எல்லா திறமையும் படைத்த ஒரு ரோபோ உங்களுக்கு கிடைத்தால் இல்லை நீங்களே அந்த ரோபோவாக மாறினால் என்ன செய்வீர்கள்?
தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இயக்குனரின் திறமையால் அவரின் கற்பனை வளத்தால் தன் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது.. ஸ்ரீதரில் இருந்து இன்றய பாலா வரை அப்படி வித்தியாசம் காட்டி சினிமாவை ஒரு படி மேலே ஏற்றியவர்கள் பலர் ... மக்கள் ரசனை கீழ்தரமாக இருந்தாலும் அவர்களை மேலும் மேலும் ஏமாற்றாமல் தன்னால் முடிந்த அளவுக்கு அதை மேம்படுத்த போராடிய இயக்குனர்கள் அவர்கள்.. ஷங்கர் அவர்களில் ஒருவாரா? இல்லை மக்களின் ரசனையில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி தன் சரக்கை போணி பண்ணி கல்லாவை நிரப்பும் வியாபார தந்திரணா?
ஷங்கருக்கு இருக்கும் ஒரே ஒரு திறமை திறமைசாலிகளிடம் இருந்து திறமைகளை வாங்குவது மட்டுமே... அவரின் எல்லா படங்களையும் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாக புரியும் ... அவரின் எல்லா படங்களிலும் பாடல்கள் மற்றும் வசனங்கள் மிக பெரிய வெற்றிகளை பெற்றிருக்கும்... அந்த இரண்டு விசயங்களையும் எடுத்து விட்டு பார்த்தால் அவர் இயக்கிய அத்துணை படங்களும் குப்பைகளே... இன்னொரு முக்கியமான விசயமாக அவரின் படங்களில் கையாளபடுவது கிராபிக்ஸ்... நிறைய செலவு செய்து அதை எல்லா படங்களிலும் பண்ணுவார்... பார்பதற்கு நன்றாக இருக்கும் .. ஆனால் அது ஏன் பயன்படுத்தபடுகிறது என்பதர்க்கு காரணமே இருக்காது.. எல்லா படங்களிலும் அது வழிய திணிக்கபட்ட ஒரு விசயமாகவே இருக்கும்... உதாரணம் ஜீன்சில் எலும்புக்கூடு ஆடுவது (ஒரு காதல் படத்திர்க்கு இதெல்லாம் தேவையா,,,,)
பரிட்சை பேப்பரில் எழுத எந்த விஷயமும் இல்லாதவனே கலர் கலராக படம் போட்டு கஷ்டபட்டு பேப்பர டெக்கரெட் பண்ணி , வாத்தியார ஏமாத்த முயற்சி செய்வான்.. ஒருதடவை வாத்தியார் ஏமாந்து அவன் பண்ணிய அலங்காரத்தில் மயங்கி படிக்காமல் மதிப்பெண் போட்டு விட்டால் அவ்வளவுதான் அடுத்து பரிட்ச்சைக்கு அவன் படிக்கவே மாட்டான் ,பரிட்சை எழுதும் அந்த மூன்று மணிநேரம் மட்டும் கலர் கலரா ஜிகினா வேலை பண்ணி மார்க் எடுத்து விடுவான் ... அந்த பையனை போலத்தான் ஷங்கரும்... வித்தியாசமான கதையோ இல்லை அழுத்தமான காட்சி அமைப்புகளோ அவர் படங்களில் இருக்காது … அதற்கெல்லாம் மிக நுணுக்கமான சமுதாய பார்வை , படைப்பு திறன் நிறைய வேண்டும் ... இரண்டும் அவரிடம் அறவே கிடையாது என்பதர்க்கு அவரின் மொன்னை படங்களே மிக பெரிய சாட்சி...
சிறிய உதாரணமாக ஒரு படம் எடுத்து கொள்ளுவோம் ... அவர் இயக்கிய பாய்ஸ் என்று ஒரு படம்... அந்த படம் வெளிவருவதர்க்கு முன் இந்த படம் இன்றய இளைங்கர்களின் வாழ்க்கை முறையை அப்படியே பிரதிபலிக்க போகிற படம் , இந்த படம் வந்த பின்னர் இளைய சமூதாயத்தில் மிக பெரிய மாற்றம் வர போகிறது என்றெல்லாம் ஷங்கர் பேட்டி அளித்தார் ... ஆனால் புது வசந்தம் , உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று விக்ரமன் கையேந்தி பவனில் தயாரித்த இட்லியை கொஞ்சம் கூட மாற்றாமல் கொஞ்சம் ஆபாசம் , கொஞ்சம் கிராபிக்ஸ் , A.R. ரகுமான் என்று காஸ்ட்லியான சட்னிகளை கூட வைத்து பைவ்ஸ்டார் ஹோட்டேல் "புத்தம் புது" ரேசிப்பி என்று விற்க முயன்றார்... அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் செண்டிமெண்ட் காட்சியாகட்டும் ஒரே பாடலில் ஓகோவென்று வளர்வதாக்கட்டும் சும்மா விக்ரமனையே மிஞ்சி இருப்பார்... இதே போன்ற ஒரு கருவை கொண்டு சமீபத்தில் வந்த படம் சுப்ரமணியபுரம் .. இதில் எந்த பிரமாண்டமும் கிடையாது... ஆனால் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாய் நம் மனதில் பதிய வைத்த காட்சி அமைப்புகள் ஏராளம்... ஒரு இயக்குனரின் வெற்றியே இதில்தான் உள்ளது...
