Followers

Copyright

QRCode

Sunday, September 12, 2010

ஜாக் (எ) ஜாகீர் ஹுசைன்

"நண்பா அழகேந்திரனுக்கு  வெள்ளிகிழமை கல்யாணம் ,,, வந்திருடா " ஜாக்கிற்கு போன் பண்ணினேன்

"அவனுக்கு கல்யாணம்னா அவன கூப்பிட சொல்லுடா அப்பத்தான் வருவேன்

" எப்ப இருந்துடா உனக்கு மானம் ரோஷமேல்லாம் .... மச்சி ரெண்டு நாளைக்கு ஓசி சரக்கு, கறி சாப்பாடு .... வந்திடு "

"நண்பா அவனே மதிக்காம போன் பண்ண மாட்டேங்கிறான் , நான் வர முடியாதுடா " சொல்லி விட்டு கட் பண்ணி விட்டான் ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

"அழகு... அவனுக்கு போன் பண்ணுனேன் நீ கூப்பிட்டாத்தான் வருவானாம் "

"சரக்கு சாப்பாடு இருக்குன்னு சொன்னேலடா ... கண்டிப்பா வருவான் எதுக்கு பெங்களூருக்கு ஒரு போன் வெட்டியா பண்ணனும்"   

சொன்னது போலவே கல்யாணத்திற்கு முதல்நாள் வந்துவிட்டான் ஜாக் .... வழக்கம் போல ரெண்டுநாளைக்கு துவைக்காத சட்டை,  ஒரு அழுக்கு ஜீன்ஸ் , முதுகில் ஒரு ரீபோக் பேக் , ஒரு கூலிங் கிளாஸ் என்று ராஜேஸ் பட ஹீரோ போல இருந்தான் ...

அங்கு இருந்த பான்ஷாவிடம் "மச்சி  என் கண்ணு சிவந்திருக்கான்னு பாத்து சொல்லு மச்சி" என்று கண்ணாடியை கழட்டி விட்டு கேட்டான் ....
"ஆமா நண்பா  செவந்திருக்குடா "

"மச்சி நல்லா உத்து பாத்து சொல்லு மச்சி , எப்படி செவந்திருக்குன்னு"

அவன் கண்ணிற்கு அருகில் சென்று பார்த்து ,

"நல்லா செவந்து செக்க செவேல்னு இருக்கு மச்சி ... நேத்தே உனக்கு ஓசி குடி குடிக்க ஆள் மாட்டிட்டானா   "

"இல்ல மச்சி ரெண்டு நாளா எனக்கு MADRAS-EYE " கூலாக சொன்னான் "மச்சி ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒருத்தன் இப்படிதான் எனக்கு பரப்பி விட்டான் ... அதான் நானும் ட்ரை பண்ணுனேன் ... நீ ரொம்ப நல்லவன் மச்சி"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

"நண்பா அது என்னடா உன் பேக்குக்கு  வெளிய ஒரு COKE பாட்டில்?, நீ எப்பவுமே ட்ரைன்லயே withoutல்தான வருவ ... சரக்கடிக்கவே மிக்ஸிங்க்கு கக்கூஸ் குழாய் தண்ணிதான் ... இன்னைக்கு என்னடா காசு கொடுத்து COKEலாம் வாங்கி குடிச்சிருக்க ?"

"நண்பா வயித்தெரிச்சல கிளப்பாத  ? withoutல வரலாமேன்னுதான் ப்ளான்... கடைசில 500ரூபா கொடுத்து A/C பஸ்ல வர வேண்டியதா போச்சிடா மச்சி "

"தனியாவா வந்த?"

"இல்ல மச்சி கூட ஒரு பிகரும் வந்துச்சி"

"டேய் தில்லாலங்கடிடா நீ .. யாருடா அந்த பொண்ணு? உன் பழைய ஜிங்கிடி  சரோஜாவா? "

" இல்லடா .. இது வேற புதுசு .... அவதான் ஒண்ணா பஸ்ல போகலாம்னு  கூப்பிட்டா , பக்கத்து பக்கத்து சீட்டு சரி இன்னைக்கு நமக்கு நல்ல வேட்டதான்னு  நானும் சரின்னு சொல்லிட்டேன்... ஆனா கடைசி வரைக்கும் ஒன்னும் பண்ண முடியல ? எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல ? தப்பா நெனச்சிடுவாலோன்னு பயமா இருந்துச்சி மச்சி ... எப்படி ஆரம்பிக்கலாம்னு  யோசிச்சிகிட்டே வந்தேன் மதுரை வந்திடுச்சி மச்சி ... பயங்கர கடுப்பாகிடுச்சி "

"சரி மச்சி இந்த கதையில கோக் எங்க வந்துச்சி?"

