இன்னும் ஐந்து நாட்கள்தான் படம் வெளிவர , அதற்குள் தமிழ்நாடு முழுவதும் எந்திரன் பீவர் பன்றி காய்ச்சலை விட வேகமாக பரவி வருகிறது. நேற்று மதுரையில் இருந்து சென்னை வந்தேன் .. நான் சென்னைக்குள் நுழையும்பொழுது மணி சரியாக அதிகாலை ஐந்து ... உதயம் தியேட்டர் வெளியே ஒரு பெரிய கூட்டம் அந்த நேரத்திலும் ரொம்ப ஒழுக்கமாக சரியான கியூவில் நின்று கொண்டு இருந்தது எந்திரன் டிக்கெட் முன்பதிவு செய்ய ... முதலில் நிற்பவன் எப்படியும் பனிரெண்டு மணிக்கே வந்திருக்க வேண்டும் அவ்வளவு பெரிய கூட்டம் அது இவர்களில் பலர் தங்கள் பரிச்சை அன்றுகூட ஐந்து மணியை பார்த்து இருக்க மாட்டார்கள் ... இவர்களின் கலைதாகம் என்னை அந்த அதிகாலை வேளையிலும் புல்லரிக்க வைத்து விட்டது .... அந்த கூட்டத்தில் ஒருவன் சைக்கிள் வைத்து டி , காபி விற்று கொண்டு இருந்தான் ... அவனுக்கு நல்ல கலெக்சன் ஆகி இருக்கும் அன்று ... இவர்களை போன்றவர்களை பார்த்துதான் ரஜினி சொல்லுகிறாரோ என்னால் நிறைய பேர் வாழுகிறார்கள் என்று .... அதுசரி இவர்கள் எல்லாம் நஷ்டப்பட்டு விட கூடாது என்றுதானே தன சுயமரியாதையைகூட விட்டு கொடுத்து குசேலன் படம் வெளி வரும் பொழுது மன்னிப்பு கேட்டார் அவர் .. இந்த பெரிய மனசு யாருக்கு வரும்...
இவர்கள் எல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் நாட்டை மட்டும் இல்லை மத்திய மந்திரி ஆகி இந்தியாவையே சுரண்டி ஒருவர் சேர்த்து வைத்திருக்கும் ஊழல் பணத்தில் எடுக்கும் படத்தில் நடித்துள்ளார்... சற்று உள்நோக்கி கூர்ந்து கவனித்து பார்த்தால் புரியும் இது ஒரு மறைமுகமான ராபின்ஹூத் வேலை என்பது ... எந்திரன் படத்திற்கு நிமிடத்திற்கு நிமிடம் சன் டிவியில் விளம்பரம் போடுவார்கள் ... இதன்மூலம் தியேட்டரில் கூட்டம் பெருகும் ... அதனால் சம்பாதிக்க போவது இந்த படம் எடுத்த கலாநிதி மட்டும் இல்லை , தியேட்டர்காரன் ,அந்த தியேட்டரில் முறுக்கு விற்பவன் , போண்டா விற்பவன் , சைக்கிள் டோக்கன் போடுபவன் , தியேட்டர்க்கு வெளியே நிற்கும் ஆட்டோகாரன் , பக்கத்தில் இருக்கும் குளிர்பான கடைக்காரன் , பீடா கடைக்காரன் என்று எல்லாரும்தான்... இப்படி மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவன் பணத்திலேயே மக்களும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காய் இரண்டு வருடங்களாய் மழை வெயில் என்று பார்க்காமல் கஷ்டப்பட்டு நடித்துள்ளார் ரஜினி ... அவரை தவறாக பேசி வருபவர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி இப்படி தனக்காக இல்லாமல் மக்களுக்காக அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக படம் பண்ணும் ஒரு நடிகனை உலகில் வேறு எங்காவது காட்ட முடியுமா உங்களால்...
