நேற்றும் இன்றும் என் இரண்டு பதிவுலக நண்பர்கள் என்னை இருவேறு தொடர்பதிவிர்க்கு அழைத்திருந்தார்கள் .. ஒருவர் நண்பர் பாலா , சூப்பர் ஸ்டாரின் பிடித்த பத்து படங்களை பற்றி எழுத சொல்லி இருந்தார் .. இன்னொரு நண்பர் நிலவின் மடியில் வினோ ... பெண்களின் குரலில் வந்த பத்து பாடல்கள் பற்றி எழுத சொல்லி இருக்கிறார்... ரஜினி சாரின் படங்களை பற்றி எழுத நிறைய இருக்கிறது ... அதர்க்காக நான் நிறைய விசயங்களை சேகரித்து கொண்டிருக்கிறேன் ... நாளை அந்த பதிவை எழுதி முடித்து விடுவேன் .... எனக்கு பிடித்த பெண்கள் குரலில் வந்த பத்து பாடல்களை இன்று இந்த பதிவில் வரிசைபடுத்தி உள்ளேன் ....
எனக்கு எப்போதும் மனதிர்க்கு நெருக்கமாக இருக்கும் இரண்டு விசயங்கள் ஒன்று இசை ... இன்னொன்று பெண்களின் இனிமையான குரல் .. அதுவும் ஏதாவது ஒரு பெண் கோபமாகவோ , நட்போடோ , காதலோடோ , பாசத்தோடோ பயத்தோடோ இல்லை கெஞ்சலாகவோ நம்மிடம் பேசினால் அவளின் குரலும் நன்றாக இருந்துவிட்டால் அவளின் அந்த பேச்சை ரசிக்காத ஆண்களே இருக்க முடியாது ... இந்த இரண்டும் தனிதனியாகவே என்னை கவர்ந்த விசயங்கள் ... அப்படி இருக்க இவை இரண்டும் இணைந்து வந்தால் , என்னை பொறுத்தவரை அது சொர்க்கத்தில் இருந்தால் நம் மனநிலை எவ்வளவு சந்தோஷமாக இருக்குமோ அப்படிப்பட்ட சந்தோசத்தை கொடுக்கக்கூடிய விஷயம் ... இதோ எனக்கு பிடித்த அந்த மாதிரியான பத்து பாடல்கள் ...
- மனம் விரும்புதே உன்னை
படம் : நேருக்கு நேர்
இசை : தேவா
பாடியவர் : ஹரிணி
ஒரு பெண் தன் காதலனின் மேல் தனக்கு இருக்கும் அன்பை , அந்த அன்பு தனக்குள் உருவான விதத்தை பற்றி பாடுவது போல இருக்கும் பாடல் ...
“ அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
அழகாய்த்தான் ஒரு புன்னைகை பூத்தாய்
அடி நெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியதே”
“ புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம் “
“சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலயே”
“நெஞ்சொடு காதல் வரும் என்று நேற்று வரை நம்பளையே “
இப்படி ஒரு பெண்ணின் காதலை அவளே வெளிபடுத்துவது போல இருக்கும் பாடல் ... இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இப்படி ஒரு காதலி நமக்கு கிடைத்தாள் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் என் நெஞ்சம் ஏங்கும் ....
ஹரினியின் குரல் பாடலுக்கு கூடுதல் பலம்...
- வா மன்னவா ...
படம் : தாளம்
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர் : சுஜாதா
“நாயகனே என் நாயகனே
என் கைவளை நழுவும் முன்னே
என் கண்ணீர் உடையும் முன்னே
என் உயிர் துளி வற்றும் முன்னே
என் ஒரு விரல் தொட்டால் என்ன?”
“ கை படாத பாகம் தொடாது போனால்
விடாது சாபம் வா வா வா “
இந்த வரிகளை படிக்கும் போதே தெரியும் தன் கற்பனை காதலனை தனக்கு வர போகும் எதிர்கால துணையை நினைத்து அவனை சீக்கிரம் வாடா என்று ஒரு பெண் அழைப்பதை போன்ற பாடல் இது ... காதல் யோகி என்ற புயலுக்கு முன்னாள் காணாமல் போன தென்றல் இது .. ஆனால் ஒரு முறை கேட்டு பார்த்தால் நம் மனதில் ஒரு ஓரத்திலாவது தங்கி விடும் இந்த பாடல் ....
