Followers

Copyright

QRCode

Tuesday, June 22, 2010

எங்கள் இளைய தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்





இன்னைக்கு எங்க ஏரியாவே திருவிழா கொண்டாட்டத்துல இருக்கு.. பின்ன எங்க ஏரியாவுல இருக்குற எல்லாருக்கும் செல்ல புள்ள எங்க இளைய தளபதியோட பிறந்தநாள் இன்று... மத்த இடங்களில் எப்படியோ தெரியாது ,எங்க தெருவுல இன்னைக்கு ஒரே அட்டகாசம்தான்... எங்க தெருல இருக்குற எல்லா வீட்டு தாய்மார்களும் இன்னைக்கு தளபதியோட பிறந்த நாளை அவங்க வீட்டு பையனோட பிறந்த நாளை கொண்டாடுற மாதிரி காலையிலேயே இனிப்பு செய்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்... எங்க ஏரியா யூத்துக்கள் எல்லாம் தீபாவளி குஷியில இருக்காங்க ... தெருல குழாய் செட் கட்டி குத்து பாட்டா போட்டு ரணகள படுத்திகிட்டு இருக்கானுக .. தெருவுல குழாய் செட் கட்டி பாட்டு போட்டாளே சண்டைக்கு வர எங்க தெரு ஜோசப் அண்ணன் (தீவிர கிருத்துவர்) இன்னைக்கு தளபதியோட பிறந்த நாளுன்னு தெரிஞ்சவுடனே குழாய் கட்டுற காசுக்கு நானும் பங்கு தருவேன்னு அடம் பிடிச்சி காச கொடுத்திட்டு போறாரு.... இப்படி மதம் கடந்து எல்லார் மனசையும் பிடிச்சிருக்காரு எங்க இளைய தளபதி.. எங்க தெரு கன்னி பொண்ணுங்க எல்லாம் காலையிலேயே தளபதி பேருக்கு எங்க தெரு அம்மன் கோயில்லுல சிற்ப்பு யாகம் நடத்திட்டு வந்துட்டாங்க... அவர மாதிரி ஒரு அழகான வீரமான பையன்தான் அவங்களுக்கு புருசனா வரணுமாம் ...



பின்ன தளபதின்னா சும்மாவா... அவர் எங்கள பொறுத்த வர எங்களோட காவல்காரன் ... சின்ன கொழந்தைங்க அவர் முகத்த பார்த்து மொதல்ல பயந்தாலும் அப்புறம் அவர் பண்ணுற சின்ன சின்ன சேட்டைகளை பார்த்து அவரோட தீவிர ரசிகர்களா ஆகிட்டாங்க... அவர் முகத்த பாத்துட்டாலே அதுகளுக்கு கொண்டாட்டம்தான்... சின்ன சின்ன சேட்ட பண்ணி கொழந்தைகளை குஷிபடுத்துற தளபதி சண்டைன்னு வந்துட்டா அவருதான் எப்பவும் சச்சின்.. நம்பர் ஒண்ணுன்னு சொல்ல வந்தேன்... காதல் விசயத்துல எங்க தளபதி பயங்கர போக்கிரி ... அவருகிட்ட மயங்காத பொண்ணுங்களே இல்ல .... அந்த விசயத்துல அவருக்கு போட்டியா யார் வந்தாலும் கில்லி மாதிரி எல்லாரையும் போட்டு தள்ளிடுவாரு ... எங்க ஏரியா கதாநாயகன் எங்க தளபதிதான், அவருக்கு போட்டியா எத்துனை பேர் வந்தாலும் எங்க ஏரியா மக்களோட சப்போர்ட் எப்பவும் இளைய தளபதிக்குதான்... அவரு முகத்தை ஒரு நாள் பாக்காமல் போயிட்டாலும் எங்க தாய்குலங்களுக்கு தாங்காது .. அவர் முகத்த பார்த்த பின்னாடிதான் நிம்மதியா தூங்கவே போவாங்க... இப்படி சிருசுல இருந்து பெருசு வரை எல்லாருமே அவரோட தீவிர விசிறிகள்தான்...



எங்க தளபதியோட போட்டோவ இங்க போட்டா கண்ணு பட்டுடும்னு எங்க ஏரியா தாய்குலம் எல்லாம் ரொம்ப பீல் பண்ணுனாங்க.. இருந்தாலும் தளபதியோட புகழை பரப்ப வேண்டியது என்னை போன்ற அவரது தீவிர ரசிகர்களின் கடமை அதனால் உங்களுக்காக அவரின் அழகிய புகைப்படம் கீழே...
                                                              























 







எங்ககிட்ட நெறைய பேரு சண்டைக்கு வந்தானுக ஏண்டா இந்த நாய்க்கு இளைய தளபதின்னு பேரு வச்சீங்கன்னு .. அவனுகளுக்கு ஏன் இதுல கோபம்னு தெரியல .. நீங்களே சொல்லுங்க எங்க தெருவ காப்பாத்த நைட் முழுவதும் கண்முழிச்சி கவனமா இருந்து எதிரிகளோட சண்ட போடுற அதுக்கு நாங்க தளபதின்னு பேர் வச்சது தப்பா? தளபதின்னு சொன்னா ஏதோ வயசான பீலிங் வருது . அதோட வயசு வெறும் ஏழுதான் அதான் முன்னால அதோட வயச குறிக்கிற மாதிரி இளையங்கிற வார்த்தைய சேர்த்து இளைய தளபதின்னு கூப்பிடுறோம் ... இதுல வேற எந்த உள்குத்தும் கிடையாது ...



