Followers

Copyright

QRCode

Wednesday, October 6, 2010

மாற்று திறனாளிகளும் வல்லரசு கனவும் ....நேற்று ஒரு இணையதளத்தில் ஒரு புள்ளி விபரம் காண நேர்ந்தது.. இந்தியாவில் இருக்கும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கை ஆஸ்த்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமாம்... சென்ற மே மாதம் வரையிலான கணக்கெடுப்பில் இந்தியாவில் இருக்கும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கை ரெண்டு கோடியே அம்பது லட்சமாம் ... ஆஸ்த்திரேலியாவின் மொத்த மக்கள் தொகையே ரெண்டு கோடியே ஐந்து லட்சம்தானாம்...

ஏன்  இந்த பிரமாண்ட எண்ணிக்கை? காரணம் மிக எளிது , நாம் நாட்டில் கருவில் உருவாகும் மாற்று திறனாளிகள் மிக மிக குறைவுதான் .. நம்மால் உருவாக்கப்படும் மாற்று திறனாளிகளின் எண்ணிக்கையே இந்த பிரமாண்டமான எண்ணிக்கைக்கு காரணம்...


ஒரு குழந்தை இயற்கையாக மாற்று திறனுடன் பிறப்பதர்க்கு காரணம் அதன் ஜீனில் உருவாகும் குளறுபடிகளே ... இது பரம்பரை குறை... இதை நம்மால் தடுக்கவே முடியாது ...ஆனால் நன்றாக எந்த குறையும் இல்லாமல் கருவில் உருவாகும் குழந்தைகள் மாற்று திறனுடன் பிறப்பதர்க்கு மிக முக்கிய காரணம் நாம் நாட்டில் பல கிராமங்களில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாமல் போவதே... கருவில் இருக்கும் குழந்தைகள் நல்ல வளர்ச்சி பெற சில ஊட்டசத்துக்கள் அவசியம் தேவை... இல்லாமல் போனால் ஏதாவது ஒரு உறுப்பின் வளர்ச்சியில் குறை கண்டிப்பாய் உருவாகும்.. நம்  கிராமப்புற பெண்களுக்கு அந்த ஊட்டசத்துக்கள் இன்று கிடைக்கின்றனவா? இல்லை அதை பற்றிய விழிப்புணர்ச்சியாவது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? கண்டிப்பாக கிடையாது... அரசாங்கம் இன்று வீட்டுக்கு வீடு இலவசமாக டீவீ , கேஸ் என்று கொடுப்பதில்தான் கவனம் செலுத்துகிறது... அதற்க்கு பதில் ஒவ்வொரு கிராமத்திலும் முடியவில்லை என்றாள் ஒரு ஐந்து அல்லது பத்து கிராமங்களுக்கு சேர்த்து ஒரு சிறிய அரசு மருத்துவமனையை கட்டி  கொடுக்கலாமே.. மாட்டார்கள் இதனால் அவர்களுக்கு என்ன  லாபம்? 

சரி அந்த பெண்கள் எப்படியாவது கஷ்டபட்டு பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றுக்குள் எந்த குறையும் இல்லாமல்  வளர்த்து பிரசவ வலி வரும் நேரத்தில் பிரசவம் பார்க்க எந்த வசதியும் இல்லாமல் அவர்களாகவே பிரசவம் பார்க்க வேண்டி வரும் ... நம் அரசாங்கம்தான் அதற்க்கும் எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லையே.. இன்றய தேதியில் முறையான மருத்துவ வசதிகளுடன் பிரசவம் பார்த்தாலே நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டி வருகிறது... இதில் எந்த வசதியும் இல்லாமல் அவர்களாகவே பிரசவம் பார்த்தால் என்ன நடக்கும் ... பாதிக்கும் மேல் குழந்தைகள் ஏதாவது குறையுடனே பிறக்கும்... இதுவும் ஒரு மிக பெரிய காரணம் ...


அடுத்து ஒரு காரணம் காசுக்காக குழந்தைகளை கடத்தி அவர்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்... நான் கடவுள் படத்திலேயே பார்த்திருப்பீர்கள் இதை ... நாம் தெருவிலோ இல்லை பேருந்து நிலையங்களிலோ பார்க்கும் பிச்சை எடுக்கும் குழந்தை உண்மையில் ஏதாவது பணக்கார வீட்டில் பிறந்திருக்கலாம்... சில சுயநல மிருங்களின் பணத்தாசைக்கு பலியாகி நம் நாட்டின் அவமானசின்னமாகி விட்டார்கள்...