பருத்தி வீரனும், சேதுவும் அழுத்தமாய் நம் மனதில் பதிந்ததை போல சங்கரால் தன் படங்களை அழுத்தம் திருத்தமாய் நம் மனதில் பதிய வைக்க முடியாது .. சுஜாதாவின் பேனாவும், கொஞ்சம் கணினி அறிவும், அதிகமான நேரமும் , தேவையான காசும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் பிரமாண்டத்தை கொடுத்து விடலாம்... ஆனால் சேது, பருத்திவீரன் ,சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் எடுக்க வாழ்க்கையை பற்றிய புரிதல் வேண்டும்... அந்த புரிதலை செல்லுலோய்டில் அப்படியே பிரதிபலிக்க வைக்க , அதை ரசிகனின் மனதில் அப்பட்டமாய் பதிய வைக்க படைப்பு திறமை வேண்டும்... அது யாருக்கு இருக்கிறதோ அவன்தான் உண்மையான படைப்பாளி... உண்மை என்னவென்றால் அதை போன்ற படைப்புகளை சங்கரால் தர முடியவில்லை என்பதுதான்...
அவரை சரித்திரம் என்று சொல்ல முடியாமல் போனதிற்கு இன்னொரு காரணம் அவர் படங்கள் முழுவதும் ஒரே டெம்ப்ளேட்டில்தான் இருக்கும்... முதல் பாதியில் ஹீரோ சட்ட விரோதமான காரியங்கள் (பெரும்பாலும் கொலை) செய்துகொண்டு இருப்பான் .. ஆனால் அவன் குடும்பத்தினர்க்கே அவன் செய்யும் கொலைகள் அடிக்கும் கொள்ளைகள் எல்லாம் தெரியாது ... அவர்கள் முன் அம்மாஞ்சியாக நடந்து கொள்ளுவான்..தொடர்ந்து நடக்கும் இந்த அசம்பாவிதங்களை எல்லாம் ஒரு போலீஸ் ஆபீசர் விசாரணை செய்து வருவார்.. ஒரு கட்டதில் ஹீரோ அவரிடம் மாட்டி கொள்ளுவான் ... அப்புறம் பிளாஷ்பெக் வரும் ஏன் ஹீரோ இதையெல்லாம் செய்கிறான் என்பதர்க்கான விளக்கம் அதில் இருக்கும்... ஹீரோ போலீசிடம் இருந்து தப்பி தான் செய்ய நினைத்த காரியத்தை செய்து விடுவான் .. இதில் எல்லா படங்களிலும் ஹீரோ அந்த தவறுகள் செய்வது சமூகத்தை திருத்துவதற்காக ... அவன் அப்படி செய்ய காரணம் சமூகம் செய்யும் தவறுகளால் அவன் பாதிக்கபட்டு இருப்பான்... அதில் வெகுண்டெழுந்து தான் பாதிக்கப்பட்டதை போல இனி யாரும் பாதிக்கப்பட கூடாது என்று தவறு செய்பவர்களை எல்லாம் போட்டு தள்ளுவார்... (இதில் காமெடி என்னவென்றால் ஹீரோ அரசியல்வாதிகளால் பாதிக்கபட்டிருந்தால் லஞ்சம் வாங்குபவர்களை கொலை செய்ய மாட்டார் படம் முழுவதும் அவர் டார்கெட் அரசியல்வாதிகள் mattume .. அதே போல லஞ்சம் வாங்குபவர்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கொலை செய்ய மாட்டார்.. இப்படி ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோவை போல வேலை செய்து கொண்டிருப்பார்) கடைசியில் சமூகம் அவனால் மாற்றபட்டு இருக்கும் .... இது ஒருவகையான டெம்ப்லெட்...
இன்னொரு வைகையான டெம்ப்ளேட் ஹீரோ கஷ்டபட்டு ஒரு விஷ்யம் செய்திருப்பான் ... அதை சமூக முன்னேற்றதிர்க்கு பயன்படுத்த நினைப்பான்... ஆனால் அதர்க்கு அவனுடய துறையிலேயே இருக்கும் இன்னொரு பெரிய மனிதரின் துணை தேவைப்படும் .. ஆனால் அந்த பெரிய மனிதர் ஹீரோவை போல நல்லவனாக இருக்க மாட்டார் ... ஹீரோ நினைத்தது நடந்தால் தான் நினைத்தது நடக்காது என்பதால் அதற்க்கு முட்டுக்கட்டை போட்டு கொண்டு இருப்பார் வில்லன் ... ஒருகட்டத்தில் ஹீரோ வில்லனால் தான் சம்பாத்தித்த அனைத்தையும் இழந்து ஒன்றும் இல்லாமல் நிற்பார் (சிவாஜியில் சம்பாத்தித்த பணம் , எந்திரனில் பத்து வருடம் கஷ்டப்பட்டு செய்த ரோபோ).. அப்புறம் மீண்டும் அதிரடியாய் வளர்ந்து வில்லனை ஜெய்பார்..
எனக்கு தெரிந்து இப்படி ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுப்பவர்கள் தமிழ் நாட்டில் ரெண்டு பேர் மட்டுமே ஒருவர் இந்த சங்கர் இன்னொருவர் விக்ரமன் ... ஆனால் விக்ரமனை காமெடி பீஸாக பார்க்கும் நம் ஆட்கள் ஷங்கரை அறிவு ஜீவியாக பார்ப்பது கொடுமை ...
