Followers

Copyright

QRCode

Tuesday, June 21, 2011

"யூத்"தா மாறு "என்ஜாய்" பண்ணு மாமே ....





குறிப்பு : இது கண்டிப்பாக வயதானவர்களுக்கு மட்டும் அல்ல ...




 நம்ம வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோசமான காலகட்டம் என்றால் அது இந்த யூத் பருவம்தான் ... ஓசி சாப்பாடு,நண்பர்கள் கூட்டம் ,24 மணி நேரமும் ஜாலி , மனதிற்கு தோன்றியதை செய்ய கூடிய தைரியம் என்று எப்பொழுதும்  சந்தோசமாக வாழலாம் ... படிக்கிற காலத்தில் கூட படிக்கிற சப்ப பிகரிடம் போய் தைரியமாக நீ ரொம்ப சப்ப பிகரா இருக்க என்று அசால்ட்டாக அந்த பெண்ணை டீஸ் செய்யலாம் ... மிஞ்சி மிஞ்சி போனால் அந்த பெண் ஆசிரியர்களிடம் போட்டு கொடுப்பாள் , அவர்களும் நம்மை விசாரித்து விட்டு இனிமேல் இப்படி செய்யாதே என்று எச்சரித்து அனுப்பி விடுவார்கள் .. நாமும் நம் நண்பர்களிடம் நான் enquiry attend பண்ணிட்டேன் , நானும் ரௌடிதான் என்று சட்டை காலரை தூக்கி விட்டு  கொள்ளலாம் ... ஏனென்றால் அந்த வயதில் நாம் இழப்பதற்கு மானம் , சுயமரியாதை என்று எதையும் நாம் சம்பாதித்து இருக்க மாட்டோம் ... நம்மை சுற்றி இருப்பவங்களும் அப்படியே இருப்பார்கள் .... நாம் என்ன தவறு செய்தாலும் சின்ன பையன் தெரியாம செஞ்சிட்டான் என்று சமூகம் நமக்கு வக்காலத்து வாங்கும் ... 


ஆனா ஒரு வேலைக்கு சேந்து ரெண்டு மூணு வருஷம் ஆன பின்னாடி நம்ம வாழ்க்கை அப்படியே தலைகீழா மாறி போய்டும் ... ஆபீஸ்ல மெமோ வாங்கிட்டோம்னா ரெண்டு மூணு நாளைக்கு தூக்கமே வராது .. அது நமக்கு "prestige problem" ஆகிரும்.. இப்பதான் நமக்கு அந்த யூத் பருவத்தோட அருமை தெரியும் ... சில பேரு ஏழு கழுத வயசு ஆனாலும் அந்த யூத் பருவத்த தாண்டி வர மாட்டான் ... தலையில லேசா சொட்ட , வயித்துல பெரிய தொந்தின்னு நம்ம உடம்பு நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி மாறினாலும் நம்ம மனசு இன்னும் நான் யூத்து என்று நம்பி கொண்டு இருக்கும் ... சில பேரு அந்த வயசுல படிப்பு படிப்புன்னு அம்மாஞ்சியா இருந்திட்டு , பார்டர் வயசுலதான் திடீர்னு ஞானோதயம் வந்து அப்ப விட்டத எல்லாம் மொத்தமா இப்ப அனுபவிச்சிடனும்னு அளப்பர பண்ணிக்கிட்டு அலைவாணுக(நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை ) ... இந்த உலகத்துக்கு நாம இன்னமும் யூத்துதான் என்று நம்ப வைப்பதே  அவர்களின் பெரிய சவாலாக இருக்கும் ... அந்த மாதிரியான யூத்துகளுக்கு சில ஐடியா தருவதற்கே இந்த பதிவு .. 


ஸ்டார்ட் ம்யூசிக் 

யூத்துகளுக்கான பெரிய அடையாளம் அவர்கள் வைத்திருக்கும் பைக்குதான்.. வண்டி பார்பதற்க்கே பிரமிப்பாய் பெரியதாய் இருக்க வேண்டும் .. வண்டியின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் சிகப்பு , மஞ்சள் அல்லது ஆரஞ்சு என்று இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் ... மிக முக்கியமான விஷயம் வண்டியில் ஏறி விட்டால் எழுபது கிலோமீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்லவே கூடாது... ஹாரன் மற்றும் சைலேன்சரில் சத்தம் வித்தியாசமாய் இருப்பது கூடுதல் தகுதி ...