- பூ பூக்கும் மாசம் தை மாசம்
படம் : வருஷம் 16
இசை : இளையராஜா
பாடியவர் : சித்ரா
தன்னுடய காதல் கைகூடியதும் ஒரு பெண் சந்தோஷமாக பாடுவதை போன்ற பாடல் இது ...
“ புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும்
இனி நம் கட்சி நம் கட்சி நம் கட்சி “
“வாய்க்காளையும் வயற்காற்றையும்
படைத்தாள் எனக்கென
காதல் தேவதை “
கேட்டு பாருங்கள் இளையராஜா புல் பார்மில் இருக்கும் போது போட்ட பாடல்களில் இதுவும் ஒன்று ....
- எங்கே எனது கவிதை
படம் : கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்
இசை “ ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: சித்ரா
மேலே இருக்கும் பாடல்கள் எல்லாம் காதலோடும் , ஏக்கத்தோடும் , சந்தோசமாகவும் ஒரு பெண் பாடுவதை போன்ற பாடல்கள் , இது ஒரு பெண் தன் தோற்று போன காதலை நினைத்து பாடுவதை போல இருக்கும் பாடல் ... சோகம் என்பதற்காக அழுது ஒப்பாரி வைக்காமல் இனிமையான பழைய நினைவுகளின் மூலம் அதை வெளிபடுத்துவது பெண்களின் ஸ்பெஷல் .. இந்த பாடலும் அப்படியே
“அழகிய திருமுகம் ஒருமுறை
பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன் “
“முத்தம் போடும் அந்த மூச்சின்
வெப்பம் நித்தம் வேண்டும் என்று மனம் வேண்டுதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் தினம் வேண்டுமே “
நான் அடிக்கடி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று ...
- என் வானிலே ஒரே வெண்ணிலா
படம் : ஜானி
இசை : இளையராஜா
பாடியவர் : ஜென்சி
- காற்றில் எந்தன் கீதம்
படம் : ஜானி
பாடியவர் : எஸ் .ஜானகி
ஒரு சூப்பர் ஸ்டார் படத்தில் அதிக பாடல்கள் பெண்கள் மட்டுமே பாடுவதை போல வருவது என்பது தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய அதிசயம் ... ஜானி படபாடல்கள் அப்படி ஒரு அதிசயத்தை நிஜமாக்கிய பாடல்கள் ... இந்த இரண்டு பாடல்களை பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு இசைஞானம் கிடையாது ... எப்பொழுதாவது வீட்டில் இரவு வேளையில் எல்லாரும் உறங்கிய பிறகு அந்த அமைதியான சூழலில் குறைந்த சத்ததில் இந்த பாடல்களை கேட்டு பாருங்கள் ... ஏன் எல்லா இயக்குனர்களையும் விட்டு விட்டு ரஜினி மகேந்திரனை பிடிக்கும் என்று சொன்னார் என்பது புரியும் ... இளையராஜாவிடம் இருந்து இப்படிப்பட்ட பாடல்களை வாங்குவது மகேந்திரனால் மட்டுமே சாத்தியம் ..
- பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்கும்
படம் : உயிரே உனக்காக
இசை : லக்ஷிமிகாந்த் பியாரிலால்
பாடியவர் :எஸ். ஜானகி
இந்த பாடலை பற்றி தனியாக இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன் ... எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ... அதுவும் இதில் வரும் அந்த பெண்குரலுக்கு அடிமை நான் ...
- தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
படம் : உல்லாச பறவைகள்
இசை : இளையராஜா
பாடியவர் : ஜென்சி
இளையராஜாவின் இன்னுமொரு மாஸ்டெர் பீஸ் ... பாடலின் ஆரம்பத்தில் வரும் ஹம்மிங்கும் அதை தொடர்ந்து வரும் புல்லாங்குழல் இசையும் ராஜாவுக்கே உரித்தான ஸ்டைல் ....
- மாலையில் யாரோ மனதோடு பேச
படம் : சத்ரியன்
இசை : இளையராஜா
பாடியவர் : ஸ்வர்னலதா...
தனிமையில் இருக்கும் பெண் தன் விரதாபத்தை நினைத்து பாடும் பாடல் ... எனக்கு பிடித்த ஸ்வர்ணலதாவின் பல பாடல்களில் இதுவும் ஒன்று ...
