Followers

Copyright

QRCode

Tuesday, June 22, 2010

எங்கள் இளைய தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்னைக்கு எங்க ஏரியாவே திருவிழா கொண்டாட்டத்துல இருக்கு.. பின்ன எங்க ஏரியாவுல இருக்குற எல்லாருக்கும் செல்ல புள்ள எங்க இளைய தளபதியோட பிறந்தநாள் இன்று... மத்த இடங்களில் எப்படியோ தெரியாது ,எங்க தெருவுல இன்னைக்கு ஒரே அட்டகாசம்தான்... எங்க தெருல இருக்குற எல்லா வீட்டு தாய்மார்களும் இன்னைக்கு தளபதியோட பிறந்த நாளை அவங்க வீட்டு பையனோட பிறந்த நாளை கொண்டாடுற மாதிரி காலையிலேயே இனிப்பு செய்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்... எங்க ஏரியா யூத்துக்கள் எல்லாம் தீபாவளி குஷியில இருக்காங்க ... தெருல குழாய் செட் கட்டி குத்து பாட்டா போட்டு ரணகள படுத்திகிட்டு இருக்கானுக .. தெருவுல குழாய் செட் கட்டி பாட்டு போட்டாளே சண்டைக்கு வர எங்க தெரு ஜோசப் அண்ணன் (தீவிர கிருத்துவர்) இன்னைக்கு தளபதியோட பிறந்த நாளுன்னு தெரிஞ்சவுடனே குழாய் கட்டுற காசுக்கு நானும் பங்கு தருவேன்னு அடம் பிடிச்சி காச கொடுத்திட்டு போறாரு.... இப்படி மதம் கடந்து எல்லார் மனசையும் பிடிச்சிருக்காரு எங்க இளைய தளபதி.. எங்க தெரு கன்னி பொண்ணுங்க எல்லாம் காலையிலேயே தளபதி பேருக்கு எங்க தெரு அம்மன் கோயில்லுல சிற்ப்பு யாகம் நடத்திட்டு வந்துட்டாங்க... அவர மாதிரி ஒரு அழகான வீரமான பையன்தான் அவங்களுக்கு புருசனா வரணுமாம் ...பின்ன தளபதின்னா சும்மாவா... அவர் எங்கள பொறுத்த வர எங்களோட காவல்காரன் ... சின்ன கொழந்தைங்க அவர் முகத்த பார்த்து மொதல்ல பயந்தாலும் அப்புறம் அவர் பண்ணுற சின்ன சின்ன சேட்டைகளை பார்த்து அவரோட தீவிர ரசிகர்களா ஆகிட்டாங்க... அவர் முகத்த பாத்துட்டாலே அதுகளுக்கு கொண்டாட்டம்தான்... சின்ன சின்ன சேட்ட பண்ணி கொழந்தைகளை குஷிபடுத்துற தளபதி சண்டைன்னு வந்துட்டா அவருதான் எப்பவும் சச்சின்.. நம்பர் ஒண்ணுன்னு சொல்ல வந்தேன்... காதல் விசயத்துல எங்க தளபதி பயங்கர போக்கிரி ... அவருகிட்ட மயங்காத பொண்ணுங்களே இல்ல .... அந்த விசயத்துல அவருக்கு போட்டியா யார் வந்தாலும் கில்லி மாதிரி எல்லாரையும் போட்டு தள்ளிடுவாரு ... எங்க ஏரியா கதாநாயகன் எங்க தளபதிதான், அவருக்கு போட்டியா எத்துனை பேர் வந்தாலும் எங்க ஏரியா மக்களோட சப்போர்ட் எப்பவும் இளைய தளபதிக்குதான்... அவரு முகத்தை ஒரு நாள் பாக்காமல் போயிட்டாலும் எங்க தாய்குலங்களுக்கு தாங்காது .. அவர் முகத்த பார்த்த பின்னாடிதான் நிம்மதியா தூங்கவே போவாங்க... இப்படி சிருசுல இருந்து பெருசு வரை எல்லாருமே அவரோட தீவிர விசிறிகள்தான்...எங்க தளபதியோட போட்டோவ இங்க போட்டா கண்ணு பட்டுடும்னு எங்க ஏரியா தாய்குலம் எல்லாம் ரொம்ப பீல் பண்ணுனாங்க.. இருந்தாலும் தளபதியோட புகழை பரப்ப வேண்டியது என்னை போன்ற அவரது தீவிர ரசிகர்களின் கடமை அதனால் உங்களுக்காக அவரின் அழகிய புகைப்படம் கீழே...
                                                               எங்ககிட்ட நெறைய பேரு சண்டைக்கு வந்தானுக ஏண்டா இந்த நாய்க்கு இளைய தளபதின்னு பேரு வச்சீங்கன்னு .. அவனுகளுக்கு ஏன் இதுல கோபம்னு தெரியல .. நீங்களே சொல்லுங்க எங்க தெருவ காப்பாத்த நைட் முழுவதும் கண்முழிச்சி கவனமா இருந்து எதிரிகளோட சண்ட போடுற அதுக்கு நாங்க தளபதின்னு பேர் வச்சது தப்பா? தளபதின்னு சொன்னா ஏதோ வயசான பீலிங் வருது . அதோட வயசு வெறும் ஏழுதான் அதான் முன்னால அதோட வயச குறிக்கிற மாதிரி இளையங்கிற வார்த்தைய சேர்த்து இளைய தளபதின்னு கூப்பிடுறோம் ... இதுல வேற எந்த உள்குத்தும் கிடையாது ...எங்கள் இளைய தளபதிக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...பி.கு1: இன்னைக்கு வேற யாரோ ஒரு இளைய தளபதிக்கும் பிறந்த நாளாம்.. அதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ...பி.கு2: என்னை இந்த பதிவு எழுத தூண்டிய பதிவர் கார்க்கியின் இந்த பதிவுக்கு நன்றி .. அதோட இன்ஸ்பிரேசன்ல எழுதுனதுதான் இந்த பதிவு .. யாரவது காண்டாகி இருந்தால் முதலில் அந்த பதிவை சென்று படியுங்கள்....

