Followers

Copyright

QRCode

Monday, December 27, 2010

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்




நாம் ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதார்க்காக எவ்வளவு கஷ்டபடுகிறோம் என்பது நமக்கு மட்டுமே தெரியும் ... நாம் செய்யும் பணிக்காக தூக்கத்தை துறந்து , சாப்பாட்டை துறந்து , குடும்பத்தை மறந்து , யார் யாரிடமோ திட்டு வாங்கி , யார் யாருக்கோ தன்மானத்தை விட்டு சொம்பு  தூக்கி இப்படி நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடுபட்டு கொண்டிருக்கிறோம்... இவ்வளவு கஷ்டபட்டு சம்பாதித்தாலும் அதில் வரும் கணிசமான தொகையை நம் நாட்டிற்க்காய் வரி பணமாக கொடுக்கிறோம் .. வாங்கும் சம்பளம் தொடங்கி வண்டிக்கு போடும்  பெட்ரோல் வரைக்கும் நிறைய பணம் வரியாக   கட்டி கொண்டு இருக்கிறோம் .. எல்லாம் எதற்க்காக நம்மை போல நம் சமூதாயமும் முன்னேற வேண்டும் என்பதற்காக மட்டுமே ... நாம் வரி கட்டினால்தான் நம் ஊருக்கு ரோடு போட முடியும் ... நாம் வரி கட்டினால்தான் நம் ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு மதியம் இலவசமாக சத்துணவு போட முடியும் ... நாம் வரி கட்டினால்தான் குடிநீர் வினியோகம் சிறப்பாக நடக்கும் .. இப்படி நமக்கான வசதி வாய்ப்புகள் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதானே வரி கட்டி கொண்டு இருக்கிறோம் ...


ஆனால் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா? ... நாம் இரவும் பகலும் கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சில மொள்ளமாரி முடிச்சவிக்கி நாதாரி முண்டங்கள் அரசியல் , பதவி என்ற பெயரில் மொத்தமாக கொள்ளை அடித்து போகிறார்களே ... நாம் கட்டிய வரிப்பணம் முழுவதும் அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் சொகுசு வாழ்க்கை வாழ பயன்பட போகிறதே ... இங்கே நாம் குண்டும் குழியுமான சாலையில் பயணித்து  சம்பாத்தித்த காசை வைத்து அந்த நாதாரி முண்டங்கள் சொந்தமாக சொகுசு வானூர்திகள் வாங்கி பயணம் செய்கிறார்களே ... சரி போகிறது இந்த பிணம் தின்னி கழுகுகள் அவர்கள் தின்றது போக மீதி இருக்கும் சொற்ப பணத்தையாவது ஒழுங்காக மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்களா?

அவர்கள் கொண்டு வரும் திட்டங்களை எல்லாம் பாருங்கள் மக்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ , அவர்கள் நம்மிடம் இருக்கும் மீதி பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து லவட்டி கொண்டு போக நன்றாக பயன்படுகின்றன ... ஒரு சின்ன உதாரணம் , ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் ... மேலோட்டமாக பார்த்தால் அது ஏழைகளுக்கான திட்டமாக தெரியும் , ஆனால் உண்மையில் அது பயன்படுவது கொழுத்த முதலாளிகளுக்கே ... அந்த ஒரு ரூபாய் அரிசியை மக்களை ஏமாற்றி கொஞ்சம் அதிக விலை கொடுத்து(மூன்று முதல் ஐந்து ரூபாய் ) வாங்கி , அதையே திரும்பி மக்களிடம் இன்னும் அதிக விலைக்கு விர்க்கிறார்கள் ... இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கி அதையே கொஞ்சம் பாலிஷ் செய்து இருபது ரூபாய்க்கு விர்க்கிறான் ... பெரிய பெரிய ஹோட்டல் முதலாளிகளுக்கெல்லாம் இந்த ஒரு ரூபாய் அரிசி பெரிய வரபிரசாதம் ... இப்படி வெறும் ஒரு ரூபாய் செலவு பண்ணி நம் காசு பதினெட்டு ரூபாய்யை நம்மிடம் இருந்து பறித்து அவர்கள் தங்கள்  சொத்தில் சேர்த்து கொள்கிறார்கள் ... வரி பணம் கட்டுவதோடு இல்லாமல் இப்படி பொருட்களை நமக்கே தெரியாமல் அதிக விலை கொடுத்து வாங்கி நம் காசை நாமே அவர்களுக்கு தூர்வாரி கொண்டு இருக்கிறோம் ...

