விண்ணை தாண்டி வருவாயா என்ற மொக்கை படத்திர்க்கு பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படம் ... ஹீரோவாக இருந்து நம்ம பேரரசு , சுரேஷ் கிரிஷ்ணா போன்றவர்களால் காமெடியானாக depromote செய்யபட்ட பரத்தும் நடித்திருக்கிறார் ... அனுஷ்கா வேற விபசாரியா நடிச்சிருக்காங்க, தெலுங்குல சூப்பர் டூப்பர் ஹிட் ஆன வேதம் படத்தோட ரீமேக் இப்படி முதல் இரண்டு மைனஸ்களோடும் அடுத்த இரண்டு பிளஸ்களோடும் வெளிவந்திருக்கும் படம் வானம்...
ஆயுத எழுத்து படம் போலவே இதிலும் ஐந்து வெவ்வேறு கதைகள் கடைசியில் ஒரு இடத்தில் வந்து சந்திக்கிறது ... சென்னையில் ஒரு சேரியில் வாழும் சிம்பு பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பல பொய்களை சொல்லி ஏமாற்றி காதலிக்கிறார் , அந்த பெண்ணின் அம்மாவிடம் திருமணம் பற்றி பேச அந்த பெண் அவரை ஒரு ஹோட்டலில் நடக்கும் நியூ இயர் பார்ட்டிக்கு வர சொல்கிறார் , ஆனால் அந்த பார்ட்டிக்கு நுழைவு கட்டணமே நாப்பதாயிரம் ரூபாய்... சிம்பு அந்த பணதிர்க்காக அழைவது ஒரு கதை ...
இன்னொரு கதையில் தன் மகனின் பணதிர்க்காக சரண்யா மோகனும் அவர் அப்பாவும் கிட்னியை விற்று நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்க சென்னை வருகிறார்கள் ...
பரத் தன் வாழ்கையின் லட்சியமாக நினைக்கும் லைவ் ஸ்டேஜ் ஷோவில் கிதார் வாசிக்க தன் ட்ரூப் நண்பர்களோடு சென்னை வரும் வழியில் நடக்கும் சில விஷயங்கள் என்று ஒரு கதை ...
இன்னொருத்தியின் கம்பெனியில் விபசாரியாக “பணிபுரியும்” அனுஷ்கா சென்னை வந்து தானே சொந்தமாக கம்பெனி ஆரம்பிக்க படும் கஷ்டங்கள் என்று ஒரு கதை ...
தன் மனைவியின் டெலிவரிக்காகவும் , தன் தம்பியை தேடியும் சென்னை வரும் பிரகாஷ்ராஜின் தனி கதை ஒன்று..இப்படி ஐந்து கதைகள் இருந்தும் சரண்யா மோகன் வரும் கதையை தவிர மற்ற கதைகளில் ஒரு முழுமையோ ஈர்ப்போ இல்லாமல் போனதுதான் படத்தின் பெரிய மைனஸ் ...
சிம்புவிர்க்கு இந்த கதாபாத்திரத்தில் எப்படி நடிப்பது என்றே தெரியவில்லை ... அதற்க்கு காரணம் அந்த கதாபாத்திரத்தை அரைகுறையாக வடிவமைத்திருக்கும் இயக்குனர் ... அவர் நல்லவரா? கெட்டவரா? என்று கதை எழுதிய அவருக்கும் தெரியவில்லை , நடித்த சிம்புவிர்க்கும் தெரியவில்லை , படம் பார்க்கும் நமக்கும் கடைசி வரை தெரியவில்லை ... மேலும் பணக்கார பெண்கள் எல்லாருமே லூசாகத்தான் இருப்பார்கள் என்ற தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுதனம் இந்த படத்திலும் உண்டு...
சரண்யா தன் கிட்னியை நாற்பதாயிரம் ரூபாய்க்கு பேரம் பேசி முடிக்கும் அடுத்த காட்சியிலேயே நியூ இயர் பார்ட்டிக்கு சிம்புவுக்கு நாற்பதாயிரம் தேவைபடுவதாய் காட்டும் போதே கடைசியில் என்ன நடக்க போகிறது என்பது இருபது வருடமாய் தமிழ் படங்கள் பார்த்து கொண்டிருக்கும் என்னால் கண்டுபிடிக்க முடியாதா என்ன? அதனால் அந்த இரண்டு கதைகளிலும் சுவாரஷ்யாமே இல்லாமல் போயி விட்டது... ஆனால் வட்டி பணதிர்க்காக கிட்னியை விற்க்கும் சரண்யாவை பார்க்கும் போது எனக்கு பகீர் என்றது ... இவர் காட்சி வரும்போதெல்லாம் பின்னனியில் உதயசூரியன் சின்னத்தை காட்டி கொண்டே இருக்கிறார்கள் ...
