Followers

Copyright

QRCode

Tuesday, November 30, 2010

நந்தலாலா- குறிஞ்சியா? நெருஞ்சியா?




நந்தலாலா

இந்த படத்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் பதிவுலகில் வந்து விட்டது , அதை படித்து படித்து உங்களுக்கு அயர்ச்சி உருவாகி இருக்கலாம் .. இருந்தாலும் இந்த படத்தை பார்த்த பொழுது இதை பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்று என்னையும் அறியாமல் ஒரு ஆசை எனக்குள் உருவானது....

இரண்டு குழந்தைகளின் பயணமே இந்த படம்... உலக பிரமானமாண விசயங்கள் எதுவுமே  தெரியாத அவர்களிடம் இருந்து எதிர்பாடும் மக்கள் பலர் பல விசயங்களை கற்று கொள்ளுகிறார்கள்... கடைசியில் இருவரும்  எதிரபாராத ஏமாற்றங்களையும் ஆச்சர்யங்களையும் சந்தித்து தெளிந்து பின் ஆரம்பித்த இடத்திர்க்கே வந்து சேர்க்கிறார்கள் ... இதுதான் கதை ... இதில் சோகங்கள் , ஏமாற்றங்கள் , மகிழ்ச்சி , நம் கலாச்சாரம் , காதல் , தாய்மை , விரக்தி என்று சகலவற்றையும் நமக்குள் விதைத்து நாமே அந்த பயணத்தை மேற்கொண்டதை போல சந்தோசத்தையும் அதே சமயம் சிறு அயர்ச்சியையும் தந்து படம் நிறைவடைகிறது ...

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் வைத்து ஒரு பெரிய விளக்கவுரையே  கொடுக்கலாம்... மிகவும் நுட்பமான அதே சமயம் சுவாரஷ்யமான காட்சிகள் படம் நிறைய வந்து கொண்டே இருக்கும்... இதற்காகவே இயக்குனரை நிறைய பாராட்டலாம்... அதே போல படம் முழுவதும் சோகம் திரைக்கதையோடு சேர்ந்து பயணம் செய்துகொண்டே இருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் நம்மை சிரிக்க வைக்கின்றன அந்த சோகம் சிதையாமல் ..... இதுபோன்ற ஒரு மேஜிக் இதற்க்கு முன் தமிழில் வந்திருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை...


படம் முழுவதும் பெண்களின் வாழ்வு முறையை மைய படுத்தியே இருக்கிறது அவர்களின் சோகங்கள் , தாய்பாசம் , அடிமைத்தனம் என்று ....நம் சமூகம் அவர்களை பெண்மை என்னும் ஒரு சொல்லுக்குள் எப்படி அடக்கி வைத்திருக்கிறது என்று கதையோடு இயந்து சொல்லி இருக்கிறது இந்த படம்...அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ எதை எல்லாம் இழக்க வேண்டி இருக்கிறது என்று செவிட்டில் அறைந்தார் போல கூறி இருக்கிறது இந்த படம்... நம் கலாச்சாரத்தின் படி குடும்பம் என்பது ஒரு வேலி .. அது ஒரு பெண் தன் பாதுகாப்பிர்க்காக போட்டு கொள்ளுவது ... ஒரு முறை அந்த வேலிக்குள் சிக்கி கொண்டால் அவளே நினைத்தாலும் அந்த வேலியை விட்டு வெளிவர முடியாது ... சிக்கல்கள் நிறைந்த முள்வேலி அது ... எதையும் வெல்லும் வலிமை படைத்த தாய்பாசம் கூட அந்த வேலியின் முன்னாள் தோற்று நிற்கிறது இந்த படத்தில் ... அதுதான் யதார்த்தமும் கூட....


படத்தின் நடிகர்கள் பற்றி எழுத வேண்டும் என்றால் அனைவரையும் பற்றி எழுத வேண்டி வரும் ... நான் எழுதுவதை விட நீங்களே பாருங்கள்... ஒரு விஷயம் இந்த படத்தில் வரும் அந்த சிறுவனுக்கு தேசிய விருது தரவில்லை என்றால் அந்த விருதுக்கு மரியாதை கிடையாது... அதுவும் தான் தேடிவந்த அம்மாவை கடைசியில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் அந்த காட்சியில் அவனின் உடல்மொழி பிரமாதம்...(படம் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிறது .. இன்னமும் அந்த சிறுவன் என் மனதில் அப்படியே இருக்கிறான்... )



பின்னணி இசை ராஜா .... என்னை பொறுத்த வரை இது இவரின் பெஸ்ட் இல்லை என்றாலும் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து விடும்... இசையாலும்  கதை சொல்ல முடியும் என்று நீண்ட நாட்களுக்கு பின்னர் ராஜா நிரூபித்து இருக்கிறார்...

அதேபோல் ஒளிப்பதிவு , மிஷ்கினின் படங்களில் ஒளிபதிவை பற்றி சொல்லவே தேவை இல்லை... மிஷ்கின் ஜெயிலில்(மனநல விடுதி ) இருந்து தப்பி கோட்டை சுவர் ஏறி  குதிக்கும் காட்சியில் வரும் கேமரா கோணம் அட்டகாசம் .. அதே போல ஆஸ்பத்திரியில் இருந்து மிஷ்கினும் சிறுவனும் இருட்டில் நடக்கும் போது வெளிச்சத்திர்க்கு  மாதா  சிலையில் இருந்து மெழுகுவர்த்தியை எடுத்து கொண்டு போகும் காட்சி இந்த படத்தில் ஒளிபதிவில் என்னை கவர்ந்த காட்சி... அதே போல ரோட்டில் நடக்கும் போது வந்து போகும் பல காட்சிகளில் நாம் இதுவரை பார்க்காத பல கோணங்களை காட்டி இருக்கிறார் ... தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள்..


மிஷ்கினை பற்றி சொல்ல வேண்டுமானால் நடிகனாகவும் இயக்குனராகவும் பல படிகள் தாண்டி மேலே சென்று விட்டார் இந்த நந்தலாலாவின் மூலமாய்...


