Followers

Copyright

QRCode

Thursday, June 17, 2010

சீக்கிரம் வா தல ... நாங்க பாக்கணும் உன் அட்டகாசத்த....



தல இந்த ஒற்றை சொல்லுக்கு இருக்கும் பவர் தமிழகம் அறிந்த ஒன்று... ரஜினி படங்களுக்கு அடுத்து திரையிடும் இடமெல்லாம் திருவிழா நடத்திக்காட்டும் ரசிகர் படை... அவர் படம் முதல் காட்சி பார்த்தவர்கள் கண்டிப்பாக எந்த வசனமும் கேட்க முடியாது ... படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களின் கொண்டாட்டம்தான்... 

எந்த விழாவிலும் பங்கேற்க மாட்டார்.. மீறி பங்கேற்றால் அந்த விழா நாயகனை விட இவருக்குதான் எழும் அதிக கரகோஷம்... கலைஞரின் பாராட்டு விழாவே இதற்க்கு மணியான சாட்சி... இன்றும் தெருவில் நடந்து போகும் நான்கு இளைஞரிடம் கேட்டு பாருங்கள் , அதில் மூன்று பேர் தல ரசிகராகத்தான் இருப்பார்கள்...

யார் என்ன இருட்டடிப்பு செய்தாலும் அவர்கள் கோட்டையிலும் அட்டகாசமாய் வெற்றி கொடி நாட்டுவார்.. சன் டிவி தொடர்ந்து பார்பவர்களுக்கு தெரியும் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத வரவேற்ப்பு அவரின் பிறந்தநாள் அன்று அவருக்கு இருக்கும் .... அன்று முழுவதும் வரும் தொலைபேசி அழைப்புகள் அவருக்கு வாழ்த்து சொல்லுவதைத்தான் இருக்கும் ... இதைவிட அவரின் குழந்தை பிறந்தநாளுக்கும் அன்று முழுவதும் அவரின் ரசிகர்கள்தான் வாழ்த்து சொல்லி கொண்டு இருப்பார்கள்....

இன்று திரை உலகில் முன்னணியில் இருப்பவர்கள்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றி கொடுத்து அந்த இடத்தை அடைந்து இருப்பார்கள்.. 

ஒரே ஒரு தோல்வி போதும் அவர்கள் கீழே விழ.. , எழுந்திருக்க முடியாமல் வீழ்ந்து விடுவார்கள்... ரசிகர்கள் என்னும் பேஷ்மென்ட் அவர்களுக்கு ரொம்ப வீக்... அந்த விசயத்தில் தல ரொம்ப ஸ்ட்ரோங்... எத்துனை தோல்வி வந்தாலும் இன்றும் சிகரத்தில்தான் அமர்ந்து உள்ளார்...

இதெல்லாம் விட அவரின் நல்ல உள்ளம்... சிலர் வெளி உலகத்திற்கு நல்லவர் போல காட்டி கொண்டு , சொந்த வாழ்கையில் காசுக்காக யாருக்கும் கொடி பிடிக்க தயாராக இருப்பர்... இன்று இருக்கும் பல கதாநாயகர்கள் காசுக்காக குளிர்பான விளம்பரத்தில் நடித்து கொண்டு இருக்கின்றனர்... ஆனால் இவருக்கு பத்து வருடங்களுக்கு முன்னரே பல குளிர்பான கம்பெனிகள்  கேட்பதை விட அதிக காசை கொட்டி குடுக்க தயாராக இருந்தனர்... அப்பொழுதே மறுத்தவர் அவர் .. சொன்ன காரணம் என் ரசிகர்கள் நான் விளம்பரத்தில் சொல்லுகிறேன் என்பதற்காக எவ்வளவு காசு கொடுத்தும் இதை குடிக்க தயாராக இருப்பார்கள் .. அவர்கள் உடல்நலனை கெடுக்க எனக்கு விருப்பம் கிடையாது என்பதே...

நடிப்பு ஒரு கலை அது யாருக்கும் அவ்வளவு எளிதில் வந்து விடாது... எனக்கு தெரிந்து மாஸ் படங்கள் கிளாஸ் படங்கள் இரண்டிலும் அசத்தியவர் ரஜினிதான்... ரஜினிக்கு  அடுத்து  மாஸ் படம் என்றாலும் சரி கிளாஸ் படம் என்றாலும் சரி , வித்தியாசங்கள் காட்டி நடிக்க தெரிந்த ஒரே நடிகர் இன்றைய தலைமுறையில் தலைதான்.... 