யூத் பருவத்தின் பெரிய சந்தோசமே காதலும் அதன் நீட்சியாய் நம் நண்பர்கள் நம்மையும் அவளையும் இணைத்து ஓட்டுவதுமே... இந்த வயதில் நமக்கு பிகர் மாட்டுவது கொஞ்சம் கஷ்டமே ... இருந்தாலும் மனம் தளர்ந்து விட கூடாது , நம் அலுவலகத்தில் நம்மை போலவே கொஞ்சம் வயசாகி போய் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஒரு பிகரை தேர்வு செய்து கொள்ளுங்கள் ... பிகர் கொஞ்சம் சுமாராக இருந்தாலே போதும் ... உங்கள் நண்பர்களிடம் இவள்தான் என் காதல் தேவதை என்று சொல்லுங்கள் ... பின்னர் உங்கள் நண்பர்கள் கண்ணில் படும்படி அவளுடன் அடிக்கடி  பணி நிமித்தமாய் பேசி கொண்டு இருங்கள்....   உங்கள் நண்பர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் அவளையும் உங்களையும் வைத்து ஓட்டி கொண்டிருப்பார்கள் .... இது மனதிற்குள் ஒரு கிளுகிளுப்பை உருவாக்கும் .... உங்கள் அதிர்ஷ்டத்திற்கு அந்த பெண்ணும் மடிந்து விட்டால் நீங்கள் நிஜ யூத்தாகவே மாறி விடலாம் ...

நண்பர்களுடன் எங்கு வெளியில் சென்றாலும் ஜீன்ஸ் , டி ஷர்ட் போட்டுத்தான் செல்ல வேண்டும் .. அந்த டி ஷிர்ட்டில் " I HATE BEAUTIFUL GIRLS .. B'COZ THEY ALWAYZ TORTURE ME  "போன்ற வாசகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் , தலையில் ஒரு கேப் , மற்றும் ஒரு கூலிங் கிளாஸ் எப்பொழுதும் இருப்பது அவசியம் ... இது உங்கள் வழுக்கையை மறைக்க உதவும் 


நிற்கிற பேருந்தில் கண்டிப்பாக ஏறவே  கூடாது ... அதே போல் பேருந்தினுள் எவ்வளவுதான் இடம் இருந்தாலும் புட்  போர்டில்தான் தொங்க வேண்டும் .

விடுமுறை நாள் என்றால் இரவு முழுவதும் ஊர் சுற்றி விட்டு இல்லை பிகருடன் போனில் கடலை போட்டு விட்டு பகல் முழுவதும் தூங்க வேண்டும்

சினிமாவிற்கு தனியாக செல்ல கூடாது ... பிகரை பிக் அப் பண்ணி கூட கூட்டி கொண்டு  போகலாம் ... அப்படி பிகருடன் போகும் பொழுது படம் முடியும் வரை அவள் தோள் மீது கை வைத்தே பார்க்க வேண்டும் , இல்லை என்றால் அவளை உங்கள் மார்போடு அணைத்து வைத்து  படம் பார்க்க வைக்கலாம் ... இது உங்களை சுற்றி தனியாக உர்க்காந்து படம் பார்பவர்களுக்கு புகைச்சலை உண்டு பண்ணும் ... பின்னர் பிகரே இல்லாத உங்கள் நண்பர்களிடம் அவளுடன் படம் பார்த்த அனுபவத்தை பற்றி கிளுகிளுப்பாய் சொல்லுங்கள் ... அவர்களும் மனதிற்குள் உங்களை புகைச்சலுடன் பார்ப்பார்கள் ...நாலு பேரு உங்களை பாத்து புகைந்தாலே நீங்கள் யூத்தா மாறிட்டீங்கன்னு அர்த்தம் பாஸ்....