"மதுரை busstandல வந்து தாகமா இருக்குடா cool drinks வாங்கி கொடுடான்னு கேட்டா , நானும் போய் PEPSI வாங்கி குடுத்தேன்... எனக்கு PEPSI பிடிக்காது COKEதான் பிடிக்கும்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டா? சரின்னு கடைக்கு  போயிட்டு திரும்பி வந்து பாக்குறேன் ஆள காணோம் மச்சி?"

"ஏண்டா அவ அப்பன்காரன் வந்து கூப்பிட்டு போயிட்டானா?"

"சீ சீ .. அவ ஆளு வந்து கூப்பிட்டு போய்ட்டான் மச்சி"

"டேய் அப்ப அது உன் ஆளு கெடையாதா? "

"மச்சி உனக்கு தெரியாதா ? நமக்கு உள்ளூருலையே ஆளு கெடயாது ... silk board bus stopல லுக் விட்டு correct பண்ணுனேன் மச்சி ... என் அழகுல மயங்கி என்கூட வந்தான்னு சந்தோசமா இருந்தேன் மச்சி ... அதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது , ஒரு பாதுகாப்புக்கு body guard மாதிரி என்ன யூஸ் பண்ணிருக்கா மச்சி"

-----------------------------------------------------------------------------------------------------------------------------------    

கல்யாணத்துக்கு வந்திருந்த  கல்யாண பெண்ணின் தொழிகளுக்கெல்லாம் பக்கத்தில் இருந்த MOTELலில் அறை எடுத்து கொடுத்திருந்த நண்பனிடம் சென்று
"மச்சி எங்களுக்கும் அதே MOTELதான?"

"இல்லடா  மச்சி நீங்க எல்லாம் என் வீட்டு மாடியில்தான் தங்க போறீங்க"

"என்னடா சொல்லுற .. இது ரொம்ப மோசமான ஏரியா? இங்க எப்படி அவங்கள தனியா தங்க வைக்க போற ...  அவங்க பாதுகாப்புதான் முக்கியம்  அதான் சொல்லுறேன் எங்களுக்கும் அங்கேயே ரூம போடு நாங்க அவங்கள பாத்துகிடுவோம்ல..."

"அவங்க பாதுகாப்பா அங்க இருக்கனும்கிரதுனாலதான் உன்ன எங்க வீட்டுல தங்க வைக்க போறேன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்யாணம் முடிந்து அடுத்த நாள் மாப்பிளை வீட்டில் விருந்து ... மாடியில் தம் அடித்து கொண்டு இருந்த ஜாக்குடன்  புது மாப்பிளையும் தம் அடித்து கொண்டு இருந்தான் ...  அதை பார்த்த எங்கள் நண்பர் ஒருவர் 

"ஜாக் ... நீ தம் அடிக்கிரதுனாலத்தான் நண்பனும் அடிக்கிறான் ... அவனுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சி .. இனிமேலாவது அவன திருந்த விடு ... தயவு செஞ்சி இனிமே அவன்கூட தம் அடிக்காத ... நீதான் இப்ப அவன கெடுக்குற ... நீ தம்  அடிக்கலைனா அவனுக்கு தம் அடிக்க வாய்ப்பே கெடையாது இங்க ... இப்ப அந்த பொண்ணுக்கு இவன் இங்க வந்து தம் அடிச்சிட்டு போனது தெரிஞ்சா  நம்மள பத்தி என்ன நெனைக்கும் அந்த பொண்ணு" என்று அவனை மானாவாரியாக திட்டிவிட வேகமாக  எழுந்த ஜாக் தன ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து 

"நண்பன் கல்யாணம் பண்ணி புது வாழ்க்கைய தொடங்க போறான் .... நான் இன்னும் வெளையாட்டு புள்ளையாவே இருக்கேன் ... நான் என்ன அவன கெடுக்கனும்னு நெனச்சா அவன தம் அடிக்க கூப்பிட்டேன் .. வெளையாட்டுதனமா கூப்பிட்டேன் ... நீங்க எல்லாம் கோபபடுறீங்க ... இன்னைக்கோட இந்த சனியன தல முழுகனும்" என்று அந்த சிகரெட் பாக்கெட்டை கசக்கி தூக்கி எறிந்தான் ...

அந்த சிகரெட் பாக்கெட்டை பெருமையாய் பார்த்த நண்பரிடம் 

" மச்சி நான் திருந்துனத இன்னைக்கு கொண்டாடனும் மச்சி ... ஒரே ஒரு பாக்கெட் கிங்க்ஸ் சொல்லேன்"  என்று சீரியசாய் கேட்ட அவனிடம் 

"டேய் இப்பதானட கசக்கி தூக்கி எரிஞ்ச " என்று கேட்க 

"மச்சி அது காலி பாக்கெட் மச்சி " என்று சொல்லி விட்டு தம் வாங்க கடைக்கு போய் விட்டான் கல்யாண மாப்பிள்ளையோடு   

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails