Followers

Copyright

QRCode

Friday, November 19, 2010

பட்டிக்காடா? பட்டணமா?

தாய் பாசத்திற்க்கு  அடுத்து காசுக்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் நாம் தவற  விட்ட முக்கியமான விஷயம் நம்  சொந்த ஊர் வாழ்க்கைதான் .... நகரங்களில் ஷாப்பிங் மால்களிலும் , தீம் பார்க்குகளிலும் ஆயிரக்கணக்கில் செலவளித்தாலும் கிடைக்காத சந்தோஷம் நம் ஊரு காத்து நம்ம தொட்டவுடனே கிடைச்சிரும்.... இது ட்விட்டர் ஸ்டைலில் நகரவாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசங்களை சொல்ல போகும் பதிவு ... எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது எங்க கிராமம்தான் அதனால எல்லா டிவிட்டுகளும் கிராமத்தை  உய்ர்த்தி பிடிக்கிற மாதிரிதான் எழுதியிருக்கேன் ...


"சுனாமி வந்து மெரினாவில் குவிந்து கிடந்த பிணங்களை வெறும் காட்சி பொருளாகவே பார்த்து சென்றவர்களை பார்த்து விட்டு , இறந்தே பிறந்த பால்காரன்  வீட்டு கன்றுக்குட்டிக்காக ஊரே பரிதாபபட்டதை பார்க்கும் போது மனதில் வேண்டிக்கொண்டேன் நான் எங்கே வாழ்ந்தாலும் என் சாவு இங்குதான் நிகழ வேண்டும் என்று ...."

"காசு கொடுத்து சரவணபவனில் வாங்கிய அல்சரை விரட்டி கொண்டு இருக்கிறேன் அக்கறையாய் அம்மா வைக்கும் கத்திரிக்காய் கூட்டில்"

"லாண்டரிக்கு  காசு  கொடுத்து துணி  துவைக்கும் எனக்கு,  நான் எவ்வளவு சோம்பேறி என்பது புரிந்தது , எழுபது வயதிலும் தன்னுடய துணியை தானே துவைக்கும் கிழவனை கண்மாயில் பார்த்த போது"

"மனித உரிமை என்று வாய்கிழிய பேசுகிறோம் நீச்சல் அடிக்கும் உரிமையை  அம்பது ரூபாய்க்கு ஸ்விம்மிங் pool உரிமையாளரிடம் விற்றுவிட்டு ..."

"திருவிழா நாளில் ஊர் தெருவில் வேட்டியை  திரையாக்கி ஊரே திரண்டு பார்க்கும் ராமராஜன் படத்தில் கிடைக்கும் உற்சாகம் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஐ- நாக்ஸில் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்தால் கூட  கிடைப்பதில்லை"

"டீம் அவுட்டிங்என்றுசனிக்கிழமைகளில் ஏசி பப்புகளில்   ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாரின் சரக்கு குடித்தாலும் அரைகுறையாக கூட கிடைக்காத போதை ஓசியில் நிலா வெளிச்சத்தில் கோயில் நந்தவனத்தில் உள்ளூர் சரக்கு அடிக்கும்போது முழுதாய் கிடைக்கிறது ... " 

"தாவணியில் திரிந்த என் அத்தை பெண்ணின்  கைவிரல் லேசாக என் மேல் பட்ட பொழுது அவள் முகத்தில் காட்டிய வெட்கத்தால்   என் உடலில் பரவிய உஷ்ணத்தில்  புரிந்தது,,, பெண்கள் கம்பிகள் என்றாள் அதில் பாயும் மின்சாரம்  வெட்கம்  , இங்கே நகரத்தில் ஆற்காட்டார்  கொடுக்கும்  மின்சாரத்தை போல பெண்களும் லோ வோல்டேஜ்தான் ,  ...".

"என் ஊரில் மழை நாட்களில் எழுந்த  மண்வாசனையை நுகர்ந்த போதுதான் தெரிந்தது நகரத்தில் பூசப்பட்ட தார்  பூமிக்கு மட்டும் இல்லை நம் நாசிக்கும் சேர்த்துதான் என்பது....     


10 comments:

வினோ said...

உண்மை தாங்க ராஜா... சுகம் தானே?

"ராஜா" said...

நண்பரே நலம் ரொம்ப நாளாச்சி உங்க கமெண்ட் பாத்து

நாகராஜசோழன் MA said...

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் நண்பா. நாம் நகரத்திற்கு வந்தவுடன் நம் ஐம்புலன்களையும் தொலைத்து விடுகிறோம். ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால் கிராமங்களும் மாறி நகரம் போல் ஆகிக் கொண்டிருக்கின்றன.

ILLUMINATI said...

//"என் ஊரில் மழை நாட்களில் எழுந்த மண்வாசனையை நுகர்ந்த போதுதான் தெரிந்தது நகரத்தில் பூசப்பட்ட தார் பூமிக்கு மட்டும் இல்லை நம் நாசிக்கும் சேர்த்துதான் என்பது...."

"காசு கொடுத்து சரவணபவனில் வாங்கிய அல்சரை விரட்டி கொண்டு இருக்கிறேன் அக்கறையாய் அம்மா வைக்கும் கத்திரிக்காய் கூட்டில்"//

அருமை.. :)

ராஜகோபால் said...

திரும்ப கிடைக்காத சொர்க்கம் நம்ம ஊரு நம்ம மக்கா.

எஸ்.கே said...

சொந்த ஊர்னாலே சுகம்தான்!

"ராஜா" said...

//ஒரு சிறிய வருத்தம் என்னவென்றால் கிராமங்களும் மாறி நகரம் போல் ஆகிக் கொண்டிருக்கின்றன

உண்மைதான் நண்பா... இனிவரும் தலைமுறைக்கு இந்த சந்தோசங்களில் பாதி கிடைக்காமலே போயி விடும் என்று நினைக்கிறேன் ...

////"என் ஊரில் மழை நாட்களில் எழுந்த மண்வாசனையை நுகர்ந்த போதுதான் தெரிந்தது நகரத்தில் பூசப்பட்ட தார் பூமிக்கு மட்டும் இல்லை நம் நாசிக்கும் சேர்த்துதான் என்பது...."

"காசு கொடுத்து சரவணபவனில் வாங்கிய அல்சரை விரட்டி கொண்டு இருக்கிறேன் அக்கறையாய் அம்மா வைக்கும் கத்திரிக்காய் கூட்டில்"//

அருமை.. :)


நன்றி நண்பா ...

// திரும்ப கிடைக்காத சொர்க்கம் நம்ம ஊரு நம்ம மக்கா

உண்மைதான் நண்பரே

//சொந்த ஊர்னாலே சுகம்தான்!

இது எல்லாருக்கும் தெரியலேயே தல.. சொந்த ஊர்மேல வெறுப்பா இருக்கிற சில ஆட்களை நான் பார்துள்ளேன்

ஹரிஸ் said...

விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....//

நாங்களும் தான்..

Yoganathan.N said...

உங்களின் ஏக்கம் நன்கு புரிகின்றது. காரணம் இந்த சூழல் மலேசியாவிற்கும் பொருந்தும்.

//"காசு கொடுத்து சரவணபவனில் வாங்கிய அல்சரை விரட்டி கொண்டு இருக்கிறேன் அக்கறையாய் அம்மா வைக்கும் கத்திரிக்காய் கூட்டில்"//
டாப் கிலாஸ். :)

"ராஜா" said...

@ Yoganathan.N

நன்றி தல

LinkWithin

Related Posts with Thumbnails