Followers

Copyright

QRCode

Monday, July 5, 2010

என்னவள் என்னும் குட்டி பிசாசு....

இந்த உலகத்துல இருக்கிற எல்லா காதலிகளும் இப்படிதானான்னு தெரியல ... ஆனால் என்னவள் என்ன படுத்துற கஷ்டம் பத்தி எழுதனும்னா இந்த ப்ளாக் பத்தாது ... கஷ்டத்த அடுத்தவங்ககிட்ட சொன்னா பாதியா குறையுமாமே .. அதனால இத படிக்கிற எல்லாரையும் கஷ்டபடுத்தலாமேன்னு முடிவு பண்ணிட்டேன்

(நடு நடுவுல வர சிகப்பு கலர் கமெண்ட் எல்லாம் நம்ம மைன்ட்  வாயிஸ் , கவுண்டர் மாதிரி நம்மள அப்பப்ப கால வாரும்)

கஷ்டம் நம்பர் 1 :

airtel  எப்ப புல் டால்க் டைம் ஆபர் போட்டாலும் என்னோட பர்ஸ் empty தான் ... காலையில ஒரு மெசேஜ் வரும் ... " செல்லம் என்ன திட்டக்கூடாது, இன்னைக்கு 777 ரூபாய்க்கு புல் டால்க் டைம் ஆபர் போட்டிருக்கானுக .. ப்ளீஸ் செல்லம் போட்டு விடுடா"... அப்படின்னு ... போன வாரம்தாண்டி 301 ரூபாய்க்கு போட்டு விட்டேன் அதுக்குள்ளே காலி பண்ணிடயான்னு கேட்டா அங்க இருந்து பதில் வரும்  "இருபத்திநாலு மணிநேரமும் போனுல நீயும் நானும் ஓசியாவே காசு இல்லாம பேச நீ ஒன்னும் சஞ்சய் ராமசாமியும்  இல்ல நான் அம்பானி பொண்ணும் இல்ல...   " . பேச மட்டும் தெரியுது மூடிட்டு டாப் அப் பண்ணுடான்னு நேரடியா சொல்லாம கலைஞர் மாதிரியே சுத்தி வளச்சி சொல்லுவா ... அன்னைக்கி 777  ரூபா அம்பேல் ...

( டேய் வெக்கம் இல்லாதவனே ... இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்லி அத ப்ளோக்ல வேற எழுதுற ... டேய் உண்மைய சொல்லுடா இதுவரைக்கும் உங்க அப்பா இல்ல அம்மா இல்ல தம்பிக்கு ஒரு பத்து ரூபாய்க்கு டாப் அப் பண்ணிருப்பயாடா? .. பிகர்ணா மட்டும் காச அள்ளி வீசுறையே! ) 

கஷ்டம் நம்பர் 2 :

அவளுக்கு பைக்ல எங்கூட ஊர் சுத்துரதுன்னா ரொம்ப பிடிக்கும் ... ஆனா என்னோட  பைக்க மட்டும் பிடிக்காது ... ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பைக் வேணும் அவளுக்கு.. பொல்லாதவன் படம் பாத்துட்டு பல்சர்ல போகணும்னு சொன்னா .. நானும் ஓசி பைக்குக்கு நாயா அலைஞ்சேன் .... நம்ம பசங்க எல்லாம் ரொம்ப உசாரு .. பைக்க மட்டும் யாருக்கும் ஓசியா தரவே மாட்டானுக ... அட்லீஸ்ட் ஒரு குவாட்டேரும் கோழி பிரியாணியும் வாங்கி தரனும்  பைக் கரக்ட் பண்ண... அதோட டேங் புல் பண்ணனும் ... இப்படி கஷ்டப்பட்டு பணத்த வாரி எறச்சி வண்டிய கரக்ட் பண்ணி கொண்டு போனா ,டேய் என் பிரெண்ட் ஒருத்தி சொன்னா ஜாலியா லவ்வேரோட பைக்ல போக unicorn தான் பெஸ்ட்டாம் , அதுலதான் பின் சீட் முன் சீட்டவிட உயரமா இருக்குமாம் ...அந்த வண்டிலேயே போகலாம்டா அப்படின்னு குண்ட தூக்கி போடுவா ... unicorn owner  கொஞ்சம் காஸ்ட்லி பார்ட்டி .. five ஸ்டார் ஹோடேல்லுல பாரின் சரக்க அபேஸ் பண்ணிட்டான்... நான் பைக் ஓசி வாங்க செலவு பண்ணுன காச சேத்து வச்சிருந்தேன்னா ,என்னோட இந்த துறுபிடிச்ச CT100 வண்டிய தூக்கி போட்டுட்டு ஒரு புது காரே வாங்கியிருந்திருப்பேன்...