15 comments:

வரதராஜலு .பூ said...

:)))))))))))))))

வினோத்கெளதம் said...

தல நமக்கு இது நல்லா இருக்கா எனக்கு இதுல உடன்பாடே இல்ல.. :(

மங்குனி அமைச்சர் said...

ரைட்டு , ஒரு முடிவோட தான் இருக்கிக , நடத்துங்க நடத்துங்க

அத்திரி said...

இதை காமெடியா எடுக்கவா இல்ல சீரியஸா எடுக்கவா......

ஏன் இந்த கொலைவெறி

Bala said...

எனக்கு ஒரு சந்தேகம்.
இது ஆண் நாயா? பெண் நாயா?

ILLUMINATI said...

//இது ஆண் நாயா? பெண் நாயா? //

ஹாஹா...
எல்லோரும் இந்தப் பக்கம் ஒரு முடிவோட தான்யா இருக்கீங்க.நீரு வாருவீருன்னு எதிர்பார்த்தேன்.ஆனா,இப்படி நாரடிப்பீருன்னு எதிர்பார்க்கலை. :)
ஓவர் குசும்புயா உனக்கு.

Yoganathan.N said...

இதில் எனக்கு உடன்பாடு இல்லாயென்றாலும், சிரிக்காமல் இருக்க முடியவில்லை. :)

உங்க ஏரியா இளைய தளபதிக்கு கேக் வெட்டி பர்த்டே கொண்டாடுனீங்களா இல்லையா?

கார்க்கி said...

//க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை கவுதம் மேனன் இயக்க அஜீத் நடிப்பதாக இருந்தது. அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் கவுதமிடம் அஜீத் கதை கேட்கும் போது அவர் சொல்லவில்லை. சரி போகட்டும் என்று ரேசுக்கு கிளம்பிவிட்டார் தல. வரும், ஆனா வராது ரேஞ்சிலேயே பட சம்பந்தப்பட்ட வேலைகளும் ஸ்லோவாக நடந்தேற, ஒரு கட்டத்தில் இந்த படத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டது கவுதமுக்கு. அஜீத் படத்தை எப்போ ஆரம்பிக்கிறீங்க என்ற கேள்வியை கவுதமிடம் கேட்டபோது, அதையேன் எங்கிட்ட கேட்கிறீங்க? போய் அஜீத்தை கேளுங்க என்றார் எள்ளும் கொள்ளும் வெடிக்க. வேறொன்றுமில்லை, இவர் கதை சொல்ல தயாரானபோது அதை கேட்க தயாராக இல்லையாம் அஜீத்/

சைடு பார எடுக்க வேண்டியிருக்கும் போலிருக்கே தல...எனிவே ஆல் தி பெஸ்ட்...

அப்புறம் நாய் ஆணா பெண்ணான்னு ஒரு டவுட்டாமே? “வரலாறு” தெரியாம இருக்களாமோ :))))

"ராஜா" said...

