Followers

Copyright

QRCode

Tuesday, September 7, 2010

நீயா? நானா? விஜய்யா? விஜய் டீவியா?
போன வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி தேவை இல்லாமல் விஜய் அவர்களை பற்றி பேசினார்... அந்த நிகழ்ச்சிக்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதனால் அந்த நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் உடனடியாக மன்னிப்பு கேட்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் (அப்படி யாராவது இன்னமும் இருக்கானுக!!!) எல்லாம் வெகுண்டு எழுந்து போராடினார்களாம்... அவர்கள் சொல்லும் ஒரே ஒரு காரணம் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத நிகழ்ச்சியில் அவர்கள் தானை தலைவனை அசிங்க படுத்தி விட்டார்களாம்,,, அட போங்கப்பா, சிரிப்பு சிரிப்பா வருது ...

விஜய் ரசிகர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி , இது வரை விஜய் தன்னுடைய படங்களில் பேசியவசனங்கள் எல்லாமுமே தேவையானதுதானா? யார் மனதையும் புண்படுத்துவதை போல அவர் தேவை இல்லாமல் பேசியது இல்லையா? புதிய கீதை என்று ஒரு அட்டு படம் , அதில் ஒரு வசனம் "யாருடா இங்க தல?" என்று வரும் , அது அந்த படத்தின் கதைக்கு தேவையானதுதானா? சச்சின் என்று ஒரு அட்டு படம் அதில் ஒரு பாட்டில் விஜய் தொப்பை இருப்பது போல மேக் அப் போட்டு கொண்டு ஆடுவார் , அது அந்த படத்தின் கதைக்கு மிகவும்தேவையான விஷயம்தானா?ஆதி என்றொரு மொக்கை படம், அதில் ஒரு சீனில் "நீ என்ன பெரிய தலையா? கெட் அப் முக்கியம் இல்லைடா , கேரக்டர்தான் முக்கியம்" என்று ஒரு மொக்கை வசனம் வரும்... அதுக்கும் அந்த படத்தின் கதைக்கும் என்ன சம்பந்தம்...

ஒருவன் தன்னுடைய வேலையில் சில வேளைகளில் சறுக்கும் பொழுது அவனை சுற்றி இருப்பவர்கள் அவனுக்கு அறிவுரை கூறத்தான் செய்வார்கள் ... காசு கொடுத்து ஒரு நடிகனின் படம் பார்க்கும் ஒரு ரசிகனுக்கு அந்த நடிகனை விமர்ச்சனம் செய்யும் உரிமை கூட கிடையாதா? சந்தைக்கு வந்த எந்த பொருள் மேலும் விமர்ச்சனம் விழத்தான் செய்யும்... இதை கேட்டே கோபப்படும் நீங்கள் , தேவையே இல்லாமல் ஒரு நடிகனின் உடலை கேலி செய்தீர்களே அப்பொழுது தெரியவில்லையா உங்களுக்கு அது கேடுகெட்ட செயல் என்பது... இதில் மன்னிப்பு கேட்கும் படலம் வேறு... இதை பார்க்கும் மக்கள் யாருக்கும் விஜய் மேல் மரியாதை வர போவதில்லை .. மாறாக இவர்கள் நடத்தும் நாடகத்தை பார்த்து இவர்கள் மேல் கோபம்தான் வரும் ... விஜய் ஏற்கனவே ஒரு laughing profileஆகத்தான் இன்று எல்லோராலும் பார்க்கபடுகிறார் , இது போன்ற நடவடிக்கைகள் இன்னும் கொஞ்சம் அதிக தூரம் அந்த திசையில் அவரை பயணப்பட வைக்கும் ...


