Followers

Copyright

QRCode

Monday, November 15, 2010

மைனா – என் பார்வையில்


 ஒரு சில படங்கள் வெளி வருவதர்க்கு முன்னரே  இதை பார்க்கவே கூடாது என்று நினைப்பேன் ..  படத்தை பார்க்கும் அளவுக்கு நம்மை ஈர்க்கும் விசயங்கள் படத்தில் எதுவும் இருந்திருக்காது... நான் அப்படி நினைத்த படங்கள் பெரும்பாலும் நான் நினைத்ததை போல அட்டு படங்களாகவே அமைந்து விடும்  .... ஆனால் சில படங்கள் நான் நினைப்பதற்க்கு நேர்மாறாக படம் பார்த்து முடித்த பின்னர் என்னுடய பெவரைட் பட வரிசையில் அந்த படமும் இணைந்து விடும் , இதற்க்கு முன்னர் நான் அப்படி பார்த்த படம் களவாணி .... அந்த படத்திர்க்கு பின்னர் நான் சற்றும் எதிர்பாராமல் சென்று மிகவும் ரசித்த படம் இந்த மைனா...

படத்தில் என்னை மிகவும் ஈர்த்த விசயங்கள் இதில் வரும் நடிகர்களின் மிகையற்ற நடிப்பே .... ஒவ்வொரு காட்சியிலும் அந்த காட்சியின் வீரியத்தை அப்படியே நம் மனதில் பதியவைக்கிறார்கள் அவர்களின் மிகையற்ற  நடிப்பின் மூலம்... உதாரணமாக இடைவேளைக்கு பின்னர் நான்கு பேரும்  ஹோட்டலில் அமர்ந்து சாப்பிடும் போது அந்த போலீஸ் எஸ்சுருளியிடம் கோபமாக பேசும்  காட்சியில் அப்படியே அந்த கோபம் நமக்கும் தொற்றி கொள்ளும்... அதே போல சுருளியும் மைனாவும் மூணாறு தெருக்களில் அதே போலீஷ்காரரை எதிர்த்து போராடும் இடத்தில் அவர்கள் மேல் நமக்கு பரிதாபம் வரும் ... இப்படி அந்த காட்சியில் இயக்குனர் என்ன சொல்ல வருகிராரோ அதை தங்கள் நடிப்பின் மூலம் அப்படியே நம் மனதில் பதியவைத்து விடுகிறார்கள் ... அதனாலேயே நாம் படத்தோடு முழுவதும் ஒன்றி போய் விடுகிறோம்... தம்பி ராமையாவை தவிர மீதி எல்லோரும் கூத்து பட்டறை தாயாரிப்பாம் ... பேசாமல் தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களையும் இரண்டு மாதம் கூத்து பட்டறைக்கு கட்டாய பயிற்சிக்கு அனுப்பி வைக்கலாம் ...


தம்பி ராமையா , இப்படி ஒரு நடிகனை இவ்வளவு நாளும் தமிழ் சினிமா வீணடித்திருக்கிறது.... மனுசனுக்கு நகைசுவை எண்ணமா வருது .. சீரியஸான கதையை தன்னுடய காமெடியினால் ரொம்ப லேசா நகர்த்தி கொண்டு போயிருக்கிறார்... பிரபு சாலமோன் செய்த ரொம்ப நல்ல விஷயம் இப்படி ஒரு கேரக்டர் படம் முழுவதும் வரும் படி திரைக்கதை எழுதியதுதான் .. இல்லை என்றாள் இந்த படமும் இவரின் முந்தைய படங்களை போல நன்றாக இருந்தும் எடுபடாமல் போகி இருக்க கூடும் ....


ஒளிபதிவாளரை பற்றி சொல்ல வேண்டுமானால் அந்த பஸ் ஆக்சிடெண்ட் சீன் ஒன்று போதும் மிரட்டி இருக்கிறார்... தமிழக கேரளா எல்லையாக அவர்கள் காட்டும் அந்த மலைபகுதிகள் கொள்ளை அழகு... படத்தை பார்த்த பின்னால் அந்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் உருவாகி விட்டது அதே போலத்தான் இசை அமைப்பாளரும் , பின்னணி இசையில் பெரிய அளவில் கோட்டை விட்டு இருந்தாலும் பாடல்கள் கேட்கும் ரகம் .... பஸ் ஆக்சிடெண்ட் சீனிற்க்கு முன்னாள் வரும் அந்த பாடல் சரியான கொத்து பரோட்டா காரம் ....

இப்படி படத்தில் எல்லோரும் அவர்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்தான்... ஆனாலும் படத்தின் பெரிய குறையாக எனக்கு பட்டது முதல் பாதி முழுவதும் தெரியும் பருத்தி வீரன் பாதிப்பு... குறிப்பாக மைனா சுருளி காதல் அப்படியே பருத்தி வீரன் ஜெராக்ஸ்... ஏதோ பருத்தி வீரன் இரண்டாம் பாகம்  பார்ப்பது போன்ற உணர்வு... ஒரே ஒரு ஆறுதல் பருத்தி வீரனை போல இதில் பத்து வயது சிறுவர்களை காதலிக்க விடவில்லை ...

