Followers

Copyright

QRCode

Friday, January 13, 2012

அஜித் 2011




மீண்டும் இது போன்ற ஒரு வருடம் அஜீத்திற்கும் அவர் ரசிகர்களுக்கும் உடனே அமையுமா என்று தெரியவில்லை, ஆனால் ஒரு அஜீத் ரசிகனாக ஒவ்வொரு ஆண்டும் இதே போன்றே அமையவேண்டும் என்று விரும்புகிறேன். சென்ற வருடம் தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களும் தோல்வி என்னும் வேதனையில் தத்தளித்து கொண்டிருக்க செய்ததெல்லாம் சாதனையாக அமைந்த ஒரே நடிகர் தல மட்டுமே...


  1. நான் படிக்கவில்லை , என் ரசிகர்கள் படிக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன்
தமிழ் சினிமாவில் தனக்கு  ரசிகர்மன்றங்கள் அதிகம் அமைந்தவுடன் அரசியலில் இறங்கி அவர்களையெல்லாம் ஓட்டுகளாக மாற்றி கோடிக்கணக்கில்  கல்லா கட்டும் ஆசையோடு இயக்கம் , கட்சி என்று ரூட் போட்டு  முதல்வர் கனவோடு அலையும்  காலத்தில்  , என் படம் நன்றாக இருந்து அதை என் ரசிகர்கள் பார்த்தால் போதும் , வேறு எதுவும் அவர்கள் எனக்காக செய்ய வேண்டாம், குறிப்பாக ரசிகர் மன்றம் என்ற பெயரில் அவர்கள் எனக்காக தங்கள்  வாழ்க்கையை கெடுத்து கொள்ள வேண்டாம், நான் படிக்கவில்லை என் ரசிகர்கள் அனைவரும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைபடுகிறேன் என்று இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்ய துணியாத ஒரு விஷயத்தை செய்தார். தன் ரசிகர் மன்றத்தை எல்லாம் கலைத்து விட்டார். இது பற்றி நான் விரிவாக எழுதிய ஒருபதிவு இதோ.... 2011 இல் தல செய்த முதல் சாதனை இது. மேலோட்டமாக பார்த்தால் இதில் என்ன சாதனை இருக்கிறது என்று தோன்றும். எல்லாமுமே விளம்பரம் என்று மாறி விட்ட இந்த காலகட்டத்தில் , ஊர் ஊருக்கு தனக்கு போஸ்டர் அடித்து , தோரணம் கட்டி , தன் பிறந்த நாளை விமரிச்சையாக கொண்டாட ஆள் இருந்தால் யாருக்குதான் கசக்கும். உங்கள் பின்னால் அப்படி ஒரு கூட்டம் இருந்தால் யோசித்து பாருங்கள், அதை ஒரேயடியாக இழக்க நீங்கள் விரும்புவீர்களா? கஷ்டப்பட்டு ஒரு கட்சி ஆரம்பித்து , படிபடியாக முன்னேறி ஆட்சியை பிடிக்கும் வலிமையோடு இருக்கும்  நிலையில் தன் தொண்டர்களின் நலனுக்காக அந்த கட்சி தலைவர் கட்சியை கலைப்பதற்க்கு சமமான செயல்  இது... அப்படிபட்ட செயலை செய்ய ஒரு மனவலிமை கண்டிப்பாக வேண்டும். அது எங்கள் தலைக்கு நிறையவே இருக்கிறது. அந்த மனவலிமையைவிட தன் ரசிகர்கள் மீது ஒரு அதீத நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையும் அவருக்கு நிறையவே இருக்கிறது. காரணம் அவர் ரசிகர்கள் வருங்காலத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பார் , நாமும் அதில் சேர்ந்து ஒரு எம்‌எல்‌ஏவோ , எம்‌பியோ , சேர்மெனோ , வார்டு கவுன்சிலராகவோ ஆகிவிடலாம் என்று சுய ஆதாயத்துக்காக அவருக்கு மன்றங்கள் ஆரம்பிக்கவில்லை. அவரை ஒரு வழிகாட்டியாக கொண்டே தங்களை மன்றங்களில் இணைத்து கொண்டவர்கள். எனவே அவர் எவ்வழியில் செல்கிறாரோ அதுவோ அவர்களுக்கும் வழி. மங்காத்தாவின் மாபெரும் வெற்றியே அவர்கள் தங்கள் தலைவன் மேல் வைத்திருக்கும் அன்பிற்க்கு பெரிய உதாரணம்.

