Followers
Copyright
Thursday, January 19, 2012
Monday, January 16, 2012
நண்பன், வேட்டை - ஒரு பார்வை
தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் பார்க்கும்படியான
ஒரு நகைசுவை திரைப்படம் , இதில் ஆச்சரியம் என்னெவென்றால் இந்த
படத்தை இயக்கியிருப்பது ஷங்கர் என்பதுதான். இதுவரை தன்னுடைய
படங்களையே ரீமேக் செய்து கொண்டிருந்தசங்கர் முதல் முறையாக
அடுத்தவரின் திரைப்படத்தை ரீமேக் செய்திருக்கிறார். சுஜாதா இருந்திருந்தால்
அவருக்கு கண்டிப்பாக இந்த நிலை வந்திருக்காது. ஆனால் இதனால் நடந்திருக்கும்
ஒரு நல்ல விஷயம் தமிழுக்கு ஒரு அருமையான திரைப்படம் கிடைத்திருப்பதே. ஷங்கர் இனிமேலாவது ஊழலை ஒழிக்கிறேன் தனிமனித ஒழுக்கத்தை சீற்படுத்துகிறேன் என்று மொக்கை படங்களை எடுக்காமல் ஹிந்தியிலும் வேறு சில மொழிகளிலும் வந்த சிறந்த சில படங்களை தமிழாக்கம் செய்யலாம். அந்த திறமை அவரிடம் நிறையவே இருக்கிறது என்பதை நண்பன் நன்றாகவே எடுத்துரைக்கிறது.பின்னே மொக்கை நடிகர்களும் அதைவிட மொக்கையான இசையமைப்பாளரையும் வைத்து கொண்டு 3 இடியோத்ஸ் மேஜிக்கை அப்படியே இந்த படத்திலும் கொண்டுவந்திருப்பது சாதாரணமான விசயமில்லை. ஷங்கர் அதை சாதித்திருக்கிறாரே.
முதலில் படத்தின் பிளஸ் என்னேவேன்ன என்று பார்ப்போம் இது 3 idiots
படத்தின் ரீமேக் என்பதை விட பெரிய பிளஸ் வேறு எதுவும் இந்த படத்துக்கு தேவையில்லை. அந்த படத்தின் மேஜிக்கில் பாதியை கொண்டுவந்தாலே போதும் படம் கண்டிப்பாக ஹிட். பிரசாந்த் நடித்து பிரபு தேவா இயக்கியிருந்தால் கூட இது சாத்தியமே. ஆனால் அந்த படத்தை நூறு சதவீதம் கொஞ்சம்கூட சிதையாமல் தமிழ்படுத்துவது கொஞ்சம் சவாலான விசயமே. சங்கர் வென்றது இதில்தான். பாடல்களை தவிர வேறு எதிலும் கைவைக்காமல் அப்படியே செராக்ஸ் எடுத்ததும் ஒருவகையில் நல்லதுதான்.படத்தின் ஜீவன் சிதையவில்லை.
இரண்டாவது பிளஸ் ஒரு சில கதாபாத்திரங்களின் தெரிவு. குறிப்பாக சத்தியன் ஜீவா ஸ்ரீகாந்தின் அப்பாவாக வருபவர். சத்தியன் தைரியமாக இதுதான் தன்னுடைய முதல் படம் என்று சொல்லிகொள்ளலாம். ஹிந்தி பட கதாபாத்திரத்தின் உடல் மொழியை இம்மி பிசகாமல் அப்படியே கொண்டுவர முயற்சித்து அதில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றிருக்கிறார். அடுத்து ஜீவா சிவா மனசு சக்தி படத்தைஒத்த கதாபாத்திரம் , கஷ்டமே இல்லாமல் பட்டைய கிளப்பியிருக்கிறார்.
ஆனால்ஒருசில சீரியஸ்ஷான காட்சிகளில் மட்டும் சொதப்பியிருக்கிறார். ஒரிஜினல் படத்தை விட இந்த படத்தில் சில காட்சிகள் நன்றாக வந்திருகிறது அதில் ஒன்று ஸ்ரீகாந்த் அவர் அப்பாவிடம் மனம் விட்டு பேசும் காட்சி , அந்த காட்சி சிறப்பாக அமைய காரணம் அப்பா கதாபத்திரத்தில் நடித்திருக்கும் நடிகரின் இயல்பான நடிப்பே. ஒரு நடுத்தர குடும்ப தலைவரை அப்படியே கண்முன்னே நிறுத்தியுள்ளார்.
படத்தின் அடுத்த பிளஸ் என்று பார்த்தால் ஒளிப்பதிவு. ஒரிஜினலை அப்படியே சங்கர் கொண்டுவர முடிந்ததில் ஒளிப்பதிவாளரின் பங்கு நிறையவே உண்டு. கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு.