அதே போல சங்கருக்கு எதையும் நறுக்கென்று சொல்ல தெரியாது ... பத்து காட்சிகளில் புரியவைக்க வேண்டிய விசயத்தை ஒரே வசனத்தில் புரிய வைத்து விடலாம்... (இயக்குனர் பாலா வசனமே இல்லாமல் ஒரே ஒரு ஷாட்டில் தன மொத்த கதையையும் புரியவைத்து விடுவார்)... ஆனால் ஷங்கர் இந்த விசயத்தில் பூஜ்யம் ... அவர் படங்களில் எதையுமே ரொம்ப நீட்டி முழக்கிதான் சொல்லுவார்... சமீபத்திய எந்திரன்கூட இதற்க்கு சிறந்த உதாரணம் அதனால்தான் அவர் படங்களில் பக்கம் பக்கமாக வசனம் இருக்கும்... நல்லவேளை இதுநாள் வரை சுஜாதா இருந்தார் இல்லை என்றாள் ஏதாவது ஒரு மொக்கை வசனகர்த்தாவுடன் இணைந்து நம்மை சாகடித்திருப்பார்...
நூறு மனிதனின் வேகம் ஆயிரம் கணினியின் அறிவும் உடைய ரோபோ மனிதனை போல தானே சிந்தித்து செயல்பட ஆரம்பித்தால் என்ன ஆகும்... யோசிக்க ஆரம்பித்தாலே சும்மா பயங்கரமா இருக்குல ... நம்ம ஷங்கரிடம் கேட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற அழகான பெண்ணை பார்த்து காதல் செய்யும் ,அந்த பெண்ணிற்காக சண்டை போடும் ,கொசு பிடிக்கும் என்பார்... இதை காமெடியாக சொல்லாமல் ரொம்ப சீரியஸா வேறு சொல்லி காமெடி பண்ணி இருப்பார்...இதுதான் அவரின் படைப்பு திறமை ... அதுவும் அவரின் கனவு படைப்பு வேறு அது ... இவரை எப்படி சரித்திரம் என்று சொல்ல முடியும்... ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இப்படிதானே... அவரும் பிரமாண்டங்களை மட்டும்தானே படமாக எடுக்கிறார் அவரை உலகமே கொண்டாடுதே .. ஒரு தமிழன் அவரை போல நம் நாட்டில் படம் எடுக்க முயற்சி செய்தால் பாராட்டாமல் குத்தம் சொல்லுகிறார்கள் என்று அவருக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு ஸ்பீல்பெர்க்கின் "schindler's list" DVD அனுப்பி வைக்கிறேன் பாத்துட்டு அவரை ஏன் உலகமே கொண்டாடுதுன்னு சொல்லுங்க.... அதை போன்ற ஒரு படம் வாழ்நாள் முழுவதும் யோசித்தாலும் இவரால் எடுக்க முடியுமா?
26 comments:
நல்ல பார்வை ராஜா.
நீங்கள் எழுதிய கருத்துக்கள் அருமை. ஷங்கர் பற்றி என் பதிவிற்கான சுட்டி மணிரத்னம் - ஷங்கர் சில ஒற்றுமை வேற்றுமைகள்
ஷங்கர் சகாப்தம் அல்ல என்பதை நிரூபிக்க கவனமாக வார்த்தைகளை தொகுத்திருப்பது புரிகிறது. இயக்குனர்களை பொறுத்தவரை இவரைப்போல் அவர் படம் எடுக்கவில்லை. ஆகவே அவர் சரி கிடையாது என்று கூறுவதே தவறு.
பாலா மாதிரி ஸ்ரீதர் படம் எடுத்ததில்லை, பாரதிராஜா மாதிரி பாலா படம் எடுப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒரு வகையில் டிரெண்ட் செட்டர்கள்.
//இரண்டு விசயங்களையும் எடுத்து விட்டு பார்த்தால் அவர் இயக்கிய அத்துணை படங்களும் குப்பைகளே
நீக்கினால்தானே? அது இருப்பதால்தானே வெற்றி பெறுகிறது? அப்படி பார்த்தால் அவதார் படத்தில் பண்டோரா கிரக வாசிகளை நீக்கி விட்டு பார்த்தால் தமிழில் வந்த வியட்நாம் காலனி படம்தானே அது?
// உதாரணம் ஜீன்சில் எலும்புக்கூடு ஆடுவது (ஒரு காதல் படத்திர்க்கு இதெல்லாம் தேவையா,,,,)
ஷங்கர் எதார்த்த சினிமாவோ, அவார்ட் படமோ எடுப்பவர் அல்ல. பேண்டசி என்னும் அதீத கற்பனை படங்களை எடுப்பவர்.
//ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுப்பவர்கள் தமிழ் நாட்டில் ரெண்டு பேர் மட்டுமே ஒருவர் இந்த சங்கர் இன்னொருவர் விக்ரமன்
அவர் டெம்ப்ளேட் படம் எடுப்பவர்தான். அப்படி பார்த்தால் சுப்பிரமணியபபுரம், நாடோடிகள் ஆகியவற்றின் திரைக்கதை கூட இந்த டெம்ப்ளேட்டை ஒத்திருக்கும்.
//சங்கருக்கு எதையும் நறுக்கென்று சொல்ல தெரியாது
அது அவருடைய மேக்கிங் ஸ்டைல். அதை எப்படி குறை சொல்ல முடியும்?
//கொஞ்சம் கணினி அறிவும், அதிகமான நேரமும் , தேவையான காசும் இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் பிரமாண்டத்தை கொடுத்து விடலாம்...
