Followers

Copyright

QRCode

Monday, November 22, 2010

Frozen (2010) - பனிமலை பயங்கரம்


இங்கிலீஷ் படங்கள் பற்றி எழுதி நிறைய நாள் ஆகிவிட்டது ...  இப்பலாம் இங்கிலீஷ் படங்களை பற்றி நல்லா எழுதிட்டு தமிழ் படங்களை திட்டினால் நம்மை ஏதோ செவ்வாய் கிரகவாசிகள் ரேஞ்சுக்கு பார்க்கிறார்கள் ... உனக்கு மொழி பாசமே இல்லையா என்று திட்டி பதிவிடுகிறார்கள் .... நண்பர் பாலா ஒருபடி மேலே போயி அப்படி பதிவு எழுதுகிறவர்களுக்கெல்லாம் ஏதோ நோய் வந்து விட்டது என்று பீதியை கிளப்பி விட்டார்... அதனாலே எனக்கு பயமாக உள்ளது நல்ல படங்களை பற்றி எழுதவே... இருந்தாலும் அந்த பயத்தை எல்லாம் மீறி சென்ற வாரம் நான் பார்த்த ஒரு உலக படம் (நம்ம ஊர் படமெல்லாம் உலக படம் இல்லையா?என்பவர்களுக்கு ... உலக படம் என்பதேர்க்கு நான் புரிந்து கொண்ட விளக்கம் மொழி கலாச்சாரம் இப்படி எல்லாவகையிலும் வேறு பட்டு இருக்கும் மனிதர்களை கூட ரசிக்க வைக்கும் படங்கள்தான் உலக படங்கள் என்று சொல்லபடுகின்றன ...அப்படிப்பட்ட படங்கள் நம்ம ஊரிலும் இருக்கு) என்னை அந்த படத்தை பற்றி கண்டிப்பாக எழுதியே ஆக வேண்டும் என்னும் அளவுக்கு என்னை கவர்ந்து விட்டது... அந்த படம் Frozen (2010)


நம்ம ஊருள ஒரு மசாலா படம் எடுக்கிறாங்கன்னா அதுல இப்படி ஒரு சீன் கண்டிப்பா வரும் (குறிப்பா நம்ம டாக்டர் படங்களில் இது கண்டிப்பாக இருக்கும்)... ஹீரோவ வில்லனோ இல்லை போலிஷோ துரத்தி வருவார்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க நம்ம ஹீரோ அறுபது அடி உயரத்தில் மொட்டை மாடியில் இருந்தோ இல்லை மலை உச்சியில் இருந்தோ கேமராவை பார்த்து flying kiss கொடுத்து விட்டு (பார்க்க குருவி ) கீழே குதிப்பார்... அரை நொடியில் தரையை அடைந்து எந்த விதமான காயங்களும் இல்லாமல் தப்பித்து விடுவார்... இப்படி நம் ஊர் படங்களில் அரை நொடியில் வந்து போகும் இந்த காட்சியை வைத்தே ஒன்றை மணி நேர த்ரில்லிங் படம் எடுத்துள்ளார் .... frozen படத்தின் இயக்குனர் Adam Green...


பொதுவாக ஹாலிவுட் படங்களில் complex situation ஒன்றை உருவாக்கி இதில் இருந்து அவர்கள் எப்படி விடுபடுகிறார்கள் என்பதை காட்டும் do or die வகை படங்கள் நிறைய வரும் .... பெரும்பாலும் அப்படி வரும் படங்கள் பார்க்கும் போது நமக்கு இந்த மாதிரியான complex situations வாழ்க்கையில் நடக்க வாய்ப்பு மிகவும் கம்மியாகவே இருக்கும் ... உதாரணம் prey , 2012 போன்ற படங்கள் ... ஆனால் வெகு சில படங்களே நம் வாழ்க்கையில் எதார்த்தமாக நாம் அடிக்கடி சந்திக்கும் விஷயத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் .. அதர்க்கு மிக சிறந்த உதாரணம் speed (bomb on bus)... 