எங்கள் இளைய தளபதிக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...



பி.கு1: இன்னைக்கு வேற யாரோ ஒரு இளைய தளபதிக்கும் பிறந்த நாளாம்.. அதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ...



பி.கு2: என்னை இந்த பதிவு எழுத தூண்டிய பதிவர் கார்க்கியின் இந்த பதிவுக்கு நன்றி .. அதோட இன்ஸ்பிரேசன்ல எழுதுனதுதான் இந்த பதிவு .. யாரவது காண்டாகி இருந்தால் முதலில் அந்த பதிவை சென்று படியுங்கள்....

Friday, June 18, 2010

தலைவிக்கு ஆதரவு தருவோம் வாரீர்....


நம்ம நாட்டு மக்கள் எப்பதான் திருந்த போரானுகளோ? பொண்ணுங்களுக்கும் மனசு இருக்கு , ஆசை இருக்கு அப்படிங்கிரத எப்பதான் புரிஞ்ச்சிக்க போறானுகன்னு தெரியல.. ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு உழைத்து  கொஞ்சம் முன்னேறி வந்துட கூடாது ... இவனுகளுக்கு எங்க எரியும்னு தெரியல , தூக்கிகிட்டு வந்திடுவாணுக ஏதாவது பிரச்சனையை...



இப்ப என்ன பிரச்சனைன்னா நம்ம பாய்ஸ் ஜெனீலியா இருக்கால்ல அவளுக்கு தடை விதிக்க போரானுகலாம்... அத கேட்டதுல இருந்து எனக்கு சோறு தண்ணி எறங்க மாட்டேங்கிது... பின்ன எப்படி எறங்கும் .. ஏழு வருசமா அவளை நெனச்சி ஏங்காத நாளே கிடையாதே... சித்தார்த் அவளை நெனச்சி எகிறி குதிச்சாரோ இல்லையோ , நான் பல தடவ படுக்கையில இருந்து எகிறி குதிச்சி முட்டி எலும்பு தேய அடி வாங்கி இருக்கேன் .. நம்ம தளபதி படத்த ஒரு தடவ பாத்தாலே நமக்கெல்லாம் நாலு நாளைக்கு சோறு எறங்காதுன்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் .. அதையும் மீறி அந்த பாழா போன சச்சின் படத்த இன்னைக்கி வரைக்கும்  வாய்ப்பு கெடைக்கும் போதெல்லாம் பாத்துக்கிட்டுதான் இருக்கேன் .. காரணம் என் ஜெனி குட்டி...

அவ இந்த தமிழ் நாட்டையும் என்னையும் அம்போன்னு விட்டுட்டு , தெலுங்கு படத்துல நடிக்க போனப்ப , நானும் பிறந்ததுல இருந்து பேசுன தாய் மொழி தமிழையும் , தமிழ்நாட்டையும் விட்டுட்டு தெலுங்கு கத்துகிட்டு ஆந்திராவுல போய் செட்டில் ஆகலாமுன்னு தெலுங்கு கத்துக்க ஆரம்பிச்சேன் .. நல்ல வேளை நம்ம ஜெயம் ரவி மறுபடியும் ஜெனிய தமிழ் நாட்டுக்கு கூட்டிட்டு வந்தாப்புல... அதனால தெலுங்கும் , ஆந்திராவும் என்கிட்டே இருந்து தப்பிச்சது .. அதுக்கு நன்றி கடனா நான் அவரோட மொக்க படம் பேராண்மைய மொத நாளே போய் பாத்தேன்...


இப்படி ஜெனிக்காக நான் பட்ட கஷ்டமெல்லாம் வீணா போய்டுமோன்னு கவலையா இருக்கு... நாதாரி பயலுக இனி ஜெனி தமிழ் படங்கள்ல நடிக்க கூடாதுன்னு தடை விதிக்க போரானுகலாம் .. காரணம் அவ இலங்கையில நடந்த பட விழாவுக்கு  போனாளாம் ... ஏம்பா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல... பாவம் அவளே சின்ன பொண்ணு .. எந்த விவரமும் தெரியாம  ஏரோ ப்ளேன்ல பறக்க போறோம்கிற ஆசையில ஓசி டிக்கெட் கொடுத்தவுடனே சரின்னு சொல்லி இருப்பா... அவளுக்கு என்னப்பா தெரியும் உங்க பிரச்சனை எல்லாம் ...  

ஏண்டா ரத்த சரித்திரம்னு ஒரு படம் வரப்போகுது .. அதுல விவேக் ஓபராய் நடிச்சிருக்கான் .. அவனும் நீங்க சொன்ன அந்த விழாவுக்கு போனவன்தான் ... அந்த படத்த தடை செய்யுங்க பாக்கலாம்.. மாட்டீங்களே ...