நடிகர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான அம்சம் , வசீகரிக்கும் முகம்... தமிழ் நட்சத்திரங்களில் இவர் அளவுக்கு அழகான முக அமைப்பு யாருக்கும் கிடையாது... தமிழ் திரை உலகில் பெண்களை கவர்ந்த நாயகர்கள் என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒருவர் இருப்பார்.. ஜெமினி , பாக்கியராஜ் , சுதாகர்  என்று வந்து இப்பொழுது விஜயை கடந்து சூர்யா அந்த இடத்தை பிடித்து உள்ளார்.. ஆனால் இவர்கள் எல்லோரும் மாறி கொண்டே இருப்பார்கள் ... என்றென்றும் காதல் மன்னர்களாய் பெண்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த நாயகர்கள் வெகு சிலரே .. எம்.ஜி.ஆர்., ரஜினி , கமல் இந்த வரிசையில் இன்றைய தலைமுறை நடிகர்களில் தல மட்டுமே... (நான் பெண்கள் என்று கூறியிருப்பது அந்தந்த கால கட்டத்தில் இருந்த கல்லூரி மாணவிகளை மட்டுமே ... குடும்ப தலைவிகள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை)

இப்படி எல்லாம் இருந்தும் இன்று ஒரு ரசிகனாக நான் கொஞ்சம் காய்ந்துதான் போய் உள்ளேன்... இன்றைக்குபஞ்ச் டயலாக் பெசுரவனேல்லாம் நடிக்க வர்றதுக்கு முன்னாடியே மாஸ் ஹீரோவா வெற்றி கொடி நட்டவர் தல ... இவர் உச்சத்துல இருந்தப்ப , இவருக்கு பின்னாடி ரொம்ப கீழ இருந்தவனெல்லாம் இன்னைக்குஒன்ற டன் வெயிட்டுடான்னு பஞ்ச் பேசி சினிமா ரேசுல இவருக்கு முன்னாடி போய்டேன் அப்படின்னு பேட்டியெல்லாம் குடுக்குறான்... 

தலையோட மாஸ் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுக  . இவனுக பேசுறதெல்லாம் உண்மைதான்கிற மாதிரி தலையும் சினிமாவ அம்போன்னு விட்டுட்டு கார்  ரேஸ் பக்கம் போயிட்டாரு ... ரசிகனா அவரோட சொந்த விருப்பத்த நிறைவேத்த அவர் ரேசுக்கு போனத நான் வரவேற்கிறேன் .. ஆனால் அதுக்கு இது சரியான நேரம் கிடையாது ... உன்னோட மாஸ தமிழ்நாட்டுக்கு காட்ட வேண்டிய நேரம் இது தல..வா தல.. பக்காவான டீம் அமைந்து இருக்கு... .மறுபடியும்  ஒரே ஒரு வாலியோ , தீனாவோ , வரலாறோ கொடு தல ... நாங்க பாத்துகிறோம் மத்தத ... அப்புறம் பாத்துக்கலாம் கார் ரேசெல்லாம்... 

  தல இருக்கும் போது வாலே ஆடக்கூடாது இங்க வாலுள இருக்கிற மயிரெல்லாம் ஆடுது .. வா தல நம்ம ஆட்டத்த ஆரம்பிப்போம்..



8 comments:

Bala said...

//நடிகர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான அம்சம் , வசீகரிக்கும் முகம்.

தல கூட நடிக்கும் எந்த ஒரு நாயகியும் கலர் கம்மியாகத்தான் தெரிகிறார்கள் திரையில்.

//குடும்ப தலைவிகள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை

சந்தேகமே இல்லை. எனக்கு தெரிந்து பல குடும்ப தலைவிகளுக்கு விருப்ப நாயகன் தலதான். தல காதல் கோட்டையில் நடித்த போது குழந்தையாக இருந்த சில் வண்டுகள்தான் இப்போது ஹேய் அஜித் வேஸ்ட்யா, ஐ லைக் சூர்யா என்று பிதற்றுகின்றன. அப்போது குடும்ப தலைவியாக இருந்தவர்கள், கல்லூரி மாணவியாக இருந்து இப்போது குடும்ப தலைவியானவர்கள் எல்லாம் தல ரசிகைகள்தான்.

//தலையோட மாஸ் தெரியாம காமெடி பண்ணிக்கிட்டு இருக்கானுக

ஒவ்வொரு ரஜினி படம் வரும் முன்னரும், ரஜினி அவ்வளவுதான் ஓய்ந்து விட்டார் போன்ற விமர்சனங்கள் வரும். படம் வெளி வந்தவுடன் பொத்தி கொண்டு போய் விடுவர். உதாரணமாக ரஜினியின் மாஸ் என்ன என்று அறிய விஜயகாந்த் மதுரையில் ஒரு சர்வே எடுத்திருக்கிறார். அதில் பதிவு செய்யாமல் தன்னிச்சையாக இயங்கும் மன்றங்களே விஜயகாந்தின் மன்றங்களை விட இரண்டு மடங்கு அதிகம். அதே போலதான் தலயும். மாஸ் உள்ளவன் தேவை இல்லாமல் சவுண்டு விட மாட்டான். சம்பந்தமே இல்லாமல் ஒரு படத்தில் இன்னொரு நாயகனின் போஸ்டரை காட்டினால் திரை அரங்கில் சம்பந்தப்பட்ட ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அப்படி யாருக்கு அதிகம் கரகோஷம் வருகிறது என்று பார்த்தால் தெரியும் யார் மாஸ் என்று.