இப்படி குறிஞ்சி பூ பூப்பதை போன்ற அபூர்பமான படமாய் இருந்திருக்க வேண்டிய இது ஆங்காங்கே வந்த சில நெருஞ்சி முற்களால் அந்த தகுதியை இழக்கிறது ... பல இடங்களில் தலை தூக்கும் நாடகதன்மை ரொம்பவே  படத்தை கீழே இழுத்து விடுகிறது...  அப்படிப்பட்ட சில காட்சிகளை பார்க்கும் போது இந்த படத்தையா இவ்வளவு பாராட்டி எழுதுகிறார்கள் என்று உங்களுக்கு தோன்றலாம் ... அதே போல பெண்களை தைரியம் இல்லாதவர்களாக காட்டி இருக்கும் மனபாங்கு எனக்கு புரியவே இல்லை .. ஏன் நம் ஊர் பெண்கள் எல்லாம் இப்படிதான் இருக்கிறார்களா? ஒருத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றி விட்டால் அந்த பெண் உடனே விபச்சாரத்திற்கு வந்து விடுவாளா? அப்படிப்பட்ட பெண்களுக்கு அதை விட்டால் வேறு வழியே இல்லையா? இந்த படமும் மறைமுகமாக நம் ஊர் பெண்களை இறக்கி பிடிப்பதை போலத்தான் இருக்கிறது எனக்கு...

ஒரு ஒல்லி பிச்சானிடம் பயந்து ஓடும் மிஷ்கின் , பீர் பாட்டிலை கொண்டு காரில் வரும் நான்கு வாலிபர்களை  அடித்து விரட்டுவது என்ன லாஜிக் என்று தெரியவில்லை .... புண்ணில் எச்சில் தடவி விட்டவுடன் ஒரு பெண்ணிர்க்கு யார் என்றே தெரியாத ஒரு ஆணிடம் ஈர்ப்பு வந்து விடுமா? அந்த பெண்ணுக்குள் வரும் பாசம் எந்த வகையானது? புரியவில்லை ...


நந்தலாலா தமிழ் சினிமாவில் பரவி இருக்கும் இருட்டை போக்க மிஷ்கின் ஏற்றி இருக்கும் சின்ன மெழுகுவர்த்தி... இருள் நீங்க இன்னும் பல மெழுகுவர்த்திகள் தமிழ் சினிமாவில் ஒளிர  வேண்டும் என்றால்  நாம் தான் இது அணைந்துவிடாமல் நம் கரங்களை தந்து இதை காப்பாற்ற வேண்டும் ..

இதன் ஒளியை மிஷ்கின் ஜப்பான் இயக்குனரிடம் இருந்து ஏற்றி  (may be திருடி) இருக்கிறார் என்றாலும் இருட்டில் தத்தளிக்கும் நம் சினிமாவிர்க்கு பாதை காட்டும் வெளிச்சமாய் அது இருக்கும் என்றால் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்...

யதார்த்த சினிமாக்கள் பிடிக்கும் என்றாள் தாராளமாக ஒரு முறை சென்று அனுபவித்து விட்டு வாருங்கள் 




Sunday, November 28, 2010

16 வயதினிலே முதல் ரஜினி படங்களும் நானும்


நண்பர் பாலா இந்த தொடர்பதிவிர்க்கு என்னை அழைத்திருந்தார் ... ஏற்கனவே ஒரு பதிவில் ரஜினியை பற்றி நான் எழுதியதில் எனக்கும் அவருக்கும் பின்னூட்டத்தில் பெரிய கருத்து யுத்தமே நடந்திருந்தது ...அவர் ரஜினிக்கு ஆதரவாய் நான் எதிரியாய் ... ஆனால் சண்டை ரஜினியின் படங்களை பற்றி இல்லை நிஜ ரஜினியின் சில சறுக்கல்களை பற்றி ... ஆனால் ரஜினியின் படங்கள் எனக்கு பிடிக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்ததினால் என்னை இப்பதிவுக்கு அழைத்திருக்கிறார் .. அவர் புரிதலுக்கு நன்றி ...

தான் நடிக்கும் எல்லா படங்களையும் மக்களுக்கு பிடிக்கும் படி நடிக்க முடியுமா ... இல்லை குறைந்தபட்சம் வெகுஜன மக்களுக்கு பிடிக்காமல் போனாலும் அவரின் ரசிகர்களையாவது வெறித்தனமாக ரசிக்க வைக்கும் படங்களை தர முடியுமா? முடியும் ரஜினியால் மட்டுமே ... காரணம் கதையில் அவர் காட்டும் அக்கறை ,அதைவிட பெரிய காரணம் வில்லன் கதாபாத்திரம் அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை படத்தில் தன கதாபாத்திரத்துக்கு இணையாக இடம் கொடுப்பது ... பாட்சா ரகுவரன் , படையப்பா ரம்யா கிருஷ்ணன் , சந்திரமுகி ஜோதிகா , தில்லு முள்ளு தேங்காய் சீனிவாசன் ஏன் இப்ப வந்த என்திரனில் ரஜினியே வில்லனாய் இப்படி அவரின் மிக பெரிய வெற்றி படங்களை எடுத்து பார்த்தால் இந்த உண்மை தெளிவாய் புரியும் ... சிங்கம் சிங்கத்தோடு மோதினால்தான் சுவாரஷ்யம் , சிங்கம் பூனைகுட்டிகளோடு மோதினால் அது நகைசுவை என்பதை தெளிவாய் புரிந்து வைத்திருக்கிறார் ரஜினி ... இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் சறுக்குவது இதில்தான் ...

start music

 பதினாறு வயதினிலே


ரஜினி வில்லனாக பட்டைய கிளப்பிய பல படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம்... அந்த பத்த வச்சிட்டெயே பரட்ட , இது எப்படி இருக்கு வசனங்கள் இப்பொழுதும் பிரபலமான வசனங்கள்...