இது முற்றிலும் தவறு. இந்த மாதிரி பிரம்மாண்டங்களை மட்டும் நம்பி படமெடுத்த பலர் ஒரே படத்தில் ஃபீல்ட் அவுட் ஆகி இருக்கிறார்கள்.
ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் எடுக்கும்போது அவர் சினிமா துறைக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகி விட்டது. அவரை விட ஷங்கர் திறமைசாலி கிடையாது. ஆனால் அந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று மட்டும் சொல்ல முடியும். அவருக்கு பெயர் வாங்கி கொடுத்த ஜாஸ் படம் பார்த்தால் அவரின் ஜிம்மிக்ஸ் வேலை தெரியும்.
நீங்கள் சொன்ன டெம்ப்ளேட் படங்களான ஷங்கர் படங்களை பற்றி நிறைய சொல்லலாம். ஆனால் மிக நீளமாக ஆகிவிடும். அவற்றை டெம்ப்ளேட் என்று ஒரே வார்த்தைக்குள் அடக்கி விட்டதால் நோ கமெண்ட்ஸ்...
நீங்கள் பட்டியலிட்டுள்ள படங்களைப்பார்த்தால் எதார்த்த சினிமா வகை படங்களை மிகவும் விரும்புகிறீர்கள் என்று தெரிகிறது. அப்படி இல்லாத ஷங்கர் படங்களை பார்த்தால் வெறுப்புதான் தோன்றும். உங்கள் வாதம் சரி என்று நிரூபிக்க, பொதுவாக மக்கள் முட்டாள் என்று சொல்லி விட்டீர்கள். ஆபாசம், அதீத வன்முறை, ஆகியவை இல்லாமல் படம் எடுத்து அவற்றை வெற்றி பெறவும் செய்திருக்கிறார். உலக சினிமா இயக்குனர்களோடு ஒப்பிட்டு அவரை சகாப்தம் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்திய சினிமாவை பொருத்தவரை சங்கர் ஒரு ட்ரெண்ட் செட்டர்தான். கடந்த பதினெட்டு வருட சினிமா வரலாற்றை சங்கர் இல்லாமல் எழுத முடியாது.
இந்திய சினிமாவுக்கு பல புதிய தொழில் நுட்பங்களை புகுத்தியவர் என்பதையும் மறுக்க முடியாது. மறுபடியும் கண்கட்டி வித்தை, ஏமாற்று வேலை என்று சொல்லாதீர்கள். அந்த வேலைகளைக்கூட திறம்பட செய்தால் அதுவும் சாதனைதான்.
சங்கர் வியாபாரம் செய்யத் தெரிந்த ஒரு சினிமாக்காரர்.அவ்வளவே!
கண்டிப்பாக கலைஞன் அல்ல...
அதனாலேயே அவரால் மனதை தொடும் படங்களைத் தர முடியாது.
ராஜா, உங்கள் பார்வையில் படங்கள் வேறு, சங்கர் படைப்புகள் வேறு.. ரெண்டையும் வித்தியாசப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறன்..
உங்களிடம் பேச வேண்டும்.. please ping me when u r online (see my previous post's comment)
@ பாலா
// பாலா மாதிரி ஸ்ரீதர் படம் எடுத்ததில்லை, பாரதிராஜா மாதிரி பாலா படம் எடுப்பதில்லை. ஒவ்வொருவரும் ஒரு வகையில் டிரெண்ட் செட்டர்கள்.
நான் அவர்களை போன்ற படங்களை அப்படியே எடுக்க சொல்லவில்லை .. அவர்களை போன்ற சிறந்த படைப்பை கொடுக்கவில்லை என்றே சொன்னேன்...
//நீக்கினால்தானே? அது இருப்பதால்தானே வெற்றி பெறுகிறது? அப்படி பார்த்தால் அவதார் படத்தில் பண்டோரா கிரக வாசிகளை நீக்கி விட்டு பார்த்தால் தமிழில் வந்த வியட்நாம் காலனி படம்தானே அது?
இதைதான் நானும் சொல்லி இருக்கிறேன் .... மற்றவர்களை போல படைப்பு திறமை சங்கரிடம் இல்லை என்று.. இல்லுமிநாட்டி சொல்லியதை போல அவர் சிறந்த வியாபாரி ஆனால் கலைஞன் கிடையாது
//ஷங்கர் எதார்த்த சினிமாவோ, அவார்ட் படமோ எடுப்பவர் அல்ல. பேண்டசி என்னும் அதீத கற்பனை படங்களை எடுப்பவர்
நண்பரை ஷங்கர் படங்களை பேண்டசி படங்கள் என்று சொல்லி பேண்டசி படங்களை அசிங்கபடுத்தாதீர்கள்... சரி நீங்கள் சொல்லுவதை போல பேண்டசி படங்களையாவது ஒழுங்காக எடுக்கிறாரா?
நான் சொல்ல வந்தது ஒரு காதல் படத்தில் மென்மையான காதலை சொல்லுவதை விட்டு விட்டு இப்படி ஜிகினா வேலைகள் செய்தார் என்பதுதான்...
//அவர் டெம்ப்ளேட் படம் எடுப்பவர்தான்.
உண்மையை ஒத்து கொண்டதற்கு நன்றி நண்பரே (அடுத்த ரெண்டு வரிகள் இந்த பதிவுக்கு அவசியம் இல்லை என்பதால் அந்த விவாதத்தில் நுழையவில்லை .. இன்னொரு பதிவில் கண்டிப்பாக எழுதுவேன் அந்த படங்களை பற்றி அப்பொழுது விவாதம் செய்யலாம் )
//அது அவருடைய மேக்கிங் ஸ்டைல். அதை எப்படி குறை சொல்ல முடியும்?