அடுத்து எனக்கு தெரிந்து படத்தின் சில மைனஸ்கள். முதலில் இலியானா , 3 இடியோத்ஸ் படம் பார்க்காதவர்களுக்கு எப்படியோ ஆனால் அந்த படத்தை பார்த்தவர்களுக்கு கரீனா கபூரின் இடத்தில் இவரை நினைத்துகூட பார்க்கமுடியாது பேசாமல் ஷங்கர் இன்னும் ஒரு ஐந்து கோடி அதிகம் செலவு செய்து கரீனா கபூரையே நடிக்க வைத்திருக்கலாம். அந்த கதாபாத்திரத்தில் அவரை யாராலும் ரீ பிளேஸ் செய்ய முடியாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அடுத்து பின்னணி இசை ,ஹாரிஸ் இந்த படத்துக்கு ரீ ரெகார்டிங் செய்வதற்கு முன் பழைய இளையராஜா-பாலுமகேந்திரா , இளையராஜா-மகேந்திரன் கூட்டணி படங்களை ஒருமுறை பார்த்துவிட்டு அதில் வரும் பின்னணி இசையை அப்படியே இன்றைய காலத்திருக்கு ஏற்றவாறு மாற்றி போட்டிருக்கலாம். படம் பல இடங்களில் ஒரிஜினலை விட ஒரு படி கீழே இறங்க காரணம் இவரின் பின்னணி இசையே.
மூன்றாவது மைனஸ் என்னவென்று நான் இங்கே எழுதினால் பின்னூட்டத்தில் ஒரு கும்பல் என்னை சராமரியாக கெட்ட வார்த்தைகளால் திட்ட வாய்ப்பு அதிகம் என்பதால் அமீர்கானிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு அதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். அமீர்கான் சங்கரோடு சேர்த்து என்னையும் மன்னிப்பாராக. எப்பொழுதும் தூங்கி எழுந்ததை போன்று இருக்கும் முக அமைப்பை சங்கர் எப்படி கவனிக்காமல் விட்டாரோ தெரியவில்லை .கேமராவை பார்க்காமல் வேறு எதையோ பார்த்து கொண்டு பேசினால் அமீர்கானின் உடல் மொழி வந்து விடும் என்று யார் சொல்லிகொடுத்தார்கள் என்று தெரியவில்லை பல காட்சிகளில் அந்த கதாபாத்திரம் அப்படிதான்திரையில் பேசுகிறது.ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் இதேபடம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் இந்த படத்தில் அமீர்கானை ரீபிளேஸ் செய்ய கூடிய ஒரே ஆள் அந்த பழைய கார்த்திக் மட்டுமே.... ஆனால் இந்த படத்தின் ஒரே ஆறுதல் படத்தின் கதாநாயகன் ஓவர் பில்ட்அப் எதுவும் இல்லாமல் அடக்கி வாசித்திருப்பதே. இமேஜ் பார்க்காமல் எல்லோரிடமும் அடிவாங்கியதை கண்டிப்பாக பாராட்டலாம்.
அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்று தெரிந்திருந்தாலும் அதை தமிழில் பார்க்க போகிறோம் என்பதால் ஒரு சுவாரஷ்யம் இருந்துகொண்டேதான் இருந்தது , எனவே 3இடியோத்ஸ் பார்த்தவர்களுக்கும் இந்த படம் போர் அடிக்காது என்பது படத்தின் வெற்றிக்கு பக்கபலமான விசயமே
மொத்தத்தில் நண்பன் ஷங்கரின் "optimal remake "....
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டும் தங்கள் தகுதிக்கு மீறி புகழபடுகிரார்கள். அதில் முதன்மையானவர் கௌதம் மேனன் அடுத்த இடம் சேரன் , அந்த லிஸ்டில் லிங்குசாமிக்கும் இடம் உண்டு . சண்டைகொழியோடு அவருக்கு சரக்கு தீர்ந்து விட்டது என்பதை பீமா , பையா படங்களை பார்த்தால் புரியும். ஆனால் இன்னமும் எனக்கு திறமை இருக்கிறது என்று பிடிவாதமாய் அவர் இயக்கி இருக்கும் படம்தான் வேட்டை. வறட்டு பிடிவாதம் என்னவாகும் என்பதற்கு வேட்டை ஒரு நல்ல உதாரணம்.
குடியிருந்த கோயிலில் இருந்து அட்டகாசம் வரை பல ஹீரோக்களுக்கு கைகொடுத்த ஆள்மாறாட்ட கதைதான் வேட்டையும்.
