Followers

Copyright

QRCode

Monday, January 16, 2012

நண்பன், வேட்டை - ஒரு பார்வை


தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் பார்க்கும்படியான
 ஒரு நகைசுவை திரைப்படம் , இதில் ஆச்சரியம் என்னெவென்றால் இந்த 
படத்தை இயக்கியிருப்பது  ஷங்கர் என்பதுதான். இதுவரை தன்னுடைய
 படங்களையே ரீமேக் செய்து கொண்டிருந்தசங்கர் முதல் முறையாக 
அடுத்தவரின் திரைப்படத்தை ரீமேக் செய்திருக்கிறார். சுஜாதா இருந்திருந்தால்
 அவருக்கு கண்டிப்பாக இந்த நிலை வந்திருக்காது. ஆனால் இதனால் நடந்திருக்கும்
 ஒரு நல்ல விஷயம்   தமிழுக்கு ஒரு அருமையான திரைப்படம் கிடைத்திருப்பதே. ஷங்கர் இனிமேலாவது ஊழலை ஒழிக்கிறேன் தனிமனித ஒழுக்கத்தை சீற்படுத்துகிறேன் என்று மொக்கை படங்களை எடுக்காமல் ஹிந்தியிலும் வேறு சில மொழிகளிலும் வந்த சிறந்த சில படங்களை தமிழாக்கம் செய்யலாம். அந்த திறமை அவரிடம் நிறையவே இருக்கிறது என்பதை நண்பன் நன்றாகவே எடுத்துரைக்கிறது.பின்னே மொக்கை நடிகர்களும் அதைவிட மொக்கையான இசையமைப்பாளரையும் வைத்து கொண்டு 3 இடியோத்ஸ் மேஜிக்கை அப்படியே இந்த படத்திலும் கொண்டுவந்திருப்பது சாதாரணமான விசயமில்லை. ஷங்கர் அதை சாதித்திருக்கிறாரே.

முதலில் படத்தின் பிளஸ் என்னேவேன்ன என்று பார்ப்போம்  இது 3 idiots
படத்தின் ரீமேக் என்பதை விட பெரிய பிளஸ் வேறு எதுவும் இந்த படத்துக்கு தேவையில்லை. அந்த படத்தின் மேஜிக்கில் பாதியை கொண்டுவந்தாலே போதும் படம் கண்டிப்பாக ஹிட். பிரசாந்த் நடித்து பிரபு தேவா இயக்கியிருந்தால் கூட இது சாத்தியமே. ஆனால் அந்த படத்தை நூறு சதவீதம் கொஞ்சம்கூட சிதையாமல் தமிழ்படுத்துவது கொஞ்சம் சவாலான விசயமே. சங்கர் வென்றது இதில்தான். பாடல்களை தவிர வேறு எதிலும் கைவைக்காமல் அப்படியே செராக்ஸ் எடுத்ததும் ஒருவகையில் நல்லதுதான்.படத்தின் ஜீவன் சிதையவில்லை.

இரண்டாவது பிளஸ் ஒரு சில கதாபாத்திரங்களின் தெரிவு. குறிப்பாக சத்தியன் ஜீவா ஸ்ரீகாந்தின் அப்பாவாக வருபவர். சத்தியன் தைரியமாக இதுதான் தன்னுடைய முதல் படம் என்று சொல்லிகொள்ளலாம். ஹிந்தி பட கதாபாத்திரத்தின் உடல் மொழியை இம்மி பிசகாமல் அப்படியே கொண்டுவர முயற்சித்து அதில் ஏறக்குறைய  வெற்றியும் பெற்றிருக்கிறார். அடுத்து ஜீவா சிவா மனசு சக்தி படத்தைஒத்த  கதாபாத்திரம் , கஷ்டமே இல்லாமல் பட்டைய கிளப்பியிருக்கிறார்.
 ஆனால்ஒருசில சீரியஸ்ஷான காட்சிகளில் மட்டும் சொதப்பியிருக்கிறார்.  ஒரிஜினல் படத்தை விட இந்த படத்தில் சில காட்சிகள் நன்றாக வந்திருகிறது அதில் ஒன்று ஸ்ரீகாந்த் அவர் அப்பாவிடம் மனம் விட்டு பேசும் காட்சி , அந்த காட்சி சிறப்பாக அமைய காரணம் அப்பா கதாபத்திரத்தில் நடித்திருக்கும் நடிகரின் இயல்பான நடிப்பே.  ஒரு நடுத்தர குடும்ப தலைவரை அப்படியே கண்முன்னே நிறுத்தியுள்ளார்.