அந்த ஸ்டைலே ஒரு குறைதானே
//இது முற்றிலும் தவறு. இந்த மாதிரி பிரம்மாண்டங்களை மட்டும் நம்பி படமெடுத்த பலர் ஒரே படத்தில் ஃபீல்ட் அவுட் ஆகி இருக்கிறார்கள்.
இவர் படங்களுக்கு பிரமாண்டம் தேவை இல்லை ... இவரின் டெம்ப்ளேட்டில் வந்து பெரிய வெற்றி பெற்ற படம் ரமணா அதில் இவர் படங்களில் காட்டியதை போல ஜிகினா வேலைகள் ஏதும் இல்லை ... காட்சி அமைப்புகளில் வித்தியாசபட்டிருக்கும் ... அந்த கார்டூன் பூனை சிரிக்கும் ஒரு காட்சி போதும் அந்த இயக்குனரின் திறமைக்கு சாட்சியாக கூற அதை போன்ற அட போட வைக்கின்ற காட்சிகள் இல்லாமல் வெறும் ஜிகினா வேலைகள் மட்டும் செய்ய தெரிந்த இவரை நீங்கள் எல்லாரும் தூக்கி வைத்து கொண்டாடுவது விசித்திரமாக உள்ளது...
//ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் எடுக்கும்போது அவர் சினிமா துறைக்கு வந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் ஆகி விட்டது. அவரை விட ஷங்கர் திறமைசாலி கிடையாது. ஆனால் அந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்று மட்டும் சொல்ல முடியும்.
எந்திரன் பார்த்தும் ஷங்கர் ஹாலிவுட் பாதைக்கு சென்று கொண்டு இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால் சாரி தல கொஞ்சம் ரஜினி படம் எடுத்த இயக்குனர் என்ற எண்ணத்தில் இருந்து வெளியே வந்து பாருங்கள் உண்மை புரியும் ...
//ஆபாசம், அதீத வன்முறை, ஆகியவை இல்லாமல் படம் எடுத்து அவற்றை வெற்றி பெறவும் செய்திருக்கிறார்.
ஷங்கர் படங்களில் எதெல்லாம் தலைவிரித்தாடுமோ அவையெல்லாம் இல்லை என்று சொல்லுகிறீர்களே நண்பரே ... சிவாஜி எந்திரனில் வேண்டுமானால் ரஜினியின் இமேஜ் காரணமாக அவை தவிர்க்க பட்டு இருக்கலாம் .. மற்ற படங்களில் அவரின் ஆபாச மற்றும் வன்முறை காட்சிகளை மட்டும் இணைத்து ஒரு படமே காட்டலாம்...
// ஆனால் இந்திய சினிமாவை பொருத்தவரை சங்கர் ஒரு ட்ரெண்ட் செட்டர்தான்.
எந்த டிரன்ட் செட் பண்ணினார் என்று கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் நண்பா? எனக்கு அப்படி ஒன்றும் அவர் செட் பண்ணிய டிரென்ட் எதுவும் தெரியவில்லை...
// இந்திய சினிமாவுக்கு பல புதிய தொழில் நுட்பங்களை புகுத்தியவர் என்பதையும் மறுக்க முடியாது.
ஆமாம் இவர் காப்பி அடித்தால் தொழில் நுட்பங்களை புகித்தியவர் என்று சொல்லுங்கள் ... அதையே வேறு ஒருவர் செய்தால் காப்பி என்று அவரை கல்லால் அடியுங்கள் .. இவரை விடவும் பல புதிய "தேவையான" தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்த எத்தனையோ கலைங்கர்கள் உண்டு இந்தியாவில் ... குட்டி பிசாசு என்ற படத்தில் கூட பல புதிய தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்ய பட்டதாம் ... எனக்கு அது போலதான் சங்கரின் தொழில்நுட்பங்களும் ...
@ Radhakrishnan
// நல்ல பார்வை ராஜா.
நன்றி நண்பரே
@ ரஹீம் கஸாலி
படித்தேன் நண்பரே ... ஷங்கரை பற்றிய உங்கள் பார்வையோடு ஒத்து போகிறேன்
//சங்கர் வியாபாரம் செய்யத் தெரிந்த ஒரு சினிமாக்காரர்.அவ்வளவே!
கண்டிப்பாக கலைஞன் அல்ல...
அதனாலேயே அவரால் மனதை தொடும் படங்களைத் தர முடியாது
உண்மை நண்பா ... ஆனால் அவரால் வியாபாரத்தை மறந்து முயற்சி செய்தால் கூட மனதை தொடும் படங்களை தரமுடியாது என்றே நினைக்கிறேன்
// ராஜா, உங்கள் பார்வையில் படங்கள் வேறு, சங்கர் படைப்புகள் வேறு.. ரெண்டையும் வித்தியாசப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறன்..
சங்கரின் படைப்பு என்று எதுவும் கிடையாது நண்பரே ...
// உங்களிடம் பேச வேண்டும்.. please ping me when u r online (see my previous post's comment)
ok friend.. i will ping..
//பேண்டசி படங்களை அசிங்கபடுத்தாதீர்கள்
இப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாதே? பேண்டசி படங்கள் என்று நீங்கள் எதை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை நடக்கவே முடியாத விஷயங்களை நடப்பது போல காட்டினாலே அது பேண்டசிதான்.
