அறிவியல் கண்டுபிடிப்புல பெரிய அதிசயம் எதுனா அது செல் போன்தான் .... உள்ளங்கையில் உலகம் அது .. ஆனா இன்னைக்கு அது உள்ளங்கையில் ஒரு கலகமா மாறிடுச்சி ...நேரங்காலம் தெரியாம நம்மள இம்ச பண்ற சில விசயங்களில் முதல் இடம் செல்போனுக்குதான் ... போன மாசம் கல்லூரியில செமஸ்டர் எக்ஸாம் .. அதுக்கு நான் மேற்பார்வையாளரா போய் இருந்தேன் ... எக்ஸாம் ஆரம்பிச்சி பத்து நிமிஷம் ஆகி இருக்கும் எல்லாரும் மும்முரமா எழுதிகிட்டு இருக்கானுக ... திடீர்னு ஒருத்தன் செல்போன் கத்த ஆரம்பிச்சிருச்சி ' நேத்து ராத்திரி யெம்மா தூக்கம் போச்சிடி யெம்மா" இப்படி செல்போன் முக்கல் முனங்கல்களோட பாடுனா எவனுக்காவது எக்ஸாம் எழுத மூட் வருமா?
இதுகூட பரவா இல்லை .. நேத்து ராத்திரி அவன் தூங்காம படிச்சிருப்பான் அப்படின்னு எடுத்துக்கலாம் ... ஆனா இந்த business பண்ற ஆசாமிகள் செய்ற இம்சைதான் பெரிய இம்சை ... இன்னைக்கு business பண்ண மூளை கூட தேவை இல்லை , முக்கியமான தேவையே செல் போன்தான்... ஆனா சில பேருக்கு அவன் செல்லே அவன் கடையை இழுத்து மூட காரணம் ஆகிடும் ...என்கூட வேலை பாக்குற மேடம் ஒருத்தவங்க அவங்க கல்யாணத்துக்கு video coverage பண்ண உங்களுக்கு தெரிஞ்சphotographer இருந்தா சொல்லுங்கன்னு கேட்டாங்க ... நான் என் நண்பன் ஒருத்தன் இருக்கான் மேடம் அவன்கிட்ட என் பேர சொல்லி கேளுங்க மேடம் , ஒழுங்கா நீங்க நெனைக்கிற மாதிரி பண்ணி தருவான் அப்படின்னு சொல்லி அவன் நம்பர் கொடுத்தேன் , அவங்க அவனுக்கு போன் பண்ணுனா "தாலியே தேவை இல்ல நீதான் என் பொண்டாட்டின்னு" பாடுது... அவங்க என்ன கேவலமா திட்டிட்டு போய்ட்டாங்க ...
இன்னொரு நாள் எங்க மாமா அவர் பொண்ணு ரொம்ப நேரம் ஆகியும் வீட்டுக்கு வரலேன்னு பயந்து போய் அவரோட பொண்ணுக்கு போன் பண்ணுனாரு ... எதிர்முனையில "ஓடோ... ஓடோ... ஓடோடி போறேன்".... பாட்டு வந்தது ... அத கேட்டு அவருக்கு heart attackகே வந்துருச்சி
கல்யாண வீட்டுக்கும் , எளவு வீட்டுக்கும் போகும்போது செல்ல silent mode ல போடமாட்டாணுக நம்ம ஆளுக ... கல்யாண வீட்டுல மேடை ஏறி கல்யாண ஜோடிக்கு கிப்ட் கொடுக்க போற நேரத்துல செல்லு அபசகுனமா அலறும் "வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்"னு ....எளவு வீட்டுக்கு போன அடுத்த நிமிஷம் கொரியா செட்டு சத்தமா பாடும் "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி"ன்னு ...அன்னைகோட நமக்கும் அந்த குடும்பத்துக்கும் இருக்கிற உறவை அத்து விட்டு வந்திற வேண்டியதுதான்...