அதே போல சில காதல் காட்சிகள் மோகன் காலத்து மொக்கை... மைனா படிக்க சுருளி மின்மினி பூச்சிகளை பாட்டிலில் அடைத்து கொடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர்... ஆனால் அதற்க்கு பரிசாக மைனா கொடுக்கும் ஜில் முத்தம் சூப்பர்... அதேபோல கிளமாக்ஸ் தாங்க முடியல... இன்னமும் எத்தனை காலத்துக்குதான் இப்படி டிராஜிடி கிளைமாக்ஸ் வைக்க போறீங்கலோ தமிழ் சினிமாவில் ... சேதுவிலோ , பருத்தி வீரனிலோ கிளைமாக்ஸ் பார்க்கும் போது மனதில் எழுந்த அதிர்ச்சி இந்த படத்தின் கிளைமாக்ஷில் இல்லை .. செயற்கையாக தெரிகிறது...இதற்க்கு இரண்டு பேரையும் சேர்த்தே வைத்திருக்கலாம் ....இந்த  விஷயத்தில் களவாணி இந்த படத்தை விட பல படிகள் மேலே... அதே போல பின்னணி இசை மகா சொதப்பல்.. நடிகர்களின் நடிப்பிற்கேற்ற முகபாவனைகளுக்கு ஏற்ப இசை அமைப்பதில் பல இடங்களில் திணறி இருக்கிறார்... படத்தை பார்க்கும் போது இந்த படத்திர்க்கு இளையராஜா பின்னணி இசை சேர்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும்  என்ற ஏக்கம் இவரின் இசையால் எனக்கு உருவானது...



ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படம் என்று அடித்து சொல்லலாம் இந்த மைனாவை ... இன்னும் கொஞ்சம் சரி செய்திருந்தால் இந்த மைனாவும் தமிழ் சினிமாவுக்கு இதற்க்கு முன்னர் பல இயக்குனர்கள் சேர்ந்து சூட்டி இருக்கும் தங்க  மகுடத்தில் ஒரு வைரக்கல்லாய் மின்னி இருக்கும் ....

மைனா கண்டிப்பாக ஒரு தடவை அனுபவிக்கலாம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும் ...


7 comments:

THOPPITHOPPI said...

தாமதம்மான பதிவு இருந்தாலும் அருமை

பாலா said...

படத்தை இன்னும் பார்க்கவில்லை. ஆகவே பெரும்பாலான விமர்சனங்களில் கதை வரும் பகுதியை தவிர்த்து விடுவேன். இதிலும் அப்படியே... படம் பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது. நன்றி தல

Philosophy Prabhakaran said...

ரொம்பா லேட்டா எழுதியிருக்கீங்களே... என்ன காரணம் யார் செய்த தாமதம்...?

"ராஜா" said...

@ philosophy prabhakaran

ஆமா தல படமே சனிக்கிழமைதான் பாத்தேன் ... படம் பிடிச்சிருந்தது அதான் லேட்டானாலும் எனக்கு பிடிச்ச பிடிக்காத விசயங்களை பத்தி எழுதலாமேன்னு இந்த பதிவு போட்டேன் ...

"ராஜா" said...

@ thoppi thoppi

படமே சனி அன்றுதான் பார்த்தேன் தல .... படத்தை பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று தோன்றியது போட்டு விட்டேன்

ILLUMINATI said...

முதல் பாதியின் அயர்ச்சி,இரண்டாம் பாதியின் பிரமாண்டம்,நல்ல உழைப்பு மற்றும் நடிப்பு.இது தான் மைனா.அப்புறம்,பிரபு சாலமன் முந்தய படங்கள் பற்றிய கருத்து,சரியானதே.அவர் படங்கள் நன்றாக இருந்தாலும்,ஏதோ ஒன்று குறைகிறதே என்ற எண்ணம் ஏற்படாமல் இருக்காது. :)
மறுபடி ஒரு நல்ல review.தமிழ் படங்களை பற்றி அதிகம் எழுதுங்க தல. :)

"ராஜா" said...

@ ILLUMINATTI

எழுதுகிறேன் நண்பா.... வேற என்ன வேலை …. நமக்கு பிடிச்சத எழுததான பிலோக்கே....

பிரபு சாலமோன் எனக்கு பிடித்த இயக்குனர்தான் ... நீங்கள் சொல்லியதை போல இதுவரை ஏதோ ஒன்று அவரின் படங்களில் குறைவதை போல இருந்தது .. மைனாவில் அந்த குறை இல்லை ...

LinkWithin

Related Posts with Thumbnails