//ரஜினி படம் எடுத்த இயக்குனர் என்ற எண்ணத்தில் இருந்து வெளியே வந்து பாருங்கள்
நீங்கள் இதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். ரஜினி படங்கள் எடுத்த இயக்குனர் என்பதால் நான் இதை சொல்ல வில்லை. அப்படி பார்த்தால் அஜீத்தை வைத்து படம் எடுக்காததால் இப்படி சொல்கிறீர்கள் என்று நான் சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா? இது எவ்வளவு அபத்தமோ அதே போலத்தான் நீங்கள் சொல்வது உள்ளது. (அஜீத்தை வைத்து படம் பண்ண தேவை இல்லை என்று சொல்லாதீர்கள்)
எனக்கு பிடிக்கவில்லை அல்லது என் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை ஆகவே இவர் நல்ல இயக்குனர் அல்ல என்று சொல்வது எப்படி சரியாகும்? பொத்தாம் பொதுவாக மக்களையும் முட்டாள்கள் என்று சொல்வது தவறாகும். தரமில்லாத ஒரு பொருள் எவ்வளவுதான் ஜிகினா வேலை செய்தாலும் எடுபடாது.
ஷங்கர் காப்பி அடிக்கிறார் என்று சொல்வது யாரை மனதில் வைத்து என்று தெரிகிறது. நான் ஷங்கர் இந்த தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தார் என்று சொல்லவில்லை. தமிழில் முதலில் பயன்படுத்தினார் என்று சொன்னேன். உதாரணமாக பாய்ஸ் படத்தில் வரும் 180 டிகிரி கேமரா சுழர்ச்சி காட்சி புது தொழில் நுட்பம். அதே நுட்பம் அன்னியனில் சண்டை காட்சியில் பயன்படுத்தப்பட்டது. அந்த சண்டை காட்சி மாட்ரிக்ஸ் படத்தின் காப்பி. முதலாவது தானே பேசப்பட்டது. வெளிநாட்டுக்காரன் வைத்த அதே காட்சி அமைப்பை வைத்தால் கண்டிப்பாக அது காப்பிதான். ஆனால் அவன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது எப்படி காப்பியாகும்? இரட்டை வேட காட்சிகளை இவ்வளவு தத்ரூபமாக கொண்டுவரமுடியும் இந்தியன் படத்தில்தானே காட்டப்பட்டது. இப்போது பார்த்தால் அது மட்டமாக தெரியும். ஏனென்றால் அதைவிட அதிக நுட்பங்கள் வந்து விட்டன.
அவர் காட்சிகளை நீட்டி முழக்குகிறார் என்பது ஒரு குறை என்று சொல்கிறீர்கள். ஒரு சில இடங்களில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் புரியவேண்டும் என்றால் அப்படித்தான் சொல்லவேண்டும். இல்லை என்றால் கமல் படம் மாதிரி சொல்ல வந்தது ஒன்று, புரிந்தது ஒன்று என்று ஆகி விடும்.
// எனக்கு அது போலதான் சங்கரின் தொழில்நுட்பங்களும்
// அவரால் வியாபாரத்தை மறந்து முயற்சி செய்தால் கூட மனதை தொடும் படங்களை தரமுடியாது என்றே நினைக்கிறேன்
இந்த சொந்த கருத்துக்களைக் கொண்டுதான் இந்த பதிவை எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு பிடிக்காத சில விஷயங்களை கருத்தில் கொண்டு, ஷங்கரை ஒரு அடிமுட்டாள் ரேஞ்சுக்கு எழுதி இருப்பது வியப்பாக உள்ளது.
//அவரின் ஆபாச மற்றும் வன்முறை காட்சிகளை மட்டும் இணைத்து ஒரு படமே காட்டலாம்...
ஷங்கரின் படங்களில் நடிகைகளின் உடைகள் ஆபாசமாகத்தான் இருக்கும். ஆனால் அது யார் கண்ணையும் உறுத்தவில்லை. இயக்குனர் நினைத்தால் சேலையை கூட ஆபாசமாக காட்டலாம். பிக்கினியை கூட அழகாக காட்டலாம். உதாரணம்: ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா, பிரசாந்த் தூங்கும் அறைக்குள் நுழையும் காட்சி, காதலனில் நக்மா பிரபுதேவா மீது விழும் காட்சி ஆகியவற்றில் உள்ள ஆபாசம் யாருக்குமே தெரியவில்லையே? வன்முறை காட்சிகள் கண்டிப்பாக இருக்கின்றன. அதீத வன்முறைகள் இல்லை என்றே சொன்னேன்.
//இப்படி பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாதே? பேண்டசி படங்கள் என்று நீங்கள் எதை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை நடக்கவே முடியாத விஷயங்களை நடப்பது போல காட்டினாலே அது பேண்டசிதான்
எனக்கு தெரிந்து பேண்டசி படங்கள் என்றால் கதையின் மையகருத்தில் பாண்டஸி இருக்க வேண்டும் உதாரணம் inception ... தேவையே இல்லாமல் படம் முழுவதும் வெறும் மட்டும் வைத்து அதை பேண்டசி என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை... இல்லை காசை கொட்டி புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுத்தாலும் அது பேண்டசி படம் இல்லை ...அப்படி என்றால் பில்லா எடுத்த விஷ்ணுவரதன் கூட பேண்டசி இயக்குனர்தான்... ஏன் குட்டி பிசாசுகூட ஒருவகையில் பேண்டசி படமே ... மேலும் ஜீன்ஸ் படம் ஒரு பேண்டசி படம் என்பதை நீங்கள் கூறித்தான் தெரிந்து கொண்டேன்....