இந்த dialor toneனும் ring toneனும்தான் இப்படி நம்மள கடுப்பேத்துதுன்னா சில நேரம் நம்ம நெலம புரியாம நமக்கு வர்ற இன் கம்மிங் கால் அதவிட வெறுப்பேத்தும் ...ஞாயித்துகிழமை லீவும் அதுவுமா ரொம்ப லேட்டா எழுந்திருச்சி அவசர அவசரமா பாத்ரூம் போய்கிட்டு இருப்போம்.. அந்நேரம் பாத்து நம்ம செல் அலறும் .. சரி ஏதோ முக்கியமான காலா இருக்கும் , நம்ம கேர்ள் பிரண்ட் கால் பண்ணுறா போலன்னு அவசரத்த மறந்து செல்ல எடுத்தா , ஹலோ நாங்க icici பேங்க்ல இருந்து பேசுறோம் உங்க வீட்டுல பாத் ரூம் கட்டுறதுக்கு நாங்க புதுசா லோன் தரோம் ... அதுவும் குறைந்த வட்டியில அப்படின்னு நம்ம அவசரம் புரியாம நான் ஸ்டாப்பா பேச ஆரம்பிச்சிடுவாணுக .. நாமளும் நாகரீகம் கருதி கட் பண்ணாம பேசுறத கேட்டுகிட்டு இருந்தோம்னா அவன் பேசி முடிச்சி ஆப் பண்ணும்போது நமக்கும் பின்னாடி ஆப் ஆகி இருக்கும் அப்பறம் நாம என்னதான் ட்ரை பண்ணுனாலும் வராது
இன்னும் சில பேரு மெசேஜ் அனுப்பியே நம்மள சாவடிப்பாணுக ... நட்பு என்பது மனதிற்கு மட்டுமே புரியும் ஒரு மொழி .. அது பூமியை விட ஆழமானது வானத்தை விட உயரமானதுன்னு இப்படி மொக்க மேசெஜ்ஜா அனுப்பி நம்ம இன்பாக்ஸ நெரப்புரதுதான் அவனுங்க வேலையே ... இவனுங்க அனுப்புற மேசெஜ்ச படிச்சி அத delete பண்ணுரதுலையே நமக்கு பாதி நாள் செலவாகிடும் ... அதும் நைட் நாம ரெண்டு மணி நேரமா தூக்கமே வராம பொரண்டு பொரண்டு படுத்து அப்பத்தான் லைட்டா கண்ண மூடி இருப்போம் கரெக்ட்டா நம்ம மொக்க சாமி ஒரு மெசேஜ் அனுப்பி இருப்பாரு ... நாம ஏதோ முக்கியமான மேசெஜ்ஜா இருக்கும்னு அடிச்சி பிடிச்சி செல்ல தேடி எடுத்து படிச்சி பாத்தா நான் தூங்க விழிகளை மூடினாலும் நீ நுழைய என் இதயம் திறந்தே இருக்கும் ..good night sweet dreams அப்படின்னு இருக்கும்.. இத படிச்ச கோபத்துளையே நமக்கு தூக்கம் போயிரும் ....
சரி இப்படிஎல்லாம் எதுக்கு கஸ்டபடணும்னு ஒரு நாள் முழுவதும் நிம்மதியா இருக்கலாமேன்னு செல்ல switch off பண்ணி வச்சிருந்து அடுத்த நாள் ஆண் பண்ணி பாத்தா மிஸ்டு கால் அலெர்ட் மெசேஜ் வரும் .. அதுல ஒரு புது நம்பர் இருக்கும்.. யாரா இருக்கும்னு போன் பண்ணி பாத்தா, ரொம்ப நாளா நாம எதிர்பார்த்துகிட்டு இருந்த கம்பனிகாரன் interviewகாக போன் பண்ணி இருந்திருப்பான் ... நாம எடுக்காம போனதால வேற ஒருத்தன செலக்ட் பண்ணிட்டோம்னு நம்ம தலையில இடிய தூக்கி போடுவான் ... அடுத்து நம்ம நண்பன் ஒருத்தன் கால் மேல கால் பண்ணி இருந்திருப்பான் அவனுக்கு போன் பண்ணுனோம்னா மச்சி நேத்து என்னடா உன் போன் எடுக்கவே இல்ல .. நம்ம சுரேஷ் பெறந்த நாள்டா மச்சி நேத்து ... செம்ம ட்ரீட் கொடுத்தான் மச்சி ... சரக்கு சாப்பாடு சினிமான்னு எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணுனோம் மச்சி ... அதான் உன்னையும் கூப்பிடலாமேன்னு உன் செல்லுக்கு ட்ரை பண்ணுனோம் , மிஸ் பண்ணிடடா மச்சி அப்படின்னு எரியிற நெருப்புல எண்ணைய ஊத்துவான் ...
இப்படி அது இருந்தாலும் இம்சைதான் இல்லாம போனாலும் இம்சைதான் ... பிகர் மாதிரிதான் செல் போனும்... அது வாயில சிரிச்சி நம்மள கவுக்கும் .. இது ரிங்டோன்ல சிரிச்சி நம்மள கவுக்கும் .. ரெண்டுக்கும் மாசம் மாசம் நெறைய செலவு பண்ணனும் .. ரெண்டுமே நம்மகிட்ட இல்லாதவரைக்கும் வச்சிருக்கிரவண பாத்து பொறாமையா இருக்கும் .. நம்ம கைக்கு வந்த பின்னாடி நாம எவ்வளவுதான் ட்ரை பண்ணுனாலும் நம்மால ரெண்டையும் பிரிஞ்சி இருக்க முடியாது... ரெண்டுமே நம்மகிட்ட இருக்கிறத விட அடுத்தவன்கிட்ட இருக்கிறது எப்பவுமே நமக்கு அழகா தெரியும்... என்ன ஒரே ஒரு வித்தியாசம் கொஞ்ச நாள்ல செல்லு பழசா போயிடுச்சின்னு நாம அத தூக்கி எறிவோம் , நாம பழசா போயிட்டோம்னு நம்மள அவ தூக்கி எறிவா
9 comments:
போட்டு தாக்குங்க ராஜா..