 தாய் மீது சத்தியம்

1978ல் வெளிவந்த கௌபாய் டைப் தமிழ் படம்... பழிவாங்கும் கதைதான் ஆனால் சுவாரஷ்யாமாக கொடுத்திருப்பார்கள்.. ரஜினி துப்பாக்கியை கையில் வைத்து சுத்தும் ஸ்டைல் இப்ப பார்த்தாலும் பிரபிப்பாய் இருக்கும்....

 பில்லா

ரஜினி நடித்ததிலேயே ரொம்பவும் electrifying ஆன படம் இதுதான் ... ரஜினி இதன் பின்னர் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று நினைக்கிறேன் .... இதில் பெண்மை கலந்த ஒரு ஆண் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பில் பட்டைய கிளப்பி இருப்பார்... மை நேம் இஸ் பில்லா பாடல் இப்பவும் கேட்டால் நரம்பில் மின்சாரம் பாயும் உணர்வை கொடுக்கும் ...

 நெற்றிக்கண்

ரஜினி வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த இன்னொரு படம் ... எக்ஸ்ரே கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு சரிதாவை பார்க்கும்போது ரஜினி காட்டும் முகபாவனைகள் அவரால் மட்டுமே முடியும் .... அதில் வரும் மாப்பிளைக்கு மாமன் மனசு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

 வேலைக்காரன்

ரஜினி இயல்பான நகைசுவையால் பட்டைய கிளப்பிய பல படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது ... பின்னாளில் வந்த பல ரஜினி படங்களுக்கு முன்னோட்டமாய் இருந்த படம் .. இதே கதையில் ரஜினி பல வருடங்களுக்கு பின்னால் முத்து என்ற படம் எடுத்தார் ,, அதுவும் சூப்பர் ஹிட் ... இந்த அதிசயம் ரஜினியாள் மட்டுமே சாத்தியம் ...


 அண்ணாமலை

தமிழ் சினிமாவின் மைல்கல் என்று பல படங்களை கூறலாம் ... அதில் ஒரு பக்கா கமர்ஷியல் படம் இடம்பெற்று இருக்கும் என்றால் அது இந்த படம் மட்டுமே... ரஜினிக்கு என்று ஒரு திரைக்கதையை உருவாக்கிய படம் இது... ஒரே பாட்டில் பணக்காரனாவது , பன்ச் வசனங்கள் பேசுவது போன்ற தமிழ் சினிமாவை கெடுத்த ஆனால் ஹீரோகளை வாழ வைத்த பல விசயங்கள் இந்த படத்தில்தான் அறிமுகம் செய்யபட்டன ... ரஜினி தொடையை தட்டி சவால் விடும் காட்சி அப்பொழுது பெரிய ஹிட் ...

 பாட்ஷா

நான் மேலே சொன்ன படங்கள் எதையும் நான் தியேட்டரில் சென்று பார்த்ததில்லை ... நான் முதல் முதல் தியேட்டரில் சென்று பார்த்த ரஜினி படம் பணக்காரன் .. அதன் பிறகு நான் பார்த்த படம் இது ... பரபர திரைக்கதையால் படத்தை வேகமாக கொண்டு சென்று இருப்பார்கள் .. மாணிக்கமாக வரும் ரஜினி வில்லனிடம் (ஆனந்தராஜ்) கரண்ட் கம்பத்தில் அடிவாங்கும் போது நான் அழுதே விட்டேன் ..பின்னர் ரஜினி அவனை அதே கம்பத்தில் கட்டி அடிக்கும் போது ஏதோ நானே அவனை கட்டி அடித்ததை போல என்னுள் அப்படி ஒரு வெறி ... அதை படத்தின் கடைசி வரை மெயிண்டேயின் பண்ணி இருப்பார்கள் .. வீட்டில் அழுது அடம்பிடித்து அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து நான் பார்த்த படம் ...

 படையப்பா

நான் தனியாக சென்று தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம் ... எனக்கு மிகவும் பிடித்த ரஜினியின் படமும் இதுதான் .. கே.எஸ் .ரவிக்குமார் இயக்கம் அப்படி .. மனிதர் ரஜினியை வைத்து சும்மா விளையாடி இருப்பார்... அந்த ஊஞ்சல் ஸீன் ரஜினியின் ஆல் டைம் பெஸ்ட் மாஸ் ... வயதான ரஜினியை அதிக நேரம் படத்தில் காட்டி இருப்பார் ... ஆனால் அது ஒரு குறையாகவே தெரியாமல் எடுக்க கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே முடியும் .... இந்த படத்தில்தான் முதல் முறையாக வில்லனே ஹீரோவை புகழ்ந்து பேசுவதை போன்ற வசனங்கள் இடம் பெற்றது ...(வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உண்ண விட்டு போகவே இல்லை) இன்று நம் டாக்குடர் படங்களில் இப்படிப்பட்ட வசனங்கள் வந்து நம் உயிரை வாங்குவது தனி சோக கதை ...

 சந்திரமுகி

நான் மேலே சொன்ன படங்கள் எல்லாம் சினிமா பற்றிய என்னுடய புரிதல் எனக்குள் வருவதர்க்கு முன்னரே நான் ரசித்த படங்கள் ... ஆனால் அந்த புரிதல் வந்த பின்னர் நான் கண்டு ரசித்த ஒரே ரஜினி படம் இந்த சந்திரமுகி... முதல் பாதி காமெடி மற்றும் காதல் இரண்டாம் பாதி கொஞ்சம் குணச்சித்திரம் கடைசியில் வில்லதனம் என்று ரஜினி கலவையாக நடித்த படம் ... இதற்க்கு முன்னர் ஒரே ஒரு ஹிட் கொடுத்த (கில்லி ) டாக்குடரே அப்பொழுது ஒரு படத்தில் முழுக்க முழுக்க தன் புகழ் பாடிக்கொண்டு இருந்த பொழுது(சச்சின் ), நூறு ஹிட்டுகளை வரிசையாக கொடுத்து இந்த படத்தில் அடக்கியே வாசித்தார் சூப்பர் ஸ்டார்... ஜோதிகாவின் நடிப்பும் இந்த படத்திற்க்கு பெரிய பலம்.. இந்த படத்தில் வந்த மறக்க முடியாத ஒரு வசனம் “என்ன கொடும சரவணன் இது” .. சத்தியமாய் இந்த வசனம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று அதை பேசும் போது பிரபு கண்டிப்பாய் நினைத்திருக்க மாட்டார்... 



