Followers

Copyright

QRCode

Tuesday, November 16, 2010

தோழன் மப்(பு)டேட்ஸ்

நிறைய பேரு எனக்கு ஏகபட்ட நெருங்கிய தோழிகள் உண்டுண்ணு அவங்கக்கூட பழகுறதையெல்லாம் தோழி அப்டேட்ஸ் அப்படின்னு எழுதி என்ன மாதிரி சின்ன பசங்க மனச எல்லாம் கெடுக்க பாக்குறாங்க... எனக்கு அப்படி தோழிகள் யாரும் இல்லை நான் என்ன பண்ணலாமுன்னு சரக்கு அடிச்சி குப்புற படித்து யோசிச்சப்பதான் இந்த "தோழன் மப்(பு)டேட்ஸ்" எழுதும் ஐடியா வந்தது .... இதனால் இந்த தமிழ் கூறும் பதிவுலகிர்க்கு நான் சொல்லவருவது என்னவென்றால் இனி அடிக்கடி இந்த "தோழன் மப்(பு)டேட்ஸ்" மூலமா நட்புக்கு மரியாதை கொடுக்க போறான் இந்த ராஜா .. நீங்களும் இதற்க்கு பெரிய ஆதரவு கொடுத்து நட்ப மரியாதை படுத்துவீங்கண்ணு இத எழுத எனக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருந்த "சந்தானானந்தா" மேல பாரத்த போட்டு ஆரம்பிக்கிறேன் என்னோட                  "மப்(பு)டேட்ஸ"

அது என்ன தோழன் மப்புடேட்ஸ்... இதர்க்கும் தோழி அப்டெட்ஸ்க்கும் என்ன வித்தியாசம்னு கேக்கிறீங்களா? முதல இத படியுங்க


நீ வந்து போனால் என் வீடு எங்கும் உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம்” # தோழி அப்டேட்ஸ்


நீ வந்து போனால் என் வீடு எங்கும் கல்யாணி பீர் நாத்தம் அடிக்கும் நாளெல்லாம்” # தோழன் மப்(பு)டேட்ஸ் ஸ்டார்ட் மீஸிக் 


ஐந்து பீரை முடித்துவிட்டு ஆறாவது பியரில் ஹாஃப் அடித்து போதையில் இருக்கும் தோழன் தெளிவாக சொன்னான் மச்சான் அவனவன் காதலுக்கு மரியாதை செய்ய  தாஜ்மஹால் கட்டுராணுக , நீ நம்ம நட்ப மரியாத பண்ண தாஜ்மகால் எல்லாம் கட்டவேணாம்டா இந்த பில்ல மட்டும் கட்டு போதும்” # தோழனின் மப்பு நமக்கு ஆப்புசாலையில் கிடக்கும் யாரோ ஒருவன் துப்பிய எச்சிலை பார்க்கும் போது எழும் சின்ன அருவருப்பு கூட எழுவதில்லை மட்டையாகி நண்பன் எடுத்த வாந்தியை சுத்தம் செய்யும் போது” # நட்பு நாத்தம் அறியாதது


உன்னை போல ஒரு நண்பன் இருக்கும்வரை நான் சுரா மட்டும் இல்லடா இன்னும் எத்துணை விஜய் படங்கள் வந்தாலும் பயப்படாம பாப்பேண்டா” # உயிர் காப்பான் தோழன்


அடுத்தவன் பிறந்தநாளில் பாரின் சரக்கு அடுத்து காஸ்ட்லியாக மப்பு ஏற்றி பெரியாரின் சீடனாக, காதலை கைகூட வைக்காத கடவுளை கண்டபடி திட்டும் தோழன் , அவன் பிறந்த நாளில் மட்டும் பெரியாரின் எதிரியாக மாறி கள்ளுகடையில் ஒளிந்து கொள்ளுகிறான்” # கள்ளு குவாட்டர் பத்து ரூபாய் 

தோழன் இல்லாமல் தண்ணி அடிக்கும் நாட்களில் அவனை எப்போதும் ஞாபகபடுத்தி கொண்டே இருக்கும் காலியாகி போன ஊறுகாய் மட்டை” # நீ இருந்தா ஊறுகா செலவு மிச்சம் மச்சி 


"உன்னோடு தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்கும் போதே என் உயிர் போகணும்டா என்றான் தோழன் ... ஏண்டா நண்பா நம்ம நட்பு மேல உனக்கு அவ்வளவு பாசமாடா என்றேன்... செத்து நரகம் போவதை விட சொர்க்கத்தில் இருக்கும் போது சாவது எவ்வளவோ மேல்டா என்றான் தோழன்"


"சிங்கப்பூர் சென்று ரெண்டு மாதம் கழித்து திரும்பிய என்னிடம் எல்லாரும் எனக்கு என்ன வாங்கிட்டு வந்த என்று கேட்டு கொண்டிருக்க , நண்பா ரெண்டு மாசமா வோட்கா இல்லாம நீ எவ்வளவு கஷ்டபட்டிருப்பண்ணு தெரியும் உடனே கெளம்பி வா எல்லாம் ரெடியா இருக்கு பட்டறைய ஆரம்பிப்போம்"- தோழன் # நண்பேன்டா 


                                                                                             (மப்(பு)டேட்ஸ் தொடரும்)

8 comments:

வரதராஜலு .பூ said...

நைஸ்

//ஸ்டார்ட் மீஸிக் //

நல்லாவே ஸ்டார்ட் பண்ணியிருக்கிங்க

"ராஜா" said...

@ வரதராஜலு .பூ

நன்றி நண்பரே என்னுடய புது முயர்ச்சிக்கு கிடைத்த முதல் பாராட்டு உங்களிடம் இருந்துதான் ...

நாகராஜசோழன் MA said...

சூப்பரா இருக்கு அப்பு. சீக்கிரம் அடுத்த பார்ட் எழுது.

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

சரி தான் விஜய் ரசிகர் தோழி அப்டேட்ஸ் அஜித் ரசிகர் தோழன் மப்(பு)டேட்ஸ்" .
சபாஷ் சரியான போட்டி.

philosophy prabhakaran said...

கலக்கியிருக்கீங்க நண்பா... செம கிரியேட்டிவிட்டி... சம்பந்தப்பட்ட "தோழி அப்டேட்ஸ்" பதிவர் படித்துவிட்டாரா....

இளங்கோ said...

நல்லா இருக்குங்க :)

Yoganathan.N said...

அதெப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் பதிவு போட தோணுது... நல்லா இருக்கு. :)

கார்க்கி said...

:))

LinkWithin

Related Posts with Thumbnails