சரண்யாவின் மாமாவாக வரும் அந்த தாத்தா யார் என்று தெரியவில்லை , ஏழைகளின் வலியை அப்படியே வெளிபடுத்துகிறார் ... இடைதரகராக வருபவன் முதலில் அந்த பெரியவரிடம் பாதி காசை ஆட்டைய போட்டிருந்தாலும் கடைசியில் மேலும் மூன்றாயிரத்தை கேட்டு வாங்கும் காட்சியில் தியேட்டரில் இருக்கும் அனைவரும் இது படம் என்பதையும் மறந்து அவனை மனதிர்க்குல் காரி உமிழ்திருப்பார்கள் ... அதற்க்கு காரணம் அந்த பெரியவரின் நடிப்பு ....
அதே போல பிரகாஷ்ராஜ் , சூழ்நிழைகளாலும் ஒரு போலீஸ் அதிகாரியாளும் தீவிரவாதியாக தவறாக சிறையில் அடிபடும் கதாபாத்திரம் ... பல இடங்களில் ஓவர் ஆக்டிங் சில இடங்களில் நச் நடிப்பு... கமலின் காற்று இவரிடமும் அடிக்க ஆரம்பித்திருக்கிறது என்று எண்ணுகிறேன்... கடைசியில் அந்த போலீஸ் அதிகாரியை முதுகில் சுமந்து உயிரை காப்பாற்றி அவருக்கு நன்னயம் செய்து விடுகிறார்... இந்த கருத்தை சொல்வதற்க்கு பிரகாஷ்ராஜ் , சோனியா அகர்வால் , ஒரு போலீஸ் அதிகாரி வேடம் , ஒரு தீவிரவாதி கதாபாத்திரம் என்று தயாரிப்பாளருக்கு பெரிய செலவு வைத்திருக்கிறார் இயக்குனர் .. போங்கையா இதைதான் வள்ளுவன் உங்களை விட அழகாய் இரண்டே வரிகளில் ஒரு ஓலை சுவடி செலவில் சொல்லிவிட்டானே...
அனுஷ்கா பாத்திரம் எதற்க்கு என்றே தெரியவில்லை? அவருக்கு ஒரு அக்கா(அண்ணன்) வேறு இந்த படத்தில்... வேசித்தனம் பண்ணும் அவர் கடைசியில் ஒரு சாவை பார்த்து திருந்தி விடுகிறாராம்... இப்படிபட்ட நம்பமுடியாத மனமாற்றங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... பட விளம்பரங்களில் அரைகுறையாய் சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து இளைங்கர்களை படத்திர்க்கு வர வைத்ததை தவிர வேறு ஒன்றும் இவர் படத்தில் பெரியதாய் செய்யவில்லை...
படத்தின் ஒரே ஆறுதல் யுவனின் பாடல்கலும் அதற்க்கு சிம்புவின் நடனமும்தான்... ஆனால் எவண்டி உன்னை பெத்தான் கையில கெடச்சான் செத்தான் போன்ற வரிகள் தேவையா யுவன்? "நோ மணி நோ மணி நோ ஹனி நோ ஹனிடா" பாடல் செம்ம டப்பாங்குத்து....
பரத் என்ன சொல்ல? நீங்க இந்த படத்திர்க்கு தேவையா என்பதை படம் பார்த்த பொழுது நீங்களே நினைத்திருப்பீர்கள்... தேவையே இல்லாத கதாபாத்திரம் , அதற்க்கு இரண்டு பாடல்கள் , ஒரு சண்டை வேறு .... இது இயக்குனர் தவறா? இல்லை வேறொருவரின் உள்குத்தா தெரியவில்லை?
தீவிரவாதிகள் என்றாலே அவர்கள் முஸ்லிம்களாய்த்தான் இருக்க வேண்டுமா? வேறு யாருமே தீவிரவாதம் செய்ததில்லையா? இன்னும் எததனை காலத்திற்க்குதான் இப்படியே காட்டுவீர்கள்?பார்த்து பார்த்து போர் அடித்து விட்டது.. வித்தியாசமா யோசிங்கப்பா?