இந்த பதிவை ஏற்கனவே பதிவுலகில் அனைவரும் அடித்து துவைத்து காயபோட்டுவிட்டபடியால் நான் அழைப்பது 

“குண்டு” ராஜகோபால் மற்றும் “சுடுசோறு” ம.தி. சுதா.... 



Thursday, November 25, 2010

பாட்டு கேட்கவா - தொடர் பதிவு

நேற்றும் இன்றும் என் இரண்டு பதிவுலக நண்பர்கள் என்னை இருவேறு தொடர்பதிவிர்க்கு அழைத்திருந்தார்கள் .. ஒருவர் நண்பர் பாலா , சூப்பர் ஸ்டாரின் பிடித்த பத்து படங்களை பற்றி எழுத சொல்லி இருந்தார் .. இன்னொரு நண்பர் நிலவின் மடியில் வினோ ... பெண்களின் குரலில் வந்த பத்து பாடல்கள் பற்றி எழுத சொல்லி இருக்கிறார்...  ரஜினி சாரின் படங்களை பற்றி எழுத நிறைய இருக்கிறது ... அதர்க்காக  நான்  நிறைய விசயங்களை சேகரித்து கொண்டிருக்கிறேன் ... நாளை அந்த பதிவை எழுதி முடித்து விடுவேன் ....   எனக்கு பிடித்த பெண்கள் குரலில் வந்த பத்து பாடல்களை இன்று இந்த பதிவில் வரிசைபடுத்தி உள்ளேன் .... 

எனக்கு எப்போதும் மனதிர்க்கு நெருக்கமாக இருக்கும் இரண்டு விசயங்கள் ஒன்று இசை ... இன்னொன்று பெண்களின் இனிமையான குரல் .. அதுவும் ஏதாவது ஒரு பெண் கோபமாகவோ , நட்போடோ , காதலோடோ , பாசத்தோடோ பயத்தோடோ இல்லை கெஞ்சலாகவோ    நம்மிடம் பேசினால் அவளின் குரலும் நன்றாக இருந்துவிட்டால் அவளின் அந்த பேச்சை ரசிக்காத ஆண்களே இருக்க முடியாது ...  இந்த இரண்டும் தனிதனியாகவே என்னை கவர்ந்த விசயங்கள் ... அப்படி இருக்க  இவை இரண்டும் இணைந்து வந்தால் , என்னை பொறுத்தவரை அது சொர்க்கத்தில் இருந்தால் நம் மனநிலை எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ அப்படிப்பட்ட சந்தோசத்தை கொடுக்கக்கூடிய விஷயம் ... இதோ எனக்கு பிடித்த அந்த மாதிரியான பத்து பாடல்கள் ...

  1. மனம் விரும்புதே உன்னை
                         படம் : நேருக்கு நேர்
                         இசை : தேவா
                         பாடியவர் : ஹரிணி

ஒரு பெண் தன் காதலனின்  மேல் தனக்கு இருக்கும் அன்பை , அந்த அன்பு தனக்குள் உருவான விதத்தை பற்றி  பாடுவது போல இருக்கும் பாடல் ...
  
அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
  அழகாய்த்தான் ஒரு புன்னைகை பூத்தாய்
  அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியதே

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா  என்னுள்ளம்

சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலயே

நெஞ்சொடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பளையே

இப்படி ஒரு பெண்ணின் காதலை அவளே வெளிபடுத்துவது போல இருக்கும் பாடல் ... இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இப்படி ஒரு காதலி நமக்கு கிடைத்தாள் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் என் நெஞ்சம் ஏங்கும் ....

ஹரினியின் குரல் பாடலுக்கு கூடுதல் பலம்...

  1. வா மன்னவா ...
                       படம் : தாளம்
                       இசை : ஏ.ஆர்.ரகுமான்
                       பாடியவர் : சுஜாதா


நாயகனே என் நாயகனே
என் கைவளை நழுவும் முன்னே
என் கண்ணீர் உடையும் முன்னே
என் உயிர் துளி வற்றும் முன்னே
என் ஒரு விரல் தொட்டால் என்ன?

கை படாத பாகம் தொடாது போனால்
 விடாது சாபம் வா வா வா

இந்த வரிகளை படிக்கும் போதே தெரியும் தன் கற்பனை காதலனை தனக்கு வர போகும் எதிர்கால துணையை நினைத்து அவனை சீக்கிரம் வாடா என்று ஒரு பெண் அழைப்பதை  போன்ற பாடல் இது ... காதல் யோகி என்ற புயலுக்கு முன்னாள் காணாமல் போன தென்றல் இது .. ஆனால் ஒரு முறை கேட்டு பார்த்தால் நம் மனதில் ஒரு ஓரத்திலாவது தங்கி விடும் இந்த பாடல் ....


  1. பூ பூக்கும் மாசம் தை மாசம்
                        படம் : வருஷம் 16
                       இசை : இளையராஜா
                       பாடியவர் : சித்ரா 

தன்னுடய காதல் கைகூடியதும் ஒரு பெண்  சந்தோஷமாக பாடுவதை போன்ற பாடல்  இது ...

புஞ்சையும் நஞ்சையும்
  இந்த பூமியும் சாமியும்
  இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

வாய்க்காளையும் வயற்காற்றையும்
 படைத்தாள் எனக்கென
 காதல் தேவதை

கேட்டு பாருங்கள் இளையராஜா புல் பார்மில் இருக்கும் போது போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று ....