@ வரதராஜலு .பூ

பயங்கரமா சிரிக்கிறீங்களே... அம்புட்டு "பிரியமா" அவர் மேல

@வினோத்கெளதம்
தல சும்மா ஒரு உள்ளலாயிக்குதான்.... பதிவுலகில் பாதிக்கும் மேல் தல ரசிகர்கள்தான் ...இருந்தும் ஏனோ எல்லாரும் அமைதியாக உள்ளனர் .. நானாவது வெளிப்படையாக தலைக்கு ஆதரவாக பதிவு போடலாமே என்றுதான் ...


நன்றி அமைச்சரே ... எல்லாம் தங்களிடம் கற்ற ஞானம்தான் ....

@அத்திரி
நீங்க என்னவேனா பண்ணலாமா? நாங்க பண்ணுனா கொலைவெறியா? நாங்க அதை நகைசுவையாக எடுத்து கொண்டதை போல நீங்களும் இதை எடுத்துகோங்க

@ Bala

தெரியலயேப்பா ... தெரியலயேஏஏஏஏ...@ ILLUMINATI

ஹீ ஹீ ... நான் யாரையும் நாரடிக்கலீங்க...

@Yoganathan.N

அவருக்கு கட் அவுட் வச்சி பாலாபிசெகமே பண்ணுனோம் ...

@கார்க்கி

மறுபடியும் ஆரம்பிச்சிருச்சா இந்த வதந்தி ... சரி விடுங்க சகா தலைக்கு திருஷ்டி பொட்டு வேணாமா?

வரலாற ஒரு நிமிஷம் திரும்பி பாருங்க சகா ... ... ஒரே சாட்... ரெட்டை பலன் ... (புரியும்னு நெனைக்கிறேன்...)

கார்க்கி said...

//வரலாற ஒரு நிமிஷம் திரும்பி பாருங்க சகா ... ... ஒரே சாட்... ரெட்டை பலன் ... (புரியும்னு நெனைக்கிறேன்./

அய்யய்யோ.. திர்ம்ப பார்க்கிற அளவுக்கு என மன தைர்யம் இல்லைங்கண்ணா..

என்ன சாட்ன்னா?புர்யலையே

அப்புறம், இன்னொன்னு, நம்ம அக்ரிமெண்ட்ட மீறி பதிவுக்கு சம்பந்தமே இல்லாம கமெண்ட் போட ஆரம்பிச்சது நீங்கதான்னு நினைவு படுத்த விரும்புகிறேன் :))))

Yoganathan.N said...

//சைடு பார எடுக்க வேண்டியிருக்கும் போலிருக்கே தல...//

என்ன சொல்ல வரார்???

"ராஜா" said...

நான் "அவரு" படத்தையா பாக்க சொன்னேன் ... தைரியம் இல்லைன்னு எஸ்கேப் ஆக ... இத பாக்க ரசனை இருந்தா போதும் சகா...

//என்ன சாட்ன்னா?புர்யலையே

போங்க சகா ...அத இங்க விளக்கமா சொல்ல முடியாது ... பலான சீடி பாத்து தெரிஞ்சிக்கோங்க....

//நம்ம அக்ரிமெண்ட்ட மீறி பதிவுக்கு சம்பந்தமே இல்லாம கமெண்ட் போட ஆரம்பிச்சது நீங்கதான்னு நினைவு படுத்த விரும்புகிறேன்

நான் எந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கமெண் போட்டேன் .. அப்படி போட்டிருந்தால் அந்த பதிவில் நீங்கள் நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ எங்கள் தலையை பற்றி ஏதேனும் எழுதி இருப்பீர்கள் ...

நான் இந்த பதிவுகூட உங்கள் தல பிறந்தநாள் வாழ்த்து பதிவை பார்த்துதான் போட்டேன் .. ஆனால் நீங்கள் அந்த பதிவு சென்ற வருடம் எழுதி இருக்கிறீர்கள் என்று எனக்கு அதன் பின்னர்தான் தெரியும் ... நான் நம் ஆக்ரீமெண்டை மதித்ததால்தான் இந்த மாதிரி பதிவு எல்லாம் எழுதினேன்... முடிந்தால் சென்று பாருங்கள்... http://apkraja.blogspot.com/2010/05/blog-post_29.html

"ராஜா" said...

//என்ன சொல்ல வரார்???

படம் டிராப் ஆக போகுதுன்னு சொல்லுறார் தல ...

கார்க்கி said...

இளைய தள்பதி பதிவுல எங்கேயாவது தலயை பத்தி எழுதி இருக்கேனா????அதைத்தான் சொல்றேன் :)

"ராஜா" said...

சரி சகா ... நானும் தலயின் பதிவில் தளபதியை பற்றி எழுதுவதில்லை ...

LinkWithin

Related Posts with Thumbnails