படத்தின் அடுத்த பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு. ஒரிஜினலை அப்படியே சங்கர் கொண்டுவர முடிந்ததில் ஒளிப்பதிவாளரின் பங்கு நிறையவே உண்டு.   கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு.

அடுத்து எனக்கு தெரிந்து படத்தின் சில மைனஸ்கள். முதலில் இலியானா , 3 இடியோத்ஸ் படம் பார்க்காதவர்களுக்கு எப்படியோ  ஆனால் அந்த படத்தை பார்த்தவர்களுக்கு கரீனா கபூரின் இடத்தில் இவரை நினைத்துகூட பார்க்கமுடியாது  பேசாமல் ஷங்கர் இன்னும் ஒரு ஐந்து கோடி அதிகம் செலவு செய்து கரீனா கபூரையே நடிக்க வைத்திருக்கலாம். அந்த கதாபாத்திரத்தில் அவரை யாராலும் ரீ பிளேஸ் செய்ய முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அடுத்து பின்னணி இசை ,ஹாரிஸ் இந்த படத்துக்கு ரீ ரெகார்டிங் செய்வதற்கு முன்  பழைய இளையராஜா-பாலுமகேந்திரா , இளையராஜா-மகேந்திரன் கூட்டணி படங்களை ஒருமுறை பார்த்துவிட்டு அதில் வரும் பின்னணி இசையை அப்படியே இன்றைய காலத்திருக்கு ஏற்றவாறு மாற்றி போட்டிருக்கலாம். படம் பல இடங்களில் ஒரிஜினலை விட ஒரு படி கீழே இறங்க காரணம் இவரின் பின்னணி இசையே.

 மூன்றாவது மைனஸ் என்னவென்று நான் இங்கே எழுதினால் பின்னூட்டத்தில் ஒரு கும்பல் என்னை சராமரியாக கெட்ட வார்த்தைகளால் திட்ட வாய்ப்பு அதிகம் என்பதால் அமீர்கானிடம்  மன்னிப்பு கேட்டு கொண்டு அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். அமீர்கான் சங்கரோடு சேர்த்து என்னையும் மன்னிப்பாராக. எப்பொழுதும் தூங்கி எழுந்ததை போன்று இருக்கும்  முக அமைப்பை சங்கர் எப்படி கவனிக்காமல்  விட்டாரோ தெரியவில்லை .கேமராவை பார்க்காமல் வேறு எதையோ பார்த்து கொண்டு பேசினால் அமீர்கானின் உடல் மொழி  வந்து விடும் என்று யார் சொல்லிகொடுத்தார்கள் என்று தெரியவில்லை பல காட்சிகளில் அந்த கதாபாத்திரம் அப்படிதான்திரையில் பேசுகிறது.ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இதேபடம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் இந்த படத்தில் அமீர்கானை ரீபிளேஸ் செய்ய கூடிய ஒரே ஆள் அந்த பழைய கார்த்திக் மட்டுமே....  ஆனால் இந்த  படத்தின்  ஒரே  ஆறுதல்  படத்தின்  கதாநாயகன்  ஓவர் பில்ட்அப் எதுவும் இல்லாமல் அடக்கி வாசித்திருப்பதே.  இமேஜ்  பார்க்காமல்  எல்லோரிடமும் அடிவாங்கியதை கண்டிப்பாக பாராட்டலாம்.


அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரிந்திருந்தாலும் அதை தமிழில் பார்க்க போகிறோம் என்பதால் ஒரு சுவாரஷ்யம் இருந்துகொண்டேதான் இருந்தது , எனவே 3இடியோத்ஸ்  பார்த்தவர்களுக்கும் இந்த படம் போர் அடிக்காது என்பது படத்தின் வெற்றிக்கு பக்கபலமான விசயமே

மொத்தத்தில் நண்பன் ஷங்கரின் "optimal remake "....தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டும் தங்கள் தகுதிக்கு மீறி புகழபடுகிரார்கள். அதில் முதன்மையானவர் கௌதம் மேனன் அடுத்த இடம் சேரன் , அந்த லிஸ்டில் லிங்குசாமிக்கும் இடம் உண்டு . சண்டைகொழியோடு அவருக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்பதை பீமா , பையா படங்களை பார்த்தால் புரியும். ஆனால் இன்னமும் எனக்கு திறமை இருக்கிறது என்று பிடிவாதமாய் அவர் இயக்கி இருக்கும் படம்தான் வேட்டை. வறட்டு பிடிவாதம் என்னவாகும் என்பதற்கு வேட்டை ஒரு நல்ல உதாரணம்.

குடியிருந்த கோயிலில் இருந்து அட்டகாசம் வரை பல ஹீரோக்களுக்கு  கைகொடுத்த ஆள்மாறாட்ட கதைதான் வேட்டையும். 
ரௌடிங்க ஆள் வச்சி அடிக்கும் பொது போலீஸ்ஆள் வச்சி அடிக்க கூடாதா 
என்ற சுவாரஷ்யமான ஒருவரிதான் முதல் பாதி. அடுத்தடுத்தசுவாரஷ்யமான 
காட்சியமைப்புகளால் கலகலப்பாக போகிறது முதல்பாதி. அதுவரை வில்லன்களை
 வேட்டையாடியபடம் , இடைவேளை முடிந்தவுடன் வில்லன் ஆள்மாராட்டத்தை 
கண்டிபிடித்தவுடன்பார்க்கும் நம்மை வேட்டையாட ஆரம்பித்து விடுகிறது.

மாதவனுக்கு தைரியம் வர வேண்டும் என்பதற்காக ஆர்யா அடிவாங்கும் காட்சி,
ஒரு வீடியோகேமராவைவைத்துகொண்டு வில்லன் ஆள்மாராட்டத்தை 
கண்டுபிடிக்கும் காட்சி , பாதிக்கப்பட்ட போலீஸ்காரரை வைத்தே வில்லனின் 
அடியாளை போட்டு தள்ளும்காட்சி , வீட்டுக்குள் ரௌடிகள் நுழைந்ததும் 
சமீரா எனக்கு வலித்தாலும் பரவாயில்லை ஒருத்தனும் வீட்டை விட்டு 
உயிரோடு போககூடாது என்று வசனம் பேசும் காட்சி என்று படத்தில் வயிறு
 குலுங்க சிரிக்க நிறைய காட்சிகள்.

யுவனின் பாடல்கள் சுமார் ரகம். பையாவில் தன உழைப்பை கெடுத்த லிங்குவை
 வேட்டையில் நன்றாகவே பலி வாங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். பப்பரப்பா
 பாடல் படமாக்கிய விதம் யுடுப்பில் பார்த்த அளவுக்கு கூட சுவாரஷ்யமாக இல்லை.
 பின்னணி இசையில் யுவன் தான் இளையராஜாவின் வாரிசு என்பதை நிரூபித்து இருக்கிறார்.
 மொக்கை காட்சிகளுக்கும் ஒரு பரபரப்பை உருவாக்கியிருக்கிறது அவரின் பின்னணி இசை.
படத்தின் பெரிய குறை திரைகதை. அதுவும் இரண்டாம் பாதியில் திரைகதை  மொத்தமாக கவிழ்ந்து விட்டது.
 பீமாவும் பையாவும் எச்சரிக்கை மணி அடித்தும் கண்டுகொள்ளாத லிங்குசாமி என்னும்
 இயக்குனருக்கு சாவு மணி அடித்திருக்கிறது இந்தவேட்டை .    