  1. எங்கே எனது கவிதை
படம் : கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்
இசை ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: சித்ரா  

மேலே இருக்கும் பாடல்கள் எல்லாம் காதலோடும் , ஏக்கத்தோடும் , சந்தோசமாகவும் ஒரு பெண் பாடுவதை போன்ற பாடல்கள் , இது ஒரு பெண் தன் தோற்று போன காதலை நினைத்து பாடுவதை போல இருக்கும் பாடல் ... சோகம் என்பதற்காக அழுது ஒப்பாரி வைக்காமல் இனிமையான பழைய நினைவுகளின் மூலம் அதை வெளிபடுத்துவது பெண்களின் ஸ்பெஷல் .. இந்த பாடலும் அப்படியே

அழகிய திருமுகம் ஒருமுறை
பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

முத்தம் போடும் அந்த மூச்சின்
வெப்பம் நித்தம் வேண்டும் என்று மனம் வேண்டுதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு 
குத்தும்   இன்பம் தினம் வேண்டுமே

நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று ...

  1. என் வானிலே ஒரே வெண்ணிலா
                         படம் : ஜானி
                         இசை : இளையராஜா
                         பாடியவர் : ஜென்சி

  1. காற்றில் எந்தன் கீதம்
                         படம் : ஜானி
                         பாடியவர் : எஸ் .ஜானகி

ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் அதிக  பாடல்கள் பெண்கள் மட்டுமே பாடுவதை போல வருவது என்பது தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய அதிசயம் ... ஜானி படபாடல்கள் அப்படி ஒரு அதிசயத்தை நிஜமாக்கிய பாடல்கள் ... இந்த இரண்டு பாடல்களை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு இசைஞானம் கிடையாது ... எப்பொழுதாவது வீட்டில் இரவு வேளையில் எல்லாரும் உறங்கிய பிறகு அந்த அமைதியான சூழலில் குறைந்த சத்ததில் இந்த பாடல்களை கேட்டு பாருங்கள் ... ஏன்  எல்லா இயக்குனர்களையும் விட்டு விட்டு ரஜினி மகேந்திரனை பிடிக்கும் என்று சொன்னார் என்பது புரியும் ... இளையராஜாவிடம் இருந்து இப்படிப்பட்ட பாடல்களை வாங்குவது மகேந்திரனால் மட்டுமே சாத்தியம் ..

  1. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்கும்
                    படம் : உயிரே உனக்காக
                    இசை : லக்ஷிமிகாந்த் பியாரிலால்
                    பாடியவர் :எஸ். ஜானகி

இந்த பாடலை பற்றி தனியாக இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன் ... எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ... அதுவும் இதில் வரும் அந்த பெண்குரலுக்கு அடிமை நான் ...

  1. தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
                    படம் : உல்லாச பறவைகள்
                    இசை : இளையராஜா
                    பாடியவர் : ஜென்சி

இளையராஜாவின் இன்னுமொரு மாஸ்டெர் பீஸ் ... பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கும் அதை தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசையும் ராஜாவுக்கே உரித்தான ஸ்டைல் ....

  1. மாலையில் யாரோ மனதோடு பேச
                     படம் : சத்ரியன்   
                     இசை : இளையராஜா
                     பாடியவர் : ஸ்வர்னலதா...

தனிமையில் இருக்கும் பெண் தன் விரதாபத்தை நினைத்து பாடும் பாடல் ... எனக்கு பிடித்த ஸ்வர்ணலதாவின் பல பாடல்களில் இதுவும் ஒன்று ...

சினிமா பாட்ட பத்தி எழுதிட்டு  நம்ம தல படத்துல ஒரு பாட்டுக்கூட எழுதலேனா எப்படி ... இதோ தல படத்தில் பெண் குரலில் வந்த எனக்கு பிடித்த ஒரு பாடல்

10 செய் ஏதாவது செய்
                   படம் : பில்லா 2007
                   இசை : யுவான் ஷங்கர் ராஜா
                   பாடியவர் : நேகா & பிரீத்தி

இதுவும் ஒரு பெண்ணின் காமத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பாடல் .. யுவனின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று ... யுவனின் இசையை தவிர்த்து பாடலை பாடிய பாடகிகளின் குரலில் இருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு பாடலின் வெற்றிக்கு பெரிய காரணம் ...


இந்த பதிவை தொடர நான் அழைப்பது (எழுதுவார்கள் என்ற நம்பிக்கையோடு )

நண்பர் பாலா - வித்தியாசமான பாடல்கள் வரும் என்ற நம்பிக்கையில் 

தல யோகநாதன் - பாடல்களை பற்றிய உங்கள் ரசனையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் 

நண்பர் எஸ்.கே - உங்கள் ரசனையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் 

நண்பர் இல்லுமிநாட்டி- பாடல்களை பற்றி உங்கள் விமர்சனம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள       

கார்க்கி - உங்க பாடல் விமர்சனம் படிச்சி ரொம்ப நாள் ஆச்சி சகா ...

அரசியல் - போட்டோ கமெண்ட்ஸ்

டிஸ்கி 1: இந்த பதிவில் இருக்கும் படங்களும் கமெண்டுகளும் முழுக்க முழுக்க கற்பனையே ... யாரையும் குறிப்பிடுவன அல்ல.....

நன்றி : கூகிள்.காம் (படங்களுக்காக )











பிடிச்சிருந்தா உங்கள் பொன்னான வாக்கை இண்ட்ளியில் போடுங்கள் .... 

Tuesday, November 23, 2010

காவலன் - போட்டோ கமெண்ட்ஸ்



டிஸ்கி 1: இந்த பதிவு முழுக்க முழுக்க நகைசுவைக்காகவே , யார் மனதையும் புண்படுத்த அல்ல ...