ரௌடிங்க ஆள் வச்சி அடிக்கும் பொது போலீஸ்ஆள் வச்சி அடிக்க கூடாதா
என்ற சுவாரஷ்யமான ஒருவரிதான் முதல் பாதி. அடுத்தடுத்தசுவாரஷ்யமான
காட்சியமைப்புகளால் கலகலப்பாக போகிறது முதல்பாதி. அதுவரை வில்லன்களை
வேட்டையாடியபடம் , இடைவேளை முடிந்தவுடன் வில்லன் ஆள்மாராட்டத்தை
கண்டிபிடித்தவுடன்பார்க்கும் நம்மை வேட்டையாட ஆரம்பித்து விடுகிறது.
மாதவனுக்கு தைரியம் வர வேண்டும் என்பதற்காக ஆர்யா அடிவாங்கும் காட்சி,
ஒரு வீடியோகேமராவைவைத்துகொண்டு வில்லன் ஆள்மாராட்டத்தை
கண்டுபிடிக்கும் காட்சி , பாதிக்கப்பட்ட போலீஸ்காரரை வைத்தே வில்லனின்
அடியாளை போட்டு தள்ளும்காட்சி , வீட்டுக்குள் ரௌடிகள் நுழைந்ததும்
சமீரா எனக்கு வலித்தாலும் பரவாயில்லை ஒருத்தனும் வீட்டை விட்டு
உயிரோடு போககூடாது என்று வசனம் பேசும் காட்சி என்று படத்தில் வயிறு
குலுங்க சிரிக்க நிறைய காட்சிகள்.
யுவனின் பாடல்கள் சுமார் ரகம். பையாவில் தன உழைப்பை கெடுத்த லிங்குவை
வேட்டையில் நன்றாகவே பலி வாங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். பப்பரப்பா
பாடல் படமாக்கிய விதம் யுடுப்பில் பார்த்த அளவுக்கு கூட சுவாரஷ்யமாக இல்லை.
பின்னணி இசையில் யுவன் தான் இளையராஜாவின் வாரிசு என்பதை நிரூபித்து இருக்கிறார்.
மொக்கை காட்சிகளுக்கும் ஒரு பரபரப்பை உருவாக்கியிருக்கிறது அவரின் பின்னணி இசை.
படத்தின் பெரிய குறை திரைகதை. அதுவும் இரண்டாம் பாதியில் திரைகதை மொத்தமாக கவிழ்ந்து விட்டது.
பீமாவும் பையாவும் எச்சரிக்கை மணி அடித்தும் கண்டுகொள்ளாத லிங்குசாமி என்னும்
பீமாவும் பையாவும் எச்சரிக்கை மணி அடித்தும் கண்டுகொள்ளாத லிங்குசாமி என்னும்
இயக்குனருக்கு சாவு மணி அடித்திருக்கிறது இந்தவேட்டை .
டிஸ்கி -எவ்வளவோ முயன்றும் அளிஞ்மென்ட் சரியாக வரவில்லை .... உங்கள் பொறுமையை சோதித்திருந்தால் மன்னிக்கவும்
Friday, January 13, 2012
அஜித் 2011
மீண்டும் இது போன்ற
ஒரு வருடம் அஜீத்திற்கும் அவர் ரசிகர்களுக்கும் உடனே அமையுமா என்று தெரியவில்லை, ஆனால் ஒரு அஜீத் ரசிகனாக
ஒவ்வொரு ஆண்டும் இதே போன்றே அமையவேண்டும் என்று விரும்புகிறேன். சென்ற வருடம்
தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களும்
தோல்வி என்னும் வேதனையில் தத்தளித்து கொண்டிருக்க
செய்ததெல்லாம் சாதனையாக அமைந்த ஒரே நடிகர் தல மட்டுமே...