இப்படி ஒரு நல்ல எண்ணத்தில் எடுக்கப்படும் இந்த எந்திரன் என்னும் காவியம் பெரிய வெற்றி பெறுவதுதான் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது ... படம் இன்னும் வரவில்லை என்றாலும் இரண்டு முக்கியமான விஷயங்கள் வெளி வந்து விட்டது .. ஒன்று பாடல்கள் இன்னொன்று பட டிரைலர்... நேற்று சத்யம் திரை அரங்கில் inception படம் பார்த்த பொழுதுதான் முதன் முதலில் எந்திரன் டிரைலர் பார்க்க நேர்ந்தது... பார்த்தவுடனே எனக்கு தோன்றிய விஷயம் சுஜாதாவின் இழப்புதான் ... சிவாஜி படத்திலேயே வசனங்கள் படு மொக்கையாக இருக்கும் ... இந்த டிரைலரை பார்த்த வரைக்கும் எனக்கு தோன்றியது இதில் அதைவிட பயங்கர மொக்கையாக இருக்குமோ என்று ... நிறைய செலவு பண்ணி பிரமாண்டமாக hi-tech set போட்டிருக்கிறார்கள் , என் கண்ணுக்கு எல்லாம் கோடி கணக்கில் செலவழித்து போடப்பட்ட நாடக செட்டுகள் மாதிரியே தெரிகிறது... படத்தில் எல்லாமே பார்த்தவுடனே நான் செட் என்று பல்லிளிக்காமல் இருந்தால் சரி... இன்னொன்று ரஜினியின் குரல் வயதாகி விட்டதால் நடுக்கம் தெரிகிறது ... முன்ன எல்லாம் வசனத்த விட அத பேசுற அவர் கம்பீரமான குரலுக்கே நம்ம தல முடியெல்லாம் நட்டுக்கும் ... அப்ப வசனமும் நல்லா இருந்தது , குரலும் நல்லா இருந்திச்சி ... இப்ப ரெண்டிலுமே சுருதி குறைந்து விட்டது என்பதை ஒத்து கொள்ளத்தான் வேண்டும்.... பாடல்களை பொறுத்த வரைக்கும் A.R.R சொதப்பி விட்டார் ... எந்த பாடல்களும் மனதில் தங்காமல் போவது பெரிய குறை.... மேல்தட்டு மக்கள் வேண்டுமானால் பாடல்களை ஆகா ஓகோ என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம் , அடித்தட்டு கிராம மக்கள் ரசிக்கும்படியான விஷயம் பாடலில் எதுவும் கிடையாது ... ஷங்கர் சிவாஜியில் செய்த அதே தவறு இது ... சந்திரமுகியின் மிக பெரிய வெற்றிக்கு மிக முக்கிய காரணம் பட்டி தொட்டி எல்லாம் பட்டய கெளப்பிய அதன் பாடல்களே .... ரஜினி பாடல்கள் என்றால் பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கெளப்பும் என்பதெல்லாம் முடிந்த போன விசயமாகி விட்டது என்று நினைக்கிறேன் ... என்ன பண்ண முப்பது ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் ரசிகனைவிட ஆயிரம் ரூபாய் கொடுத்து அபிராமி மாலில் படம் பார்க்கும் ரசிகனுக்காக படம் எடுக்கும் கூட்டத்தில் ரஜினியும் இணைந்து பல வருடங்களாகி விட்டதே .. ஆனால் ரஜினியின் உண்மையான ரசிகன் கிராமத்தில்தான் இருக்கிறான் , அவனை காயபோட்டால் என்ன ஆகும் என்பதை அவர் சிவாஜியில் இருந்து கற்று கொள்ளாதது ஆச்சரியமே...
என்னை பொறுத்த வரை ஷங்கர் ஒரு hi-tech விக்ரமன் அவ்வளவே ... அந்த விக்ரமனதனம் இந்த டிரைலரிலும் கொஞ்சம் எட்டி பார்க்கிறது ... பார்க்கலாம் படம் எப்படி வருகிறது என்று ... ரஜினியின் எந்த படத்திற்கும் இல்லாத ஒரு hype இந்த படத்திற்கு சன் டிவி புண்ணியத்தில் உருவாக்கி இருக்கிறது .... பார்க்கலாம் நம் மக்களை இது திருப்தி படுத்துகிறதா என்று .... ஹாலிவுட் தரத்திற்கு படம் இருக்கும் என்று படத்தின் டிரைலரை பார்த்தும் நம்புகிறவர்கள் ஹாலிவுட் தரம் என்றால் என்னவென்று அறிய உடனே inception படம் பார்க்க கேட்டு கொள்ள படுகிறார்கள்...