ஜெனி என்ன சாமியார கரக்ட் பண்ணி குஜாலா இருந்தாப்புலையா? இல்லை கற்புக்கு எதிரா குரல் கொடுத்தாளா? சிங்கப்பூர் கூட்டிட்டு போறோம்னு சொல்லி ஏமாத்தி இலங்கைக்கு கடத்திட்டு போய்டாணுக... இலங்கைன்னு தெரிஞ்சவுடனே அடுத்த பஸ்ஸ புடிச்சி இங்க வந்துட்டாப்புல... அவர ஏன் வம்புக்கு இழுக்குறீங்க? தைரியம் இருந்தா ரஞ்சியவும் குஷ்ஷையும் மிரட்டி பாருங்கடா?



எங்க தலைவியையும் எங்களையும் என்ன விரல் சூப்புற பச்ச கொழந்தைகள்ன்னு நெனச்சிகிட்டு இருக்கீங்களாடா? எங்க தலைவி பின்னாடி ஒரு பெரிய கூட்டமே இருக்கு... எங்க ஜெனி முன்னேற்ற சங்க தலைவர் உங்களை எச்சரிச்சி ஏற்கனவே இங்க அறிக்கை விட்டிருக்காப்புல.. அதையும் மீறி எங்க தலைவி மேல கை வச்சீங்க ... நீங்க எகிருடுவீங்க ... எங்க சங்க தலைவர் குல தொழில் என்னன்னு தெரியும்லப்பு... அதனால வாயையும் அதையும் பொத்திகிட்டு பத்திரமா வீட்டுக்கு போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பு ..

(நம்ம மக்கள் காசுல உடம்ப வளத்து புட்டு நம்ம எதிரி நடத்துற விழாவுக்கு போனவளுக்கு ஏண்டா சப்போர்ட் பண்ணுறன்னு பின்னூட்டம் போடுகிறவர்களுக்கு , திருமாவளவன் மற்றும் கவிஞர் கனிமொழியின் ஆளுயர புகைப்படம் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்)

Thursday, June 17, 2010

சீக்கிரம் வா தல ... நாங்க பாக்கணும் உன் அட்டகாசத்த....



தல இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் பவர் தமிழகம் அறிந்த ஒன்று... ரஜினி படங்களுக்கு அடுத்து திரையிடும் இடமெல்லாம் திருவிழா நடத்திக்காட்டும் ரசிகர் படை... அவர் படம் முதல் காட்சி பார்த்தவர்கள் கண்டிப்பாக எந்த வசனமும் கேட்க முடியாது ... படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களின் கொண்டாட்டம்தான்... 

எந்த விழாவிலும் பங்கேற்க மாட்டார்.. மீறி பங்கேற்றால் அந்த விழா நாயகனை விட இவருக்குதான் எழும் அதிக கரகோஷம்... கலைஞரின் பாராட்டு விழாவே இதற்க்கு மணியான சாட்சி... இன்றும் தெருவில் நடந்து போகும் நான்கு இளைஞரிடம் கேட்டு பாருங்கள் , அதில் மூன்று பேர் தல ரசிகராகத்தான் இருப்பார்கள்...

யார் என்ன இருட்டடிப்பு செய்தாலும் அவர்கள் கோட்டையிலும் அட்டகாசமாய் வெற்றி கொடி நாட்டுவார்.. சன் டிவி தொடர்ந்து பார்பவர்களுக்கு தெரியும் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வரவேற்ப்பு அவரின் பிறந்தநாள் அன்று அவருக்கு இருக்கும் .... அன்று முழுவதும் வரும் தொலைபேசி அழைப்புகள் அவருக்கு வாழ்த்து சொல்லுவதைத்தான் இருக்கும் ... இதைவிட அவரின் குழந்தை பிறந்தநாளுக்கும் அன்று முழுவதும் அவரின் ரசிகர்கள்தான் வாழ்த்து சொல்லி கொண்டு இருப்பார்கள்....

இன்று திரை உலகில் முன்னணியில் இருப்பவர்கள்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றி கொடுத்து அந்த இடத்தை அடைந்து இருப்பார்கள்.. 

ஒரே ஒரு தோல்வி போதும் அவர்கள் கீழே விழ.. , எழுந்திருக்க முடியாமல் வீழ்ந்து விடுவார்கள்... ரசிகர்கள் என்னும் பேஷ்மென்ட் அவர்களுக்கு ரொம்ப வீக்... அந்த விசயத்தில் தல ரொம்ப ஸ்ட்ரோங்... எத்துனை தோல்வி வந்தாலும் இன்றும் சிகரத்தில்தான் அமர்ந்து உள்ளார்...

இதெல்லாம் விட அவரின் நல்ல உள்ளம்... சிலர் வெளி உலகத்திற்கு நல்லவர் போல காட்டி கொண்டு , சொந்த வாழ்கையில் காசுக்காக யாருக்கும் கொடி பிடிக்க தயாராக இருப்பர்... இன்று இருக்கும் பல கதாநாயகர்கள் காசுக்காக குளிர்பான விளம்பரத்தில் நடித்து கொண்டு இருக்கின்றனர்... ஆனால் இவருக்கு பத்து வருடங்களுக்கு முன்னரே பல குளிர்பான கம்பெனிகள்  கேட்பதை விட அதிக காசை கொட்டி குடுக்க தயாராக இருந்தனர்... அப்பொழுதே மறுத்தவர் அவர் .. சொன்ன காரணம் என் ரசிகர்கள் நான் விளம்பரத்தில் சொல்லுகிறேன் என்பதற்காக எவ்வளவு காசு கொடுத்தும் இதை குடிக்க தயாராக இருப்பார்கள் .. அவர்கள் உடல்நலனை கெடுக்க எனக்கு விருப்பம் கிடையாது என்பதே...