 டிஸ்கி -எவ்வளவோ முயன்றும் அளிஞ்மென்ட்  சரியாக வரவில்லை .... உங்கள் பொறுமையை சோதித்திருந்தால் மன்னிக்கவும்  

21 comments:

ra chandiramouliswarajonsn said...

NOW HE IS NOT LINGU SAMY ....THONGU SAMY ....TAMIL FIELD IS FULL OF OVER PUBLICITY BUILD UPS ETC., LIKE SEHWAG, TENDULKAR, HARBHAJAN ETC.,

Karthikeyan said...

ராஜா.. நண்பனை பார்த்தேன். பேசாமல் படத்திற்கு ஜவ்வு மிட்டாய்னு பேர் வச்சிருக்கலாம். அவ்வளவு இழுவை. விஜயின் தீவிர ரசிகையான என் வீட்டம்மாவே எப்பங்க படம் முடியும்னு கேக்குற அளவுக்கு படம் இருந்தது. ஆனால் இரண்டு தியேட்டரிலும் ஹவுஸ் புல்.

"ராஜா" said...

//பேசாமல் படத்திற்கு ஜவ்வு மிட்டாய்னு பேர் வச்சிருக்கலாம். அவ்வளவு இழுவை. விஜயின் தீவிர ரசிகையான என் வீட்டம்மாவே எப்பங்க படம் முடியும்னு கேக்குற அளவுக்கு படம் இருந்தது. ஆனால் இரண்டு தியேட்டரிலும் ஹவுஸ் புல்.

ஸார் படம் எனக்கு பிடித்திருந்தது... ஆனால் வழக்கமான விஜய் படங்களை ரசிக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் பிடிப்பது கஷ்டமே.. நீங்கள் 3 idiots ஏற்கனவே பாத்துட்டீங்களோ?

"ராஜா" said...

//பேசாமல் படத்திற்கு ஜவ்வு மிட்டாய்னு பேர் வச்சிருக்கலாம். அவ்வளவு இழுவை. விஜயின் தீவிர ரசிகையான என் வீட்டம்மாவே எப்பங்க படம் முடியும்னு கேக்குற அளவுக்கு படம் இருந்தது. ஆனால் இரண்டு தியேட்டரிலும் ஹவுஸ் புல்.

ஸார் படம் எனக்கு பிடித்திருந்தது... ஆனால் வழக்கமான விஜய் படங்களை ரசிக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த படம் பிடிப்பது கஷ்டமே.. நீங்கள் 3 idiots ஏற்கனவே பாத்துட்டீங்களோ?

Jayadev Das said...

நண்பன்: நடுவு நிலையான விமர்சனம், மற்ற பதிவர்கள் மாதிரி ஓவர் ஜால்ரா போடவில்லை. Good!!

virumandi said...
This comment has been removed by a blog administrator.
"ராஜா" said...

//நண்பன்: நடுவு நிலையான விமர்சனம், மற்ற பதிவர்கள் மாதிரி ஓவர் ஜால்ரா போடவில்லை. Good!!

நன்றி

//விருமாண்டி

ஓடி போய்டு .. இந்த ஏரியா பக்கம் இன்னொருதடவ பாத்தேன் மவனே அப்பறம் பால்டாயில்தான் ...

Karthikeyan said...