வானம் – மப்பும் மந்தாரமுமாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது , ஆனால் அக்னி நட்சத்திரமாய் சுடுகிறது...
29 comments:
//தீவிரவாதிகள் என்றாலே அவர்கள் முஸ்லிம்களாய்த்தான் இருக்க வேண்டுமா? வேறு யாருமே தீவிரவாதம் செய்ததில்லையா? இன்னும் எததனை காலத்திற்க்குதான் இப்படியே காட்டுவீர்கள்?பார்த்து பார்த்து போர் அடித்து விட்டது.. வித்தியாசமா யோசிங்கப்பா?
//
ஏன் பம்பாய் படம் பாக்கலையா?
அதிலும் முஸ்லிம் தீவிரவாதிகள் (இனபற்றாளர்கள்) வருவார்களே ...
அப்ப படம் குப்பையா?
நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்...
இன்னும் கொஞ்சம் படத்தை நன்றாக முயற்ச்சித்திருக்கலாம் அதனால் இரண்டு ஹீரோ கதைகள் தமிழில் சாத்தியமில்லாமல் போகிறது...
ok
///விண்ணை தாண்டி வருவாயா என்ற மொக்கை படத்திர்க்கு பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படம்// பாஸ் விண்ணை தாண்டி வருவாயா எவ்வளவோ பருவாயில்லை...
தெலுங்கில் படம் நன்றாக இருந்தது என்று கேள்வி. ஆனால் இப்படத்தை பலரும் பரவாயில்லை என்றே சொல்லுகிறார்கள். பிரகாஷ் ராஜ் ஓவர் ஆக்டிங்கா? இவருமா?
//போங்கையா இதைதான் வள்ளுவன் உங்களை விட அழகாய் இரண்டே வரிகளில் ஒரு ஓலை சுவடி செலவில் சொல்லிவிட்டானே... //
இது டச். good review. :)
நல்ல வேளை, கோ போகாம நீராவது தப்பிச்சீரே.இதுக்கு போக பயந்து அந்த படத்துக்கு போய் நான் பட்ட பாடு, fb ல ஒரு கும்மியே ஓடிச்சு. :)
சந்தானத்தை பற்றி ஒண்ணுமே சொல்லலியே? அவர் மட்டும் இல்லாவிட்டால் எல்லோரும் பாதியிலேயே தூங்கி இருப்பார்கள்.
@ NKS.ஹாஜா மைதீன்
மாப்பிள்ளை மாதிரியான குப்பையெல்லாம் கிடையாது .... பொறுமை இருந்தால் பார்க்கலாம்
@ # கவிதை வீதி # சௌந்தர்
தெலுங்கில் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள் .. தமிழில் ஹீரோவுக்காக நிறைய மாற்றம் செய்து விட்டார்களோ? இல்லை தமிழ் மக்கள் இப்படி எடுத்தால்தான் பார்ப்பார்கள் என்று நினைத்துவிட்டார்களா தெரியவில்லை
@ சமுத்ரா
இந்த okக்கு அர்த்தம் என்ன ? ... நன்றி வருகைக்கு
@ கந்தசாமி.
காரணம் ஏஆர்ஆர்ன் பாடல்கள் என்று நினைக்கிறேன்
@ illuminatti
நண்பா நான் கோ பார்த்து விட்டேன் ... எல்லாரும் நன்றாக இருக்கு என்று சொல்வதால் எனக்கு எதிர்த்து எழுத பயம் அவ்வளவே ... நக்சலைட்டுகள் பற்றி இவ்வளவு அருமையான படம் எடுக்க kv ஆனந்த் அவர்களால் மட்டுமே முடியும்
@ பாலா
சந்தானம் சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் பழைய எஸ்எம்எஸ் ஜோக்குகளை சொல்லி கடுப்பேற்றுகிறார்... ஆனால் அவர்தான் படத்தின் ஒரே ரெஃப்ரெஷ் பாயிண்ட்...
நல்லவேளை.. இந்த படத்துக்கு போகலாம்னு இருந்தேன். கடைசில வீட்டம்மா நச்சரிக்க “கோ” போயாச்சு.. கோ நல்லாத்தான் இருக்கு.