- நான் படிக்கவில்லை , என் ரசிகர்கள் படிக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன்
தமிழ் சினிமாவில் தனக்கு ரசிகர்மன்றங்கள் அதிகம் அமைந்தவுடன் அரசியலில்
இறங்கி அவர்களையெல்லாம் ஓட்டுகளாக மாற்றி கோடிக்கணக்கில் கல்லா
கட்டும் ஆசையோடு இயக்கம் , கட்சி
என்று ரூட் போட்டு முதல்வர் கனவோடு அலையும் காலத்தில்
, என் படம் நன்றாக இருந்து அதை என் ரசிகர்கள் பார்த்தால் போதும் , வேறு
எதுவும் அவர்கள் எனக்காக செய்ய வேண்டாம், குறிப்பாக
ரசிகர் மன்றம் என்ற பெயரில் அவர்கள் எனக்காக
தங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ள
வேண்டாம், நான் படிக்கவில்லை என்
ரசிகர்கள் அனைவரும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று ஆசைபடுகிறேன்
என்று இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்ய துணியாத ஒரு விஷயத்தை செய்தார். தன்
ரசிகர் மன்றத்தை எல்லாம் கலைத்து விட்டார். இது பற்றி நான் விரிவாக எழுதிய ஒருபதிவு இதோ.... 2011 இல் தல செய்த முதல் சாதனை இது. மேலோட்டமாக பார்த்தால் இதில்
என்ன சாதனை இருக்கிறது என்று தோன்றும். எல்லாமுமே விளம்பரம் என்று மாறி விட்ட இந்த
காலகட்டத்தில் , ஊர் ஊருக்கு தனக்கு போஸ்டர்
அடித்து , தோரணம் கட்டி , தன்
பிறந்த நாளை விமரிச்சையாக கொண்டாட ஆள் இருந்தால்
யாருக்குதான் கசக்கும். உங்கள் பின்னால் அப்படி ஒரு கூட்டம் இருந்தால் யோசித்து
பாருங்கள், அதை ஒரேயடியாக இழக்க நீங்கள்
விரும்புவீர்களா? கஷ்டப்பட்டு ஒரு கட்சி
ஆரம்பித்து , படிபடியாக முன்னேறி ஆட்சியை
பிடிக்கும் வலிமையோடு இருக்கும் நிலையில் தன் தொண்டர்களின் நலனுக்காக அந்த கட்சி தலைவர் கட்சியை கலைப்பதற்க்கு சமமான செயல் இது... அப்படிபட்ட செயலை செய்ய ஒரு மனவலிமை கண்டிப்பாக வேண்டும். அது எங்கள் தலைக்கு நிறையவே இருக்கிறது. அந்த
மனவலிமையைவிட தன் ரசிகர்கள் மீது ஒரு அதீத நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையும்
அவருக்கு நிறையவே இருக்கிறது. காரணம் அவர் ரசிகர்கள் வருங்காலத்தில் அவர் கட்சி ஆரம்பிப்பார்
, நாமும்
அதில் சேர்ந்து ஒரு எம்எல்ஏவோ , எம்பியோ , சேர்மெனோ , வார்டு கவுன்சிலராகவோ ஆகிவிடலாம் என்று சுய ஆதாயத்துக்காக
அவருக்கு மன்றங்கள் ஆரம்பிக்கவில்லை. அவரை ஒரு வழிகாட்டியாக கொண்டே தங்களை
மன்றங்களில் இணைத்து கொண்டவர்கள். எனவே அவர் எவ்வழியில் செல்கிறாரோ அதுவோ
அவர்களுக்கும் வழி. மங்காத்தாவின்
மாபெரும் வெற்றியே அவர்கள் தங்கள் தலைவன் மேல்
வைத்திருக்கும் அன்பிற்க்கு பெரிய உதாரணம்.
- கிங் ஆப் ஒபெனிங்க் டூ எம்பெரர் ஆப் ஒபெனிங்க்
இந்த வாரம் ஒரு
பெரிய இயக்குனரின் இயக்கத்தில் ஒரு பெரிய நடிகர் நடித்து ஒரு படம் வெளிவந்தது. ஆனால் திரையரங்கின் உள்ளே வெறும் ஐம்பது நபர்கள்
மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்த நண்பர் ஒருவர் கூறினார்.
இத்தனைக்கும் அந்த படம் ஏற்கனவே ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிகண்ட ஒரு
படத்தின் தழுவல். இத்தனை அம்சங்கள் இருந்தும் அரங்கில் கூட்டம் இல்லை , ஆனால் மங்காத்தா வெளிவந்த நாளில் அஜீத்
என்னும் ஒரு மந்திரசொல்லால் திரையரங்கில் கூடிய கூட்டம் ஒரு புதிய வரலாறே
படைத்தது. ரஜினியின் எந்திரனுக்கு நிகரான ஒபெனிங்க் அது. பாசத்தை வெளிபடுத்த
மன்றங்கள் தேவையில்லை என்று மற்ற நடிகர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தது அன்று
மங்காத்தா காட்டிய ஒபெனிங்க். அதுவரை கலையுலகில் கிங் ஆப் ஒபெனிங்க் என்று
சொல்லபட்டு வந்த அஜித் ஒரே படத்தில் எம்பெரர் ஆப் ஒபெனிங் ஆனார். எப்பொழுதும் பேனர் , போஸ்டர் , பாலாபிசேகம் என்று களை கட்டும் ஒபெனிங்க் ஷோவில் அன்று
இவை எதுவுமே இல்லை , ஆனால்
அதையெல்லாம் விட அமோகமாக திரையரங்கினுள் ஒரு திருவிழாவே நடத்தி காட்டினார்கள் தல
ரசிகர்கள். சாமியை பார்த்தாலே ருத்ரதாண்டவம் ஆடும் பக்தன் ஒருவன் முன்னாள் அந்த
சாமியே ருத்ரதாண்டவம் ஆடினால் அவன் நிலமை எப்படி இருக்கும் , அப்படித்தான் இருந்தது அன்று தல ரசிகர்களின் நிலமையும்
திரையில் ருத்ரதாண்டவம் ஆடிய தலயை பார்த்து.
