நண்பர் பாலா இந்த தொடர்பதிவிர்க்கு என்னை அழைத்திருந்தார் ... ஏற்கனவே ஒரு பதிவில் ரஜினியை பற்றி நான் எழுதியதில் எனக்கும் அவருக்கும் பின்னூட்டத்தில் பெரிய கருத்து யுத்தமே நடந்திருந்தது ...அவர் ரஜினிக்கு ஆதரவாய் நான் எதிரியாய் ... ஆனால் சண்டை ரஜினியின் படங்களை பற்றி இல்லை நிஜ ரஜினியின் சில சறுக்கல்களை பற்றி ... ஆனால் ரஜினியின் படங்கள் எனக்கு பிடிக்கும் என்று அவருக்கு தெரிந்திருந்ததினால் என்னை இப்பதிவுக்கு அழைத்திருக்கிறார் .. அவர் புரிதலுக்கு நன்றி ...
தான் நடிக்கும் எல்லா படங்களையும் மக்களுக்கு பிடிக்கும் படி நடிக்க முடியுமா ... இல்லை குறைந்தபட்சம் வெகுஜன மக்களுக்கு பிடிக்காமல் போனாலும் அவரின் ரசிகர்களையாவது வெறித்தனமாக ரசிக்க வைக்கும் படங்களை தர முடியுமா? முடியும் ரஜினியால் மட்டுமே ... காரணம் கதையில் அவர் காட்டும் அக்கறை ,அதைவிட பெரிய காரணம் வில்லன் கதாபாத்திரம் அல்லது வேறு ஏதாவது ஒரு கதாபாத்திரத்தை படத்தில் தன கதாபாத்திரத்துக்கு இணையாக இடம் கொடுப்பது ... பாட்சா ரகுவரன் , படையப்பா ரம்யா கிருஷ்ணன் , சந்திரமுகி ஜோதிகா , தில்லு முள்ளு தேங்காய் சீனிவாசன் ஏன் இப்ப வந்த என்திரனில் ரஜினியே வில்லனாய் இப்படி அவரின் மிக பெரிய வெற்றி படங்களை எடுத்து பார்த்தால் இந்த உண்மை தெளிவாய் புரியும் ... சிங்கம் சிங்கத்தோடு மோதினால்தான் சுவாரஷ்யம் , சிங்கம் பூனைகுட்டிகளோடு மோதினால் அது நகைசுவை என்பதை தெளிவாய் புரிந்து வைத்திருக்கிறார் ரஜினி ... இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் சறுக்குவது இதில்தான் ...
start music
பதினாறு வயதினிலே
ரஜினி வில்லனாக பட்டைய கிளப்பிய பல படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம்... அந்த பத்த வச்சிட்டெயே பரட்ட , இது எப்படி இருக்கு வசனங்கள் இப்பொழுதும் பிரபலமான வசனங்கள்...
தாய் மீது சத்தியம்
1978ல் வெளிவந்த கௌபாய் டைப் தமிழ் படம்... பழிவாங்கும் கதைதான் ஆனால் சுவாரஷ்யாமாக கொடுத்திருப்பார்கள்.. ரஜினி துப்பாக்கியை கையில் வைத்து சுத்தும் ஸ்டைல் இப்ப பார்த்தாலும் பிரபிப்பாய் இருக்கும்....
பில்லா
ரஜினி நடித்ததிலேயே ரொம்பவும் electrifying ஆன படம் இதுதான் ... ரஜினி இதன் பின்னர் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று நினைக்கிறேன் .... இதில் பெண்மை கலந்த ஒரு ஆண் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பில் பட்டைய கிளப்பி இருப்பார்... மை நேம் இஸ் பில்லா பாடல் இப்பவும் கேட்டால் நரம்பில் மின்சாரம் பாயும் உணர்வை கொடுக்கும் ...
நெற்றிக்கண்
ரஜினி வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்த இன்னொரு படம் ... எக்ஸ்ரே கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு சரிதாவை பார்க்கும்போது ரஜினி காட்டும் முகபாவனைகள் அவரால் மட்டுமே முடியும் .... அதில் வரும் மாப்பிளைக்கு மாமன் மனசு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
வேலைக்காரன்
ரஜினி இயல்பான நகைசுவையால் பட்டைய கிளப்பிய பல படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது ... பின்னாளில் வந்த பல ரஜினி படங்களுக்கு முன்னோட்டமாய் இருந்த படம் .. இதே கதையில் ரஜினி பல வருடங்களுக்கு பின்னால் முத்து என்ற படம் எடுத்தார் ,, அதுவும் சூப்பர் ஹிட் ... இந்த அதிசயம் ரஜினியாள் மட்டுமே சாத்தியம் ...
அண்ணாமலை
தமிழ் சினிமாவின் மைல்கல் என்று பல படங்களை கூறலாம் ... அதில் ஒரு பக்கா கமர்ஷியல் படம் இடம்பெற்று இருக்கும் என்றால் அது இந்த படம் மட்டுமே... ரஜினிக்கு என்று ஒரு திரைக்கதையை உருவாக்கிய படம் இது... ஒரே பாட்டில் பணக்காரனாவது , பன்ச் வசனங்கள் பேசுவது போன்ற தமிழ் சினிமாவை கெடுத்த ஆனால் ஹீரோகளை வாழ வைத்த பல விசயங்கள் இந்த படத்தில்தான் அறிமுகம் செய்யபட்டன ... ரஜினி தொடையை தட்டி சவால் விடும் காட்சி அப்பொழுது பெரிய ஹிட் ...