டிஸ்கி 2 : நீங்கள் பதிவோடு சேர்த்து டிஸ்கி 1யும் நகைசுவையாக எடுத்து கொண்டால் அதற்க்கு நான் பொறுப்பு அல்ல 



Monday, November 22, 2010

Frozen (2010) - பனிமலை பயங்கரம்


இங்கிலீஷ் படங்கள் பற்றி எழுதி நிறைய நாள் ஆகிவிட்டது ...  இப்பலாம் இங்கிலீஷ் படங்களை பற்றி நல்லா எழுதிட்டு தமிழ் படங்களை திட்டினால் நம்மை ஏதோ செவ்வாய் கிரகவாசிகள் ரேஞ்சுக்கு பார்க்கிறார்கள் ... உனக்கு மொழி பாசமே இல்லையா என்று திட்டி பதிவிடுகிறார்கள் .... நண்பர் பாலா ஒருபடி மேலே போயி அப்படி பதிவு எழுதுகிறவர்களுக்கெல்லாம் ஏதோ நோய் வந்து விட்டது என்று பீதியை கிளப்பி விட்டார்... அதனாலே எனக்கு பயமாக உள்ளது நல்ல படங்களை பற்றி எழுதவே... இருந்தாலும் அந்த பயத்தை எல்லாம் மீறி சென்ற வாரம் நான் பார்த்த ஒரு உலக படம் (நம்ம ஊர் படமெல்லாம் உலக படம் இல்லையா?என்பவர்களுக்கு ... உலக படம் என்பதேர்க்கு நான் புரிந்து கொண்ட விளக்கம் மொழி கலாச்சாரம் இப்படி எல்லாவகையிலும் வேறு பட்டு இருக்கும் மனிதர்களை கூட ரசிக்க வைக்கும் படங்கள்தான் உலக படங்கள் என்று சொல்லபடுகின்றன ...அப்படிப்பட்ட படங்கள் நம்ம ஊரிலும் இருக்கு) என்னை அந்த படத்தை பற்றி கண்டிப்பாக எழுதியே ஆக வேண்டும் என்னும் அளவுக்கு என்னை கவர்ந்து விட்டது... அந்த படம் Frozen (2010)


நம்ம ஊருள ஒரு மசாலா படம் எடுக்கிறாங்கன்னா அதுல இப்படி ஒரு சீன் கண்டிப்பா வரும் (குறிப்பா நம்ம டாக்டர் படங்களில் இது கண்டிப்பாக இருக்கும்)... ஹீரோவ வில்லனோ இல்லை போலிஷோ துரத்தி வருவார்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க நம்ம ஹீரோ அறுபது அடி உயரத்தில் மொட்டை மாடியில் இருந்தோ இல்லை மலை உச்சியில் இருந்தோ கேமராவை பார்த்து flying kiss கொடுத்து விட்டு (பார்க்க குருவி ) கீழே குதிப்பார்... அரை நொடியில் தரையை அடைந்து எந்த விதமான காயங்களும் இல்லாமல் தப்பித்து விடுவார்... இப்படி நம் ஊர் படங்களில் அரை நொடியில் வந்து போகும் இந்த காட்சியை வைத்தே ஒன்றை மணி நேர த்ரில்லிங் படம் எடுத்துள்ளார் .... frozen படத்தின் இயக்குனர் Adam Green...


பொதுவாக ஹாலிவுட் படங்களில் complex situation ஒன்றை உருவாக்கி இதில் இருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதை காட்டும் do or die வகை படங்கள் நிறைய வரும் .... பெரும்பாலும் அப்படி வரும் படங்கள் பார்க்கும் போது நமக்கு இந்த மாதிரியான complex situations வாழ்க்கையில் நடக்க வாய்ப்பு மிகவும் கம்மியாகவே இருக்கும் ... உதாரணம் prey , 2012 போன்ற படங்கள் ... ஆனால் வெகு சில படங்களே நம் வாழ்க்கையில் எதார்த்தமாக நாம் அடிக்கடி சந்திக்கும் விஷயத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் .. அதர்க்கு மிக சிறந்த உதாரணம் speed (bomb on bus)... 


frozen படமும் இந்த வகையில் அடங்கும் ...நடுங்கும் குளிரில் தரையில் இருந்து பத்து அடி உயரத்தில் இரண்டு பேர் மட்டுமே அமரும் ஒரு chairliftல் மூன்று பேர் ஒரு வாரம் முழுவதும் அமர்ந்து இருக்க வேண்டும் ... ஒரு வாரத்திர்க்கு அவர்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது... மேலும் அது ஒரு உயரமான பனி மலை... கீழே மலை முழுவதும் நரிகள் ... மேழே இருந்தாலும் சாவு கீழே வந்தாலும் சாவு ... இதுதான் இந்த படத்தில் இயக்குனர் படைத்திருக்கும் complex situation... இந்த நிலையில் அவர்கள் முன்னால் இருக்கும் இரண்டே ஸாயிஸ் அங்கு இருந்து எப்படியாவது தப்பிப்பது அல்லது பணியில் உறைந்தோ இல்லை நரியிடம் மாட்டியோ இறப்பது... இந்த இரண்டில் எது நடந்தது என்பதே படத்தின் கதை ...


படத்தின் ஹீரோ dan ... அவனும் அவன் நண்பனும்(joe) வீக் எண்டை ஜாலியாக கழிக்க ஹில் ஸ்டேஷன் செல்கிறார்கள்.... உடன் ஹீரோவின் காதலி (parker) இருக்கிறாள்... அது ஒரு அடர்ந்த பணிமலை... அங்கு இருக்கும் பெரிய பொழுது போக்கே பணிசருக்குதான் ... ஹீரோயினுக்கு ஒழுங்காக பனி சறுக்கு செய்ய தெரியவில்லை .... அதனால் அவளுக்கு கற்று தருவதிலேயே பகல் நேரம் முழுவதும் கழிந்து விடுகிறது ... எனவே மலையை முழுவதும் அவர்களால் சுற்றி பார்க்க முடியவில்லை ... அவர்கள் இரவு chairliftல் சென்று மலையை சுற்றி பார்க்க விரும்புகிறார்கள்... ஆனால் போதுமான அளவுக்கு காசு இல்லை ... அந்த chairlift ஆபரேட்டரிடம் லஞ்சம் கொடுத்து பயணப்படுகிறார்கள்... அது ஞாயிறு இரவு ... அந்த சுற்றுலா தளம் முழுவதுமாக மூடப்படும் நேரம் அது .... மலைக்குள் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லை... அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கூட யாரும் கிடையாது அனைவரும் கிளம்பி விடுகின்றனர் .... ஆபரேட்டர் அவர்களிடம் நீங்கள் வரும் வரை தான் காத்திருப்பதாக தெரிவிக்கிறான் .. அவர்களும் கிளம்புகின்றனர்.... 