இன்னொரு திட்டம் இருநூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் ... இந்த திட்டத்தில் பயன் பெரும் கிராம மக்கள் அனைவரும் மறைமுகமாக ஏதோ ஒரு முதலாளிக்குதான் அரசாங்கத்தின் செலவில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .... எங்கள்  ஊரில் சமீபத்தில்  இப்படி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்கள் சாலை பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் ... அந்த சாலை போடுவதர்க்கு அரசாங்கம் ஒரு தனியார் நிறுவனத்திர்க்கு டெண்டர் விட்டு இருந்தது ... அவன் செய்ய வேண்டிய வேலை ... வேலை செய்பவர்களுக்கு அவன்தான் காசு தர வேண்டும் ஆனால் அரசாங்கத்தின் செலவில் அதாவது நம் வரி பணத்தில் இருந்து அவர்களுக்கு சம்பளம் தந்து கொண்டு இருந்தார்கள் இந்த திட்டத்தின் மூலம் ... சரி அப்படியாவது அவனுக்கு டெண்டர் காசு கம்மியாகிறதா என்று பார்த்தால் அவன் இதற்க்கு முன்னர் எவ்வளவு சொல்லி இருந்தானோ அதே காசுதான் ... அதாவது இந்த கூலி தொழிலாளிகளுக்கும் அவனே சம்பளம் தருவதை போல கணக்கு காட்டுகிறார்கள் .. எல்லாம் யார் பணம் நீங்களும் நானும் கஷ்டபட்டு சம்பாதித்த காசு ... நம் காசில் நாம் போயி வர ரோடு போடுவதில் கூட ஏதோ ஒரு நாதாரி நம் காசை பிடுங்கி தின்கிறான் ...

இன்று செல்போனே பயன்படுத்தாத ஆளே கிடையாது .. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமாவது செல்லில் பேசுகிறோம் ... லோக்கல் கால் என்றாள் அம்பது பைசா , STD என்றாள் ஒரு ரூபாய் .. வெளிநாடுகளுக்கு என்றாள் ஐந்து ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள் ... சரி இவர்களுக்கு அப்படி என்ன செலவு இருக்கிறது ... நாம் கொடுக்கும் வரிபணத்தில் அரசாங்கம் செயர்க்கை கோள் ஒன்றை செய்து விண்ணில் ஏவுகிறது ... அதில்  இங்கு இருக்கும் செல் கம்பனிகள் ஏலத்தில் அவர்களுக்கு தேவையான அலைவரிசையை வாங்கி கொள்கிறார்கள் ... அந்த ஏல தொகைதான் அவர்கள் போடும்  முதல்...  அதை தவிர்த்து ஊர் ஊருக்கு டவர் அமைத்தல் , அதை பராமரித்தல் என்று சில செலவுகள் உண்டு ... ஆனால் இது எல்லாம் இவர்கள் சம்பாதிக்கும் பணதிர்க்கு  முன்னாள் பிஸ்கோத்து காசு ...