- மங்காத்தாவின் மாபெரும் வெற்றி
தமிழகத்தில் மட்டும் இல்லை ,
படம் எங்கெல்லாம் வெளியாகியதோ அங்கெல்லாம் அமோக வெற்றி பெற்ற படம் எந்திரனுக்கு
பிறகு மங்காத்தா மட்டுமே. சென்ற வருடம் வந்த சில படங்கள் அவ்வளவு வசூல் , இவ்வளவு வசூல் என்று அந்த படத்தின் தயாரிப்பாளர்களாலும் ,
ஹீரோக்களின் சிள்வண்டு ரசிகர்களாலும் அடித்து விடபட்டது .. தீபாவளிக்கு வந்த ஒரு மரண மொக்கையை கூட அந்த
ஹீரோவின் ரசிகர்கள் முதல் நாளே 10 கோடி வசூல் இருபது கோடி வசூல் என்று பினாத்தி
கொண்டு அலைந்தார்கள் ... அவர்களின் பினாத்தல்களுக்கெல்லாம் ஒரே காரணம், மங்காத்தாவில் தல ஆடிய வசூல் ருத்ரதாண்டவம். படத்தை வெளியிட்ட சன் பிக்சர் நிறுவனம் படத்தின்
மொத்த வசூல் 130 கோடி என்று அதிகாரபூர்வமாக வெளியிட்டது. அஜித்தின் போட்டியாளர்
என்று சொல்லபடும் ஒரு நடிகர் நடித்து சென்ற வருடம் வெளிவந்த இரண்டு படங்களும் சேர்ந்தே அவ்வளவு வசூலை
கொடுத்திருக்காது. தமிழ் நாட்டில் மட்டும் இல்லை ஆந்திரா , கேரளா
என்று பிற மொழிகளிலும் அந்த மொழிபடங்களை விட அதிக
வசூலை குவித்தது படம். மும்பையில் சாதாரணமாக ஒரு தமிழ் படம் நான்கு நாட்கள் ஓடுவதே பெரிய விஷயம்.
ரஜினியின் எந்திரன் மட்டுமே
(தமிழ் வெர்ஷன்) இருபது நாட்களுக்கு மேல் ஓடியது. அதன் பின்னர் மங்காத்தா மும்பை திரையரங்குகளில்
இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடி சாதனை புரிந்தது. இந்த
படத்தின் சாதனையை சுருங்க சொல்ல வேண்டும் என்றாள் , இந்த வருடத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய
தவறி கூட்டமே இல்லாமல் போன காரணத்தால்
சென்னையிலும் , தமிழகத்தின் பிற பகுதிகளிலும்
மங்காத்தாவை மறு வெளியீடு செய்திருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். மொத்தத்தில் மங்காத்தா சென்ற வருடம் ரஜினி
படம் வெளிவராத குறையை பாக்ஸ் ஆஃபிஸில் தீர்த்து வைத்திருக்கிறது...
- பாக்ஸ் ஆஃபிஸ் மட்டுமில்லை இணையமும் தல கோட்டைதான்
சென்ற வருடம் கூகிள்
தேடல்களில் படங்கள் பிரிவில் இந்திய அளவில் 7 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது
மங்காத்தா. அந்த பிரிவில் தமிழில் இருந்து இடம் பிடித்த
ஒரே படம் அது மட்டுமே. சென்ற வருடம் ரஜினி , கமல் படங்கள் மட்டுமே வெளிவரவில்லை , அதை தவிர்த்து
அத்துணை நடிகர்களின் படங்களும் வெளிவந்திருந்தது. ஆனால் அவர்களின் படங்கள் எல்லாம் இணையதள தேடலில்
இடம்பிடிக்க முடியவில்லை. இந்த செய்தி
படத்திர்க்கு எவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பதர்க்கும் , அதை
படம் எவ்வளவு நேர்த்தியாக பூர்த்தி செய்திருந்தது என்பதர்க்கும் மிக சிறந்த உதாரணம். அதைவிட இணையத்திலும் தல அஜீத்திற்க்கே
அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெளிவாக காட்டியிருக்கிறது. ரஜினிக்கு
அடுத்து எங்களுக்குதான் அதிக ரசிகர்கள் என்று வாய்சவாடல் விடும் எந்த நடிகனின் படங்களும் இதில் வரவில்லை.