  1. கிங் ஆப் ஒபெனிங்க் டூ எம்பெரர் ஆப் ஒபெனிங்க்

         

இந்த வாரம்   ஒரு பெரிய இயக்குனரின் இயக்கத்தில் ஒரு பெரிய நடிகர் நடித்து ஒரு படம் வெளிவந்தது.  ஆனால் திரையரங்கின் உள்ளே வெறும் ஐம்பது நபர்கள் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்த நண்பர் ஒருவர் கூறினார். இத்தனைக்கும் அந்த படம் ஏற்கனவே ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிகண்ட ஒரு படத்தின் தழுவல். இத்தனை அம்சங்கள் இருந்தும் அரங்கில் கூட்டம் இல்லை , ஆனால் மங்காத்தா வெளிவந்த நாளில் அஜீத் என்னும் ஒரு மந்திரசொல்லால் திரையரங்கில் கூடிய கூட்டம் ஒரு புதிய வரலாறே படைத்தது. ரஜினியின் எந்திரனுக்கு நிகரான ஒபெனிங்க் அது. பாசத்தை வெளிபடுத்த மன்றங்கள் தேவையில்லை என்று மற்ற நடிகர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தது அன்று மங்காத்தா காட்டிய ஒபெனிங்க். அதுவரை கலையுலகில் கிங் ஆப் ஒபெனிங்க் என்று சொல்லபட்டு வந்த அஜித் ஒரே படத்தில் எம்பெரர் ஆப் ஒபெனிங் ஆனார். எப்பொழுதும் பேனர் , போஸ்டர் , பாலாபிசேகம் என்று களை கட்டும் ஒபெனிங்க் ஷோவில் அன்று இவை எதுவுமே இல்லை , ஆனால் அதையெல்லாம் விட அமோகமாக திரையரங்கினுள் ஒரு திருவிழாவே நடத்தி காட்டினார்கள் தல ரசிகர்கள். சாமியை பார்த்தாலே ருத்ரதாண்டவம் ஆடும் பக்தன் ஒருவன் முன்னாள் அந்த சாமியே ருத்ரதாண்டவம் ஆடினால் அவன் நிலமை எப்படி இருக்கும் , அப்படித்தான் இருந்தது அன்று தல ரசிகர்களின் நிலமையும் திரையில் ருத்ரதாண்டவம் ஆடிய தலயை பார்த்து.

  1. மங்காத்தாவின் மாபெரும் வெற்றி
     

தமிழகத்தில் மட்டும் இல்லை , படம் எங்கெல்லாம் வெளியாகியதோ அங்கெல்லாம் அமோக வெற்றி பெற்ற படம் எந்திரனுக்கு பிறகு மங்காத்தா மட்டுமே. சென்ற வருடம் வந்த சில படங்கள் அவ்வளவு வசூல் , இவ்வளவு வசூல் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர்களாலும்  , ஹீரோக்களின் சிள்வண்டு ரசிகர்களாலும் அடித்து விடபட்டது  .. தீபாவளிக்கு வந்த ஒரு மரண மொக்கையை கூட அந்த ஹீரோவின் ரசிகர்கள் முதல் நாளே 10 கோடி வசூல் இருபது கோடி வசூல் என்று பினாத்தி கொண்டு அலைந்தார்கள் ... அவர்களின் பினாத்தல்களுக்கெல்லாம் ஒரே காரணம், மங்காத்தாவில் தல ஆடிய வசூல் ருத்ரதாண்டவம். படத்தை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம் படத்தின் மொத்த வசூல் 130 கோடி என்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அஜித்தின் போட்டியாளர் என்று சொல்லபடும் ஒரு நடிகர் நடித்து சென்ற வருடம் வெளிவந்த இரண்டு படங்களும் சேர்ந்தே அவ்வளவு வசூலை கொடுத்திருக்காது. தமிழ் நாட்டில் மட்டும் இல்லை ஆந்திரா , கேரளா என்று பிற மொழிகளிலும் அந்த மொழிபடங்களை விட அதிக வசூலை குவித்தது படம். மும்பையில் சாதாரணமாக ஒரு தமிழ் படம் நான்கு நாட்கள் ஓடுவதே பெரிய விஷயம். ரஜினியின் எந்திரன் மட்டுமே (தமிழ் வெர்ஷன்) இருபது நாட்களுக்கு மேல் ஓடியது. அதன் பின்னர் மங்காத்தா மும்பை திரையரங்குகளில் இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. இந்த படத்தின் சாதனையை சுருங்க சொல்ல வேண்டும் என்றாள் , இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறி  கூட்டமே இல்லாமல் போன காரணத்தால் சென்னையிலும் , தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மங்காத்தாவை மறு வெளியீடு செய்திருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். மொத்தத்தில் மங்காத்தா சென்ற வருடம் ரஜினி படம் வெளிவராத குறையை பாக்ஸ் ஆஃபிஸில் தீர்த்து வைத்திருக்கிறது...


