Followers

Copyright

QRCode

Monday, September 13, 2010

My Sassy Girl(2001) - கண்டிப்பாய் அனுபவிக்க வேண்டிய காதல் கதை



DISC: இது முழுக்க முழுக்க காதலை ரசிப்பவர்கள் இல்லை காதல் செய்து கொண்டு இருப்பவர்களுக்கான பதிவு ... உங்களுக்கு காதல் மேல் பெரிதாய் மரியாதையோ ஈடுபாடோ இல்லை என்றால் இப்படியே கிளம்பி விடுங்கள் ... 
உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்....


கொரிய படங்களின் தீவிரமான ரசிகனாக மாறி விட்டேன் ... அந்த படங்களில் காட்டப்படும் மிக மென்மையான காதல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது... பொதுவாக நம் ஊர் காதல் படங்கள் எல்லாமே ஒரே templateதான் .. ஹீரோ பொறுக்கி ஹீரோயின் நன்றாக படிக்கும் மாணவி ... அவர் ஏழை இவள் பணக்காரி , அவர் கீழ் சாதி இவள் மேல்சாதி .. இப்படி வெவ்வேறு தளங்களில் இருக்கும் இருவருக்குள் காதல் வரும் ... அதுவும் ஹீரோவின் பொறுக்கித்தனத்தை பார்த்துதான் அவள் காதலிப்பாள் ... பின்னர் இந்த காதலுக்கு ஹீரோயினின் அப்பாவோ அண்ணனோ இடைஞ்சலாய் வர ஹீரோ தன முழு பலத்தையும் காட்டி அவர்களை தாக்கி அழித்து விட்டு அனாதையாய் ஆனால் சந்தோசமாய் நிக்கும் ஹீரோயினை கைபிடிக்க படம் முடியும் .. இடையில் ஹீரோயினின் அழகை பார்த்தவுடன் ஹீரோ கனவில் அமேரிக்கா சென்று விட அங்கு ஒரு குத்து பாட்டு ....   இப்படி எந்த ஒரு பிரேமிலும் காதலே இல்லாமல் ஒரு முழு "நீல"  படம் எடுத்து விட்டு காதலை யாரும் காட்டாத வித்தியாசமான கோணத்தில் காட்டி இருக்கிறேன் என்று வெக்கமே இல்லாமல் டிவியிலும் பத்திரிக்கையிலும் பேட்டி கொடுக்கும் அரைவேக்காட்டு இயக்குனர்கள் எல்லாம் பார்க்க வேண்டிய படம் "MY SASSY GIRL" 


இந்த  படத்தில் ஒரு காட்சி வரும் ... ஒரு ராணுவ வீரன் தற்கொலை செய்ய முயலுவான் ... அதற்க்கு அவன் சொல்லும் காரணம் தன்னுடைய காதலி வேறு ஒருவனுடன் ஓடி போய் விட்டாள் , நான் இறந்து விட்டாளவது அவள் தன்னுடைய தவறை நினைத்து வருந்துவாள் அவளுக்கு இததான் சரியான தண்டனை என்பான் ...  அவன் தற்கொலை பண்ணுவதை பார்க்க  அவன்  காதலியை கூட்டி கொண்டு வர வேண்டும் என்பதற்காய் ஹீரோவை பிடித்து வைத்து கொண்டு இவனையும் சேர்த்து கொன்று விடுவேன் என்று மிரட்டுவான்  ..  அந்த கட்டத்தில் ஹீரோயின் பேசும் வசனம் படு ஷார்ப் "நீ அவளை உண்மையிலேயே காதலித்திருந்தால் அவள் வேறு ஒருவனுடன் சந்தோசமாய் இருப்பதை நினைத்து நீ சந்தோசப்பட வேண்டும் , இப்படி அவளை பழி வாங்க வேண்டும் என்று நீ நினைத்தால் அவளை நீ உண்மையிலேயே காதலிக்கவில்லை என்று அர்த்தம் , நீ காதலிக்காத ஒருத்தி யாருடன் வாழ்ந்தால் உனக்கு என்ன?..."  இதை அப்படியே கொஞ்சம் மாற்றி jab we metடில்  பயன்படுத்தி இருப்பார்கள் ... ஹீரோ அவனுடைய அம்மாவை புரிந்து கொள்ள ஹீரோயின் பேசும் வசனமாக...