(மவனே பைக்கோட போச்சேன்னு சந்தோசபடு ... நீ மட்டும் கார் வாங்கி இருந்தேன்னு வையி ... கண்பார்ம்மா நீ பிச்சைகாரன் ஆகிருப்ப .. பின்ன பைக் ஓசி வாங்கவே இவ்வளவு செலவுனா .. கார் ஓசி வாங்கணும்னா? )

கஷ்டம் நம்பர் 3  :

அவளும் தல ரசிகையா இருக்கிறதுதான் எனக்கு பெரிய கஷ்டமே... தல படத்த  முதல் நாள் நாலு ஷோவுக்கும் என் நண்பர்களோட ஆட்டம் போட்டுகிட்டே பாக்குறதுல இருக்கிற சந்தோசமே தனி ... இப்ப எல்லாம் தல படம் ரிலீஸ் ஆகுற நாள் கரக்டா போன்  பண்ணிடுவா... டேய் இன்னைக்கு தல படம் ரிலீஸ் ஆகுதுல்ல... எனக்கும் சேத்து டிக்கெட் எடுத்துவை... நான் சரியா பத்து மணிக்கு தியேட்டர் வந்திடுவேன் .. லேட்  பண்ணிடாம வந்திடுன்னு ... பிகரோட படம் பாக்குறதும் சுகமான அனுபவம்தான் ... ஆனா கீழ என் நண்பர்கள் எல்லாம் பயங்கர குஷியா விசில் அடிச்சிகிட்டு , ஆட்டம் போட்டுக்கிட்டு படம் பாத்துகிட்டு இருக்கிறப்ப நான் பால்கனியில அவளோட அமைதியா விசில்கூட அடிக்க முடியாம தலயோட படத்த முதல் நாள்  பாக்குற கொடுமை இருக்கே .. அது தல ரசிகர்களுக்கு மட்டும்தான் பாஸ் புரியும் ...

( டேய் அதான் தளபதி படத்துக்கு க்ரூப்பா போய் கும்மி அடிக்கிறீங்களே அது போதாதா?)

கஷ்டம் நம்பர் 4 :

 அவளுக்கு சாக்லேட்னா   ரொம்ப பிடிக்கும் ... திடீர்ன்னு கால் பண்ணி டேய் சாக்லேட் சாப்பிடனும் போல இருக்குடா வாங்கி குடுடான்னு சொல்லுவா... அவ்ளோதான செல்லம் இரு பத்தே நிமிஷம் உனக்கு பிடிச்ச கேர்பரிஸ் டைரி மில்க் வாங்கிட்டு ஓடி வரேன் அப்படின்னு சொன்னா " எரும மாடு .. கேர்பரிஸ் டைரி மில்க் வாங்கணும்னா நான் வாங்கிகிட மாட்டேன் .. எனக்கு பாரின் சாக்லேட் வேணும் .. நேத்து என் பிரெண்ட் தந்தா... சூப்பெரா இருந்தது .. எனக்கு இப்ப சாப்பிடனும் போல இருக்கு வாங்கி குடு"ன்னு கொழந்ததனமா கேப்பா... எங்க ஊருல five star சாக்லேட்டே சூப்பர் ஸ்டார் மாதிரி எப்பவாதுதான் வரும் ... இதுல பாரின் சாக்லேட் எங்க போய் வாங்குறது ..எப்படியாவதுஅலைஞ்சி திரிஞ்சி நண்பனோட பாரின் ரிட்டேர்ன் சொந்த காரனை பிடிச்சி அவன் பண்ணுற அளப்பரையஎல்லாம் 
சகிச்சிகிட்டு அவன்கிட்ட ஒருமணி நேரம் மொக்க போட்டு அவன் சொல்லுற பாரின் கதைய எல்லாம் பொறுமையா கேட்டுகிட்டு ஒரு வழியா அவன தாஜா பண்ணி மேட்டர வாங்கிக்கிட்டு அவள தேடி போய் கொடுத்தா " எரும... எரும... காலையில கேட்டா சாயந்திரம்  வந்து கொடுக்கிற ,    நான் சாயங்காலத்துக்கு அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டேன்னு தெரியாதா உனக்கு? என்ன குண்டாக்கி பாக்கனும்னு அவ்ளோ ஆசையா உனக்கு .. நீயே வச்சிக்கோ உன் சாக்லேட்ட" அப்படின்னு அசால்ட்டா சொல்லிட்டு என் முகத்த கூட பாக்காம " நான் போட்டிருக்கிற மெகந்தி எப்படி இருக்குன்னு சொல்லு" அப்படின்னு அவ கைய நீட்டுவா... அந்த மேகந்தியில இருக்கிற பெயர் தெரியாத உருவங்கள் எல்லாம் என்ன பாத்து வால் தட்டி சிரிக்கும் ...