4 comments:
//ஷங்கர் ஒரு hi-tech விக்ரமன்//
ஹாஹா,உண்மையே..
ரெண்டு பேர் கிட்டயும் predictability அதிகம். :)
//ஹாலிவுட் தரத்திற்கு படம் இருக்கும் என்று படத்தின் டிரைலரை பார்த்தும் நம்புகிறவர்கள் ஹாலிவுட் தரம் என்றால் என்னவென்று அறிய உடனே inception படம் பார்க்க கேட்டு கொள்ள படுகிறார்கள்...//
தல,எனக்கு தெரிஞ்சு வேற எந்த நாட்டுக்காரனும் ஹாலிவுட் தரம்னு ஜல்லி அடிக்குறதா தெரியல.அவனவன் அவன் nativity யோட படத்தை கொடுத்து கலக்குறான்.நம்ம ஆளுங்க சுயமா சிந்திக்க தெரியாம,ஹாலிவுட் ஹாலிவுட் னு கூவுராணுக.
//ஹாஹா,உண்மையே..
ரெண்டு பேர் கிட்டயும் predictability அதிகம். :)
சரியா சொன்னீங்க தல ... இது போக ஒரே மாதிரி டெம்ப்ளட் படம் தருவதிலும் இரண்டு போரையும் அடிச்சிக்க ஆள் கிடையாது ...
//தல,எனக்கு தெரிஞ்சு வேற எந்த நாட்டுக்காரனும் ஹாலிவுட் தரம்னு ஜல்லி அடிக்குறதா தெரியல.அவனவன் அவன் nativity யோட படத்தை கொடுத்து கலக்குறான்.நம்ம ஆளுங்க சுயமா சிந்திக்க தெரியாம,ஹாலிவுட் ஹாலிவுட் னு கூவுராணுக.
உண்மைதான் தல ... எந்திரனை விட பருத்தி வீரனும் , சுப்ரமணியபுறமும் தான் தமிழ் சினிமா வரலாற்றில் கடைசி வரை இடம் பிடித்து இருக்கும் ... b'coz of their nativity
அதே மாதிரி 6 படம் ஃப்ளாப்ன்னு சொல்லிட்டே இருக்கிங்க.. ரைட்டு. நாம லிஸ்ட் போடுவோம்.
அசல்.. சுறா
ஏகன் வேட்டைக்காரன்
பில்லா வில்லு
க்ரீடம் குருவி
ஆழ்வார் அழகியதமிழ்மகன்
வரலாறு போக்கிரி
திருப்பதி ஆதி
பரம்சிவன் சிவகாசி
ஜி சச்சின்
அட்டகாசம் திருப்பாச்சி
ஜனா மதுர
ஆஞ்சனேயா கில்லி
மேட்ச் பண்ணிக்கொங்கண்ணா.. யாரு பெரியாளுன்னு
இது எந்திரன் சம்பத்தப்பட்ட பதிவு தானே... ஏன் ஒருத்தர் தேவை இல்லாமல் ஏதேதோ உளருகிறார் என்றூ தான் தெரியவில்லை. :(
@ Regarding எந்திரன்
பாடல்களைப் பற்றி நீங்கள் சொன்னது உண்மை. நான் ஒரு ரகுமான் ரசிகன், இருப்பினும் இப்பாடல்கள் ஒட்டவில்லை. படத்தோடு பார்த்தால், ஒட்டுமோ என்னவோ...
எந்திரனுக்கு வாழ்த்துகள்.
- அஜித் ரசிகர் மன்றம் :)
Post a Comment