தமிழ் சினிமாவை நேசிக்கும் பலரும் நேசிக்கும் ஒரு மாபெரும் நடிகன் கமல்... நவரசங்கள் என்று சொல்லுவார்களே அதில் அனைத்தும் ஒருங்கே அமைய பெற்ற கலைஞன் அவர்... ஹீரோயிசம் , புளித்துப்போன செண்டிமெண்ட் என்று அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைத்து கொண்டு இருந்த தமிழ் சினிமாவில் வித்தியாசம் என்னும் வார்த்தையின் அர்த்தம் இவர் மூலாமாகவே ரசிகர்களுக்கு தெரிய வந்தது... எண்ணற்ற ரசிகர்கள் அவருக்கு இருந்தாலும் அவர்களை மேலும் மேலும் முட்டாள்கள் ஆக்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் அவரிடம் இருந்ததில்லை... ரசிகர்களை உசுப்பேத்தி விடும்படியான வசனங்கள் அவர் படங்களில் ஒருபோதும் இருப்பதில்லை ... நான் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஆணித்தரமாக முதலிலேயே கூறி விட்டார்... மற்றவர்களை போல தன படங்களில் நான் இப்ப வருவேன் , அப்பறமா வருவேன் .. நேரம் வரும்போது வருவேன் என்று வசனம் பேசி ஒரு ஹைப் உருவாக்கி படத்தை ஓட வைக்க அவர் ஒருபோதும் விரும்பியதில்லை...
தன்னுடைய மசாலா படங்கள் பெரும் வெற்றி பெற்றாலும் அடுத்த படம் அதே போல மசாலா தனமாக இல்லாமல் வேறு பாணியில் எடுக்கும் தைரியம் இருக்கும் ஒரே நடிகன் தமிழ் சினிமாவில் அவர் மட்டுமே... இந்தியன் என்று ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்று இருக்க , அடுத்த படம் மிகவும் சாதாரணமான நகைசுவை படம் காதலா காதலா... இந்த தைரியம் யாருக்கு வரும் ...அவர் நினைத்திருந்தால் சகலகலா வல்லவன் பாணியிலேயே பத்து படங்கள் தொடர்ந்து கொடுத்து பஞ்ச் வசனங்கள் பேசி ரசிகன் விரும்பும் பாதையில் தானும் சென்று அவனை முட்டாளாக்கி கஷ்டமே இல்லாமல் பணமும் , புகழும் சம்பாதித்து இருக்கலாம்... ஆனால் ரசிகர்களின் ரசனையை கொஞ்சமேனும் மேம்படுத்த வேண்டும் என்பதற்காக யாரும் போக துணியாத பாதையில் பயணபட்டார்.. இன்று நம் நாட்டில் படித்த மக்களிடமாவது உலக படம் பார்க்கும் பழக்கம் வந்திருக்கிறது என்றால் அதற்க்கு கமல் ஒரு மிக பெரிய காரணம்... இப்படியும் படம் எடுக்கலாம் என்று நமக்கு அறிமுகம் செய்தவரே அவர்தான்...
இன்னொரு விசயம் கமலிடம் எனக்கு பிடித்தது அவரது வெளிப்படையான செயல்பாடுகள்... தன்னுடைய இலக்கு இதுதான் என்பதில் எப்பொழுதும் ஒரு தீர்மானமான முடிவு அவரிடம் இருக்கும்... கடவுள் நம்பிக்கை கிடையாது என்று வெளி உலகிற்கு மட்டும் வேஷம் போடாமல் அதை உண்மையாக கடைபிடிப்பவர்...
ஆனால் இன்று நிறைய பேர் கமலை எதிர்த்து வைக்கும் வாதம் அவர் வேற்று மொழி படங்களை காப்பி அடிக்கிறார் என்பது... ஆமாம் அவர் காப்பி அடிக்கிறார் இல்லை என்று சொல்லவில்லையே... ஆனால் அவர் அப்படி காப்பி அடித்து மக்களிடம் கொண்டு செல்லும் விஷயம் நல்ல விஷயங்கள்தானே... மிகவும் கஷ்டபட்டுதானே அதை மக்களிடம் கொண்டு சேர்கிறார் அவர்... இன்று எல்லா கதாநாயகர்களும் சரி இயக்குனர்களும் சரி திரும்ப திரும்ப கஷ்டமே இல்லாமல் காதல் இல்லை ஹீரோயிசம் என்றுதானே காட்டி கொண்டு இருக்கிறார்கள்... கமலும் அப்படி கொஞ்சம் கூட கஷ்டமே இல்லாமல் திரும்ப திரும்ப வேட்டையாடு விளையாடுவோ, இல்லை சகலகலா வல்லவனோ எடுத்து மூட்டை மூட்டையாக பணம் சம்பாதித்து இருக்கலாம்... எதற்கு அவர் விரும்பாண்டி , ஹே ராம் , ராஜபார்வை என்று கஷ்டப்பட்டு படம் எடுக்க வேண்டும்... அவர் ராஜபார்வை எடுத்த பொழுது அந்த படத்தை மொக்கை என்று பார்க்காமல் விட்ட கடைகோடி தமிழன் இன்று அவர் எடுத்த விரும்பாண்டியை நல்ல படம் என்று பாராட்டுகிறான்... இந்த மாற்றமே அவர் செய்த சாதனை... முழுக்க முழுக்க இதில் அவர் பங்கு மட்டுமே இல்லை என்றாலும் இந்த மாற்றத்தின் மிக பெரிய பங்கு அவருக்கு உண்டு ... கண்டிப்பாக அவர் இல்லை என்றால் தமிழ் சினிமா இன்னமும் பத்து வருஷம் பின்னோக்கித்தான் இருந்திருக்கும் ...
