நண்பர் பாலா நேற்று ஒரு பதிவு எழுதி இருந்தார் ஆணாதிக்கம் , முதலாளித்துவம் , பார்பனீயம் , கடவுள நம்பிக்கை பற்றி ... அந்த பதிவை நன்றாக எந்த உள்நோக்கமும் இல்லாமல் படித்து பார்த்தால் ஒன்று தெளிவாக புரியும் , அவர் அதில் எதற்கும் ஆதரவாகவோ , எதிராகவோ எந்த வார்த்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டார் ... ஆணாதிக்கம் பற்றி அவர் எழுதியிருப்பதன் முக்கிய சாராம்சம் என்ன வென்றால் ஒரு பெண் ஏதேனும் தவறு செய்யும் பொழுது நாம் அவளை தட்டி கேட்டால் உடனே ஆணாதிக்க வெறியன் என்று சொல்லுகிறார்களே அது ஏன் ? என்ற கேள்விதான் ... அதற்க்கு உடனே தாங்களை பெண்சமூக காவலர்கள் என்று காட்டி கொள்ள வேண்டி சிலர் பதில் எழுதியிருக்கிறார்கள் ....
அந்த பதில்கள் படிக்க
http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post_4633.html
http://pulavanpulikesi.blogspot.com/2010/07/blog-post.html
அவர்கள் பாலாவின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு பதில் , நீ எப்படி பெண்களை தம் அடிக்க கூடாது , தண்ணி அடிக்க கூடாது என்று சொல்லலாம் நீ ஒரு ஆணாதிக்க வெறியன் என்று அவரை திட்டி தீர்த்து விட்டார்கள் ... நண்பர்களே நீங்கள் ஒரு முறை அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு பதில் சொல்லுங்கள் .... அவர் சொல்லியதில் என்ன தவறு உள்ளது .... ஆண் பெண் இருவருமே சமம்தான் ... ஏன் ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேல்.. பழைய ரஜினி பட வசனம் போல சொல்ல வேண்டும் என்றால் ஆண்கள் செய்யும் எல்லா வேலையும் பெண்களாலும் செய்ய முடியும் ... ஆனால் ஒரு குழைந்தையை பத்து மாதம் சுமந்து பெறுகிற பொறுமை அவர்களால் மட்டுமே முடியும் ... ஏதோ ஒரு காலத்தில் பெண்கள் ஆண்களால் அடிமைகளாக நடத்த பட்டார்கள் .. இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது .. ஆனால் ஒரு ஆண் தவறு செய்யும் பொழுது பெண் தட்டி கேட்டால் அவளை வீரமான பொண்ணுப்பா என்று புகழ்கிறோம் .. ஆனால் ஒரு பெண் தவறு செய்யும் பொழுது ஒரு ஆண் தட்டி கேட்டால் அவனை ஆணாதிக்க வெறியன் என்று திட்டுகிறோமே ? ஏன் ....
பார்பனீயம் பற்றி அவர் கேட்டதில் என்ன தவறு உள்ளது ... ஏன் ஒரு விவாதம் நடக்கும் பொழுது பிராமணன் ஒருவர் உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் பார்பனியன் அதான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று அவர்களின் கருத்துகளை எதிர் கொள்ள முடியாமல் அவர்களை ஜாதியின் பெயரில் அடிக்கிறீர்களே அது ஏன் என்றுதான் கேட்டார்...
ஒரு சில பிராமிணர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காய் ஒட்டு மொத்த பிராமினர்களையும் பார்ப்பனீய வெறியர்கள் என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள் என்றுதானே கேட்டார்... உடனே தலித் மக்களை காக்க , அவர்களின் உரிமைகளை பெற்று தர தன எழுத்துகளின் மூலம் அவர்களின் கஷ்டங்களை தீர்க்க பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் சிலர் அதற்க்கு தரும் பதில் பிராமிணர்கள் எல்லாருமே அப்படித்தானாம்... எனக்கு ஒரு சந்தேகம் இவர்கள் பிரமினர்களை பார்த்திருப்பார்களா இல்லை எல்லாரும் சொல்லுவதை வைத்து பிராமின் என்றால் இப்படிதான் இருப்பான் என்று அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு எழுதுகிறார்களா? நான் இப்படி எழுதினால் உடனே நானும் ஒரு பிராமின் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக உள்ளது .... நீங்கள்தான் இன்னமும் பார்பனீயம் , சாதி வெறி என்று கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறீர்கள் ,மக்கள் இப்பொழுது எல்லாம் கொஞ்சம் முன்னேறி வந்து விட்டார்கள் ... தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நீங்கள் கூறும் மக்களின் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் எத்தனையோ பார்ப்பனின் என்று நீங்கள் சொல்லும் மக்களை நான் பார்த்திருக்கிறேன் .... ஒரு வேலை மக்கள் திருந்தி வருவது உங்களுக்கு பிடிக்க வில்லையோ? அதான் இப்படி எல்லாம் எழுதி அதை ஞாபகபடுத்தி கொண்டு இருக்கிறீர்களோ?