அவர்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டே பனியை ரசித்து கொண்டு பயணிக்கிறார்கள்... திடீரென்று விஞ்ச் நின்று விடுகிறது ... அவர்களும் ஏதோ பவர் கோளாறு , சிறிது நேரத்தில் கிளம்பி விடும் என்று எண்ணுகிறார்கள் ... ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த மலை முழுவதும் லைட்டுகள் வரிசையாக அணைந்து கொண்டே வருகிறது .. அப்பொழுதுதான் நிலமையின் விபரீதம் அவர்களுக்கு புரிகிறது ... நாம் இங்கு மாட்டி கொண்டு இருக்கிறோம் என்பதே யாருக்கும் தெரியவில்லை என்பது அவர்களுக்கு புரிகிறது .... chairlift சிஸ்டம் shut down செய்யபட்டு விட்டது ... இனி மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமைதான் இயங்கும் ... அதுவரை இந்த பனியில் அந்தரத்தில் தொங்க வேண்டும் ... 


இதே நிலையில் நம்ம ஊர் ஹீரோக்கள் இருந்தால் என்ன செய்வார்கள் .. அடுத்த நொடியே ஹீரோயினுடன் கீழே குதித்து சின்ன காயம் கூட இல்லாமல் தப்பி விடுவார்கள் அடுத்த சீன் அதே மலையில் ஒரு டூயட்... அதே போல ஜாக்கி சான் அந்த இடத்தில் இருந்தால் ஒவ்வொரு விஞ்சாக தாவி தாவி power stationஐ அடைந்து chairliftஐ இயக்கி தன் நண்பனையும் காதலியையும் காப்பாற்றி இருப்பார் ... ஆனால் இந்த படத்தில் காட்டபட்டிருப்பது உங்களை போல என்னை போல மூன்று சாதாரண அப்பாவி மக்கள்...


தப்பிக்க வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் இருக்கும் இரண்டு சவால்கள் ...ஒன்று உயரம் .... அந்த உயரத்தில் இருந்து தரையை அடைய வேண்டும் என்றால் குதிப்பதை தவிர வேறு வழி இல்லை ... ஆனால் அவ்வாறு குதிதால் என்ன ஆகும் என்ற பயம் அவர்களை குதிக்கவிடாமல் தடுக்கிறது... இன்னொன்று கடுங்குளிர் ....


ஒருகட்டதில் ஹீரோயின் வரப்போகும் சாவை கண்டு பயந்து புலம்ப ஆரம்பிக்கிறாள்... ஹீரோ உன்னை எப்படியாவது நான் காப்பாற்றுகிறேன் ... நீ கண்டிப்பாக இந்த இடத்தில் இருந்து தப்பித்து விடுவாய் என்று அவளுக்கு ஆறுதல் கூறுகிறான் ...அவளை காப்பாற்ற வேறு வழியே தெரியாமல் விஞ்சில் இருந்து கீழே குதிக்கிறான்...குதித்த நொடியில் அவன் கால் எழும்புகள் உடைந்து நொறுங்குகின்றன... (அந்த காட்சியில் அவன் கால் தரையை தொட்டவுடன் அவன் எழும்புகள் முறிவதை பின்னணி இசையில் அருமையாக கொண்டு வந்திருப்பார் இசை அமைப்பாளர்).. அவன் மூட்டுக்கு கீழே எழும்புகள் அவன் தோலை துளைத்து வெளியே வந்து விடுகிறது… அவனால் ஒரு இஞ்ச் கூட நகர முடியவில்லை... வலி எல்லாம் குறைந்தவுடன் இப்படியே ஊர்ந்து ஊர்ந்து சென்று யாரையாவது உதவிக்கு அழைத்து வந்து விடலாம் என்று அவன் மேலே இருக்கும் காதலியிடம் சொல்லுகிறான் ... ஆனால் அவன் காதலி அப்படியே உறைந்து போய் அவனை பார்க்கிறாள் .. காரணம் கீழே இருக்கும் அவனை சுற்றி நரிகள் சூழ்ந்து விடுகின்றன.... அவ்வளவுதான் அவன் நரிகளுக்கு இரையாகி விடுகிறான் ... அப்பொழுதுதான் மேலே இருப்பவர்களுக்கு தெரிகிறது இந்த உயரம் , குளிர் இது எல்லாவற்றையும் விட பேராபத்து ஒன்று கீழே இருக்கிறது என்று ....


இந்த மூன்று ஆபத்துளையும் தாண்டி மேலே இருக்கும் இருவரும் தப்பினார்களா ... ஹீரோ சொல்லியபடி ஹீரோயின் தப்பி பிழைத்தாளா ?இல்லையா? என்பதே மீதி கதை... படம் முழுவதும் கேமரா தொங்கிக்கொண்டேதான் இருக்கிறது ... படத்தை பார்த்தால் கேமராமேன் எவ்வளவு உழைப்பை கொட்டி இருக்கிறார் என்பது புரியும்... 

ஹீரோயின் கை பனிபொழிவாள் விஞ்சில் இருக்கும் கைபிடியோடு ஒட்டி விடுவது , ரெண்டு விஞ்ச் தள்ளி இருக்கும் ஏணியை அடைய விஞ்ச் இயங்கும் கயிரை கையால் பிடித்து கொண்டே ஹீரோவின் நண்பன் செல்ல முயன்று இரண்டு அடி எடுத்து வைத்தவுடன் அந்த கேபிள் பனியில் உறைந்து போய் இருக்கும் இவன் கையை அறுத்து விடுவது என்று பனியின் பயங்கரத்தை காட்சியிலேயே புரிய வைத்திருப்பார் இயக்குனர்... 


