Followers

Copyright

QRCode

Monday, September 6, 2010

சிந்து சமவெளி - பக்குவம் அடைந்தவர்களுக்கு மட்டும்...


இயக்குனர் சாமிக்கு ஒரு வேண்டுகோள் ,  உங்களுக்குள் ஒரு நல்ல இயக்குனர் இருக்கிறார் ... யார் என்ன சொன்னாலும் சரி உங்களின் இந்த படத்தை பார்க்கும் பொழுது எனக்கு தோன்றிய விஷயம் இது.. ஆனால் நீங்கள் எடுக்கும் கதை களம்தான் உங்கள் ஒட்டு மொத்த திறமைக்கும் பெரிய வில்லனாக இருக்கிறது... யாரும் சொல்ல துணியாத ஒரு கதையை சொல்லி இருக்கிறார்... அந்த கதையே ஒரு மாதிரியான வில்லங்கமான கதை என்பதால் குடும்பத்துடன் இந்த படத்தை யாரும் பார்க்க முடியாது... நான் பார்த்த திரை அரங்கில் இந்த படத்தை பற்றி தெரியாமல் மூன்று குடும்பங்கள் தங்கள் குழைந்தைகளுடன்  படம் பார்க்க வந்திருந்தார்கள் ... ஆனால் இடைவேளை முடிந்து வந்து பார்த்தால் மூன்று குடும்பங்களுமே எஸ்கேப்... பிறகு மருமகளுடன் உடலுறவு கொள்ளும் மாமனார் கதையை யார்தான் பார்க்க முடியும் குடும்பத்துடன் ... இயக்குனர் சாமியே இந்த படத்தை தன குடும்பத்தாருடன் அமர்ந்து பார்க்க முடியாது... அவரின் மனசாட்சிக்கே தெரியும் இந்த படத்தை தன மனைவி மற்றும் தன தகப்பனாருடன் பார்க்க முடியுமா என்பது...


நான் நாட்டில் நடக்கும் விசயங்களையே படத்தில் காட்டுகிறேன் , மக்களிடம் ஒரு விழிப்புணர்வை உருவாக்கவே இந்த படம் எடுத்தேன் என்று வாய் கிழிய பேசும் அவர் ஒரு முறை தன மகன் மற்றும் மருமகளுடன் இந்த படத்தை திரை அரங்கில் பார்க்கட்டும் , இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க வந்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பது அப்பொழுதாவது அவருக்கு புரியும்...

படத்தில் மிகவும் ஆபாசமான காட்சிகள் எதுவும் இல்லை , ஆனால் படத்தின் கதையே ஆபாசமானதுதான் என்பதால் ஒரு பிட்டு படம் பார்க்கும் உணர்வே படம் முழுவதும் இருந்தது ... தனியாக படம் பார்க்க போன எனக்கே இப்படி என்றால் குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் நிலைமை ... கண்டிப்பாய் படத்துக்கு கூப்பிட்டு வந்த அந்த குடும்பத்தலைவனுக்கு அன்னைக்கு ராத்திரி பட்டினிதான்...   ஐய்யா விழிப்புணர்வு படம் எடுக்கும் புண்ணியவான்களே  உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள் நீங்க எப்படி வேணும்னாலும் படம் எடுங்க , ஆனால் தயவு செய்து இந்த மாதிரி படத்துக்கு படத்தை பற்றி தெரியாமல் குடும்பத்துடன் வருபவர்களை அனுமதிக்காதீர்கள்... பாவம் அவர்கள் .....


கதாசிரியராக சாமி பல படிகள் சறுக்கி சாக்கடையில் விழுந்திருந்தாலும்  இயக்குனராக ஒரு படி முன்னேறி இருக்கிறார் ...எனக்கு படத்தில் பிடித்தது முதல் நான்கு ரீலில் வரும் காதல் காட்சிகளும் , கடைசி இரண்டு ரீலில் வரும் கிளைமாக்ஸ் காட்சியும் தான்.... அதே போல் படம் முழுவது வரும் அனைத்து கதாபத்திரங்களின் மிகையற்ற நடிப்பும் அருமை .. குறிப்பாக  ஹீரோயின் முதல் படமாம் நம்ப முடியவில்லை , காதல் காட்சியில் குரும்புதனத்தையும் , கல்யாணத்திற்கு பின்னர் தன கணவனுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் காதலையும் , பின்னர் காமத்தையும் தன கண்களிலே கொண்டு வந்திருக்கிறார்... அதுவும் தன மாமனாருடன் நெருங்கி வந்த பின்னர், காம ருசி கண்ட பெண்ணின் உடல் அசைவை  தன் உடலில் யதார்த்தமாய்  காட்டி இருப்பார் அதிகம் ஆபாசம் இல்லாமல் ... நடிகர்களிடம் நடிப்பை வெளிக்கொண்டு வந்த விசயத்தில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.... சில காட்சிகளில் ஒளிப்பதிவு நம்மை ரசிக்க வைக்கிறது ... சுந்தர் c.பாபுவின் இசையில் கடைசியில் வரும் "தப்பு பண்ணாதவன் இருந்தால் என்ன செத்தா என்ன" என்ற குத்து பாட்டு தாளம் போட வைக்கிறது... இயக்குனர் ஒரு நல்ல கதையை கையில் எடுத்து இதே போன்ற ஒரு கூட்டணியுடன் அடுத்து படம் எடுத்தால் கண்டிப்பாக வெற்றி படம் கொடுக்கலாம்... 


