பாலா என்ற படைப்பாளியின்
படைப்பு திறமை நம் நாடே அறிந்தது ... இருட்டில் தத்தளித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை
, அடிதட்டு மக்களின் இருட்டு வாழ்க்கையை
காட்டி வெளிச்சத்திர்க்கு கொண்டு வந்தவர் ... சத்தியஜித்ரேவுக்கு பின்னர் இந்திய சினிமாவில் ஒளி வீசும் ஒரு வைர கல் இந்த பாலா... இப்படியெல்லாம்
அவருக்கு சொம்படித்து கொண்டு இருக்கும் “என் கண்ணுக்கு கடவுள் தெரிகிறார்” என்ற டைப் அறிவுஜீவிகள் இதற்க்கு மேல் இந்த பதிவை படிக்க வேண்டாம் .. மீறி படித்து
விட்டு ஒரு பதிவையே ஒழுங்கா எழுத தெரியாத நீயெல்லாம் “பால்வீதி” படம் எடுக்கும் (எத்தனை
நாளைக்குத்தான் உலக படம்னு சொல்றது , நம்ம ஆளு அதையெல்லாம் தாண்டி
பால்வீதிக்கே படம் எடுக்கிறவரு) பாலாவை
குறை சொல்ல
நீ யாரு என்று பின்னூட்டத்தில் வாந்தி எடுக்க வேண்டாம் ....
தமிழ் சினிமாவை பிடித்த மிக பெரிய சாபக்கேடு என்னவென்றால் , மிகைபடுத்தபட்ட உணர்வுகளை எதார்த்தங்கள் என்று ரசித்து , அதை படைத்தவர்களை தலையில் தூக்கி
வைத்து ஆடுவதுதான் ... சேது என்று ஒரு படம் , படம் வந்த புதிதில் எல்லா பத்திரிக்கைகளும் அந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடின
... ஆனந்த விகடன் ஒரு படி மேலே போய் தமிழ் சினிமாவின் முதல்
படம் என்றெல்லாம் படத்திர்க்கு ஜல்லி அடித்தது ... அப்படி என்ன அந்த படத்தில் இருந்தது? ரௌடிதனம்
செய்கிறான் ,காதலிக்கிறான் , பைத்தியமாகிறான் , குணமாகிறான்
, காதலி சாகிறாள் , மீண்டும் பைத்தியமாகிறான்... இதில் அப்படி என்ன தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் படைப்பு
இருக்கிறது?
முதல் பாதியில் வரும்
காட்சி அமைப்புகள் அந்த கால கட்டத்தில் புதுமையான காட்சி அமைப்புகளாய் இருந்தது என்பதை
தவிர அந்த படத்தில் வேறு எந்த விசேசமும் கிடையாது... மேலும் அந்த படத்தில் எந்த நிகழ்வுகளுமே
இயல்பாய் கதைக்கு தேவையான நிகழ்வுகளாய் இருக்காது .. எல்லாமே வலிந்து திணிக்கபட்டதை போல , ஒரு சோகத்தை புகுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திர்க்காய் நடப்பதை போலதான் திரைக்கதை இருக்கும் ... இந்த படத்தை பார்த்து விட்டு எல்லாரும்
பத்து நாளைக்கு சோறு இறங்கவில்லை , பத்து மாதம் பேதி போச்சு என்று அள்ளி விட்டு
கொண்டு இருக்கிறார்கள் இன்று வரை .. எனக்கு தெரிந்து எந்த படமும் அந்த திரையரங்க வாசல் வரைக்கும்தான் , மிஞ்சி போனால் அவர்கள் வீட்டுக்கு
போய் சாப்பிடும் வரைக்கும் இல்லை வேறு வேலை பார்க்கும் வரைக்கும்தான் மனதில் இருக்கும்
, பத்து
நாட்கள் எல்லாம் ஒரு படத்தின் பாதிப்பிலேயே இருந்தால்
உங்களை கீழ்பாக்கத்திர்க்கு அனுப்பி விடுவார்கள் ... மனைவி பத்தினியாக இருந்தால் மட்டுமே
கடவுள் கண்ணுக்கு தெரிவார் என்று சொன்னவுடன் எல்லாரும் என் கண்ணுக்கு கடவுள் தெரிகிறார்
என்று சொல்லியதை போலத்தான் அறிவுஜீவிகளுக்கும்
, சினிமா பற்றிய புரிதல் இருப்பவர்களுக்கு
மட்டும்தான் பாலாவின் படம் புரியும் என்று விகடன் போன்ற
அறிவுஜீவி பத்திரிக்கைகள் கிளப்பி விட இன்று வரை நானும் அறிவாளிதான் என்று நிரூபிக்க பாலாவின்
படங்களை ஆகா ஓகோவெண்டு கொண்டாடும் போலி அறிவுஜீவிகள்தான் இங்கு நிறையபேர் இருக்கிறார்கள் ...