//அஜீத்தை வைத்து படம் எடுக்காததால் இப்படி சொல்கிறீர்கள் என்று நான் சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா?
ஷங்கர் அஜித்தை வைத்து படம் எடுத்திருந்தாலும் இப்படிதான் கூறுவேன் ... எனக்கு அஜித் வேறு அவரை வைத்து இயக்கம் இயக்குனர்கள் வேறு ... அஜித்துடன் இணைந்து விட்டார் என்பதற்காய் அவர்களை திறமையான இயக்குனர் என்று கூறுவதில்லை...
//பொத்தாம் பொதுவாக மக்களையும் முட்டாள்கள் என்று சொல்வது தவறாகும்
நான் மக்களை முட்டாள்கள் என்று கூறவில்லையே .. (ஷங்கரை அதிபுத்திசாலி என்று கூறுபவர்களை வேண்டுமானால் அப்படி எடுத்துகொள்ளலாம்) ..
//ஷங்கர் காப்பி அடிக்கிறார் என்று சொல்வது யாரை மனதில் வைத்து என்று தெரிகிறது. நான் ஷங்கர் இந்த தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தார் என்று சொல்லவில்லை. தமிழில் முதலில் பயன்படுத்தினார் என்று சொன்னேன்
நீங்களே என் வழிக்கு வந்து விட்டீர்கள் ... நீங்கள் சொல்லுவதை வைத்து ஷங்கரை ஒரு technician (but not best )என்று வேண்டுமானால் கூறலாம் ... ஆனால் இயக்குனர் என்பதற்கு இதையும் தாண்டி பல திறமைகள் வேண்டும் ... அது அவரிடம் கிடையாது ...இதைத்தான் நான் என் பதிவில் கூறியுள்ளேன்...
// ஷங்கரின் படங்களில் நடிகைகளின் உடைகள் ஆபாசமாகத்தான் இருக்கும். ஆனால் அது யார் கண்ணையும் உறுத்தவில்லை
உங்கள் கண்ணை உறுத்தவில்லை என்பதற்காய் யாரையும் உறுத்தவில்லை என்று ஆகிவிடாது... ஜென்டில்மேனில் இருந்து அந்நியன் வரை அவர் படங்களில் ஆபாசம் இழையோடும் காட்சிகள் ஏராளம்... அதில் உச்சகட்ட ஆபாசம் பாய்ஸ் படத்தில் இருக்கும் ...
படத்தை இன்னொரு முறை பாருங்கள் நண்பரே உங்களுக்கே தெரியும் ...
//வன்முறை காட்சிகள் கண்டிப்பாக இருக்கின்றன. அதீத வன்முறைகள் இல்லை என்றே சொன்னேன்
விஜயகாந்த் படங்களுக்கு பிறகு ரத்தம் தெறிக்கும் சண்டைகாட்சிகள் அதிகம் இருப்பது சங்கரின் ஆரம்பகால ஜென்டில்மேன் மற்றும் இந்தியனில்தான்
நண்பரே
//ஷங்கர் அஜித்தை வைத்து படம் எடுத்திருந்தாலும் இப்படிதான் கூறுவேன்
அந்த கேள்வியே அபத்தமானது என்று சொல்லிவிட்டேன். பிறகு ஏன் இப்படி ஒரு தன்னிலை விளக்கம்?
//ஆனால் இயக்குனர் என்பதற்கு இதையும் தாண்டி பல திறமைகள் வேண்டும் ... அது அவரிடம் கிடையாது
இது உங்கள் தனிப்பட்ட கருத்து என்பதே நான் சொல்ல வந்தது.
ரத்தம் தெரிப்பது மட்டுமே வன்முறை ஆகாது. பருத்தி வீரனில் பன்றி மேய்க்கும் பெண்ணை கொலை செய்வதை, கருப்பு வெள்ளையில்தான் காட்டுவார்கள். ஆனால் அந்த காட்சியை பார்க்கும்போது மனது படபடக்கும். அந்த மாதிரி ஷங்கர் படத்தில் கிடையாது.
உடைகள் கண்டிப்பாக உறுத்தாது. கொலம்பஸ் பாடலில் பின்னால் ஆடும் பெண்கள் பாடல் முழுவதும் பிக்கினியில்தான் வருவார்கள். யாராவது கண்டு கொண்டார்களா?
நான் ஷங்கர் காப்பி அடிக்கிறார் என்று நீங்கள் சொன்ன கருத்துக்கு பதிலாக சொன்ன விஷயம் ஷங்கர் புது தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார் என்பது. அதை பிடித்துக்கொண்டு அவர் ஒரு டெக்னிசியன் அவ்வளவுதான் என்கிறீர்கள். அதிலும் என்று மெனக்கேட்டு but not best என்று ஒரு வார்த்தையை சேர்த்துக்கொள்கிறீர்கள். இது அவர் மீதான வெறுப்பின் வெளிப்பாடுதானே. அவர் அமர்ந்து அந்த வேலைகளை செய்யவில்லை. தான் மனதில் தோன்றும் விஷயங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை தேடி சென்று வேலை வாங்குகிறார். (உடனே அவர் ஒரு சூப்பர் வைசர்(but not best) என்று கூறி விடாதீர்கள்)
//நான் மக்களை முட்டாள்கள் என்று கூறவில்லையே .. (ஷங்கரை அதிபுத்திசாலி என்று கூறுபவர்களை வேண்டுமானால் அப்படி எடுத்துகொள்ளலாம்) ..