frozen படமும் இந்த வகையில் அடங்கும் ...நடுங்கும் குளிரில் தரையில் இருந்து பத்து அடி உயரத்தில் இரண்டு பேர் மட்டுமே அமரும் ஒரு chairliftல் மூன்று பேர் ஒரு வாரம் முழுவதும் அமர்ந்து இருக்க வேண்டும் ... ஒரு வாரத்திர்க்கு அவர்களால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது... மேலும் அது ஒரு உயரமான பனி மலை... கீழே மலை முழுவதும் நரிகள் ... மேழே இருந்தாலும் சாவு கீழே வந்தாலும் சாவு ... இதுதான் இந்த படத்தில் இயக்குனர் படைத்திருக்கும் complex situation... இந்த நிலையில் அவர்கள் முன்னால் இருக்கும் இரண்டே ஸாயிஸ் அங்கு இருந்து எப்படியாவது தப்பிப்பது அல்லது பணியில் உறைந்தோ இல்லை நரியிடம் மாட்டியோ இறப்பது... இந்த இரண்டில் எது நடந்தது என்பதே படத்தின் கதை ...


படத்தின் ஹீரோ dan ... அவனும் அவன் நண்பனும்(joe) வீக் எண்டை ஜாலியாக கழிக்க ஹில் ஸ்டேஷன் செல்கிறார்கள்.... உடன் ஹீரோவின் காதலி (parker) இருக்கிறாள்... அது ஒரு அடர்ந்த பணிமலை... அங்கு இருக்கும் பெரிய பொழுது போக்கே பணிசருக்குதான் ... ஹீரோயினுக்கு ஒழுங்காக பனி சறுக்கு செய்ய தெரியவில்லை .... அதனால் அவளுக்கு கற்று தருவதிலேயே பகல் நேரம் முழுவதும் கழிந்து விடுகிறது ... எனவே மலையை முழுவதும் அவர்களால் சுற்றி பார்க்க முடியவில்லை ... அவர்கள் இரவு chairliftல் சென்று மலையை சுற்றி பார்க்க விரும்புகிறார்கள்... ஆனால் போதுமான அளவுக்கு காசு இல்லை ... அந்த chairlift ஆபரேட்டரிடம் லஞ்சம் கொடுத்து பயணப்படுகிறார்கள்... அது ஞாயிறு இரவு ... அந்த சுற்றுலா தளம் முழுவதுமாக மூடப்படும் நேரம் அது .... மலைக்குள் சுற்றுலா பயணிகள் யாரும் இல்லை... அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் கூட யாரும் கிடையாது அனைவரும் கிளம்பி விடுகின்றனர் .... ஆபரேட்டர் அவர்களிடம் நீங்கள் வரும் வரை தான் காத்திருப்பதாக தெரிவிக்கிறான் .. அவர்களும் கிளம்புகின்றனர்.... 


அவர்கள் ஜாலியாக அரட்டை அடித்து கொண்டே பனியை ரசித்து கொண்டு பயணிக்கிறார்கள்... திடீரென்று விஞ்ச் நின்று விடுகிறது ... அவர்களும் ஏதோ பவர் கோளாறு , சிறிது நேரத்தில் கிளம்பி விடும் என்று எண்ணுகிறார்கள் ... ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த மலை முழுவதும் லைட்டுகள் வரிசையாக அணைந்து கொண்டே வருகிறது .. அப்பொழுதுதான் நிலமையின் விபரீதம் அவர்களுக்கு புரிகிறது ... நாம் இங்கு மாட்டி கொண்டு இருக்கிறோம் என்பதே யாருக்கும் தெரியவில்லை என்பது அவர்களுக்கு புரிகிறது .... chairlift சிஸ்டம் shut down செய்யபட்டு விட்டது ... இனி மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமைதான் இயங்கும் ... அதுவரை இந்த பனியில் அந்தரத்தில் தொங்க வேண்டும் ... 


இதே நிலையில் நம்ம ஊர் ஹீரோக்கள் இருந்தால் என்ன செய்வார்கள் .. அடுத்த நொடியே ஹீரோயினுடன் கீழே குதித்து சின்ன காயம் கூட இல்லாமல் தப்பி விடுவார்கள் அடுத்த சீன் அதே மலையில் ஒரு டூயட்... அதே போல ஜாக்கி சான் அந்த இடத்தில் இருந்தால் ஒவ்வொரு விஞ்சாக தாவி தாவி power stationஐ அடைந்து chairliftஐ இயக்கி தன் நண்பனையும் காதலியையும் காப்பாற்றி இருப்பார் ... ஆனால் இந்த படத்தில் காட்டபட்டிருப்பது உங்களை போல என்னை போல மூன்று சாதாரண அப்பாவி மக்கள்...