  1. பாக்ஸ் ஆஃபிஸ் மட்டுமில்லை இணையமும் தல கோட்டைதான்
           

       சென்ற வருடம் கூகிள் தேடல்களில் படங்கள் பிரிவில் இந்திய அளவில் 7 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது மங்காத்தா. அந்த பிரிவில் தமிழில் இருந்து இடம் பிடித்த ஒரே படம் அது மட்டுமே. சென்ற வருடம் ரஜினி , கமல் படங்கள் மட்டுமே வெளிவரவில்லை , அதை தவிர்த்து அத்துணை நடிகர்களின் படங்களும் வெளிவந்திருந்தது. ஆனால் அவர்களின் படங்கள் எல்லாம் இணையதள தேடலில் இடம்பிடிக்க முடியவில்லை. இந்த செய்தி படத்திர்க்கு எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பதர்க்கும் , அதை படம் எவ்வளவு நேர்த்தியாக பூர்த்தி செய்திருந்தது என்பதர்க்கும் மிக சிறந்த உதாரணம். அதைவிட இணையத்திலும் தல அஜீத்திற்க்கே அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக காட்டியிருக்கிறது.  ரஜினிக்கு அடுத்து எங்களுக்குதான் அதிக ரசிகர்கள் என்று வாய்சவாடல் விடும் எந்த நடிகனின் படங்களும் இதில் வரவில்லை. இதிலும் பேசாமலே மௌனமாக தலையும் அவர் ரசிகர்களும் ஜெயித்திருக்கிறார்கள்.

அதே போல விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் இணையங்களில் சினிமாவின் பங்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து வரும் அலெக்ஸ் என்பவர் தமிழ் நாட்டில் ரஜினிக்கு சமமாக இணையத்தில் தேடப்படும் ஒரே நடிகர் அஜீத் மட்டும்தான் என்று வெளிபடையாகவே தெரிவித்திருந்தார். பாக்ஸ் ஆஃபிஸ் மட்டும் இல்லை இணையமும் தல கோட்டைதான் என்பதற்க்கு இவை இரண்டை விட வேறு ஆதாரம் தேவையா?



இவை தவிர டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்ட இந்தியாவின் சிறந்த பத்து ஆண்கள் வரிசையில் இடம்பிடித்தது , திரையுலகில் அம்பது படங்களை தாண்டியது என்று இன்னும் நிறைய சாதனைகள் அவர் சென்ற ஆண்டு நிகழ்தினார். மொத்தத்தில் 2011 தமிழ் சினிமாவில் தல ஆண்டு... இனி வரும் வருடங்களும் சொந்த வாழ்க்கையிலும் , திரை வாழ்க்கையிலும் தல அஜித்துக்கு சிறந்த ஆண்டாக அமைய ஒரு ரசிகனாக இறைவனை வேண்டி கொள்கிறேன்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்துக்கள்


10 comments:

SATHISH said...

FLOPS AND HITS NEVER CHANGE THALA'S FATE....

FLOPS AND HITS NEVER DISTRACTS THALA'S FANS

FLOPS AND HITS NEVER CHANGE THALA'S OPENING

FLOPS AND HITS NEVER CHANGE THALA'S CHARACTER

BCOS THALA IS ORIGINAL...THALA FANS ARE TRUE LOVERS OF HIM...

AAYIRAM FLOP KODUTHAALUM.. AAYIRAM HIT KODUTHAALUM FIRST DAY FIRST SHOW KANDIPAA PAARPOM...

I KNOW ONE ACTOR WITH KIND HEARTED, HE IS MY LOVELY AJITH.

2012 - BILLA 2 WILL ROCK


THANKS APKR FOR SUCH A NICE BLOG ABOUT THALA

Rocket Ranga said...

Neengal sonna antha Sun TV account oru fake account. Antha account ippa Twitter'laye illa. Vena check pannikunga.