நீங்கள் அப்படி கூறவில்லை. ஆனால் ஷங்கர் எடுத்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி படங்கள். மக்களிடம் அவர் படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆக பெரும்பாலான மக்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். ஆகவே அவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றுதானே அர்த்தம்.
ஷங்கர்தான் உலகத்திலேயே மிகச்சிறந்த இயக்குனர் என்று நிரூபிக்கும் நோக்கம் எனக்கில்லை. அது உண்மை கிடையாது. ஆனால் ஷங்கர் என்பவர் ராமநாராயணன், விக்ரமன் போன்றவர்களை விட கேவலமானவர், அவர் அடி முட்டாள் என்று பொருள்படும் படி எழுதுவது ஏற்கமுடியாதது.
தமிழ் படங்களை ஒரு குறிப்பிட்ட genreக்குள் அடக்க முடியாது. ஆங்கில படங்கள் அந்த genreரின் மையப்புள்ளியை சுற்றி வருமாறு எடுக்கலாம். தமிழில் எடுக்க முடியாது. அப்படி எடுத்து தோல்வி அடைந்த ஒரு படம் குருதிப்புனல்.
ஒரு காதல் படத்தில் எலும்பு கூடு ஆடும் பாடல் தேவையா என்றால், அந்த காட்சியின் சுவாரசியத்தை கூட்ட தேவைதான்.
இப்படி பார்த்தால் பருத்தி வீரனில் அரவாணிகள் ஆடும் ஊரோரம் புளியமரம் பாடல் தேவையா, பிதாமகனில் சிம்ரன் ஆடும் பாடல் தேவையா, நான் கடவுளில் போலீஸ் ஸ்டேஷன் காட்சி தேவையா, நாடோடிகளில் யக்கா யக்கா பாடல் தேவையா என்று கேட்டுக்கொண்டே போகலாம்.
உண்மைதான் நண்பரே அவர் ஒரு சூப்பெர்வைசர்தான் ...
அப்பறம் நம்ம ஷகீலா அக்கா படங்களையும் நிறைய மக்கள் பார்த்து பெரிய வெற்றி அடைய செய்கிறார்கள் அவரை ஏன் யாரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட மாட்டேன்கிறார்கள் .. நண்பரே நீங்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள மாட்டேன்கிரீர்கள் ... ஷங்கர் ஒரு சிறந்த சினிமா வியாபாரி அதில் மாற்று கருத்தே இல்லை அதனால்தான் அவரின் டெம்ப்ளேட் படங்கள் இனிமேல் ஓடாது என்பதை புரிந்து கொண்டு (அந்நியனில் மக்கள் ஊதிய அபாயசங்கு)ரஜினியை பயன்படுத்தி கொண்டு இருக்கிறார் .. முதல்வனில் தன படைப்பின் மேல் இருக்கும் நம்பிக்கையில் ரஜினி இல்லை என்றால் அர்ஜுன் என்று அவரை வைத்து இயக்கினார்.. ஏன் எந்திரனில் அவரால் அந்த முடிவுக்கு வர இயலவில்லை (பட்ஜெட் அது இது என்று கூறாதீர்கள் கதை அதை படைத்த விதம் நன்றாக இருந்தால் யார் நடித்தாலும் படம் ஹிட் ஆகும்) ஆனால் அவரை சிறந்த இயக்குனர் என்று கண்டிப்பாக கூற முடியாது எந்த பின்னணியும் இல்லாமல் கதையும் அதன் ட்ரீட்மென்ட் மட்டுமே வைத்து ஹிட் ஆனா களவாணி போன்ற படங்களை அவரால் கண்டிப்பாக தர முடியாது... இதுதான் என் பதிவில் நான் கூறியது
அப்பறம் குருதிபுனல் பற்றி கூறிய நீங்கள் உன்னை போல் ஒருவனை பற்றி கூறவில்லையே (கமல் படம் பற்றி நான் இங்கே சொல்ல காரணம் வேறு படம் எதுவும் எனக்கு தோன்றவில்லை)விடுங்கள் அடுத்து 3idiots படம் எடுக்க போகிறாராம் பாப்போம் கதையை நம்பி படத்தை வெற்றி பெற செய்கிறாரா இல்லை ஜிகினா வேலைகளை நம்பி அமிர்கான் பேரை கெடுக்கிறாரா என்று
நான் ஷங்கரை விகரமன் ராம நாரயனை விட கேவலமாக கூறவில்லை அந்த மாதிரியான இயக்குனர்களின் வரிசையில் அவர்தான் கிங் ...
பருத்திவீரனில் பிதாமகனில் அவர்கள் நம் மக்களின் சினிமா மோகத்தையும் அவர்களின் கேளிக்கை ஆட்டங்களையும் நக்கலாகவும் யதார்த்தமாகவும் காட்டி இருப்பார்கள் .. அதை அந்த எலும்புகூடு நடனத்தோடு ஒப்பிட முடியாது ...
எனக்கு ஷங்கர் மேல் வெறுப்பெல்லாம் இல்லை நண்பரே ... உண்மையை சொன்னேன் அது உங்களுக்கு வெறுப்பாக தெரிந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது
\\பரிட்சை பேப்பரில் எழுத எந்த விஷயமும் இல்லாதவனே கலர் கலராக படம் போட்டு கஷ்டபட்டு பேப்பர டெக்கரெட் பண்ணி , வாத்தியார ஏமாத்த முயற்சி செய்வான்.. \\ நச்....!!
Post a Comment