தப்பிக்க வேண்டும் என்றால் அவர்கள் முன்னால் இருக்கும் இரண்டு சவால்கள் ...ஒன்று உயரம் .... அந்த உயரத்தில் இருந்து தரையை அடைய வேண்டும் என்றால் குதிப்பதை தவிர வேறு வழி இல்லை ... ஆனால் அவ்வாறு குதிதால் என்ன ஆகும் என்ற பயம் அவர்களை குதிக்கவிடாமல் தடுக்கிறது... இன்னொன்று கடுங்குளிர் ....


ஒருகட்டதில் ஹீரோயின் வரப்போகும் சாவை கண்டு பயந்து புலம்ப ஆரம்பிக்கிறாள்... ஹீரோ உன்னை எப்படியாவது நான் காப்பாற்றுகிறேன் ... நீ கண்டிப்பாக இந்த இடத்தில் இருந்து தப்பித்து விடுவாய் என்று அவளுக்கு ஆறுதல் கூறுகிறான் ...அவளை காப்பாற்ற வேறு வழியே தெரியாமல் விஞ்சில் இருந்து கீழே குதிக்கிறான்...குதித்த நொடியில் அவன் கால் எழும்புகள் உடைந்து நொறுங்குகின்றன... (அந்த காட்சியில் அவன் கால் தரையை தொட்டவுடன் அவன் எழும்புகள் முறிவதை பின்னணி இசையில் அருமையாக கொண்டு வந்திருப்பார் இசை அமைப்பாளர்).. அவன் மூட்டுக்கு கீழே எழும்புகள் அவன் தோலை துளைத்து வெளியே வந்து விடுகிறது… அவனால் ஒரு இஞ்ச் கூட நகர முடியவில்லை... வலி எல்லாம் குறைந்தவுடன் இப்படியே ஊர்ந்து ஊர்ந்து சென்று யாரையாவது உதவிக்கு அழைத்து வந்து விடலாம் என்று அவன் மேலே இருக்கும் காதலியிடம் சொல்லுகிறான் ... ஆனால் அவன் காதலி அப்படியே உறைந்து போய் அவனை பார்க்கிறாள் .. காரணம் கீழே இருக்கும் அவனை சுற்றி நரிகள் சூழ்ந்து விடுகின்றன.... அவ்வளவுதான் அவன் நரிகளுக்கு இரையாகி விடுகிறான் ... அப்பொழுதுதான் மேலே இருப்பவர்களுக்கு தெரிகிறது இந்த உயரம் , குளிர் இது எல்லாவற்றையும் விட பேராபத்து ஒன்று கீழே இருக்கிறது என்று ....


இந்த மூன்று ஆபத்துளையும் தாண்டி மேலே இருக்கும் இருவரும் தப்பினார்களா ... ஹீரோ சொல்லியபடி ஹீரோயின் தப்பி பிழைத்தாளா ?இல்லையா? என்பதே மீதி கதை... படம் முழுவதும் கேமரா தொங்கிக்கொண்டேதான் இருக்கிறது ... படத்தை பார்த்தால் கேமராமேன் எவ்வளவு உழைப்பை கொட்டி இருக்கிறார் என்பது புரியும்... 

ஹீரோயின் கை பனிபொழிவாள் விஞ்சில் இருக்கும் கைபிடியோடு ஒட்டி விடுவது , ரெண்டு விஞ்ச் தள்ளி இருக்கும் ஏணியை அடைய விஞ்ச் இயங்கும் கயிரை கையால் பிடித்து கொண்டே ஹீரோவின் நண்பன் செல்ல முயன்று இரண்டு அடி எடுத்து வைத்தவுடன் அந்த கேபிள் பனியில் உறைந்து போய் இருக்கும் இவன் கையை அறுத்து விடுவது என்று பனியின் பயங்கரத்தை காட்சியிலேயே புரிய வைத்திருப்பார் இயக்குனர்... 


அதே போல் படத்தின் பெரிய பலம் பின்னணி இசை... அந்த விஞ்சில் இருந்து எழும் கிரீச் முரிச் சத்தமே நம்மை அநியாயத்துக்கு பயமுறுத்துகிறது.... 