அவரை காப்பி அடிக்கிறார் என்று விமர்சனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... கமலை திட்ட அவரிடம் வேறு குறைகள் கொஞ்சம் உண்டு (அவை என்ன என்பதை நான் இங்கு சொல்ல போவதில்லை இந்த பதிவின் நோக்கம் அது இல்லை), அதை கையில் எடுத்து திட்டுங்கள் , தயவு செய்து அவர் எடுக்கும் வித்தியாசமான முயற்ச்சிகளை காப்பி என்று ஏளனம் செய்யாதீர்கள்... அவரும் இதை செய்யவில்லை என்றால் தமிழ் ரசிகன் பார்பதற்கு மசாலா குப்பைகள் மட்டுமே மிச்சம் இருக்கும்...
5 comments:
//அவரும் இதை செய்யவில்லை என்றால் தமிழ் ரசிகன் பார்பதற்கு மசாலா குப்பைகள் மட்டுமே மிச்சம் இருக்கும்...//
இது உண்மை,அவரின் மருதநாயகமோ,மர்மயோகியோ வெளிவரும்போது தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதும் நிதர்சனம்.அதுவரை நாங்களும் காத்திருப்போம்.
//அவரின் மருதநாயகமோ,மர்மயோகியோ வெளிவரும்போது தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதும் நிதர்சனம்.
அப்பவும் சிலர் மருதநாயம் ஏதேனும் ஒரு ஆங்கில படத்தின் காப்பி என்று சொல்லி தங்கள் அறிவுஜீவித்தனத்தை காட்ட முயலுவார்கள்....
//அப்பவும் சிலர் மருதநாயம் ஏதேனும் ஒரு ஆங்கில படத்தின் காப்பி என்று சொல்லி தங்கள் அறிவுஜீவித்தனத்தை காட்ட முயலுவார்கள்....
ஹி, ஹி ஹி இப்பவே சொல்லி விடுகிறேன், கண்டிப்பாக அது ப்ரேவ்ஹார்ட் மற்றும் அப்போகளிப்டோவின் காப்பி.
அதென்ன கமல் சகாப்தமா சறுக்கலா என்று தலைப்பு வைத்து விட்டு, சருக்கல்களைப்பற்றி ஆராயாமல் விட்டு விட்டீர்கள். பேசாமல் எனக்கு பிடித்த கமல் என்று தலைப்பை மாற்றிவைத்துக்கொள்ளலாமே?
// ஹி, ஹி ஹி இப்பவே சொல்லி விடுகிறேன், கண்டிப்பாக அது ப்ரேவ்ஹார்ட் மற்றும் அப்போகளிப்டோவின் காப்பி.
நண்பரே என்னுடைய பதிவிலேயே இதற்க்கு பதில் உள்ளது ... வேறு மொழியில் அரைத்த மசாலாவை அப்படியே இங்கே அரைப்பதை விட நல்ல விசயங்களை அங்கிருந்து இங்கு இறக்குமதி செய்வது பெரிய விஷயம்... அவர் படம் ஓடவேண்டும் என்று அவர் நினைத்தால் வேட்டையாடு விளையாடு போல மசாலா படங்கள் செய்தாலே போதும் அவருக்கு .... ஆனால் புதுமைகளை இங்கே கொண்டு வர வேண்டும் என்று கஷ்டப்படும் அவரை உங்களை போன்றவர்கள் பாராட்டவேண்டாம் குறை சொல்லாமல் இருந்தாலே போதும்... சினிமாவில் தங்கள் தலைவனை தேடும் நம் மாநில மக்கள் திருந்த வேண்டுமானால் கமலை போல இன்னும் பலர் இங்கு வர வேண்டும்.....
//அதென்ன கமல் சகாப்தமா சறுக்கலா என்று தலைப்பு வைத்து விட்டு, சருக்கல்களைப்பற்றி ஆராயாமல் விட்டு விட்டீர்கள். பேசாமல் எனக்கு பிடித்த கமல் என்று தலைப்பை மாற்றிவைத்துக்கொள்ளலாமே?
நான் கமலின் சறுக்கலாக சிலர் (ஏன் சென்ற பின்னூட்டத்தில் நீங்களே) கூறும் ஒரு விஷயத்தை பற்றியே எழுதி உள்ளேன் எனவே தலைப்பு சரிதான்
சரி, கமல் காப்பி அடிக்கிறார், இங்கு காப்பி அடிக்க கூட கமல் மட்டும்தானே இருக்கிறார், எம்ஜிஆர் போலவோ, ரஜினி போலவோ தன் ரசிகர்களை மடையர்களாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று கமல் நினைக்காதது அவர் தவறுதான்.
Post a Comment