நடிப்பு ஒரு கலை அது யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடாது... எனக்கு தெரிந்து மாஸ் படங்கள் கிளாஸ் படங்கள் இரண்டிலும் அசத்தியவர் ரஜினிதான்... ரஜினிக்கு  அடுத்து  மாஸ் படம் என்றாலும் சரி கிளாஸ் படம் என்றாலும் சரி , வித்தியாசங்கள் காட்டி நடிக்க தெரிந்த ஒரே நடிகர் இன்றைய தலைமுறையில் தலைதான்.... 

நடிகர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான அம்சம் , வசீகரிக்கும் முகம்... தமிழ் நட்சத்திரங்களில் இவர் அளவுக்கு அழகான முக அமைப்பு யாருக்கும் கிடையாது... தமிழ் திரை உலகில் பெண்களை கவர்ந்த நாயகர்கள் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒருவர் இருப்பார்.. ஜெமினி , பாக்கியராஜ் , சுதாகர்  என்று வந்து இப்பொழுது விஜயை கடந்து சூர்யா அந்த இடத்தை பிடித்து உள்ளார்.. ஆனால் இவர்கள் எல்லோரும் மாறி கொண்டே இருப்பார்கள் ... என்றென்றும் காதல் மன்னர்களாய் பெண்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த நாயகர்கள் வெகு சிலரே .. எம்.ஜி.ஆர்., ரஜினி , கமல் இந்த வரிசையில் இன்றைய தலைமுறை நடிகர்களில் தல மட்டுமே... (நான் பெண்கள் என்று கூறியிருப்பது அந்தந்த கால கட்டத்தில் இருந்த கல்லூரி மாணவிகளை மட்டுமே ... குடும்ப தலைவிகள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை)

இப்படி எல்லாம் இருந்தும் இன்று ஒரு ரசிகனாக நான் கொஞ்சம் காய்ந்துதான் போய் உள்ளேன்... இன்றைக்குபஞ்ச் டயலாக் பெசுரவனேல்லாம் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே மாஸ் ஹீரோவா வெற்றி கொடி நட்டவர் தல ... இவர் உச்சத்துல இருந்தப்ப , இவருக்கு பின்னாடி ரொம்ப கீழ இருந்தவனெல்லாம் இன்னைக்குஒன்ற டன் வெயிட்டுடான்னு பஞ்ச் பேசி சினிமா ரேசுல இவருக்கு முன்னாடி போய்டேன் அப்படின்னு பேட்டியெல்லாம் குடுக்குறான்... 

தலையோட மாஸ் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுக  . இவனுக பேசுறதெல்லாம் உண்மைதான்கிற மாதிரி தலையும் சினிமாவ அம்போன்னு விட்டுட்டு கார்  ரேஸ் பக்கம் போயிட்டாரு ... ரசிகனா அவரோட சொந்த விருப்பத்த நிறைவேத்த அவர் ரேசுக்கு போனத நான் வரவேற்கிறேன் .. ஆனால் அதுக்கு இது சரியான நேரம் கிடையாது ... உன்னோட மாஸ தமிழ்நாட்டுக்கு காட்ட வேண்டிய நேரம் இது தல..வா தல.. பக்காவான டீம் அமைந்து இருக்கு... .மறுபடியும்  ஒரே ஒரு வாலியோ , தீனாவோ , வரலாறோ கொடு தல ... நாங்க பாத்துகிறோம் மத்தத ... அப்புறம் பாத்துக்கலாம் கார் ரேசெல்லாம்... 

  தல இருக்கும் போது வாலே ஆடக்கூடாது இங்க வாலுள இருக்கிற மயிரெல்லாம் ஆடுது .. வா தல நம்ம ஆட்டத்த ஆரம்பிப்போம்..



Friday, June 11, 2010

என்னை கவர்ந்த பாடல்கள்

இந்த வருடம் வந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த என்னை கவர்ந்த பத்து பாடல்களின் தொகுப்பு.. என்னை பொறுத்த  வரை இந்த வருடம் என்னை போன்ற இசை பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான்.... மனதை வருடி சென்ற மெலடிகள் , தாளம் போட வைக்கும் குத்துக்கள் என்று வகை வகையான பாடல்கள் நிறைய வந்து விட்டது இந்த வருடம்... எனக்கு இசை ஞானம் பெரிதாக கிடையாது... தில்லு முல்லு படத்தில்  ரஜினி கேட்கும்  கேள்வியை பார்த்து விட்டு  ஸ்ரீ பிரியா , சத்திய ப்ரியா , பத்ம ப்ரியா எல்லாம் உண்மையிலே  ராகங்கள்தான்னு நெனச்சிகிட்டு இருந்தேன்...  அவ்ளோ ஞானம் எனக்கு இசையில... இருந்தாலும் இசைக்கு மொழி எல்லாம் கிடையாது , காது மட்டும் இருந்தா போதும் அப்படிங்கிற தைரியத்துல என்னை  இந்த வருடம் திரும்ப திரும்ப கேட்க வைத்த  பாடல்களைத்தான் இந்த பதிவுல எழுத போறேன்....