அரசாங்கம் அந்த ஏலத்தை மட்டும் எந்தவிதமான ஊழலும் இல்லாமல் நேர்மையாக நடத்தி இருந்தால் இன்று லோக்கல் கட்டணம் வெறும் ஒரு பைசாவாக இருந்திருக்கும் , STD பத்து பைசாவில் பேசி இருக்கலாம் ... இன்று மாதம் ஆயிரம் ரூபாய் மொபைல் பில் கட்டும் ஒருவர் வெறும் நூறு ரூபாய்க்குள் முடித்து கொள்ளலாம் ... ஆனால் இவர்கள் அநியாய விலைக்கு ஏலம் விட , அதை எடுத்த முதலாளிகள் அந்த காசை நம்மிடம் கறந்து விடுகின்றனர் ..ஆக மொத்தம் அந்த செயற்கை கோள் தாயாரிக்கபட்டதும் நம் காசில் ... அது விண்ணில் ஏவபட்டதும் நம் காசில்...ஆனால் அதை பயன்படுத்த நாம் அநியாய விலை கொடுக்க வேண்டி இருக்கிறது ... அதை பயன்படுத்தி எவன் எவனோ சம்பாதிக்கிறான் ..

நீங்கள் ஒரு பசு மாட்டை  உங்கள் சொந்த பணத்தில் வாங்கி , அதர்க்கு நல்ல தீவனம் போட்டு வளர்க்கிறீர்கள் ... அந்த மாட்டில் பால் கரக்க ஒரு வேலை ஆளை நியமனம் செய்கிறீர்கள் .. அவன் உங்கள் மாட்டிலேயே பால் கறந்து உங்களிடமே அதை ஐந்து மடங்கு விலைக்கு விற்றால் என்ன செய்வீர்கள்?   போடா நாயே என்று அவனை அடித்து விரட்ட மாட்டீர்கள் .. நான் மேலே சொன்ன விஷயமும் கிட்டதட்ட இதே மாதிரிதான் ஆனால் இங்கே நாம் வெறுமனே கைகட்டி வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும் ...

நம்மை சொல்லி குற்றம் இல்லை .. முதலில் வீடு கட்டுவதில் ஊழல் என்றார்கள் , அந்த பிரசனை முடிவதற்க்குள் பீரங்கி வாங்கியதில் ஊழல் என்றார்கள் , சரி இதிலாவது ஏதாவது தண்டனை வாங்கி தருவார்கள் என்று நினைத்து முடிப்பதற்க்குள் காமென்வெல்த் போட்டிகளில் ஊழல் என்றார்கள் , அடுத்து அதை விட பெரிய அளவில் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வந்து விட்டது ..


காய்ச்சல் அடிக்கிறது என்று ஊசி போட போனவனை டாக்டர் பரிசோதித்து விட்டு உனக்கு டைபாய்டு என்று சொல்ல , அதர்க்கு ட்ரீட்மெண்ட் எடுக்க அதை விட பெரிய டாக்டரிடம் போனால் அவர் பரிசோதித்து விட்டு உனக்கு கேன்சர் என்று சொல்ல , சரி என்று கேன்சர் ஸ்பெஷலிஸ்ட்டிடம் ட்ரீட்மெண்ட் எடுக்க போயி அவர் தம்பி உனக்கு எய்ட்ஸ் என்று குண்டை தூக்கி போட்டால் அவன் சாகுறது சாக போறோம் இருக்குற வரை எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக வாழுவோம் என்ற மனநிலைக்கு வந்து விடுவான் ... நம் அரசியல்வாதிகள் இன்று நம்மை இந்த மனநிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள் ...  ஊழலை சகித்து வாழ கற்று கொண்டு விட்டோம் நாம் ...

சரி இதற்க்கு தீர்வே கிடையாதா? என்றாள் கண்டிப்பாக இருக்கும் ... பெரிய பெரிய சர்வாதிகாரிகளையே மண்ணோடு மண்ணாக மக்கி போக செய்யும் வல்லமை படைத்தது காலம் ... இவர்கள் எல்லாம் எம்மாத்திரம் ... ஆனால் அது ஒரே நாளில் நடந்து விடாது .. மக்கள் மத்தியில் ஏதோ ஒரு புரட்சி வெடிக்கும் , எல்லாமும் மாறும் ... புரட்சி ஒரு காட்டு தீயை போன்றது ... காட்டை சாம்பலாக்கும் தீயை போல ஒரு நாட்டையே மாற்றி போடும்  சக்தி அதர்க்கு உண்டு ..  அந்த காட்டு தீ தொடங்குவது ஒரு சின்ன பொறியில்தான் ... அதே போல் புரட்சியும் ஏதோ ஒரு சின்ன பொறியில்தான் தொடங்கும் ...நாம் காலகட்டத்தில் அந்த சின்ன பொறியையாவது இந்த சமூகத்தில் உண்டாக்குவோம் ... நம் சந்ததிகள் அதை அழிக்கும் அனலாக  மாற்றி காட்டுவார்கள்...