( டேய் உன் மனச தொட்டு சொல்லு இது வரைக்கும் உன் தங்கச்சிக்கு ஒரு அம்பது பைசா ஆரஞ்சி மிட்டாயாவது வாங்கி தந்திருப்ப  ? மவனே கண்டிப்பா உனக்கு ஒருநாள் ஆப்பு கன்போர்ம்முடி  )

என்னதான் அவ என்ன இப்படி சின்ன சின்ன விசயத்துல கஷ்ட்படுத்தினாலும் ... அவ மேல எனக்கு கோபமே வர மாட்டேங்கிது பாஸ் ... பின்ன என்ன பாஸ் வாழ்கையில  கஷ்டத்தகூட சகிச்சிகிட்டு வாழ்ந்திடலாம் .. ஆனா சந்தோசமே இல்லாம வாழ முடியுமா?  நம்ம மொத்த சந்தோசமே அவதான பாஸ்....

10 comments:

naan kadavul said...

ஆஹா ஆஹா கலக்கல்

rk guru said...

இப்படிப்பா இவ்வளவு பொறுமையா எழுதுறிங்க...நானும் try பண்றேன் முடியல....

Yoganathan.N said...

//என்னதான் அவ என்ன இப்படி சின்ன சின்ன விசயத்துல கஷ்ட்படுத்தினாலும் ... அவ மேல எனக்கு கோபமே வர மாட்டேங்கிது பாஸ் ...//

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க... இதுவும் வேனும் இன்னமும் வேனும்... ஹஹ்

Yoganathan.N said...

மைன்ட் வாயிஸ் சூப்பர். அப்படியே என்னோட மைன்ட் வாயிஸ பிரதிபலிக்குது. :P

ILLUMINATI said...

தம்பி,அனையப்போற ஜோதி பிரகாசமா தான் எரியும்.. :)

பாலா said...

நண்பரே உங்களுக்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன். மறுக்காமல் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என் தளத்தில்
நன்றி...

Bala said...

நண்பரே என்னுடைய தளத்தில் உங்களுக்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன். மறுக்காமல் வந்து பெற்றுக்கொள்ளவும்...

நன்றி...

"ராஜா" said...

@ ILLUMINATI

அண்ணே உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு....

@ பாலா

நன்றி தல ... உடனே வரேன் விருதை பெற்றுக்கொள்ள ...

"ராஜா" said...

@ yoganathan
தல உங்க கமெண்ட் இப்பதான் வருது ... bloggerல ஏதோ பிரச்சனை போல ..

நாங்க என்ன தப்பு பண்ணுறோம் திருந்த ....

Yoganathan.N said...

//தல உங்க கமெண்ட் இப்பதான் வருது ... bloggerல ஏதோ பிரச்சனை போல ..//

ஆம், இதைக் கவனித்தேன். நண்பர் பாலாவின் தளத்திலும், இது எனக்கு நேர்ந்தது.

நாங்க என்ன தப்பு பண்ணுறோம் திருந்த ....

அதாவது, என்ன தான் கஷ்டப்படுத்தினாலும், சூனியம் வச்சது போல காதலியையே சுற்றி சுற்றி வருகிறார்களே நம்ம பசங்க, அதைச் சொன்னேன். அது ஒரு கிண்டலாக சொன்னது. சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

LinkWithin

Related Posts with Thumbnails