான்னு பார்க்கணும்..
உண்மைதான் .... தாக்கு பிடிப்பது கஷ்டம்... எல்லாரின் படமும் ஒரே நாளில் வெளிவரும்பொழுது தெரிந்து விடும் சூரியாவின் மாஸ்..
Post a Comment