10. பச்ச மஞ்ச வொயிட் தமிழன் நான் ... (தமிழ்படம் )
இசை : கண்ணன் 

இந்த வருடம் வந்த முதல் குத்து பாட்டு... இந்த வருடத்தோட முதல் மியூசிக்கல் ஹிட் ஆல்பமும் இதுதான்... படத்துல எல்லா பாட்டுகளும் நல்லா இருந்தாலும் இது கொஞ்சம் ஸ்பெஷல்... பாடலின் ஆரம்பத்தில் வரும் கதாநாயக துதி வரிகள், பாடல் முழுவதும் இன்றைய கதாநாயகர்களை கிண்டல் பண்ணி எழுதபட்டிருக்கும் கவிதைகள்.. கடைசியில் வரும் டிரம்ஸ் அடி... என்று புது இசை அமைப்பாளர் கண்ணன் பாடலை கேக்கும் போது ரசிகர்களை ஆட வைத்து விட்டார்.. பாடலை எடுத்த விதம் அதைவிட அருமை... வழக்கமான விஜய் பட அறிமுக பாடலை அப்படியே கிண்டல் அடித்து எடுத்திருப்பார்கள்.. அவரை போலவே காஸ்டியும், நடனம் (குறிப்பாக அவர் ஆடிக்கொண்டு இருக்கும் போது நடன இயக்குனர் ஆட வருவார் , எதுக்கு அதான் நான் இருக்கேன்ல என்று அவரை துரத்தி விடுவார்) என்று பாக்கும் பொழுதெல்லாம் நான் மிகவும் ரசிக்கும் பாடல் இது....  

9. மாலை மயங்கும் நேரம் .. (ஆயிரத்தில் ஒருவன்)
இசை: G.V,பிரகாஷ் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் , யுவன்சங்கர் ராஜாவை விட்டு பிரிந்து G.V.பிரகாஷை பயன்படுத்திய படம்... இந்த ஒரு காரணத்திற்காகவே  நான் பெரிதும் எதிர்பார்த்தேன் .. ஆனால் பெரிய ஏமாற்றம்தான் பாடல்களை கேட்ட பிறகு... அந்த படத்தில் ஆறுதலாக இருந்த ஒரே ஒரு பாடல் மாலை மயங்கும் நேரம் பாடல் மட்டும்தான் .. ஆண்ட்ரியாவின் மயக்கும் குரல் பாடலை கேக்கும் பொழுதெல்லாம் நம்மை கொஞ்சம் மயக்கித்தான் விடும் ..  இந்த பாடலை செல்வராகவன் படத்தில்  எப்படி எடுத்திருப்பார் என்று பார்க்க ஆவலாக இருந்தேன் ... ஆனால் படத்தில் இந்த பாடல் கிடையாது... அதனாலே இந்த பாடல் பலரை சென்று அடையவில்லை .. அநியாயமாக ஒரு நல்ல பாடலை வீணடித்து  விட்டார்கள்... 


8. நான் நடந்தால் அதிரடி .... (சுறா)

இசை: மணி சர்மா 

சில பாடல்கள் கேக்கும்போது நல்லா இருக்காது , ஆனா திரையில் பார்த்த பின்னர் பிடித்து விடும் .. இந்த பாடலும் அந்த வகைதான் ... இந்த பாடல் எனக்கு பிடிக்க காரணம் விஜய்யின் நடனம் மட்டுமே...

7. உன் பேரை சொல்லும் போது .... (அங்காடி தெரு)
இசை: G.V.பிரகாஷ் 

உணர்வுபூர்வமான பாடல்... பாடலை எப்பொழுது கேட்டாலும் நம் மனம் லேசாகி விடும் ... பேருந்து பயணங்களின் போதும் , இரவிலும் எப்பொழுதும் இந்த பாடல் என்னுடைய ஹெட் போனில் ஒலிக்கும் ... பாடலை கேட்டு கொண்டு இருக்கும் பொழுதே சில நேரங்களில் தூங்கி விடுவேன்...

6. என் காதல் சொல்ல நேரம் இல்லை ... ( பையா)
இசை: யுவன் சங்கர் ராஜா 

நிறைய மொக்கை பாடல்களுக்கு பின்னர் யுவன் சங்கர் ராஜா கொடுத்த ஹிட் ஆல்பம்... இந்த ஆல்பத்தில் கேட்டவுடனே எனக்கு பிடித்து போன பாடல் , நான் சந்தோசமான மன நிலையில் இருக்கும் பொழுது விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...

5. நான் போகிறேன் மேலே மேலே ... (நாணயம்)
இசை :  ஜேம்ஸ் வசந்தன் 

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் எஸ். பி.பியும் சித்ராவும் இணைந்து பாடிய பாடல்... காதல் பாடல்களில் நான் இன்னும் சிங்கம்தான் என்று எஸ்.பி.பி. இன்றைய இளைய தலைமுறை பாடகர்களுக்கு நிரூபித்த பாடல்..  பாடலில் எஸ்.பி.பி காட்டிய ஏற்ற இறக்கங்கள் பாடலுக்கு புது பரிணாமத்தை கொடுத்திருக்கும்.. படம் வந்த புதிதில் இந்த பாடல் எனக்கு தெரியாமலே இருந்தது... டீவீகளிலும் இந்த பாடல் ஒளிபரப்பபடுவதில்லை... அப்பொழுது வந்த தீராத விளையாட்டு பிள்ளை என்ற மொக்கை படத்தில் வரும் மொக்கை பாடல்கள்தான் அவர்களின் டிவியில் எப்பொழுதும் ஒளிபரப்பப்படும்.. பின்னர் நண்பர் ஒருவர்தான் எனக்கு இந்த பாடலை அறிமுகபடுத்தினார்.. காதலியுடன் இருக்கும் போது கேட்பதற்கு ஏற்ற பாடல் இது.