"ராஜா" said...

// மாஸ் உள்ளவன் தேவை இல்லாமல் சவுண்டு விட மாட்டான்

well said தல

//சம்பந்தமே இல்லாமல் ஒரு படத்தில் இன்னொரு நாயகனின் போஸ்டரை காட்டினால் திரை அரங்கில் சம்பந்தப்பட்ட ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அப்படி யாருக்கு அதிகம் கரகோஷம் வருகிறது என்று பார்த்தால் தெரியும் யார் மாஸ் என்று

போஸ்டரில் தல இருந்தால் அந்த பட கதாநாயகனுக்கு கிடைக்கும் விசிலை விட அதிகம் கிடைக்கும் தலைக்கு

if thala film trailor is shown in interval.. the sound of whistle generated in the theatre is alwayz more than sound generated in other heros first day first show

ஜெயந்த் கிருஷ்ணா said...

அஜித்தை என்னாகும் பிடிக்கும் அதனால் நோ கமெண்ட்ஸ்..
நல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பா.

முடிஞ்சா நம்ம பக்கம் வந்து பாருங்க உங்களுக்கு பதில் காத்துக்கிட்டுருக்கு ..

Yoganathan.N said...

என்ன சொல்ல... இப்போது தான் இந்த பதிவைப் பார்த்தேன். படிக்க படிக்க இன்னும் படித்துக் கொண்டே போக வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது...

உங்களிடமும் நண்பர் பாலாவிடமும் சில காலமாக ஒன்று சொல்ல வேண்டி தக்க சமயத்துக்காக காத்திருந்தேன். தல-ஐப் பற்றியது தான்.

நம்ம தல அஜித்திற்காக exclusive-ஆ ஒரு forum ஒன்றை தொடங்கி உள்ளேன். ஓரிரு மாதங்கள் ஆகின்றன. உங்கள் இருவரது ஆதரவு கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இதோ:

http://ajith.freeforums.org/

Yoganathan.N said...

உங்களது இந்த தல பற்றிய சிந்தனையையும் forum-இல் போட்டுள்ளேன் (in General Updates/Tid-Bits section. நன்றி :)

"ராஜா" said...

என் ஆதரவு என்றும் உண்டு தல

நன்றி

@வெறும்பய

வருகைக்கு நன்றி .. பதில் போடவே இல்ல நீங்க .. சரி அது நான் சும்மா காமெடிக்கு போட்டதுதான் .. சீரியஸா எடுத்துக்காதீங்க அடிக்கடி வந்துட்டு போங்க

Rajesh kumar said...

நண்பா.. நீயும் தல ரசிகன்கிரதால உரிமையோட கூப்புடுறேன்... தப்பா நினைச்சிக்காத.. தல எப்பவுமே தலைதான்.. ஒரு ஹிட் மட்டும் இப்போ தல குடுக்கட்டும்.. மொத்த பயலுகளும் பொத்திகிட்டு போயடுவானுவோ.. தல ரேஞ்சுக்கு அவர் ஒன்டர டன் வெயிட்டுடான்னு சொல்ல தேவையே இல்ல. என்ன இருந்தாலும் மாயாவில நம்ம தல ரசிகனா நடிச்சிட்டான்..பொழைச்சு போறான் விடு நண்பா..
நானும் தல பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேன் பாரு..
http://anglethree.blogspot.com/2010/12/blog-post_27.html

Rajesh kumar said...

என்ன நண்பா நலமா ? கொஞ்ச நாலா வேலை ரொம்ப அதிகமாயிடுச்சு அதனால தான் இந்த பக்கம் வரமுடியல .. நீ ரொம்ப நல்லா இருப்பேன்னு நினைக்கிறேன்..
அப்புறம் உன்கிட்ட இருந்து நம்ம தல பத்தின பதிவை எதிர்பார்க்கிறேன்.. ரொம்பநாள் ஆச்சு நண்பா.. உண்மையிலேயே சொல்றேன் தல பத்தி சிலாகிச்சு எழுத உன்னவிட்டா வேற நல்ல ஆட்கள் கிடையாது ..
சீக்கிரம் எதிர்பார்க்கும் ஒரு தல ரசிகன்
ராஜேஷ்

LinkWithin

Related Posts with Thumbnails