கோடம்பாக்கத்தில் அனல் பறக்கும் இன்னொரு விஷயம் அஜித் கௌதம் மேனன் பிரிவை பற்றியதுதான்... கௌதம் மேனன் இனிமேல் எனக்கு அஜித் தேவை இல்லை என்று அனல் பறக்க அறிக்கை விட , அது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய கொதிப்பை உண்டு பண்ண , அஜித்தும் ஏதாவது உள்குத்து வேளையில் இறங்கி கௌதமை மன்னிப்பு கேட்க வைப்பார் என்று எதிர்பார்த்திருக்க , அஜித் கடைசி வரை மௌனம் சாதித்து விட்டார்... ஆனால் அஜித் அமைதியாக இருக்கும் போதே கௌதம் தடாலடியாக நேரம் வரும் பொழுது கண்டிப்பாய் அஜித்துடன் இணைவேன் என்று அந்தர் பல்டி அடித்து விட்டார்... தலைக்கு தெரிந்திருக்கிறது அமைதியை விட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை என்பது ... பத்திரிகை நண்பர்கள் விடாமல் இது பற்றி அஜித்திடம் கேட்க தல மிகவும் அமைதியாக அவர் இல்லாமல் நான் ஐம்பது படம் முடித்து விட்டேன் நான் இல்லாமல் அவர் பத்து படம் முடித்துவிட்டார் என்று சொல்லி இந்த பிரட்சனையை முடித்து விட்டார்... ரசிகர்களும் இதை பெரியதாக எடுத்து கொள்ளாமல் தல வழியில் அமைதியாகி விட்டனர்...


பொதுமக்களில் ஒருவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வைக்கிறார் ஒருவர் ... தன்னுடன் இருந்த ஒருவர் தன்னை பற்றி தவறாக வெளியில் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது அதுவும் தன்னிடம் தப்பே இல்லாம் இருந்தும் கோபபடாமல் அமைதியாய் இருந்து பிரச்சனையை சுமூகமாய் முடித்து வைக்கிறார் ஒருவர் .... பக்குவம் யாருக்கு அதிகம்?முதாலமவரை எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் அவரின் இது போன்ற மூன்றாம் தர நடவடிக்கைகளே... இரண்டாமவரை மிகவும் பிடிக்க காரணங்கள் பல உள்ளன .. அதில் முக்கிய காரணம் அவரின் இது போன்ற பக்குவபட்ட நடவடிக்கைகளே....


அப்புறம் இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே ... நான் பார்த்தவரையில் எனக்கு தோன்றிய விஷயங்கள் இவை...


7 comments:

தமிழ் குமார் said...

இன்ட்லி முதல் பக்கம் பாருங்க உங்கள கௌதம் மேனன் நாறடிகிறான்

"ராஜா" said...

@ தமிழ் குமார்
தல அப்படி எதுவும் தெரியலையே...

arul said...

unga ajith romba nallavarthan

"ராஜா" said...

@ arul

nadringannaa

ARUL said...

mudalla tamil vasanatha englishla ezhuluthikiitu manappadam panni pesi nadikkama tamilil ezhuthi vasanam pesi nadikka sollunga appuram naan nallavarthanu othukolkiraen
atha vittu vijay ippadi seithar appadi seithar athanala enakku avarai pikkathu indha madhiriyellam ajith pannamattaru athanala enakku ajith pidikkumnu sollathinga ajith mattum lase pattavara enna

"ராஜா" said...

@ ARUL

வாங்க தல ... உங்களின் பின்னூட்டம் ஒரு விஜய் ரசிகனின் மனநிலையை அப்பட்டமாக காட்டுகிறது... அப்புறம் உங்க ஆள விளக்கெண்ணையை வாயில வச்சிகிட்டே வசனம் பேசுறத நிறுத்த சொல்லுங்க ... அப்புறம் திருத்த சொல்லலாம் மத்தவங்கள..

தனி காட்டு ராஜா said...

//பக்குவம் யாருக்கு அதிகம்?முதாலமவரை எனக்கு பிடிக்காமல் போனதற்கு காரணம் அவரின் இது போன்ற மூன்றாம் தர நடவடிக்கைகளே...//

YES SIR...
Thala -tharpothu nantraaka pakkuvam adanithu vitttar...

LinkWithin

Related Posts with Thumbnails