இதிலும் பேசாமலே மௌனமாக தலையும் அவர் ரசிகர்களும்
ஜெயித்திருக்கிறார்கள்.
அதே போல விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் இணையங்களில் சினிமாவின் பங்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து வரும் அலெக்ஸ் என்பவர் தமிழ் நாட்டில்
ரஜினிக்கு சமமாக இணையத்தில் தேடப்படும்
ஒரே நடிகர் அஜீத் மட்டும்தான் என்று வெளிபடையாகவே
தெரிவித்திருந்தார். பாக்ஸ் ஆஃபிஸ் மட்டும் இல்லை இணையமும் தல கோட்டைதான் என்பதற்க்கு இவை இரண்டை விட வேறு ஆதாரம் தேவையா?
இவை தவிர டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிக்கை வெளியிட்ட இந்தியாவின் சிறந்த
பத்து ஆண்கள் வரிசையில் இடம்பிடித்தது , திரையுலகில் அம்பது படங்களை தாண்டியது என்று இன்னும் நிறைய சாதனைகள் அவர் சென்ற ஆண்டு நிகழ்தினார்.
மொத்தத்தில் 2011 தமிழ் சினிமாவில் தல ஆண்டு... இனி வரும் வருடங்களும் சொந்த வாழ்க்கையிலும் , திரை வாழ்க்கையிலும் தல அஜித்துக்கு சிறந்த ஆண்டாக அமைய ஒரு ரசிகனாக
இறைவனை வேண்டி கொள்கிறேன்.
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்துக்கள்
Thursday, January 12, 2012
கடவுள் (பாகம் 1 )
(இந்த வருடத்திலிருந்து இந்த வலைபூவில் வேறு சில நண்பர்களையும் எழுதவைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்னுடைய சிந்தனைகளை மட்டுமே இங்கு எழுதிக்கொண்டிருந்தால் மிக விரைவில் இதை படிக்கும் நண்பர்களுக்கு போர் அடித்துவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு. இதன் முதல் கட்டமாக எனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் கடவுள் பற்றிய அவர்களின் கருத்துகளை எழுதசொல்லி ஒரு தொடராக அவற்றை வரிசையாக இந்த வலைபூவில் வலையேற்றலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த வரிசையில் என்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியரும் , நண்பருமான வினோத் அவர்களின் கட்டுரை இந்த பதிவில். அவர் இதை ஒரு முன்னோட்டமாக என்னுடைய வலைபூவில் பதிவேற்றுகிறார். அவரின் எழுத்து நடை உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட்டில் அவரை ஊக்கபடுத்துங்கள், ஏதேனும் பிழைகள் இருந்தாலும் தெரியபடுத்துங்கள் நாங்கள் திருத்திக்கொள்ள)
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இவ்வுலகில் பல விஷயங்கள் நமது அறிவுக்கு எட்டாதவையாகவே உள்ளது. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அது கடவுள் தானா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. அந்த சக்தியைதான் இவ்வுலகில் உள்ள மக்கள் கடவுளாக வழிபடுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். பல விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும் அதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்றால் அதை நீருபிக்க வேண்டும். பல விஷயங்களை நிரூபணம் மூலம் நம் அறிவியல் அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். கடவுள் இருக்கிறார் என்று சொல்ல தெரிந்த அவர்களுக்கு கூட நிரூபிக்க தெரியவில்லை. எனது கோணத்தில் பல விஷயங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது அதில் கடவுளும் ஒன்று என்றே நான் கருதுகிறேன். இதற்கு உதாரணமாக பூமிக்கு கீழே என்ன உள்ளது, அகாயத்துற்கு மேல என்ன உள்ளது என்று எல்லாம் நாம் பார்க்க இயலாது. ஆனால் மற்றவர்கள் கருத்தை நாம் நம்புகிறோம் அவன் நாதீகன் ஆகட்டும் அல்லது ஆத்திகன் ஆகட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிவியல் கொண்டோ அல்லது கணிதம் கொண்டோ நிரூபிக்க இயலாது. ஏன் என்றால் கடவுள்(ஒரு சக்தி) என்பவரை ஒரு குறுப்பிட்ட வட்டதிற்குள் அடைக்க இயலாது. பல விஷயங்களில் நாம் நம் முன்னோர்களேயே கடைபிடிக்குறோம். இவ்வுலகில் பெரும்பான்மையான விஷயங்கள் உறுதி செய்ய நாம் கடைபிடிப்பது பெரும்பாலானோர் சொல்வதிலிருந்தே நாம் அதனை உறுதி செய்கிறோம். அது போல இவ்வுலகில் பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடிப்பதை கொண்டு நாம ஒரு முடிவுக்கு வருவோம். இவ்வுலகில் நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது அது கடவுளாகவும் இருக்கலாம் என்று.