4. உசுரே போகுதே ... (ராவணன்)
இசை:  ஏ. ஆர். ரகுமான் 

நான் மிகவும் எதிர்பார்த்த ஆல்பம் இது ... ஆனால் எதிர்பார்த்த அளவு என்னை பாடல்கள் ஈர்க்கவில்லை... கேட்ட வரையில் இந்த பாடல் பரவாயில்லை என்று தோன்றுகிறது.. ரகுமானின் பாடல்கள் எப்பொழுதும் கேட்க கேட்கத்தான் மனசை அள்ளும்.. ஆனால் இந்த படத்தின் பாடல்கள் இவ்வளவு நாள் கேட்ட பின்னர் ஒரு சலிப்பைத்தான் உண்டு பண்ணுகிறது .. பார்க்கலாம் மணிரத்னம் காட்சி அமைப்பில் அசத்துகிறாரா என்று... 

3. மன்னிப்பாயா... (விண்ணை தாண்டி வருவாயா)
இசை: ஏ.ஆர்.ரகுமான் 

ஆஸ்கார் வாங்கிய பின்னர் ரகுமான் இசையில் வந்த முதல் தமிழ் படம் .. கௌதம் மேனனுடன் ரகுமான் கை கோர்த்த படம் என்று எதிர்பார்ப்பை எகிற வைத்த ஆல்பம்... இருவரும் ஏமாற்றவில்லை,  ஏ.ஆர்.ரகுமானின் இசை அமைப்பில் வந்த வித்தியாசமான ஆல்பங்களில் இதுவும் ஒன்று ... எல்லா பாடல்களுமே என்னை கவர்ந்து இருந்தாலும் , ஸ்ரேயா கோஷலின் வசீகரிக்கும் குரலால் இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.. கேட்க கேட்க இன்னமும் பாடலின் சுவை கூடி கொண்டே செல்கிறது எனக்கு... பாடலின் காட்சி அமைப்பும் அருமையாக இருக்கும் ... 

2. அடடா மழைடா... (பையா)
இசை: யுவன் சங்கர் ராஜா

யுவன் இசையில் வந்த துள்ளலான பாடல் இது... முதல் தடவை  பாடல் கேட்ட வுடனே லிங்குசாமி காட்சி அமைப்பில் பட்டையை கிளப்பி இருப்பார் என்று ஆவலாய் இருந்தேன்.. (காதல் டூயெட் எடுப்பதில் லிங்கு கெட்டிக்காரர் ஜீ படத்தில் வரும் டிங் டாங் கோயில் மணி பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட்)... ஆனால் திரையில் பார்க்கும் பொழுது லிங்குவின் மேல் கோபம்தான் வந்தது ... பாடலை அந்த அளவு கேவலமாக எடுத்திருப்பார்... இருந்தாலும் பாடலை கேக்கும் பொழுது கண்டிப்பாய் என்னை அறியாமல் கைகள் தாளம் போட ஆரம்பித்து விடும்... யுவன் இதை போலவே துள்ளல் இசையில் கவனம் செலுத்தலாம் ... நன்றாக வருகிறது அவருக்கு... 

1. இது வரை இல்லாத உணர்விது... (கோவா)
இசை: யுவன் சங்கர் ராஜா 

சில பாடல்களில் ராகம் நன்றாக இருக்கும் , சில பாடல்களில் பாடலில் வரும் இசை நன்றாக இருக்கும் , சில பாடல்களில் பாடகர்களின் குரல் நன்றாக இருக்கும் , சில பாடல்களில் வார்த்தைகள் நன்றாக இருக்கும், சில பாடல்கள் காட்சி அமைப்பில் நம்மை அசத்தி விடும்... ஒரு சில பாடல்களில் மட்டுமே இவை எல்லாமே அருமையாய் பொருந்தி வரும் .. அந்த வகையில் என்னுடைய ரசனையில் எல்லா விதத்திலும் என்னை கவர்ந்த பாடல் இது ... யுவனின் இசை , ஆண்ட்ரியாவின்  குரல் , அறிமுக பாடகர் அஜீஸின் குரல் (இவர் ஏர்டெல் சூப்பர் சிங்கர் இரண்டாம் சீசனின் வெற்றியாளர்) எல்லாமே என்னை கவர்ந்த  விஷயங்கள் இந்த பாடலில் .. காதலர்களுக்கான அருமையான பாடல் இது ...  பாடலை எழுதியவர் கங்கை அமரனாம்!! கண்டிப்பாக என்னால் நம்ப முடியவில்லை , அந்த அளவு காதலை ஆழமாக  வெளிபடுத்தும் வரிகள் அவை... இந்த பாடல் ஆண்களை விட பெண்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது என்று நினைக்கிறேன்... என்னுடைய தோழிகள் பலருடைய பேவரைட் பாடல் இப்பொழுது இதுதான்... என்னுடைய செல் போன் டையலர் டியூன் பாடலாய் இதை வைத்து இருந்த பொழுது பலர் என்னிடம் கூறிய விஷயம் இது...  இன்றும் தினமும் அதிக முறை நான் கேட்கும், பார்க்கும் பாடல் இதுதான்.. 