நண்பர்களுடன் படம் பார்க்க போகும்போது அமைதியாக படம் பார்க்க கூடாது ... பிடித்த  சீன வரும் பொழுதெல்லாம் விசில் அடிக்க வேண்டும் , பிடிக்காத மொக்கை சீன வரும் போதெல்லாம் சத்தமாக எல்லாரும் சிரிக்கும்படி கமென்ட் அடிக்க வேண்டும் .... 

 உங்கள் அலுவலகத்தில் நடக்கும் எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி ,  வெகேசன் டூர் , இல்லை பார்ட்டி என்றாலும் நீங்கள்தான் முன்னால் நின்று ஆர்கனைஸ் பண்ண வேண்டும்... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பாடல் திறமையவோ இல்லை கவிதை திறமையவோ இல்லை மிமிக்கிரி திறமையவோ எடுத்து விட வேண்டும் ... இது உங்களுக்கு பெண் நண்பிகள் அதிகம் கிடைக்க உதவி செய்யும். உங்களுக்கு ஆண் நபர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அதே அளவுக்கு பெண் நண்பர்களும் இருக்க வேண்டும் ... உங்கள் மொபைல் , மற்றும் மெயிலுக்கு வரும் மேச்செஜ்சுகள் அதிகம் பெண்களிடம் இருந்து வந்தால் உங்களுக்கே உங்கள் மேல்  நாம் இன்னும் யூத்துதான்  என்று நம்பிக்கை வந்து விடும் ...
   

கடைசியா இது எல்லாம் பண்ணியும் யாரும் உங்களை யூத்ன்னு நம்ப மாட்டேங்கிரானுகளா.. பாஸ் லேட் பண்ணாதீங்க .. உங்களுக்கு கல்யாண வயசு வந்திடுச்சி சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணிடுங்க ... முத்துன கத்திரிக்கா சந்தையில விலை  போகாது ... லேட் பண்ணுனா நீங்களும் இப்படிதான் கடைசி வரை தனி மரமா நிக்க வேண்டியதா போய்டும்   


7 comments:

ILLUMINATI said...

// சில பேரு ஏழு கழுத வயசு ஆனாலும் அந்த யூத் பருவத்த தாண்டி வர மாட்டான்//

எங்க போனாலும் இந்த அரை குறைகளின் அலப்பறை சத்தம் அதிகமாகவே கேட்கும் (இதுவும் யாரையும் குறிக்கவில்லை). ;)

//லேட் பண்ணுனா நீங்களும் இப்படிதான் கடைசி வரை தனி மரமா நிக்க வேண்டியதா போய்டும் //

இதில ஒரு வாழ்க்கை பாடமே தெரியுதே ராசா.. :P

"ராஜா" said...

// இதில ஒரு வாழ்க்கை பாடமே தெரியுதே ராசா.. :P

ஆமா மச்சி .... எல்லாம் அனுபவம்தான் ..

Unknown said...

ரைட்டு!

Karthikeyan said...

//தலையில லேசா சொட்ட , வயித்துல பெரிய தொந்தின்னு நம்ம உடம்பு நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி மாறினாலும் நம்ம மனசு இன்னும் நான் யூத்து என்று நம்பி கொண்டு இருக்கும் //

என்ன எழுதுறதுன்னு தெரில.. கண்ணாடிய பாத்துட்டு கம்முன்னு இருந்துட்டேன்...

"ராஜா" said...

@karthikeyan

inkaiyum ipdithan sir

Anonymous said...

முக்கியமா மல்டிப்ளக்ஸ் தியேட்டர், ஷாப்பிங் மால் போகும்போது ஷார்ட்ஸ் போட்டுட்டு போகணும்!

ராஜகோபால் said...

என்ன இது வாலிப வயோதிக அன்பர்கலேன்னு லேகிய கடக்காரன் மாதிரி ஒரு பதிவு இது முக்கியமா யாரையோ குறி வச்சு எழுதனா மாதிரி இருக்கே ஏன் அவரு நம்ம டாக்டர் ரசிகரோ!!!

LinkWithin

Related Posts with Thumbnails