பாலாவின் படங்கள் நன்றாகவே
இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் ,
பாலாவின் படங்கள் ரசிக்கும் படி இருக்கும் ஒத்துகொள்கிறேன் , ஆனால் ரசிக்கும்படியாக படம் எடுக்கும் எல்லாருமே தலையில்
தூக்கி வைத்து கொண்டாடபடும் தகுதி உடையவர்கள் கிடையாதே ... ஒரு குடும்பத்துக்குள் நடக்கும்
விஷயங்களை யதார்த்தம் இல்லாமல் கொஞ்சம் மிகைபடுத்தபட்ட சினிமாதனங்களோடு விக்ரமன் தொடர்ந்து படைத்து வந்தால் அவரை டெம்ப்ளேட் இயக்குனர் என்று ஒதுக்கி வைக்கிறோம் .. ஆனால் சமூகத்தில்
இருக்கும் அடித்தட்டு மக்களின் நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத , யதார்த்ததுக்கு
புறம்பான, மசாலா தூக்கலாக , சினிமாத்தனங்கள்
நிறைந்த படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம்
...
பிதாமகனை எடுத்து கொள்ளுங்கள்
.. எந்த ஊரில் வெட்டியான் இப்படி இருக்கிறான் ... எந்த ஊரில் அவனை அப்படி இருக்க விடுவார்கள்
... இதே கதையை அந்த வெட்டியான் கதாபாத்திரத்தை ஒரு இயல்பான மனிதனாக வைத்து எடுக்க முடியாதா? அப்படி ஒரு இயல்பான மனிதனாக காட்டி இவரின் திரைக்கதை
யுக்தியினால் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும் ரசிகனின் மனதில் ஆழமாக பதியவைத்து , அந்த கதாபாத்திரத்துக்கு விருது வாங்கி கொடுத்திருந்தால்
தமிழ் சினிமாவில் ஒளிரும் வைரமாய் அவரை ஏற்றுக்கொள்ளலாம் , ஆனால் அந்த கதாபாத்திரத்தை ஏதோ வேற்றுகிறக மனிதனை போல உருமாற்றி
, கஷ்டபடுத்தி அதன் மூலம் அந்த கதாபாத்திரத்தை
ரசிகனின் மனதிர்க்குல் நுழைத்ததால் எனக்கு அவர் பித்தளையாகத்தான் தெரிகிறார் ...
அந்த படத்தில் சூரியா
செய்யும் சேட்டைகளை பார்க்கும் போதெல்லாம் எரிச்சல்தான் வந்தது , அதுவும் லைலா ரயில்வே ஸ்டேஷன் முன்னாள் புழுதியில்
புரண்டு அழும் காட்சியில் அந்த எரிச்சல் உச்சத்திர்க்கு போனது .... ஆனால் இதையும் பார்த்துவிட்டு
சே என்ன படம்யா... சினிமானா இதுதான்யா என்று பலர் பாராட்டிய
போது எனக்கு பத்தினி கடவுள் கதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை .... அதுவும் சூரியா இறந்தவுடன் அஷ்டகோணலாக காட்டபடும் லைலாவின்
முகத்தை பார்த்து , இதுதான் லைலாவுக்கு
மைல்கள் படம் , கண்டிப்பா பாப்பாவுக்கு
விருது இருக்கு என்று சொன்னவர்களை அம்மணமாக நடுரோட்டில் ஓட ஓட அடிக்க வேண்டும் என்ற
வெறி படம் பார்த்து கொண்டிருந்த போது எனக்கு வந்தது ...
அந்த படத்தில் விக்ரமை
ஏன் அப்படி காட்ட வேண்டும் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை ..ஒரு வேளை இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த அறிவுஜீவிகள் போல எனக்கு
அறிவு இல்லையோ என்னவோ? ஏதாவது உள்
வெளி குறியீடுகள் இருந்தால் யாராவது சொல்லுங்களேன் .. நானும் அறிவாளி ஆகி கொள்கிறேன்
...