(இதை தவிர அசலில் வரும்  துஷ்யந்தா பாடல் கேக்கும் பொழுது பிடித்திருந்தது , ஆனால் படத்தில் அந்த பாடல் பாதியாக குறைக்கப்பட்டு விட்டது.. அதனால் பெரிய அளவில் என் மனதில் ஒட்டாமல் போய் விட்டது..)

Monday, June 7, 2010

கவிதை கார்னெர் - I

புதுமை பெண்கள்


பள்ளிக்கு தினமும் சைக்கிளில் அழைத்து சென்ற
பக்கத்து வீட்டு தோழியின் அண்ணன் ;

பள்ளியில் ஆசிரியரின் பாடங்கள் அறுவை ஆகும் போது
சீட்டு அனுப்பி விளையாடிய பள்ளி நண்பன்;

டியூஷன் முடிந்து வீடு செல்லும் இரவுகளில்  ரோட்டோர "ரேமொகளின்"
கிண்டல்களிலிருந்து காப்பாற்ற கூட வரும் பக்கத்து தெரு சிநேகிதன்;

பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு இரவெல்லாம் கண் முழித்து
அலாரம் வைத்து உதவிய ஒருதலை காதலன்;

பொது தேர்வு விடுமுறை நாட்களில் ஊர் சுற்றி காட்டிய
தூரத்து உறவு அத்தை மகன்;

கல்லூரி நாட்களில் பொழுது போகா மாலை  வேளைகளில்
தொலைபேசியில் குறுந்தகவல் அனுப்பி விளையாடிய வெட்டி பசங்க;

இறுதி ஆண்டு நாட்களில் தினமும் பைக்க்கும் வாரம் ஒருமுறை ஊட்டிக்கும்
அழைத்து சென்ற காதலன் ;

இவர்கள் எல்லோரையும் மறைத்து விட்டு தன் கணவனிடம் சொன்னாள்
"நான் காதலிக்கவில்லை.. .. காரணம் ஆண்கள் எல்லாம் அயோக்கியர்கள்";

அவனும் வெகுளியாய் கேட்டு கொண்டான்; பின்னாளில் தானும் அந்த
 லிஸ்டில் சேர்வோம் என்பதை அறியாமலே...


கவிதை போட்டி 

கவிதை போட்டியாம் 
கவிதை வேண்டுமாம் 
ஓவிய போட்டி என்றால் 
உன்னை வரைந்து அனுப்பளாம் 
காவிய போட்டி என்றால் 
நம் காதல் கதை அனுப்பளாம்


கவிதை போட்டிக்கு 
உன் பெயரை அனுப்பலாமா?
வேண்டாம் உன்னை அனுப்புகிறேன் 
போய் கொஞ்சும் உன் குரலில் 
""அச்சச்சோ!"
"ஊஹூம்…"
"
ம்க்கும்!"
"
ப்ச்..ப்ச்.."
"
ஹேய்…"
   என்று சொல் 
பரிசு உனக்குத்தான்...

கவிதையடி நீ

கவிதை என்று

எழுதினால்

என் பேனா

உன் பெயரை

எழுதுகிறது....

எழுத்து பிழை

என்று அழித்தால்
ரப்பரில் ரத்தம்

கொட்டுகிறது ....
எழுத்துக்கும் உயிர்

வருகிறது உன்னால்...


கொல்லும் புன்னகை


              மணிக்கணக்கில் பேசி

முடித்ததும்

கேட்பாய் நான்

போகட்டுமா என்று...

உலகம் அழியும்

கடைசி நொடியை விட

கொடுமையாய் இருக்கும்

எனக்கு அந்த நொடி...



அடுத்து எப்ப

பாக்கலாம் என்ற

கேள்விக்கு பதில் சொல்லாமல்

சென்று விடுவாய் புன்னைகையை

மட்டும் உதிர்த்து விட்டு...

குருதி வடியும் புண்ணில்

பாய்ந்த குண்டு போல்

உன்னை காணும் வரை

அந்த புன்னைகை

கொஞ்சம் கொஞ்சமாய் என்னை


கொன்று கொண்டு இருக்கும்


பண்டைய இந்தியாவும் மெக்கலேவின் குள்ளனரிதனமும்...



பழங்கால இந்தியாவை பற்றிய ஒரு புகைப்பட தொகுப்பு எனக்கு மெயிலில் வந்தது...  அதை அப்படியே இங்கு பதிவிடுகிறேன்...

ஒரு இந்திய மகாராஜாவின் பன்னிரண்டு வயது மகள் அவளே வேட்டையாடிய சிறுத்தையின் மேல் அமர்திருக்கும் புகைப்படம்...


ஒரு இந்திய பிரஜை ஆங்கிலேய அதிகாரியின் கால் நகங்களை சுத்தபடுத்தும் புகைப்படம்...