அவர்கள் காலத்திலாவது இந்தியா உண்மையான ஜனநாயக நாடாக இருக்கட்டும் ...       


11 comments:

Jaaffer Sadiq said...

Super raja.....

DHANS said...

என்னுடைய எண்ணத்தை அப்படியே பிரதிபலித்தது தங்கள் பதிவு. அருமை

"ராஜா" said...

@ Jaaffer Sadiq

நன்றி நண்பரே

@DHANS

நன்றி ...

Yoganathan.N said...

இந்த நிலை பல நாடுகளுக்கு பொருந்தும், என்ன இந்தியாவில் சற்று 'overdose' எனலாம். :(

"ராஜா" said...

// இந்த நிலை பல நாடுகளுக்கு பொருந்தும், என்ன இந்தியாவில் சற்று 'overdose' எனலாம். :

கொஞ்சம் இல்லை நண்பரே ரொம்பவே "ஓவர்டோஸ்"இங்கே

Yoganathan.N said...

கடைசி பத்தி படிக்கையில் சமீபத்தில், குமுதத்தில் வெளியான நம்ம தல பேட்டி அப்படியே ஞாபகம் வந்தது.
ஒவ்வொரு இந்திய குடிமகனின் குமுறல் போலிருக்கு... :)

http://starajith.com/2349-thala-ajith-fans-politics-entry-mystery-interview-2010

Unknown said...

உங்கள் எழுத்துக்கு ஒரு சல்யூட் ..

மக்களை இலவசங்களை கொடுத்து ஏமாற்றி கொள்ளை அடிக்கும் பணத்தை தானும் அனுபவிக்காமல் சுவிஸ் வங்கிகளில் ஒளித்து வைக்கிறான் அரசியல்வாதி, மொத்தத்தில் இந்த நாடும் நாட்டு மக்களும் மெல்ல நாசமாகிக்கொண்டிருக்கிறோம் என்பது உண்மையே ...

ராஜகோபால் said...

வீட்டு ப்ரச்சன முன்னால இருக்கும் போது நாடாவது,காடாவுது. எல்லாரும் அடுத்த மாசம் பொழப்பு ஓட்டத்தான் ஊர் விட்டு ஊரு, நாடு விட்டு நாடு ஒடரானுங்க. இதுல நாடாவது நாட்டு மகக்களாவது.

பக்கத்துவீட்டுல தீ புடிச்ச அனைக்கறது எதுக்கு தெரியுமா., தன்னோட வீடு பதிக்காம இருக்கணும்தான்.

"நாம நல்லாருக்கனும்னா இந்த நாடு மட்டும் இல்ல எந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்".

நாஞ்சில் பிரதாப் said...

நாட்டை அழிக்க் பயங்கரவாதிகள் தேவையில்லை... இந்த அரசியல்வாதிகளே போதும்.
ஓட்டுப்போடும் மக்களுக்கு இதுபுரியாத வரை..... இது தொடரும்...

புரட்சி செய்யனும்னா மக்களுக்குள் ஒற்றுமைவேண்டும்.... அது நம்மமக்கள்கிட்ட எங்கருக்கு...
ஆளுக்கொரு தலைவர்களும், தலைவிகளும் வைத்துக்கொண்டு திரிகிறார்கள்...., இதுல புரட்சி எங்க வெடிக்கிறது... ஓலைவெடி கூட வெடிக்காது......

tamil said...

ellorkum nalla paadam

tamil said...

ellorkum nalla oru paadam (vliponarvu)

LinkWithin

Related Posts with Thumbnails