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ராஜா. எனக்கெல்லாம் ஒருத்தனும் போன் பண்ணறதேயில்லைன்னு வருத்தமா இருக்குங்க. என்கிட்ட செல்போன் இல்லைங்க!
//உக்காந்து யோசிச்சது.... (எங்க உக்காந்துன்னெல்லாம் கேக்கபடாது)//
சொல்லாட்டி தெரியாதாக்கும்? எங்க உக்காந்து யோசிச்சா இந்த மாதிரி ஐடியா வரும்னு தெரியும்ல.
//போட்டு தாக்குங்க ராஜா.
இது கொஞ்சம் கோபத்தில் என்னை நிரூபிக்க வேண்டி எழுதிய பதிவு ... முதல் பாராட்டு உங்களிடம் இருந்து .. நன்றி
// ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க ராஜா. எனக்கெல்லாம் ஒருத்தனும் போன் பண்ணறதேயில்லைன்னு வருத்தமா இருக்குங்க. என்கிட்ட செல்போன் இல்லைங்க!
ரொம்ப நல்ல விஷயம் இது ... எங்களால போன் இல்லாம அரைமணி நேரம் இருக்க முடியாது ...
பாராட்டுக்கு நன்றி சார்
// சொல்லாட்டி தெரியாதாக்கும்? எங்க உக்காந்து யோசிச்சா இந்த மாதிரி ஐடியா வரும்னு தெரியும்ல
சார் நீங்க வீட்டு வரவேற்பறையதான சொல்லுறீங்க...
நேற்று நான் கொஞ்சம் அப்செட்டாக இருந்தேன் ... என்னுடைய பாணியில் ஒரு பதிவு எழுதி அதை இன்ட்லியில் பிரபலமாக்க வேண்டும் என்று கொஞ்சம் அவசரமாக இந்த பதிவை தயார் செய்து இணைத்தேன் ... இதற்க்கு வோட்டு போட்டு பிரபலமாக்கி என்னை மீண்டும் சந்தோசபடுத்திய அனைவருக்கும் நன்றி ... பின்னூட்டமிட்ட வினோவிற்கும் கந்தசாமி சாருக்கும் மிக்க நன்றி ...
வெளிநாட்டுக்கு வந்ததில் இருந்து இந்த ஃபார்வார்டு மெஸ்சகேகள் எல்லாம் மறந்து போயி விட்டது. ஃபார்வார்டு மெசேஜ்-கள் எல்லாம் நம்மை அப் டு டேட்-ஆக வைப்பது என்பது உங்களுக்கு தெரியாதா...
சமீபத்தில் நண்பேன்டா வரை... இதை ஒரு பதிவு வழியா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.
I really miss forward messages here...
//ஃபார்வார்டு மெசேஜ்-கள் எல்லாம் நம்மை அப் டு டேட்-ஆக வைப்பது என்பது உங்களுக்கு தெரியாதா...
உண்மைதான் தல .. ஆனால் ஒரே மெசேஜ் நாலு பேரு அனுப்புவதுதான் பெரிய தலைவலி ... இருந்தாலும் நீங்கள் சொல்லுவதை போல யாரும் அனுப்பாமல் இருக்கும் போது நமக்கே எல்லாரும் நம்மை மறந்து விட்டார்களோ என்று சந்தேகம் தோன்றத்தான் செய்யும்...
Raja is back in form.கலக்கல் தல.கலக்கல் ப்ளோ.இதையே எழுதுங்க னு சொல்ல மாட்டேன்.ஆனா அடிக்கடி இதே மாதிரி எழுதுங்க. :)
கடைசி பத்தியில் சொன்ன 'punch' சூப்பர். எப்படிங்க இப்படி எல்லாம்... :P
நீங்க அரப்புக்கோட்டையில் பிறக்க வேண்டிய ஆளே இல்லீங்க்க... :)
//Raja is back in form
ஆகா இலுமி சார் ... இதுல உள்குத்து வெளிகுத்து சைடு குத்து என்று எதுவும் இல்லையே...
//இதையே எழுதுங்க னு சொல்ல மாட்டேன்.ஆனா அடிக்கடி இதே மாதிரி எழுதுங்க.
தல கொரியன் படம் பாத்துட்டு ஸ்ட்ரைட்டா வந்து கமெண்ட் போட்டீங்களோ.. ட்ரை பண்றேன் தல ...
//கடைசி பத்தியில் சொன்ன 'punch' சூப்பர். எப்படிங்க இப்படி எல்லாம்... :P
நீங்க அரப்புக்கோட்டையில் பிறக்க வேண்டிய ஆளே இல்லீங்க்க... :)
தல நன்றி தல ...
Post a Comment