ஹீரோயினின் பெற்றோர் அவளுக்கு ஒரு மாப்பிளை பார்த்து இருப்பார்கள் ... அவள் ஹீரோவை கூட்டி கொண்டு அவனை சந்திக்க செல்லுவாள் ... அப்பொழுது ஹீரோ அவளுக்கு எதுவெல்லாம் பிடிக்கும் எதுவெல்லாம் பிடிக்காது .. அவள் அவனிடம் இருந்து எதை எல்லாம் எதிர் பார்ப்பாள் என்பதை பற்றி அந்த மாப்பிள்ளையிடம் தன காதலை மறைத்து விட்டு அழுகையை அடக்கிய சோகமான முகத்துடன்  கூறுவான் .... அதை கேட்கும் ஹீரோயின் அவன் தன்னை பற்றி முழுமையாய் புரிந்து வைத்துள்ளான் என்பதை உணர்ந்து , அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பி ஹீரோவை தேடி ஓடுவாள் ... இந்த காட்சி அப்படியே சிவா மனசுல சக்தி படத்தில் வரும்... 

ஹீரோயின் தன்னை விட்டு பிரிந்தாலும் அவளை மறக்க முடியாமல் தன்னுடைய காதல் கதையை திரைக்கதையாக்கி ஹீரோ ஒரு படமாக எடுப்பான் ...இது எந்த தமிழ் படத்தில் சுடப்பட்டுள்ளது  என்று நான் சொல்ல தேவை இல்லை ...இப்படி இங்கே நீங்கள் ரசித்து பார்த்த பல காதல் காட்சிகள் இந்த படத்தில் பார்க்கலாம் ... காதல் படம் எடுக்கும் நம் எல்லா இயக்குனர்களையும் பெரிதும் பாத்தித்த படம் இது என்று நினைக்கிறேன் .... 



கதை இதுதான் , தன காதலன் இறந்து விட்ட துக்கத்தில் தினமும் தண்ணி அடிக்கும் ஹீரோயின்.... அவளுடன்   விதி வசத்தால்  இரண்டு முறை ஹோட்டல் ரூமில் தங்க நேரிடும் ஹீரோ ... தன பழைய காதலன்தான் இவனை தனக்கு காட்டி உள்ளான் என்று நினைத்து அவனை போலவே இவனிடம் பழகுகிறாள் ... ஆனால் இவளின் அடாவடித்தனத்தை நினைத்து பயந்து ஹீரோ இவளை விட்டு விலக பார்கிறான் , ஆனால் முடியவில்லை .... கடைசியில் வேறு வழி இல்லாமல் அவளுடன் பழக ஆரம்பிக்கிறான் ... போக போக ஹீரோ அவள் மேல் காதலில்  விழுகிறான் ஒரு கட்டத்தில் அதை அவளிடம் சொல்கிறான் .. அவளுக்கோ ஒரு விதமான குழப்பம் ... தனக்குள் இருக்கும் காதல் உண்மையிலேயே இவன் மேல் உள்ளதுதானா இல்லை தன பழைய காதலனை போல எண்ணி இவனிடம் பழகினதால் அவன் மேல் இருக்கும் காதலை இவன் மேல் இருக்கும் காதல் என்று தவறாக எண்ணுகிறோமா? என்று... அவள் ஒரு முடிவு செய்கிறாள் இருவரின் மனதில் இருப்பதையும் ஒரு லெட்டரில் எழுதி மலை உச்சியில் இருக்கும் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட்டு , இரண்டு வருடம் எந்த தொடர்பும் இல்லாமல் வாழ வேண்டும் ... இரண்டு வருடம் கழித்தும் இந்த காதல் அப்படியே இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ... அதன் படியே செய்கிறார்கள் ... இரண்டு வருடம் கழித்து ஹீரோ அங்கு வருகிறான் .. ஹீரோயினை வரவே இல்லை .. அவள் என்ன ஆனால் , இருவரும் இணைந்தார்களா  இல்லையா என்பதே  இந்த படத்தின் கதை ...

படம்  முழுவதும் விதியையும் ஒரு கதாபாத்திரமாய் உலவ விட்டிருப்பார்கள் ... ஹீரோ ஹீரோயினை முதலில் பார்ப்பது ... அவனுக்கு அவள் மேல் காதல் வருவது .. ஒரு கட்டத்தில் இருவரும் பிரிவது ... இறுதியில் இருவரும் இணைவது இப்படி எல்லாமே விதியால்தான் நடப்பது போல திரைகதை அமைத்திருப்பார்கள் ...