அதே போல் படத்தின் பெரிய பலம் பின்னணி இசை... அந்த விஞ்சில் இருந்து எழும் கிரீச் முரிச் சத்தமே நம்மை அநியாயத்துக்கு பயமுறுத்துகிறது.... 


இன்னொரு பெரிய பலம் நடிகர்களின் நடிப்பு ... படம் முழுவதும் மூன்று கதாபாத்திரங்கள்தான்.... சாக போகும் தருவாயில் தைரியசாலி எப்படி அதை எதிர்கொள்ளுவான் , பயந்த சுபாவம் உடையவர்கள் அதை எப்படி எதிர்கொள்ளுவார்கள் என்பதை ஹீரோ மற்றும் ஹெரோயினை வைத்தே நமக்கு காட்டி இருப்பார் இயக்குனர்... மரணபயத்தின் முன்னால் வேறு எதுவுமே பெரிய விசயமில்லை என்பதை யதார்த்தமாக சொல்லி இருக்கிறார்.... இந்த மூன்று நடிகர்களில் என்னை பொறுத்தவரை முதல் மதிப்பெண் அந்த பெண்ணுக்குதான்... படத்தில் இவருக்குதான் ஸ்கோப் அதிகம் ... அதே போல் அதை சரியாக பயன்படுத்தவும் செய்திருக்கிறார்... 



இதை போல மிகைபடுத்தபடாத எதார்த்தமான த்ரில்லிங் படங்கள் நம் ஊரில் எப்பொழுது வருமோ தெரியவில்லை...


Frozen(2010) - ஒன்றை மணிநேரம் மரண பீதியில் உறைய ஆசைபடுபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்...

Friday, November 19, 2010

பட்டிக்காடா? பட்டணமா?

தாய் பாசத்திற்க்கு  அடுத்து காசுக்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் நாம் தவற  விட்ட முக்கியமான விஷயம் நம்  சொந்த ஊர் வாழ்க்கைதான் .... நகரங்களில் ஷாப்பிங் மால்களிலும் , தீம் பார்க்குகளிலும் ஆயிரக்கணக்கில் செலவளித்தாலும் கிடைக்காத சந்தோஷம் நம் ஊரு காத்து நம்ம தொட்டவுடனே கிடைச்சிரும்.... இது ட்விட்டர் ஸ்டைலில் நகரவாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசங்களை சொல்ல போகும் பதிவு ... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது எங்க கிராமம்தான் அதனால எல்லா டிவிட்டுகளும் கிராமத்தை  உய்ர்த்தி பிடிக்கிற மாதிரிதான் எழுதியிருக்கேன் ...


"சுனாமி வந்து மெரினாவில் குவிந்து கிடந்த பிணங்களை வெறும் காட்சி பொருளாகவே பார்த்து சென்றவர்களை பார்த்து விட்டு , இறந்தே பிறந்த பால்காரன்  வீட்டு கன்றுக்குட்டிக்காக ஊரே பரிதாபபட்டதை பார்க்கும் போது மனதில் வேண்டிக்கொண்டேன் நான் எங்கே வாழ்ந்தாலும் என் சாவு இங்குதான் நிகழ வேண்டும் என்று ...."

"காசு கொடுத்து சரவணபவனில் வாங்கிய அல்சரை விரட்டி கொண்டு இருக்கிறேன் அக்கறையாய் அம்மா வைக்கும் கத்திரிக்காய் கூட்டில்"

"லாண்டரிக்கு  காசு  கொடுத்து துணி  துவைக்கும் எனக்கு,  நான் எவ்வளவு சோம்பேறி என்பது புரிந்தது , எழுபது வயதிலும் தன்னுடய துணியை தானே துவைக்கும் கிழவனை கண்மாயில் பார்த்த போது"

"மனித உரிமை என்று வாய்கிழிய பேசுகிறோம் நீச்சல் அடிக்கும் உரிமையை  அம்பது ரூபாய்க்கு ஸ்விம்மிங் pool உரிமையாளரிடம் விற்றுவிட்டு ..."

"திருவிழா நாளில் ஊர் தெருவில் வேட்டியை  திரையாக்கி ஊரே திரண்டு பார்க்கும் ராமராஜன் படத்தில் கிடைக்கும் உற்சாகம் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஐ- நாக்ஸில் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்தால் கூட  கிடைப்பதில்லை"

"டீம் அவுட்டிங்என்றுசனிக்கிழமைகளில் ஏசி பப்புகளில்   ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாரின் சரக்கு குடித்தாலும் அரைகுறையாக கூட கிடைக்காத போதை ஓசியில் நிலா வெளிச்சத்தில் கோயில் நந்தவனத்தில் உள்ளூர் சரக்கு அடிக்கும்போது முழுதாய் கிடைக்கிறது ... " 

"தாவணியில் திரிந்த என் அத்தை பெண்ணின்  கைவிரல் லேசாக என் மேல் பட்ட பொழுது அவள் முகத்தில் காட்டிய வெட்கத்தால்   என் உடலில் பரவிய உஷ்ணத்தில்  புரிந்தது,,, பெண்கள் கம்பிகள் என்றாள் அதில் பாயும் மின்சாரம்  வெட்கம்  , இங்கே நகரத்தில் ஆற்காட்டார்  கொடுக்கும்  மின்சாரத்தை போல பெண்களும் லோ வோல்டேஜ்தான் ,  ...".

"என் ஊரில் மழை நாட்களில் எழுந்த  மண்வாசனையை நுகர்ந்த போதுதான் தெரிந்தது நகரத்தில் பூசப்பட்ட தார்  பூமிக்கு மட்டும் இல்லை நம் நாசிக்கும் சேர்த்துதான் என்பது....     


LinkWithin

Related Posts with Thumbnails