பாட்ஷா
நான் மேலே சொன்ன படங்கள் எதையும் நான் தியேட்டரில் சென்று பார்த்ததில்லை ... நான் முதல் முதல் தியேட்டரில் சென்று பார்த்த ரஜினி படம் பணக்காரன் .. அதன் பிறகு நான் பார்த்த படம் இது ... பரபர திரைக்கதையால் படத்தை வேகமாக கொண்டு சென்று இருப்பார்கள் .. மாணிக்கமாக வரும் ரஜினி வில்லனிடம் (ஆனந்தராஜ்) கரண்ட் கம்பத்தில் அடிவாங்கும் போது நான் அழுதே விட்டேன் ..பின்னர் ரஜினி அவனை அதே கம்பத்தில் கட்டி அடிக்கும் போது ஏதோ நானே அவனை கட்டி அடித்ததை போல என்னுள் அப்படி ஒரு வெறி ... அதை படத்தின் கடைசி வரை மெயிண்டேயின் பண்ணி இருப்பார்கள் .. வீட்டில் அழுது அடம்பிடித்து அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து நான் பார்த்த படம் ...
படையப்பா
நான் தனியாக சென்று தியேட்டரில் பார்த்த முதல் ரஜினி படம் ... எனக்கு மிகவும் பிடித்த ரஜினியின் படமும் இதுதான் .. கே.எஸ் .ரவிக்குமார் இயக்கம் அப்படி .. மனிதர் ரஜினியை வைத்து சும்மா விளையாடி இருப்பார்... அந்த ஊஞ்சல் ஸீன் ரஜினியின் ஆல் டைம் பெஸ்ட் மாஸ் ... வயதான ரஜினியை அதிக நேரம் படத்தில் காட்டி இருப்பார் ... ஆனால் அது ஒரு குறையாகவே தெரியாமல் எடுக்க கே.எஸ்.ரவிக்குமாரால் மட்டுமே முடியும் .... இந்த படத்தில்தான் முதல் முறையாக வில்லனே ஹீரோவை புகழ்ந்து பேசுவதை போன்ற வசனங்கள் இடம் பெற்றது ...(வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உண்ண விட்டு போகவே இல்லை) இன்று நம் டாக்குடர் படங்களில் இப்படிப்பட்ட வசனங்கள் வந்து நம் உயிரை வாங்குவது தனி சோக கதை ...
சந்திரமுகி
நான் மேலே சொன்ன படங்கள் எல்லாம் சினிமா பற்றிய என்னுடய புரிதல் எனக்குள் வருவதர்க்கு முன்னரே நான் ரசித்த படங்கள் ... ஆனால் அந்த புரிதல் வந்த பின்னர் நான் கண்டு ரசித்த ஒரே ரஜினி படம் இந்த சந்திரமுகி... முதல் பாதி காமெடி மற்றும் காதல் இரண்டாம் பாதி கொஞ்சம் குணச்சித்திரம் கடைசியில் வில்லதனம் என்று ரஜினி கலவையாக நடித்த படம் ... இதற்க்கு முன்னர் ஒரே ஒரு ஹிட் கொடுத்த (கில்லி ) டாக்குடரே அப்பொழுது ஒரு படத்தில் முழுக்க முழுக்க தன் புகழ் பாடிக்கொண்டு இருந்த பொழுது(சச்சின் ), நூறு ஹிட்டுகளை வரிசையாக கொடுத்து இந்த படத்தில் அடக்கியே வாசித்தார் சூப்பர் ஸ்டார்... ஜோதிகாவின் நடிப்பும் இந்த படத்திற்க்கு பெரிய பலம்.. இந்த படத்தில் வந்த மறக்க முடியாத ஒரு வசனம் “என்ன கொடும சரவணன் இது” .. சத்தியமாய் இந்த வசனம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று அதை பேசும் போது பிரபு கண்டிப்பாய் நினைத்திருக்க மாட்டார்...
இந்த பதிவை ஏற்கனவே பதிவுலகில் அனைவரும் அடித்து துவைத்து காயபோட்டுவிட்டபடியால் நான் அழைப்பது
“குண்டு” ராஜகோபால் மற்றும் “சுடுசோறு” ம.தி. சுதா....
11 comments:
நெற்றிக்கண்
My all Time Best Move only for rajini.
கண்டிப்பா நண்பா போட்ருவோம் நானும் ரஜினி ரசிகன் தாண்டா.,
சத்தியமா Dr.விஜய் ரசிகன் இல்ல.
எல்லாமே சிறப்பான படங்கள்! மிக நல்ல தொகுப்பு!
ராஜகோபால் சார்! நீங்க உங்களுக்கு பிடித்த 10 விஜய் படங்கள் பற்றி எழுதுங்களேன்!:-)
சூப்பரு..
விமர்சனம் நச்சுன்னு இருக்கு
கண்டிப்பா நண்பா போட்ருவோம் நானும் ரஜினி ரசிகன் தாண்டா.,
//எழுதுங்க தலைவா சூப்பரா இருக்கும்
பிடிக்காத 10 விஜய் படங்கள்ன்னு 5 பதிவு போடுரேன்.
@ ராஜகோபால் & எஸ்கே
என்ன ஒரு வில்லதனம்
@ சதீஷ்குமார்
தல என்னோட கமல் பதிவ கண்டிப்பா மறக்காம வந்து பாருங்க...
@ஹரீஷ்
ஹரீஷ் நன்றி .. நீங்களும் என்னோட கமல் பதிவ மறக்காம வந்து பாருங்க ...
சிறப்பான படங்கள்! நல்ல தொகுப்பு!
நன்றி வெறும்பய ...
// பிடிக்காத 10 விஜய் படங்கள்ன்னு 5 பதிவு போடுரேன். //
செம காமெடி...
Post a Comment