ராஜா.. நான் இந்தி படங்கள் அவ்வளவு விரும்பி பார்ப்பதில்லை. அதனால் 3 இடியட்ஸ் பார்க்கவில்லை. நண்பனின் இரண்டாம் பாதி உங்களுக்கு உண்மையிலேயே பிடித்திருக்கிறதா? கல்யாண மேடையில் இருக்கும் ஒரு பெண் சில வருடங்களாக தொடர்பில் இல்லாத பழைய காதலனுக்காக முற்றிலும் தொடர்பில் இல்லாத காதலனின் நண்பனுடன் ஓடிப்போவாளா?

"ராஜா" said...

//கல்யாண மேடையில் இருக்கும் ஒரு பெண் சில வருடங்களாக தொடர்பில் இல்லாத பழைய காதலனுக்காக முற்றிலும் தொடர்பில் இல்லாத காதலனின் நண்பனுடன் ஓடிப்போவாளா?

ஸார் 3 idiots படத்திலும் அந்த காட்சி இதைபோன்றே அமைக்கபட்டிருக்கும். அதையே சங்கர் அப்படியே எடுத்துள்ளார் ... இதை போன்ற லாஜிக் மீறல்கள் படத்தில் நிறைய உண்டு .. ஆனால் ஹிந்தி வெர்ஷனில் அவையெல்லாம் பெரியதாக கண்டுகொள்ளபடவில்லை. காரணம் அவர்கள் இந்த படத்தை ஒரு சிறந்த நகைசுவை படமாகவே பார்த்தார்கள். ஆனால் இங்கேதான் 3 idiots என்றாலே ஏதோ பெரிய சமூக சீர்திருத்த படம் போன்ற ஒரு மாயயை உருவாக்கிவிட்டார்கள், மேலும் சங்கர் இயக்குகிறார் என்பதால் தானாகவே அப்படி ஒரு மாயை உருவாகிவிட்டது. அதனால் இதை போன்ற லாஜிக் மீறல்கள் இங்கே பெரியதாக பார்க்கபடுகிறது. அதையெல்லாம் மறந்து விட்டு ஒரு நல்ல பொழுது போக்கு நகைசுவை திரைப்படம் என்று மட்டும் பார்த்தால் இந்த படம் பிடிக்கலாம்...

படம் நகைசுவை என்பதையும் தாண்டி ஃபீல் குட் மூவி என்று சொல்லமுடியாததற்க்கு காரணம் நீங்கள் சொல்லியிருக்கும் லாஜிக் மீறளை போன்ற பல காட்சிகளில் காணாமல் போன லாஜிக்கே...

"ராஜா" said...

பிரசவம் பார்க்கும் காட்சி , ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவர் உலகம் போற்றும் சைண்டிஸ்டாக இருப்பது , கம்பெனி ஒன்றின் எம்‌டி (சத்யன்) ரொம்பவும் மொக்கையாக சிறுபிள்ளைதனமாக பேசுவது , ஒரு கல்லூரியில் ஆளாளுக்கு பேண்டை கழட்டி போட்டு ஜட்டியோடு நிற்பது என்று நிறைய சொல்லலாம் படத்தில் ... தமிழ் ரசிகர்கள் இதையெல்லாம் பெருசாக ரசிக்க மாட்டார்கள் என்பது ஷங்கருக்கு புரியாமல் போனது வியப்புதான்...

Karthikeyan said...

//ஆசிரியராக வேலை பார்க்கும் ஒருவர் உலகம் போற்றும் சைண்டிஸ்டாக இருப்பது// அதுவும் டீக்கடை கூட இல்லாத தனுஷ்கோடியில் ஸ்கூல் நடத்துறார். ஒரிஜினல் சங்கர் படத்துலயே லாஜிக் இருக்காது.

Arul said...

mokka review

virumandi said...

paaltaail la indha maadhiri sinna pulla thanama thala rasigana thavara vera yaaralayum panna mudiyadhu.ne vaera comedy pannatha pa

"ராஜா" said...