கடவுள் நம்பிக்கையை பற்றி அவர் கூறியதில் என்ன தவறு உள்ளது? உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை , இது மடத்தனம் என்று நினைத்தால் அதை மக்களிடம் சொல்லுவதற்கு ஏன் கடவுள்களை வம்புக்கு இழுக்க வேண்டும் ... யார் மனதையும் புண்படுத்தாமல் எழுத வேண்டியதுதானே... ஒரு பதிவில் ஒரு நண்பர் இப்படி கமெண்ட் எழுதி இருந்தார் "பரிசுத்த ஆவி... பரிசுத்த ஆவி என்று சொல்லுகிறார்களே அந்த ஆவியில இட்லி வேகுமா? " என்று ... இதுதான் உங்கள் கடவுள் எதிர்ப்பு பிரசாரத்தின் இன்றைய நிலைமை ... இங்கே கடவுள் எதிர்ப்பு என்பதை விட அந்த கடவுளை பின்பற்றுபவனை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி உள்ளது ... இதில் மக்களை திருத்த வேண்டும் என்ற எண்ணம் எங்கே இருக்கிறது?
முதலாளித்துவம் என்றவுடனே உலகத்தில் இருக்கும் எல்லா முதலாளிகளும் கெட்டவர்களே என்ற எண்ணத்தில் ஏன் எழுதுகிறீர்கள்? சரி அப்படி எல்லா முதலாளிகளுமே கெட்டவன் என்றால் ஏன் நீங்களும் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் ,இவர் உழைபதர்க்குதான் காசு தருகிரானாம் அதுவும் உழைப்பிற்கு குறைவான காசுதான் தருகிறானாம்... அதனால் எல்லா முதலாளிகளும் கெட்டவனாம்... அப்படி என்றால் எதுக்கு அங்க இருக்கீங்க ... உங்க ஊருக்கே திரும்பி போய் விவசாயம் இல்ல வேற ஏதாவது சொந்த தொழில் பாக்க வேண்டியதுதான... முதலாளிகளின் மூலம் வாழ்க்கையையும் அனுபவித்து கொண்டு அவர்களுக்கு எதிராக ஏன் எழுத வேண்டும்? ... நான் எல்லா முதலாளிகளும் நல்லவன் என்று சொல்ல வில்லை .... அதே போல் எல்லா முதலாளிகளும் கெட்டவனும் இல்லை ... தவறு செய்தால் அவனை மட்டும் குற்றம் சொல்லுங்கள் .. அவனை போல முதலாளியாக இல்லை பிராமினாக இருக்கும் எல்லாரையும் ஏன் திட்டுகிறீர்கள்?
நண்பர் பாலாவின் எந்த கேள்விகளுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து அவரை ஆணாதிக்க வெறியன் , பார்பனிய ஆதரவாளன் , முதலாளிகளின் கைப்பாவை என்று வழக்கம் போல மழுப்பி விட்டார்கள் ... இதற்க்கு பேர்தான் விவாதமா? அவர் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியான பதில் இல்லை .... எப்பொழுதும் போல திசை திருப்பும் வேலையை செய்து விட்டார்கள் ....
4 comments:
boss ivangaluku pathil post elutharathu waste of time. vidunga
please hyperlink bala's
/******* "பரிசுத்த ஆவி... பரிசுத்த ஆவி என்று சொல்லுகிறார்களே அந்த ஆவியில இட்லி வேகுமா? " என்று ... இதுதான் உங்கள் கடவுள் எதிர்ப்பு பிரசாரத்தின் இன்றைய நிலைமை ... இங்கே கடவுள் எதிர்ப்பு என்பதை விட அந்த கடவுளை பின்பற்றுபவனை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி உள்ளது ... இதில் மக்களை திருத்த வேண்டும் என்ற எண்ணம் எங்கே இருக்கிறது? ********/
நண்பரே அருமையான உதாரணம் ....
தல நான் உங்கள் பக்கம் .....
பாலா அன்பருக்கு உதவிக்கரம் நீட்டியதற்கு நன்றி
@ LK
இவங்களுக்கு பதில் சொல்லவேண்டும் என்று இந்த பதிவு எழுதவில்லை .... நண்பர் பாலாவுக்கு support பண்ணவே இந்த பதிவு
@ Jo Amalan Rayen Fernando
www.balapakkangal.blogspot.com
@ thiru
நன்றி தல .... கடுபேத்துறாங்க my lord
Post a Comment