இவ்வுலகில் பலர் நிம்மதியை தேடி அலைகின்றனர் அதற்கு பெரும்பாலானோர் தேர்வு செய்யும் இடம் கோவில்களும் ஆலையங்களுமே அதற்கு காரணமும் உள்ளது. அங்குதான் அவர்களுக்குள்ள ஆனவத்தையும் தலைக்கனதையும் சிறிது ஒதுக்கி வைக்கின்றனர். இவ்வுலகில் தேடல்கள் அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் அதிகரிக்கதான் செய்கின்றன. அதற்காக நான் தேடாமல் இருக்க சொல்லவில்லை கடவுளை பற்றி ஆராய்ச்சி செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறேன் ஏனென்றால் அதை ஆராயும் அளவுக்கு நமக்கு அறிவு போதுமா என்றுதான் எனக்கு தெரியவில்லை. ஒன்றுமே படிக்காதவனிடம் போய் விஞ்ஞானம் பற்றி விவரிக்க இயலாது அது போலதான் கடவுளை பற்றி தெரியாதவனிடம் போய் கடவுளை பற்றி விவரிக்க இயலாது. இவ்வுலகில் பல விஷயங்கள் சூட்சமமாகவே உள்ளன அதில் கடவுளும் ஒன்று என்றே நான் நம்புகிறேன். பிறகு வேறு வழிதான் என்ன கடவுளை பற்றி தெரிந்து கொள்ள என்று நீங்கள் கேட்கும் கேள்வியின் ஆதங்கம் எனக்கு புரிகிறது.
இவ்வுலகம் முழுவதும் அணுக்கலால் ஆக்கபட்டது இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு சக்தி உள்ளது. அது போல நம் கற்பனைக்கும் சக்தி உள்ளது எண்ணங்கள் மிக வலிமையானவை நம் எண்ணத்தின் மூலம் ஒரு பொருள் இருப்பதாக நினைத்தால் அப்பொருள் இல்லை என்றாலும் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளது. அதுபோல் கடவுள் இருக்கிறார் / இல்லை என்று நினைத்தாலும் அது அவரவர் மன நிலையை பொறுத்தே கடவுள் உருவாகலாம் அல்லது உருவாகமலும் போகலாம். அதற்காக கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்று சொல்ல இயலாது. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அதைத்தான் இக்கட்டுரையில் நான் கடவுளாக உருவகப்படுத்தி உள்ளேன். அச்சக்தியை பற்றி ஆராயும் அளவுக்கு நமக்கு அறிவு போதாமையால் அதை இல்லை என்று சொல்லிவிட முடியாது. எண்ணங்கள் மிக வலிமையானவை அந்த எண்ணங்களில் இருந்து சொல் உருவாகிறது சொல்லில் இருந்து செயல் உருவாகிறது செயலில் இருந்து பழக்கம் உருவாகிறது அப்பழக்கதில் இருந்து பண்பாடு உருவாகிறது. நம் பண்பாடு அனைத்தும் நம் எண்ணத்தை சார்ந்தே உள்ளது. ஆகையால் நம் எண்ணத்தை தூய்மையாக வைத்திருப்போம். நம் பண்பாட்டை உயர்த்த பாடுபடுவோம்.
************************************************************************
Tuesday, January 10, 2012
டாக்டர் vs டாக்டர் – பொங்கல் ரேஸில் ஜெயிக்க போவது யாரு?
டிஸ்கி : இது
கண்டிப்பாக டாக்டர் அவர்களை ஓட்டும் பதிவுதான். ஆனால் எந்த டாக்டர் என்பது
படிக்கும் உங்கள் மனநிலையை பொறுத்தது?
வரும் வியாழன் நண்பன்
வெளிவருகிறதாம். நான் பிளாக் எழுத ஆரம்பித்து இதுவரை வந்த விஜய் படங்கள் அனைத்துமே
மொக்கை படங்களாகவே வந்திருக்கிறது. அது ஒருவகையில் நமக்கு சாதகமான விஷயமே. விஜயை ஓட்டுவதை விட அவரின்
ரசிகர்களை ஓட்டுவதில் ஒரு தனி இன்பம் இருக்கதான் செய்கிறது. காரணம் ஒவ்வொரு படமும்
வருவதற்க்கு முன்னாள் சமூக இணைய தளங்களில் அவர்கள் பேசும் பேச்சுகள்தான். படம் வந்தபின்னர் ஊரே
கடுப்புடன் அவர்களை பழிவாங்குவதற்க்கு காரணம் இதுதான்.