New year vanthu ithana naal kalichu itha eluthi irukarathuku ore ore kaaranam thaan iruka mudiyum

"Ore pakkam karuguthe, oru pakkam pugayuthe" on Nanban.

Appuram oru kelvi, Vijay padam epavume Pongal, Diwali maathiri festival time'la varuthu. Aana, Ajith padam epavume solo'va thaa releaese panraanga. Enna boss, Alwar effect unga Ajith kitta irunthu innum pogala pola.

Unga Emperor of Opening caption paarthavudane enaku MTR Gulab Jamoon add thaan nyabagam varuthu.

Appuram neenga Velayudham, Nanban padangala pathi eluthi irukarathu, ungaluku oru mana nimmathia kodutha santhosam :D :D :D :D

Anyways, Pongal nalvaalthukkal...

"ராஜா" said...

Rocket ranga

boss ippa ithai ezhutha reason time illamal ponathe. Nan konjam busy so nanban innum parkkavillai. 3 idiots padathai appadiye color xerox eduthal prasanth nadithu prabhu deva direct seithalum hit akum enpathu en karuthu. Anyway nan antha visayathukkul iranga virumbavillai. Pongal vazhthukkal

"ராஜா" said...

Emperor of opening patri yetho kalaithiruntheerkal. Nan ungaludan sandai poda virumbavillai. Ungalukku neramum kaiyil oru pocket jelusilin mathiraiyum kidaithal billa 2 velivarum pothu then thamizhakathin yethavathu oru arangirkku sendru fdfs parkavum. Nan solliyathu umakku vilankum

Karthikeyan said...

தல பொங்கல்ன்னு டைட்டில் கொடுத்திருக்கலாம் ராஜா.. பொருத்தமாக இருந்திருக்கும்.

அனைவருக்கும் இனிய உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Rocket Ranga said...

Nichaiyamaaga Vijay Ajith padangal ore naalil veli varum patchathil Vijay pada FDFS'ai kooda thavirthu vittu Ajith pada FDFS paarthu avarin Mass patri therinthu kolla avalaaga irukeren.

Ennai pondra non-Ajith fans ku avarin mass patri therinthu kolla Anjanayerum, Aalwaarum arul purivaaraga...

Kosuru: Ungaluku therinthirika vitaal, FYI...Sila naatkaluku munbaaga Maatraan and Billa II gonna clash on April 14th endru seithi vanthathu. Ipoluthu Tamil Puthaandil Thupaaki sarva nichaiyamaaga vedika pogirathu endru seithi varugirathu.

"ராஜா" said...

rocket ranga

எத்தனை கெட்டப்புல வந்தாலும் உங்க கொண்டை உங்கள காட்டி கொடுத்திருது...

நான் முந்தின கமெண்டில் சொல்லியதை நீர் சரியாக வாசிக்கவில்லை போலும்... பில்லா 2 வரும்பொழுது என்றுதான் சொன்னேன் , அதிலிருந்தே தெரியவில்லையா? அதனோடு எத்துணை படங்கள் வந்தாலும் சரி எங்கள் ஒபெனிங்க் எப்பொழுதும் மாஸ் தான் என்பது சர்வ நிச்சயமான ஒன்று...

சரி நண்பன் படம் வெளிவந்த நாளில் எந்த சூப்பர் ஸ்டார் , அல்டிமேட் ஸ்டார் படமாவது வெளிவந்ததா? இல்லை பவர் ஸ்டார் படமாவது வந்தாதா? ஆனால் உங்கள் படத்தின் ஒபெனிங்க் விட நாலு வருசத்துக்கு முன்னாடி வந்த வடிவேலுவின் இம்சை அரசன் ஒபெனிங்க் அதிகமாக இருந்ததாக பேசிக்கிறாங்களே பாஸ் அது உமக்கு தெரியுமா?

Yoganathan.N said...

Superb :)

2012-உம் நம் வருடமே... சந்தேகமில்லை... :)

Yoganathan.N said...

ஆஞ்சனேயாவும் ஆள்வாரும் பற்றி பேச தெரிந்த சிலருக்கு பரமசிவன்‍‍-ஆதி மற்றும் வில்லன்-பகவதி நினைவில் இல்லாமல் போயிற்றே...
What a sad and pathetic state some people are in... May God bless them...

"ராஜா" said...

yoga bro

அவர்களுக்கு ஆதியும் பகவதியும் அருள்புரியவில்லையாம்...

LinkWithin

Related Posts with Thumbnails