கொல்கத்தாவையும் காபூலையும் இணைக்கும் கிராண்ட் டிரங் ரூட்.... 1880இல் 

அரசவை நடன பெண்மணிகள் அலங்காரத்துடன்...


இந்தியா இங்கிலாந்து நடுவே இயக்கப்பட்ட இம்பெரல் ஏர்வேய்ஸ்...


மாகாத்மாவை வரவேற்கும் இந்திய தேசிய ராணுவம்... இடம்: ஹரிஜன் காலனி , டெல்லி , 

சுதந்திரத்திற்கு முன்பாக நேரு நடத்திய பிரஸ் மீட்...

ஜின்னாஹ் , முஸ்லிம் கட்சியின் ஊர்வலத்தில்...

பாட்டியாலா மாகாணத்தை இந்தியாவுடன் இணைப்பதற்காக நடந்த பேச்சு வார்த்தையில் சர்தார் படேலும் , பாட்டியாலா  மகாராஜாவும்

காந்தியும் ஜின்னாவும் .


கடைசியாக மெக்கலே ( இப்பொழுது நம் நாட்டில் நடைமுறையில் இருக்கும் கல்வி திட்டத்தை அறிமுகபடுத்தியவர்) நம் பண்டைய கல்வி முறை மற்றும்  நம் இந்திய மக்களை பற்றி பெருமையாக பிரிட்டிஷ் மகாராணிக்கு எழுதிய கடிதம்.. . கூடவே அவரின் குள்ளநரி தனமும் கடிதத்தில் உள்ளது... இந்த கடிதமும் அதில் அவர் கூறி இருக்கும் விசயங்களும் உண்மையாக இருந்தால்???? , நாம் எவ்வளவு பெரிய சூழ்ச்சிக்குள் சிக்கி இருக்கிறோம்? 


மேலே இருக்கும் இந்த புகைப்படம்தான் என்னை இந்த பதிவை போட தூண்டியது... எப்படி இருந்த நம் இந்திய தேசம் இன்று அந்நிய மோகத்தால் சீரழிந்து கிடக்கிறது... பிச்சைகாரர்களே  இல்லாத தேசம் என்று அந்நிய நாட்டுகாரன் அதிசயப்பட்ட நாடு இன்று ஒரு இனமே அடுத்த வேலை சோறு கிடைக்காமல் அல்லாடி கொண்டு இருக்கிறது... சிறந்த கல்விமுறை என்று அடுத்தவனால் புகழப்பட்ட நம் நாட்டில் இன்று ஆங்கிலேயவன் கொண்டு வந்த கல்வி திட்டம்... வெறும் மனப்பாட திறமையை மட்டும் வளர்க்க மீறி போனால் அவர்களுக்கு அடிமையாய் வேலை பார்க்க நமக்கு புகுத்தப்பட்ட கல்வி... அந்நிய மோகத்தால் நாம் இழந்தது நம் பாரம்பரிய அடையாளங்கள் மட்டும் இல்லை நம் தன்மானத்தையும்தான்... யார் கண்டது ஒரு வேலை நாம் நம் சொந்த கல்விமுறையவே இன்றும் தொடர்ந்து இருந்தால் இன்று நாமும் ஒரு வல்லரசு ஆகி இருந்திருக்கலாமோ?

Tuesday, June 1, 2010

மீள்பதிவு - காதல் கவிதைகள்

       அழகியல் 

சேலை கட்டினால் 
அழகு கூடும் என்றேன் 
எனக்கா? என்று ஆசையாய் 
கேட்டாய் நீ ..
சேலைக்கு என்றேன் 
அழகின் உச்சத்தை 
உன் வெட்கத்தில் காட்டி 
விட்டு சென்றாய்...


ஹைக்கூ 

ஆசையாய் 
அணைத்து முத்தமிட்டதும் 
பரவியது உதட்டில் 
ஒரு வெப்பம் 
சிகரெட்...

தொலைபேசி 

உன் பிரிவில் 
துயரம் கொள்வது 
நான் மட்டும் இல்லை..
தினமும் இரவில் 
நீ தரும் முத்தத்தில் 
சூடாகிபோன என் 
தொலைபேசியும்தான்....

     தேவதை 

குடுகுடுப்பைகாரன் 
சொல்லியதை நான் நம்பியதில்லை 
உன் வீட்டின் முன் நின்று 
இங்கே ஒரு தேவதை வாழ்கிறது 
என்று அவன் சொல்லியதை கேட்கும் வரை...


    இரவில் நீ 

பெண்களுக்கு 
வெட்கம்தான் அழகு 
என்று எண்ணி இருந்தேன் 
உன்னோடு நான் தங்கிய 
அந்த இரவில் 
நீ பண்ணிய அடாவடிகளை 
காணும் வரை...


     யுத்தம் 

கொடுப்பவரும் 
வாங்கியவரும் 
சுகம் காணும் 
ஒரே யுத்தம் 
முத்த யுத்தம்....


ஏற்கனவே எழுதிய கவிதைகள்தான் ... திரும்பவும் போட வேண்டும் என்று  தோன்றியது , அதனால் பதிவில் இன்னொரு முறை எழுதியுள்ளேன்...

LinkWithin

Related Posts with Thumbnails