ராணுவ வீரனுக்கு காதல் என்றால் என்னவெண்டு புரிய வைக்கும் காட்சி ... ஹீரோவை மலை உச்சியில் நிற்க வைத்து அவனிடம் ஹீரோயின் தன குழப்பத்தை அழுது கொண்டே சொல்லும் காட்சி , பிரிய முடிவு செய்ததும் railway stationலேயே பிரிந்து விட எண்ணி ஹீரோவை முதலில் வரும் ட்ரெயினில் ஏற்றி விட்டு தான் அடுத்த ட்ரெயினில் சென்று விடுகிறேன் என்று கூறிவிட்டு ஹீரோ ஏறிய ட்ரைன் கிளம்பியதும் அவனை பிரிய முடியாமல் ஓடி சென்று அந்த ட்ரெயினில் ஹீரோயின் ஏற , அதே நேரத்தில் ஹீரோ ஹீரோயினை பிரிய முடியாமல் அவளுடனே வந்துவிட எண்ணி ட்ரைனை விட்டு விழுந்து பிளாட்பார்மில் இருந்து கொண்டே ட்ரெயினில் ஏறிய ஹீரோயினை பார்த்து அழும் காட்சி என்று படத்தில் நெகிழ்ச்சியான காட்சிகள் நிறைய உண்டு ...

அதே  போல வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகளும் அதிகம் உண்டு ... ட்ரெயினில் ஒரு சிறுவன் தன அம்மாவின் லிப்ஸ்டிக் கொண்டு கிழித்த கோட்டை வைத்து இருவரும் விளையாடும் காட்சி பயங்கர குறும்பு ... ஹீரோவின் ஆசிரியரிடம் தான் கர்பமாக இருப்பதாக கூறி ஹீரோவை கிளாசில் இருந்து கூட்டி போய் அவனுடன் ஊர் சுற்றும் காட்சி செம யூத் புல் சீன...   
படம் முழுக்க பெரும்பாலும் இருவர் மட்டுமே .. சிறு வயதுதான் என்றாலும் உணர்ந்து செய்துள்ளார்கள். மொத்தத்தில்   நீங்கள் காதல் கதைகளை  விரும்பி  பார்க்கும் ரசிகர்  என்றால் நீங்கள் இதுவரை  அனுபவித்திராத  ஒரு புது உணர்வை இந்த படம் உங்களுக்கு கண்டிப்பாக கொடுக்கும்... 

My Sassy Girl - surely you feel good after watch this

16 comments:

வினோ said...

Me that first (( enakkum intha viyaathi vanthirucchu ) -

Kathal illaamal yaraavathu iruppangala nanba

"ராஜா" said...

varukaikku nandri nanbare... padam paththirukkeenkalaa?

எஸ்.கே said...

//கொரிய படங்களின் தீவிரமான ரசிகனாக மாறி விட்டேன் //
நீங்களுமா? ஏற்கனவே இலுமினாட்டி என்றொருவர் கொரிய படங்கள் மீது தீவிர ஈடுபாட்டில் இருக்கிறார்.

"ராஜா" said...

@ எஸ்.கே

அவருதான் எனக்கு இந்த பழக்கத்த கத்து கொடுத்தவரு ... இந்த படத்த எனக்கு அறிமுகபடுத்தினவரே அவருதான்...

இது நல்லதா கெட்டதான்னு தெரியல ... நேத்து என் நண்பங்க நாலு பேர வலுக்கட்டாயமா இந்த படத்த பாக்க வச்சேன்... நீல படம் பாக்குற ஆசையோட இருந்தவங்கள இந்த காதல் படம் பாக்க வச்சிட்டேன்னு கோபப்பட்டு அதுல ரெண்டு பேரு என்ன கொலவெறியோட தேடிகிட்டு திரியிரானுகலாம்... .

ILLUMINATI said...

நண்பா,நல்ல விமர்சனம்.இந்தப் படம் தான் நான் பார்த்த முதல் கொரியப் படம்.அதுக்கப்புறம் நிறைய பார்த்துட்டேன்.ஆனா,இந்தப் படம் என்னைக்கும் மனதை விட்டு அகலாது. :)

நிறைய படங்கள் பாருங்க.நீங்களும் எழுதுங்க.நானும் இனிமே நிறைய கொரியப் படங்களைப் பற்றி எழுதுறேன்.முக்கியமா,இதைப் பற்றி. :)

ILLUMINATI said...

அப்புறம்,The Classic னு ஒரு காதல் காவியம் இருக்கு.அதைப் பாருங்க.மிஸ் பண்ணக்கூடாத படம். :)

Review:
http://illuminati8.blogspot.com/2010/03/classic.html

ILLUMINATI said...