முன்பெல்லாம் தீவிர விஜய் ரசிகர்கள்
அவர்கள் படம் வரும்பொழுது கூடவே அஜீத் படமும் வெளிவந்தால் பேஸ்புக் , ஆர்குட் என்று எல்லா இடங்களிலும் ஆன்டி அஜீத்
இயக்கம் என்று ஒரு கம்யூனிட்டி உருவாக்கி அதில் வெளிவர போகும் அந்த அஜித்
படத்தையும் அதில் அவரின் கெட்டப்பையும் நாறடிப்பார்கள். முதலில் இது அஜித் விஜய்
ரசிகர்களின் சண்டையாகவே பார்க்கபட்டது, ஆனால் ரஜினியின் சந்திரமுகியும் விஜய்யின் சச்சினும் ஒன்றாக வெளிவந்த காலகட்டங்களில் விஜய் ரசிகர்கள் ஆன்டி ரஜினி கம்யூனிட்டிகளை உருவாக்கிய பொழுதுதான் அவர்களின் வக்கிரபுத்தி உலகம் அறியதொடங்கியது. அடுத்து அவர்கள்
தனுஷ் , சூரியா ,
சிம்பு என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. தனுஷ்
பொல்லாதவனில் அழகிய தமிழ் மகனை புரட்டி புரட்டி எடுத்ததிலிருந்து
இப்பொழுதெல்லாம் தனுஷ் படம் வெளியாகும் பொழுதெலாம் ஆன்டி தனுஷ் கம்யூனிட்டி
அதிகம் உலவ ஆரம்பித்து விட்டது. வேலாயுதத்துடன் 7 ஆம் அறிவு ரிலீசாகிய தருணங்களில் இந்த இணையதளங்களில் தீவிர விஜய்
ரசிகர்களால் 7 ஆம் அறிவு எந்த அளவுக்கு நாறடிக்கபட்டது என்பதை உலகம் அறியும்...
இப்பொழுது புரிகிறதா
விஜய் ரசிகர்களின் அமைதிக்கு காரணம்? பவர் ஸ்டாரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியாதா? ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே பவர் ஸ்டாரின்
மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்து கொண்டிருப்பதை அறிந்து தன்னுடைய
ராணா படத்தின் ஷூட்டிங்கை தள்ளிவைத்திருக்கிறார். அப்படிபட்ட பவர் ஸ்டாரை எதிர்க்க
முடியுமா? அதையும் மீறி விஜய்
ரசிகர்கள் சிலர் பேஸ்புக் ஆர்குட் என்று சில இடங்களில் பவர் ஸ்டாரை கேலிசெய்து சில
கம்யூனிட்டிகளை உருவாக்கியதாகவும் ,
ஆனால் அதை தொடங்கியவுடனே நம் பவர் ஸ்டார் கொலைவெறி படை பவர் ஸ்டாரின் கீழ்க்கண்ட சில படங்களை அந்த
கம்யூனிட்டிகளில் அப்லோட் செய்து அவற்றை சின்னாபின்னமாக சிதைத்து விட்டதாகவும்
தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதற்க்கு பதிலடி
கொடுக்கும் விதத்தில் தளபதியின் போர்படை பவர் ஸ்டார் ரசிகர்கள் நடத்தும்
கம்யூனிட்டிகளில் தளபதியின் கீழ்க்கண்ட சில படங்களை அப்லோட் செய்து சிதைத்து
கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது...
படம் வெளிவருவதற்க்கு
முன்னரே இவ்வளவு போட்டி என்றால் படம் வெளிவந்தால் என்னவெல்லாம் நடக்க போகிறதோ
என்று தெரிந்து கொள்ள தமிழகம் மட்டுமில்லை , உகாண்டா , நபீமியா என்று பவர் ஸ்டார் ரசிகர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ரசிகர்கள்
ரத்தம் சூடேறிபோய் அலைகிறார்கள்...
பொறுத்திருந்து
பார்ப்போம் ஜெயிக்க போவது போலி டாக்டரா இல்லை ஒரிஜினல் டாக்டரா என்று?
விஜய் ரசிகர்கள்
யாராவது இந்த பதிவை படித்து என்னை திட்டி கமெண்ட்
போடும் எண்ணத்தில் இருந்தால் தயவுசெய்து பதிவின்
தொடக்கத்தில் இருக்கும் டிஸ்கியை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு கமெண்ட்
போடவும்
Subscribe to:
Posts (Atom)