நீங்க பிட்டு எதிர்பார்த்து போனா ஏமாந்து போய்டுவீங்க... நீங்க ரொம்ப நல்லவர் , கலாச்சார  காவலர் என்றால் படம் உங்களுக்கு கோபத்தை உண்டாக்கும்.... இந்த படம் முழுக்க முழுக்க முதிர்ச்சி அடைந்த மன நிலை உள்ளவர்களுக்கு மட்டுமே ... நீங்கள் அப்படி பட்டவர் என்றால் தாரளமாக இந்த படத்தை பார்க்கலாம்...

பி.கு: இந்த படம் பார்க்கும் பொழுது என் முன்னாள் ஒரு ஐம்பது வயது பெருசு ஒன்று அமர்ந்து படம் பாத்துகொண்டு இருந்தது .. படத்தில் அந்த மாதிரி காட்சிகள் வரும் பொழுதெல்லாம் தன்னுடைய செல்போனில் அதை ரெகார்ட் பண்ணி கொண்டு இருந்தது ...  படம் முடிந்ததும் அவரிடம்  படம் எப்படி இருந்தது என்று கேட்டேன் ... இந்த படத்தை நம்பி ஏற்கனவே நான் பதிஞ்சி வச்சிருந்த நெறைய பிட்டு படத்த அழிச்சிட்டேன்... ஹூம் அநியாமா ஏமாத்திட்டாணுக தே... பசங்க   என்று தியேட்டர்காரனின் அம்மாவையும் சேர்த்து திட்டி விட்டு போனார்...

6 comments:

தெருப்பாடகன் said...

.

தமிழ் நாட்டி அக்கா பொண்ணைக் கட்டுகிறீர்கள் தானே அது முறை சரியானதா?
அதுவும் மாமா - மருமகள் முறை தானே?
இலங்கையில் அப்படி கட்டுவது இல்லை!

தனி காட்டு ராஜா said...

நல்ல விமர்சனம் ...

Robin said...

சமுதாயத்தை நாசமாக்குவதில் சினிமாவுக்கே முதலிடம்.

//தமிழ் நாட்டி அக்கா பொண்ணைக் கட்டுகிறீர்கள் தானே அது முறை சரியானதா?
அதுவும் மாமா - மருமகள் முறை தானே? // நியாயமான கேள்வி.

"ராஜா" said...

// தமிழ் நாட்டி அக்கா பொண்ணைக் கட்டுகிறீர்கள் தானே அது முறை சரியானதா?
அதுவும் மாமா - மருமகள் முறை தானே?

தல ... அக்கா பெண்ணை கல்யாணம் முடிப்பதற்கும் தன மகனின் மனைவியுடன் கள்ளத்தனமாக உறவு கொள்ளுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு...

//நல்ல விமர்சனம் .

நன்றி நண்பரே

//சமுதாயத்தை நாசமாக்குவதில் சினிமாவுக்கே முதலிடம்.

எல்லா சினிமாக்களையும் அப்படி சொல்லிவிட முடியாது.. ஆனால் இன்றைய பெரும்பாலான படங்கள் நீங்கள் சொல்லுவதை போல சமூதாயத்தை நாசம் பண்ணவே செய்கின்றன.. போல நல்ல படங்கள் எப்போழுதாவதே வருகிறது அதற்க்கு ரசிகனின் மன நிலையம் ஒரு காரணம் எனலாம்...

Sridhar said...

But why anyone want to watch these kind of films and cry later? Just avoid watching & Discussing (in other words just ignore)

"ராஜா" said...

@ sridhar

போன ஞாயிறு நீங்கள் தொல்லை காட்சிகளை பார்த்திருந்தால் தெரியும் , அனைத்து டீவீகளிலும் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களின் பேட்டிகள்தான்.... அதை பார்க்கும் சாதாரண ரசிகன் படம் நல்லா இருக்கும் போல என்று எண்ணி போகத்தானே செய்வான்... அதுவும் கலைஞர் டீவீயில் நேரடி ஒலிபரப்பு வேறு கருமம்டா சாமீ...

LinkWithin

Related Posts with Thumbnails