By the by,try to see "Windstruck".It is an almost prequel to this movie.Talks about the former love of that 'girl'.
Did you notice that the heroine is never referred by name here for the entire movie? :)

"ராஜா" said...

//நண்பா,நல்ல விமர்சனம்.இந்தப் படம் தான் நான் பார்த்த முதல் கொரியப் படம்.அதுக்கப்புறம் நிறைய பார்த்துட்டேன்.ஆனா,இந்தப் படம் என்னைக்கும் மனதை விட்டு அகலாது.

என்னையும் மிகவும் கவர்ந்து விட்டது நண்பா இந்த படம் ... நீங்கள் சொன்னவுடனே இந்த படத்தை download செய்து பார்த்து விட்டேன் ... இன்று வரை எத்துணை முறை என்று தெரியாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன் ...

//நிறைய படங்கள் பாருங்க.நீங்களும் எழுதுங்க.நானும் இனிமே நிறைய கொரியப் படங்களைப் பற்றி எழுதுறேன்

கண்டிப்பா நண்பா .. நல்ல படங்களை எங்கு இருந்தாலும் எந்த மொழி என்றாலும் நாலு பேருக்கு அறிமுகம் செய்வது நல்ல விசயம்தான நண்பா... விடுங்க நண்பா , நம்ம பதிவ படிக்கிறவங்க கொரிய பாஸைய கத்துக்காம போக கூடாது ...

//அப்புறம்,The Classic னு ஒரு காதல் காவியம் இருக்கு.அதைப் பாருங்க.மிஸ் பண்ணக்கூடாத படம். :)

கண்டிப்பாக நண்பா பார்த்து விட்டு எழுதுகிறேன் ....

"ராஜா" said...

//Did you notice that the heroine is never referred by name here for the entire movie? :)

s... i have to write this matter on my review.. but i forgot it... even i search the subtitle file for the heroin name.. but i can't got it...

Yoganathan.N said...

இதே படத்தை இதே தலைப்பில், ஆங்கிலத்தில் எடுத்தார்கள்.
DVD வாங்கி (ஆங்கிலம்) பல மாதங்கள் ஆகிவிட்டது, இன்னும் பார்க்கவில்லை. :(
பார்க்கனும். :)

Yoganathan.N said...

இதே படத்தை இதே தலைப்பில், ஆங்கிலத்தில் எடுத்தார்கள்.
DVD வாங்கி (ஆங்கிலம்) பல மாதங்கள் ஆகிவிட்டது, இன்னும் பார்க்கவில்லை. :(
பார்க்கனும். :)

ILLUMINATI said...

நண்பர் யோகா, இங்கிலீஷ்ல எடுத்த படம் பிளாப் தல. கொரியன் மாதிரி வராது.பேசாம கொரியன் version பாருங்க. :)

Yoganathan.N said...

Illuminati நண்பருக்கு வணக்கம். ஆம், Korean version போல வராது என்று பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆன்லைனிலாவது பார்த்து விட வேண்டும்.

சமீபத்தில் வந்த 'Tsunami' படம் பார்த்தீர்களா? கொரியன் தானே...

"ராஜா" said...

ஆமாம் தல கொரியன் தான் செம ...
கண்டிப்பா பாருங்க பாத்துட்டு உங்க கருத்த சொல்லுங்க

//சமீபத்தில் வந்த 'Tsunami' படம் பார்த்தீர்களா?

அடிக்கடி இப்படி படங்கள் இருந்தா சொல்லுங்க தல ... பாத்துட்டு விமர்ச்சனம் எழுதுவோம்ல தல ...

ILLUMINATI said...

//கொரியன் தானே... //

தாய்லாந்து படம்னு நெட் ல போட்டு இருக்கு தல.நானு பாக்குற ஒரே தாய்லாந்து படம் டோனி ஜா படங்கள் தான்.பயபக்கி அடுத்த ப்ருஸ் லீயா வர வாய்ப்பு இருக்கு.

விடுங்க கழுதைய பார்த்துடலாம்.

ILLUMINATI said...

கொரியன்லயும் இருக்கு போல தல.

Haeundae இது தான் டைட்டில் போல.ஆனா படம் மொக்கைனு சொல்லி இருக்கானுவ.அதுவும்போக,படம் இந்தப் பாழாப் போன 2012 மாதிரியான படம் போல இருக்கும்னு தெரியுது.அந்த கருமம் எனக்கு பிடிக்காதே. :)
கொரியன் படங்கள்ல நானு எதிர்பார்க்குறதே வேற!
So,let's put it to rest and find a good one.. :)

LinkWithin

Related Posts with Thumbnails