இன்னொரு பெரிய பலம் நடிகர்களின் நடிப்பு ... படம் முழுவதும் மூன்று கதாபாத்திரங்கள்தான்.... சாக போகும் தருவாயில் தைரியசாலி எப்படி அதை எதிர்கொள்ளுவான் , பயந்த சுபாவம் உடையவர்கள் அதை எப்படி எதிர்கொள்ளுவார்கள் என்பதை ஹீரோ மற்றும் ஹெரோயினை வைத்தே நமக்கு காட்டி இருப்பார் இயக்குனர்... மரணபயத்தின் முன்னால் வேறு எதுவுமே பெரிய விசயமில்லை என்பதை யதார்த்தமாக சொல்லி இருக்கிறார்.... இந்த மூன்று நடிகர்களில் என்னை பொறுத்தவரை முதல் மதிப்பெண் அந்த பெண்ணுக்குதான்... படத்தில் இவருக்குதான் ஸ்கோப் அதிகம் ... அதே போல் அதை சரியாக பயன்படுத்தவும் செய்திருக்கிறார்... 



இதை போல மிகைபடுத்தபடாத எதார்த்தமான த்ரில்லிங் படங்கள் நம் ஊரில் எப்பொழுது வருமோ தெரியவில்லை...


Frozen(2010) - ஒன்றை மணிநேரம் மரண பீதியில் உறைய ஆசைபடுபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்...

15 comments:

ராஜகோபால் said...

நல்லாருக்கு ராஜா உங்கள் விமர்சனம் கண்டிப்பா பாக்கணும்.,
நம்ம ஆளுங்க டாக்டரு தாவரத பாத்து கை தட்டுவானுங்க
இதுமாதிரி சின்ன விசத்துக்கு ஒன்ரமணி நேரம் குந்தமாட்டனுங்க.

எஸ்.கே said...

விமர்சனம் ரொம்ப சூப்பரா இருக்கு!

"ராஜா" said...

@ ராஜகோபால்

நன்றி தல.. எனக்கு ஒரு சந்தேகம் டாக்டர மக்கள் கெடுக்குராங்களா? இல்ல மக்கள டாக்குடர் கெடுக்குறாரா?

"ராஜா" said...

@ எஸ்.கே

உங்க பாராட்ட இண்ட்லில ஒரு வோட்டா தெரிவிச்சிருக்கலாமே தல ...

வினோ said...

ராஜா படம் பார்த்துவிட்டு வருகிறேன்.. நாம் பேசுவோம்..

"ராஜா" said...

@ வினோ

கண்டிப்பாக நண்பா உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்

கவி அழகன் said...

அருமை கலக்கிறிங்க

"ராஜா" said...

@ யாதவன்

நன்றி நண்பரே தங்கள் வருகைக்கு

Unknown said...

விரிவான, அருமையான விமர்சனம்.. நிறைய படங்களின் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன் ..

ILLUMINATI said...

//மரணபயத்தின் முன்னால் வேறு எதுவுமே பெரிய விசயமில்லை என்பதை யதார்த்தமாக சொல்லி இருக்கிறார்....//

நல்ல விமர்சனம் தல.முன்ன சொன்னத தான் இப்பயும் சொல்றேன்.அடிக்கடி விமர்சனம் எழுதுங்க.welcome to the club! :)

"ராஜா" said...

@ கே.ஆர்.பி.செந்தில்

பார்க்கும் போது முழுவதும் என்னை கவரும் படங்களை பற்றி கண்டிப்பாக எழுதுவேன் தல....

@ ILLUMINATI

கண்டிப்பா தல...the classic சென்ற ஞாயிறுதான் பார்த்தேன் ... விரைவில் அதை பற்றி பதிவிடுகிறேன் நண்பா...

ஹரிஸ் Harish said...

விமர்சனம் நல்லா இருக்கு..தொடருங்கள்..

ராஜகோபால் said...

//
@ ராஜகோபால்
நன்றி தல.. எனக்கு ஒரு சந்தேகம் டாக்டர மக்கள் கெடுக்குராங்களா? இல்ல மக்கள டாக்குடர் கெடுக்குறாரா?//

இதுல என்ன சந்தேகம் நம்ம டாக்டரால மக்களும்.,மக்களால டாக்டரும் கெட்டு போய்க்கிட்டு தான் இருகுகாங்க நம்ம டாக்டரோட அடுத்த அடுத்த படம் மாதிரி.

EndLess Running Race...

Philosophy Prabhakaran said...

படத்தை அலசி ஆராயந்துவிட்டீர்கள்... நிச்சயம் பார்க்கிறேன்...

"ராஜா" said...

@ ஹரிஸ்

நன்றி தல.. தொடர்ந்திருவோம்

@ philosophy prabhakaran

பாருங்கள் ... நிச்ச்யம் பிடிக்கும் ...

LinkWithin

Related Posts with Thumbnails