Kanda eduththula kandatha thinnittu yenda inga vanthu vanthi edukkurenga

Rocket Ranga said...

பிரசாந்த் நடித்து பிரபு தேவா இயக்கியிருந்தால் கூட இது சாத்தியமே.

Naanum sila varudangaluku munbu Main Hoon Na endra SRK'yin blockbuster movie paarthu vittu, ada ithai Tamil'il Ajith nadithu Raju Sundaram iyaki irunthaal sema hit aagume endru ninaithathu undu...

Rocket Ranga said...
This comment has been removed by the author.
"ராஜா" said...

mein hoon na padaththin atta kappiya neenga somna padam. nanban 100% cpy of 3 idiots. soldier padathrhai atta kappi eduththa villukooda hit akidum nanba...

Yoganathan.N said...

@ராஜா brother

கமலோட classic படத்தின் பெயரில் இங்க ஒண்ணு சுத்துதே... அதோட கமெண்ஸ் எல்லாம் ஏன் approve பண்றேள்???

ஆனா, ஒரு விசயம் ரொம்ப சரியா சொண்ணீங்க... அந்த creature பத்தி எழுதாமலே அந்த 'கும்பல்' இப்படி குரைக்குதுங்க... எழுதிரிந்தீங்கண்ணா...

"ராஜா" said...

yoganathan bro..

சில ஜென்மங்கள் அப்படிதான் .. அதுகளையெல்லாம் கண்டுக்கவே கூடாது ... அவன் லெவலுக்கு நான் கீழிறங்கி கமெண்ட் போடவும் எனக்கு விருப்பமில்லை , அவனுக்காக கமெண்ட் மாடரேஷன் போடுற அளவுக்கு அவன் வொர்த்தும் இல்லை .. பிரீயா விடுங்க ...

கார்க்கி said...

எப்ப‌டி எழுதியிருப்பிங்க‌ன்னு பார்க்க‌ வ‌ந்தேன்.. செம‌யா பாயின்ட்ட‌ புடிச்சு எழுதிட்டிங்க‌.. யாராச்சும் கேட்டா அமீர‌ விட‌ ந‌ல்லாவா ந‌டிச்சாருன்னு ஒரு கேள்வி கேட்டா போதும்.. நிஜ‌மா புத்திசாலித்த‌ன‌ம் :))

அப்புற‌ம், சைடு பாரில‌யும் சாள‌ர‌த்த‌ காணோம். :)

"ராஜா" said...

கார்க்கி உங்களுக்கு சச்சினே பிடிக்கும் என்பதால் நன்பனில் விஜய் நடிப்பை ரசிக்க முடியும் ... என்னை போன்ற அஜித் ரசிகனை விடுங்கள் , ரெண்டு கோஷ்டியிலும் சேராத நடுநிலை மக்களே சொல்லுகிறார்கள் விஜய் இதுக்கு சரிபட்டு வரவில்லை என்று , நீங்க என்ன சொன்னாலும் அதுதான் உண்மையும் ...

சைடு பார் விஷயம் முன்பு நடந்த ஒரு கசப்பான சம்பவத்தினால் நிகழ்ந்தது ... அங்கே சாளரம் இல்லாவிட்டாலும் நான் உங்களின் எல்லா பதிவுகளையும் படித்து விடுவேன்... அஜித் ரசிகனாக நான் உங்களுடன் சண்டை போட்டாலும் விஜய் அஜித் நீங்கலாக உங்களின் மற்றைய பதிவுகளுக்கு நான் ரசிகன் ... ஆனால் நான் ஏதாவது எழுதி அது தவறாக interpret ஆகும் வாய்ப்பு இருப்பதால் கமெண்ட் போடுவதில்லை... இப்பொழுதும் பதிவுலகில் நான் inspirationஆக எடுத்துகொள்ளும் எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்தான்

LinkWithin

Related Posts with Thumbnails