கடைசி பெஞ்சில இருந்து ஒரு சத்தம் " அப்ப எந்த விசயத்தையும் கணித முறையில் நிரூபித்தால் நீங்க ஒத்துகுவீங்க அப்படித்தான சார்?"
அதில் இருந்த நீங்க என்ற வார்த்தையும் , சத்தம் கடைசி பெஞ்சில் இருந்து வந்ததும் இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகத்தை எனக்கு உண்டு பண்ணியது ....
"சந்தேகம் இருந்தா எழுந்திருச்சி நின்னு கேளு .. அப்பத்தான் பதில் சொல்லுவேன் " என்றேன் நான்..
அப்பொழுது எழுந்து நின்ற அந்த மாணவனை பார்த்த பொழுது எனக்கு சந்தேகம் உறுதி ஆகி பீதியை கிளப்பியது .. அவன் ஒரு வாரம் முன்னர்தான் என்னிடம் Exam Fees கட்ட வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தான்... பயபுள்ள அதில் ஏதும் வெளையாட்டு காட்டிடுவானோ என்று .. இருந்தாலும் நம்மகிட்ட படிக்கிறவன் அந்த அளவுக்கெல்லாம் அயோக்கியனா இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில்
"என்ன விடுடா , அறிவியல் உலகமே அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் " என்றேன்
"சார் மத்தவங்கள விடுங்க , நீங்க ஒத்துக்குவீங்களா" என்று திரும்பவும் அங்கேயே வந்து நின்றான்
"ஒத்துகிடுவேண்டா" என்றேன் ஒரு வித பீதியுடன் ...
மதிய உணவு இடைவேளை ... என் அறைக்கு அந்த மாணவன் வந்தான் ...
"சார் கேட்டவுடனே பணம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார் .. இந்தாங்க உங்க பணம்" என்று நீட்டினான்
அதை பார்த்த நான் அப்படியே shock ஆகிட்டேன் .. பையன் கையில ஒத்த பத்து ரூபா நோட்டு..
"டேய் நான் கொடுத்த காசுக்கு வட்டியெல்லாம் வாங்க மாட்டேன் .. மொத்த பணமும் எப்ப கெடைக்குதோ அப்ப கொண்டு வா , ரெண்டு மாதம் ஆனா கூட பரவா இல்லை ... மொத்தமா கொடுடா " என்றேன்
"சார் மொத்த பணமும் இதுதான்" கூலாக சொன்னான் ...
" டேய் எனக்கு நெறைய வேலை இருக்கு.. கடுப்ப கிளப்பாத ... எடத்த காலி பண்ணு .. " டென்சனாக கத்தினேன் ..
"சார் நீங்கதான எந்த ஒரு விசயத்தையும் கணித முறையில் நிரூபணம் செய்தால் ஒத்துகுவேன்னு சொன்னீங்க " என்றான்
"ஆமாம் சொன்னேன் அதுக்கு இப்ப என்ன?"
"நான் உங்களுக்கு எவ்வளவு தரனும்"
"ஆயிரம் ரூபாய்"
"ஆயிரம் ரூபாயும் பத்து ரூபாயும் ஒண்ணுதான்னு நிரூபணம் செய்தால் ஆயிரம் ரூபாய்க்கு பதிலா இந்த பத்து ரூபாயை வாங்கிகிடுவீங்களா? " என்று கேட்டு விட்டு ஒரு பேப்பரில் ஏதோ எழுத ஆரம்பித்தான் ... இரண்டு நிமிடம்தான் எழுதுவதை நிறுத்தி விட்டு அதை என்னிடம் கொடுத்தான் ...
அதுல இப்படி எழுதி இருந்தான்
To Prove 1000 Rs = 10 Rs
Proof:
1 Rs = 100 Paisas
= 10 paisas * 10 paisas
= 0.1 Rs * 0.1 Rs
= 0.01 Rs
= 1 Paisa
1 Rs is equal to 1 Paisa
so 1000 Rs is equal to 1000 Paisa that is 10 Rs
thus Proved...
நானும் இதுல ஏதாவது தப்பு இருக்குமான்னு மணிரத்னம் படத்துல முதலாளித்துவம் இருக்கான்னு கண்ணுல வெளக்கெண்ணை விட்டு பாக்குற பதிவர்கள் மாதிரி அரைமணி நேரமா தேடி தேடி பாத்தேன் ... எதுவுமே தெரியவில்லை ..
பயபுள்ளைக எப்படி எல்லாம் ஏமாத்துராணுக?
இந்த இன்ஜினியரிங் படிக்கிரவனுககிட்ட எப்பவுமே உசாரா இருக்கணுமோ?
ஹீ ஹீ நான் உங்ககிட்ட என்ன கேக்க போறேன் .. புடிச்சிருந்தா ஒரு வோட்டு போட்டுட்டு போங்க அவ்ளோதான் ...
6 comments:
நண்பரே உங்களுக்கு என் தளத்தில் விருது ஒன்று வழங்கி இருக்கிறேன். மறுக்காமல் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்
நன்றி...
நண்பரே... என் தளத்தில் உங்களுக்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன். மறுக்காமல் வந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
நன்றி....
100 paisas = 10 paisa * 10
(not: 10 paisa * 10 paisa)
//நேத்து வழக்கம் போல வகுப்புல பாடம் எடுத்துகிட்டு இருந்தேன்//
இந்த விசயம் இப்போ தான் எனக்கு தெரிய வருது. என்னைச் சுற்றி நீறைய ஆசிரியர்கள். ஹிஹி
//நாம எந்த ஆராய்ச்சி பண்ணுனாலும் அதை கடைசியா கணித முறையில் நிரூபணம் செய்ய வேண்டும் ... அப்படி நிரூபணம் செய்தால் மட்டுமே உன்னோட ஆராய்ச்சிய இந்த உலகம் ஒத்துகொள்ளும்//
இதைப் படித்த போது தான் உணர்ந்தேன். ஆம், நான் பார்த்த வரையிலும் இது உண்மை தான்.
Hi
Mr.R Selvaraj
first i wud lik to thank u for giving soln.
last 2days i tried to find the mistake.. but i failed... really u r great...
sinQ/cosQ=tanQ Mr.R.Selvaraj
Re. 1 = 100 Paisas (agreed)
= 10 paisas * 10 paisas (wrong)
this should be [ 10 paisas * 10 ] means 10 times of 10 paisa = 100 paisa.
saying [ 10 paisas * 10 paisas = 100 paisa-square -- has not practical meaning ]
Now,
10 paisas * 10 = Re 0.1 * 10
= Re 1.0 only
Post a Comment