அடுத்து நம் நாட்டில் நடக்கும் அபரிமிதமான விபத்துக்கள்... தண்ணி அடித்து விட்டு போதையில் வண்டி ஓட்டும் மூளை இல்லாதவர்கள் நம் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்... இவர்களால் அன்றாடம் நடக்கும் விபத்துகளால் கை கால்களை இழந்து ஊனமாகும் அப்பாவிகள் அதிகம் ... குறைந்த பட்ச தனிமனித ஒழுக்கம்கூட  இல்லாமல் போனதே இதற்க்கு காரணம் ... அது சரி அரசாங்கமே குடிக்க பாரும் நடத்தி அதில் வண்டி மற்றும் கார் நிறுத்த டோக்கணும் தரும் ஒரே நாடு எனக்கு தெரிந்து நாம் வாழும் இந்த பாரத தேசம் மட்டுமே..


நம் நாட்டில் இருக்கும் சாலைகளின் உலகதரம் அனைவரும் அறிந்ததே... எனக்கு சென்னை , பெங்களூர் போன்ற பெரிய பெரிய நகரங்களில் வண்டி ஓட்டி  பழக்கம் இல்லை .. நான் சொல்வது தென்மாவட்டங்களில் இருக்கும் சாலைகளின் நிலை... புதியதாக போட்டு இருக்கும் தார் சாலைகள் இரண்டு நாள் மழை பெய்தால் பள்ளிளுத்துவிடும்... நேற்று சாலை நன்றாகத்தானே இருந்தது என்று நீங்கள் வண்டியை கொஞ்சம் வேகமாக ஓட்டினாலும் அதோ கதிதான் .. நேற்று உங்களுக்கே தெரியாமல் பெய்த மழையில்  உருவாகி இருக்கும் .பள்ளத்தில்   விழுந்து கைகால்களை ஒடித்து கொள்ளவேண்டியதுதான்...


மழை பெய்யாத கோடை காலங்களில் சாலை முழுவதும் ஒரே தூசி படலம்தான்.. நீங்கள் வண்டியில் போகும் பொழுது உங்கள் முன்னாள் ஒரு பேருந்தோ இல்லை லாரியோ சென்று நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் அதன் பின்னால் சென்றாள் போதும் உங்களுக்கு ஆஸ்த்துமா , சைனஸ் போன்ற மூச்சு தொந்தரவுகள் இலவசமாக கிடைக்கும் ... எங்கும் தூசி எதிலும் தூசி மயம்தான் ...    


நம் சாலைகள் எங்கும் நிறைந்திருக்கும் வேகதடைகள் இன்னொரு முக்கிய காரணம் .. வேகதடைகள் விபத்தை குறைக்கதான் என்ற விதி தழைகீலாய் போனது நம் நாட்டில்தான்... நான் தினமும் அறுபது கிலோமீட்டர் வண்டியில்தான் சென்று வருகிறேன் ... அந்த தூரத்திர்க்குல் நான் கடக்க வேண்டிய வேகத்தடைகளின் எண்ணிக்கை முப்பதுக்கும் மேல் ... அதுவும் ஒவ்வொரு தடையும் ஒரு சின்ன மலை போல இருக்கும் .. அதில் வண்டியை ஏற்றி இறக்குவதே பெரிய சர்க்கஸ் சாகசம்தான்...  தினமும் புதுசு புதுசாக சில வேகதடைகள் முலைக்கும்..  இரவு நேரங்களில் இந்த வேகதடைகள் கண்ணுக்கே தெரியாது ... அதில் வெள்ளை  நிற கொடும் இருக்காது... சிவப்பு நிற சிக்னலும் இருக்காது ... வேகத்தடைக்கு நூறு மீட்டர் முன்னாள் ஒரு அறிவிப்பு போர்டும் இருக்காது ... இரவு நேரத்தில் புதியதாக ஒருவன் அந்த ரூட்டில் வந்தால் அவ்வளவுதான் செத்தான் ... அவன் போகும் வேகத்திர்க்கு அந்த குட்டி மலையில் மோதினால் சிதறு தேங்காய்தான்...


ரோட்டுல நடந்து போறதுல நம்ம ஊர் மக்கள மிஞ்ச ஆளே கெடையாது ...  ஹை வேய்ஸ்ல நடுவுள ஒரு சின்ன கிராமம் வந்தா ,அந்த ஊருகாரன் பண்ற அளப்பறை தாங்க முடியாது ..  அவன் ஊர் வழியா  ஒரு ரோடு போனால் அத ஏதோ அவனே அவங்க அப்பன் காச செலவு பண்ணி போட்ட மாதிரி தெனாவெட்டா நடு ரோட்டுல நடந்து போவாணுக.. நாம என்னதான் ஹாரன் அடிச்சாலும் ஒரு இஞ்ச்கூட நகர மாட்டாணுக்க .. நாமதான் பிரேக் பிடிச்சி வண்டிய   திருப்பி நகர்ந்து போகணும் ... இப்படி தெனாவெட்டா நடந்து போரவங்க மேல ஏதாவது ஒரு வண்டிக்காரன் தெரியாம மோதிட்டான் அவ்ளோதான் ... எங்க ஊருள எல்லா வண்டிக்காரனும் வேகமா போரான் , இதனால இங்க நிறைய விபத்துக்கள் நடக்குது... இங்க ஒரு வேகத்தடை போட்டே ஆகனும்னு சாலை மறியல் போராட்டத்துல இறங்கிடுவாணுக... அதிகாரிகளும் பிரச்சனை முடிஞ்சா போதும்ன்னு ஒன்னுக்கு ரெண்டா அவசர அவசரமா வேகத்தடை போட்டு கொடுக்க .. அன்னைக்கு ராத்திரியே வேகதடை இருக்கிறது தெரியாம பைக்காரன் எவனாவது வேகமா வந்து ரத்தகளரியா விழுந்து கெடப்பான்...