எல்லா படத்திலேயும் ஒரு
வித்தியாசமான இயல்புடைய கதாபாத்திரம் , அதற்க்கு ஒரு அளவுகடந்த பாசம் , கடைசியில் அதீத வன்முறை என்று ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுக்கும் இவரை ஏன்
யாரும் டெம்ப்ளேட் இயக்குனர் என்று சொல்லுவதில்லை? இவர் ஏன் எப்பொழுது பார்த்தாலும் விளிம்பு நிலை மக்களை
பற்றியே படம் எடுக்கிறார் ... அதில்தான் கிறுக்குதனமான காட்சிகளை வைத்தாலும் அவர்கள்
இப்படிதான் இருப்பார்கள் என்று மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணமா? (பல் டாக்டர் மகள் கிறுக்கி , சில்லறை திருடனை கலெக்டர் பாராட்டுதல் இவரின் படங்கள் அவர்களின் உண்மையான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கின்றனவா? சத்தியமாக கிடையாது .... இவரின் ஒரே ஒரு பலம் அந்த கதைக்களங்களை கொண்டு கண்கட்டி வித்தை காட்டி அதீத வன்முறையை பரப்பி ஒரே கல்லில்
ரெண்டு மாங்காய் அடிப்பதுதான்... காசுக்கு காசும் ஆச்சி , பேருக்கு
பேரும் ஆச்சி
.... அந்த படங்கள் வசூலிக்கும் காசிற்க்கு
அவை தகுதியானவைதான் ... ஆனால் படம்னா இதுதான்யா படம் என்று ஜல்லி
அடிக்கும் அளவுக்கு இவரின் படங்கள் கண்டிப்பாக இருந்ததில்லை ....
இப்பொழுது அவன் இவன் வந்திருக்கிறதாம்..
பாருங்கள் மற்ற படங்களை கிழித்து தொங்க போடும் திரை விமர்சகர்கள்
கூட , விஷால் நடிப்பு சூப்பர் , அந்த கதாபாத்திரம் பட்டைய கிளப்புது , கிளைமாக்ஸ் நெஞ்சு அதிருது என்று ஜல்லி அடிப்பார்களே
தவிர யாருமே முகத்தில் அறைந்தாற்போல் உங்களுக்கு வேறு மாதிரி
படமே எடுக்க தெரியாத பாலா என்று கேள்வி கேட்கமாட்டார்கள் ... அப்பறம் அவர்கள் பெயருக்கு
முன்னாள் இருக்கும் அறிவுஜீவி பட்டம் போய் விடுமே... அதானால் அவன் இவன் பார்க்காமலேயே நானும் சொல்லிக்கொள்கிறேன் தமிழ்சினிமாவின் "சத்தியஜித்ரே" பாலா
18 comments:
Unga vimarsanam nermaiyaave irukkudhu...Aanaa Aanandha vikaran "arivu jeevi" pathrikkai nnulaam joke adikireenga...Jalli adikkradhunnaa enna?! Romba vaati adhaiyaaae thirumba thirumba solreenga..Adhai kandupudcha Sujaathaavukkae adhukku enna arththam nu theriyaadhu....
Intha mathiri worda ellam aaraayakoodathu, anupavikkanum. Vikatan pathrikai arivujeevikalal arivujeevi paththirikkai endruthan indrum sollapadukirathu. Inka arivujeevikku arththam vera boss.
செம காண்டில இருக்கிறீர்கள் போலும்! :-)
அவன் இவனை யாரும் நல்லதாகக் குறிப்பிடவில்லை என்றே தோன்றுகிறது! (இதுவரை நான் வாசித்ததில்)
வஞ்சகப் புகழ்சியா தலைப்பு வச்சு தாக்குறதுன்னு எல்லோரும் கிளம்பிட்டீங்களா!! ஆனாலும், உங்க விமர்சனம் நானும் முற்றிலும் ஒத்துக்கறேன். எனக்கும், சேது ஆரம்பக் காட்சிகள் பிடிச்சது, அப்புறம் அந்த பைத்தியகார காட்சிகளைப் பார்த்து நொந்து போனேன். அடுத்து பிதாமகனில் விக்ரம் ஓவர் அக்டிங் தாங்க முடியவில்லை, அந்த சிம்ரன் ஆட்டம் வழிய திணிக்கப் பட்ட மசாலா, அடுத்து நான் கடவுள் பார்ப்பதையே தவிர்த்து விட்டேன், ஏதோ எனக்குத்தான் பிரச்சினை என நினைத்தேன் இப்போது புரிகிறது, \\மனைவி பத்தினியாக இருந்தால் மட்டுமே கடவுள் கண்ணுக்கு தெரிவார்...\\ கதை தான் இங்கு நடக்கிறதென்று!!