சினிமா பாட்ட பத்தி எழுதிட்டு நம்ம தல படத்துல ஒரு பாட்டுக்கூட எழுதலேனா எப்படி ... இதோ தல படத்தில் பெண் குரலில் வந்த எனக்கு பிடித்த ஒரு பாடல்
10 செய் ஏதாவது செய்
படம் : பில்லா 2007
இசை : யுவான் ஷங்கர் ராஜா
பாடியவர் : நேகா & பிரீத்தி
இதுவும் ஒரு பெண்ணின் காமத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பாடல் .. யுவனின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று ... யுவனின் இசையை தவிர்த்து பாடலை பாடிய பாடகிகளின் குரலில் இருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்பு பாடலின் வெற்றிக்கு பெரிய காரணம் ...
இந்த பதிவை தொடர நான் அழைப்பது (எழுதுவார்கள் என்ற நம்பிக்கையோடு )
நண்பர் பாலா - வித்தியாசமான பாடல்கள் வரும் என்ற நம்பிக்கையில்
தல யோகநாதன் - பாடல்களை பற்றிய உங்கள் ரசனையை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்
நண்பர் எஸ்.கே - உங்கள் ரசனையை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்
நண்பர் இல்லுமிநாட்டி- பாடல்களை பற்றி உங்கள் விமர்சனம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள
கார்க்கி - உங்க பாடல் விமர்சனம் படிச்சி ரொம்ப நாள் ஆச்சி சகா ...
18 comments:
ரொம்ப நல்ல தேர்வு தல
எனக்கும் பிடித்த பாடல்கள்.....
அழைத்ததற்கு நன்றி தல...
கண்டிப்பாக எழுதுகிறேன்
jensi paadalkal sonnathukku thanks.. my most fav femal singer..
kandippa ezutharen sagaa.. 1, 2 paatu ithile irukku..aperam, intha week thaan engeyum kaathal vimarsanam ezuthinen. paarkalaiyaa?
wait till monday.. will post it sure..
Thanks again
PS: athu enna kadaisi paadal? kadamai,kanniyam,kattupaadaa????????? :))))
தங்கள் தேர்வு அனைத்தும் சிறப்பானது! கேட்க இனிமையான பாடல்கள்!
தங்கள் அழைப்பிற்கு நன்றி!
நிச்சயம் எழுதுகிறேன் நண்பரே!
@ Arun Prasath
நன்றி தல
@ ஹரிஸ்
வா மன்னவா பாடலும் பிடிக்குமா?
@ பாலா
எழுதுங்கள் தல வருகிறேன்
@ கார்க்கி
நன்றி சகா ... ஜென்சி எனக்கும் பிடித்த பாடகி ...
//athu enna kadaisi paadal? kadamai,kanniyam,kattupaadaa????????? :))))
எல்லாம் ஒரு பாசம்தான் சகா...
@ எஸ்.கே
எழுதுங்கள் தல..
//இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் இப்படி ஒரு காதலி நமக்கு கிடைத்தாள் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் என் நெஞ்சம் ஏங்கும் ....//
ஹா...ஹா...ஹா.....
நல்ல பாடல் தேர்வு!!
விமர்சனங்கள் அருமை
நண்பரே தாங்கள் விரும்பியபடி தொடர்பதிவு போட்டு விட்டேன்.
http://ethuvumnadakkalam.blogspot.com/2010/11/blog-post_26.html
//பாடல்களை பற்றி உங்கள் விமர்சனம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள //
இது என்ன கேள்வி?வழக்கம் போல மொக்கையா தான் இருக்கும். :)
எல்லா பாடல் தேர்வுகளும் சூப்பர்
என்னை அழைக்காததால் வெளி நடப்பு செய்கிறேன்!!
மாலையில் யாரோ என் மனதோடு பேச..எனக்கு பிடிச்ச பாட்டு
@ எஸ் கே
நன்றி தல.. படித்து கமெண்ட் போட்டு விட்டேன்
@ ILLUMINATI
மொக்கைபோட பெரிய திறமை வேண்டும் தல.. போடுங்க படிக்க நாங்க ரெடி...
@ ஆர்.கே.சதீஷ்குமார்
தல அவசரபட்டு வெளிநடப்பு செஞ்சிறாதீங்க... அடுத்த வடை கெடச்சா உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...
எல்லா பாடல் தேர்வுகளும் அருமை
அணைத்து பாடல்களும் நல்லாருக்கு நண்பா
உங்களை தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன்...
http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/11/blog-post_27.html
Super!!!
bfxgfg
sfd
Post a Comment