@ Karthikeyan
படம் பொழுதுப்போக்கு என்ற வகையில் நன்றாக வந்து இருக்கிறது.. ஆனால் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் உண்டே கோ படத்தில் ...
எங்க ஸார் படம் பாத்தீங்க புளியங்குடியிலயா?
உங்க மேடம் ஊர் புளியங்குடிக்கு பக்கதுலன்னு சொன்ன மாதிரி ஞாபகம் அதான் கேட்டேன்
மேலும் பணக்கார பெண்கள் எல்லாருமே லூசாகத்தான் இருப்பார்கள் என்ற தமிழ் சினிமாவின் அரைவேக்காட்டுதனம் இந்த படத்திலும் உண்டு//
karektu
மந்தாரமுமாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்திருக்க வேண்டியது , ஆனால் அக்னி நட்சத்திரமாய் சுடுகிறது//செம ப்ஞ்ச்
மேடம் ஊர் கோவிலாங்குளம். பாலையம்பட்டிக்கு முன்னாடி ஸ்டாப். (அந்த ஊர் உங்களுக்கு தெரியுமா?) மற்றபடி நாங்க படம் பார்த்தது கரூர்லதான்.
அட,பயமா? எதுக்கு? என்ன செய்துவிடுவார்கள் இந்த சொம்புகள்? சும்மா தோணினதை எழுது மச்சி. இது உன் ப்ளாக். :)
இது மாதிரி அரைவேக்காட்டு கருத்துடன் படம் எடுக்க தமிழ் சினிமாவில் அனைவரும் தகுதியானவர்களே!
@ Karthikeyan
கோவிலாங்குளம் ரொம்ப நால்லாவே தெரியும்.. ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் இருக்காணுக அங்க...
@ ILLUMINATI
விஷயம் ரொம்ப ஆறி போச்சு... இனிமேல் எழுதினால் சுவாரஷ்யாமாக இருக்காதே நண்பா ... இந்த படத்தை பற்றி மட்டும் இல்லாமல் இந்த மாதிரி அரசியல் படம் எடுப்பவர்களை பற்றி பொதுவாக ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்
என் நிச்சயதார்த்ததிற்கு வரும்வரை கோவிலாங்குளமும் அருப்புக்கோட்டையும் இதற்கு முன் நான் வந்ததே இல்லை. பெண் பார்த்ததுகூட திருப்பூரில்தான். கல்யாணம் பாலையம்பட்டியில். கிராமமாக இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்படியும் ஊருக்கு வரும்போதெல்லாம் அருப்புக்கோட்டைக்கு வந்து ஒரு படமாவது பார்த்துவிடுவேன். உங்கள் ஊரின் இனிமை உணவகம் என்னுடய ஃபேவரிட். மேலும் முனியாண்டி மிட்டாய்கடை காராச்சேவு..வாவ் இந்த மாதிரி நிறைய சொல்லிகிட்டே போகலாம்.
@ Karthikeyan
சாப்பாட்டு விஷயத்தில் அருப்புக்கோட்டைகாரர்கள் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்தான் , இனிமை , பானு , நடராஜ் என்று எல்லா உணவகங்களும் ருசியாக இருக்கும் , அடுத்த முறை வந்தால் "நடராஜ் சைனீஸ்" ஹோட்டலுக்கு ஒருமுறை சென்று பாருங்கள் இனிமையை விட நன்றாக இருக்கும் ... (பேருதான் சைனீஸ் ஆனால் அங்கு சைனீஸ் ஐட்டம் எதுவும் கிடைக்காது எல்லாம் நம்மூர் ஸ்பெஷல் மட்டும் இருக்கும்)
உங்கள் ஊரில் திரையரங்குகளும் நன்கு பராமரிக்கிறார்கள்.
நடராஜ் சைனீஸ் என்பது திருச்சுழி ரோட்டில் இருக்கும் ஹோட்டலா? ஒரு முறை சென்றதாக நினைவு. சினிமா பார்த்துவிட்டு வரும் வழியில் இனிமை சென்றுவிடுவோம். அடுத்தமுறை கண்டிப்பாக பானுவும் நடராஜும் போயிடலாம்.
@ Karthikeyan
ஸார் அடுத்த முறை வந்தால் தெரியபடுத்துங்கள் ... முடிந்தால் சந்திக்களாம்...
கண்டிப்பாக நம் சந்திப்பு நிகழும்.
தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html
Post a Comment