Nanba patatha patama parunkalen!
@ jee
avan ivanum ithe template padamthan pola
@jeyadev dass
neengalum ennamathirithana.. Saththama pesatheenga nammala perarasu rasikarkalnu sollita poranga
@dharma
bala padangalai padama parkkakoodathu apdinu neraiya peru solranga... Athan boss confuseah irukku
//bala padangalai padama parkkakoodathu apdinu neraiya peru solranga//
பின்ன எப்படி பார்க்கணும்? ஏன் இப்படி பினாத்துறாணுக? :)
பாலா படங்கள் எல்லாமே செயற்கை தான்.நம் ஆட்கள் பலருக்கு செயற்கை என்று சொன்னாலே கோபம் வரும்.அவனுகளை மதிக்கவே வேணாம்.
I too feel Bala has been credited unduly. As you said, Sethu is a overrated film. A character who is a Male chauvinist depicted as a good samaritan is total contradiction. He threatens the girl to love him (total arrogance and foolishness), threatens her family members, doesn't have any respects to his Brother and Sister-in-law and still he is a 'good' hearted guy and the screenplay is structred to sympathise him.
@illumi
correct machchi
@ gopi
sethuva pathi thani pathive podalam nanba
Ethu oru Tharu"Thala" in padhivu.....!
Enna Naan Kadavul miss ana kopamoo.. Illa Paramasivan flop aa
Ungala mathiri aalunga ipdilam solluveengannu theriyum. Athan nantha , nan kadavul paththi nan pathivula oru varthai eluthavillai . Illai endral innum kiliththiruppen.
Nan kadavulil ajith nadikkamal ponathu avarin athirsdam. Nan ajiththai avar padangalukkai rasippathillai avarin charming, manliness irandalum eerkkapattu , avarin characterinal innamum avarai rasikkiren. Ajith rasikarkal balavai unmaiyai vimarchikka mudiyatha?
ஆமாம் ராஜா நானும் கூட பிதாமகன் ஒரு யதார்த்தப்படம் என்று தவறாகப்புரிந்து விட்டேன்.இப்போதுதான்
புரிகிறது இது ஒரு அதீத சாதிஇந்து வெறியரின் உல்டாக்கள் என்று.உலகத்தில் தொண்ணூறு சதவீதம் சாப்பிடும் மாட்டிறைச்சி இவர்கள் கண்ணுக்கு மட்டும் புனிதமாகப்படுகிறது.ஆடு திங்கக்கூடது என்று சொன்னால் ஆங்காங்கே அருவாத்துக்கப்படும் என்கிற பயத்தோடுதான் எல்லா சமயங்களும் புனிதங்களும். பாலா...எவ்வளவு நம்பியிருந்தோம்.
anndri.. Neengal eppdi Ajith in Charming a rasikeerkalao appdithan naagal bala vai rasikirom. vimarsam pannalam anal keltharm koodathu
எனக்கு உங்கள் மேல் ஒரு கோபமும் இல்லை. யாரும் யாரையும் விமர்சிக்கலாம் . ஆனால் கீழ்த்தரமாக விமர்சனம் என்ற பெயரில் நீங்கள் போட்ட பதிவை நீங்களே ஒரு முறை நடுநிலையாக படித்து பாருங்கள்.
அஜித் உங்களுக்கு எந்த காரணத்துக்கு பிடிக்கிறதோ , அதே போல் பாலா வை பிடிக்க, அவர் படைப்புகளை பிடித்தவர்கல் பலர்.
ஒருவரை விமர்சிக்கும் பொது அவரது படைப்பை விமர்சிக்கவும் .. அவரை அல்ல .... அஜித் பற்றி உங்களை போல் கீழ்த்தரம விமர்சித்தால் அப்போது உங்களுக்கு புரியும் ......
கடைசியா, ஊர்வலம் போற ராஜா அம்மணமா போறாருன்னு சொன்ன குழ்ந்தையாய் பதிவை எழுதி விட்டீர்கள். (சினிமா பற்றிய பதிவுகளை அதிகம் படிபதில்லை. அதனால் தான் இவ்வளவு .............தாமதமான .........பின்னோட்டம்.
உங்கள் எழுத்து வீச்சில் கூர்மை நன்றாக இருக்கிறது
Post a Comment