இதுபோதாதுண்ணு நடு ரோட்டுல நாய் , எருமைண்ணு சுதந்திரமா நடமாட வீட்டிடுவாணுக்க... நானே ஒருமுறை நைட் நேரம் ஒரு கறுப்பு நாய் மேல தெரியாம  மோதி ஒரு வாரம் ஆஸ்பத்திரியில கெடந்தேன் ...  நான் மோதின நேரம் எதிரில்  எந்த பெரிய வண்டியும் வரவில்லை... இல்லைனா விழுந்த வேகத்துக்கு அந்த வண்டி ஏறி நான் சட்னி ஆகி இருந்திருப்பேன்... இப்படி நாய் மேல மோதி பரலோகம் போனவங்க நிறைய பேரு நம்ம ஊருள...  


இது தவிர்த்து தீவிரவாதம் , சாதி கலவரம் என்று வாரம் ஒருமுறை எங்காவது நடந்தேறும் வன்முறைகள்... ஒவ்வொரு கலவரத்திலும் சொல்லபடும் படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் மாற்று திறனாளிகள் எண்ணிக்கையில் சேர்ந்து விடுவார்கள்... 

இப்படி எந்த நிமிடமும் நாம் கொஞ்சம் கவனம் சிதறினாலும் அந்த இரண்டு கோடியே அம்பது லட்சம் எண்ணிக்கையில் ஒன்று கூடி விடக்கூடிய அபாயம் இருக்கிறது... நாம பிறந்ததில் இருந்து சாகுற வரைக்கும் மாற்று திறனாளியா மாறுவதர்க்கு நிறைய வாய்ப்புகள் நம் நாட்டில் ... இந்த லட்சணதில் நம்ம நாடு வல்லரசா ஆக போகுதுண்ணு கனவு வேற...  முதலில் நாட்டு மக்களுக்கு அடிப்படை  பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் பிறகு காணலாம் வல்லரசு கனவை...10 comments:

எஸ்.கே said...

மாற்றுத் திறனாளியாய் வாழ்வதில் சில, பல பிரச்சினைகள் இருந்தாலும் சாதாரணமாகவே வாழ முடிகிறது. (நானும் ஒரு மாற்றுத் திறனாளிதான்).
ஆனால் தாங்கள் சொல்வது போல் அடிப்படை பிரச்சினைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் வல்லரசாவது வெறும் கனவுதான்.

"ராஜா" said...

//தாங்கள் சொல்வது போல் அடிப்படை பிரச்சினைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் இல்லையென்றால் வல்லரசாவது வெறும் கனவுதான்

ஆமாம் நண்பரே இவர்கள் கொஞ்சம் முயற்சி செய்திடலாம்

// மாற்றுத் திறனாளியாய் வாழ்வதில் சில, பல பிரச்சினைகள் இருந்தாலும் சாதாரணமாகவே வாழ முடிகிறது

உண்மை நண்பரே எனக்கும் நிறைய மாற்று திறனாளி நண்பர்கள் இருக்கிறார்கள்

எஸ்.கே said...

நண்பரே நான் ஒரு தொழிற்நுட்ப பதிவர் நான் எப்போது நக்கலாய் எழுதினேன்!? :-)

"ராஜா" said...

நண்பரே கொஞ்சம் சொதப்பி விட்டேன் வேறு பதிவர் என்று எண்ணி... பின்னூட்டம் போட்டு விட்டே உங்கள் பக்கம் வந்து பார்த்தேன் .. அதன் பின்னர் அதை எடுத்து விட்டேன் ... தவறுக்கு மன்னியுங்கள் ...

வினோ said...

nalla pathivu raja... time irunthaal online la varavum...

"ராஜா" said...

@ வினோ

நண்பரே நான் வேலை செய்யும் இடத்தில் அனைத்து chat வசதிகளும் செய்யபட்டுவிட்டன.. வீட்டிர்க்கு சென்றே என்னால் chat செய்ய முடியும் ... அதனால் பெரும்பாலும் என்னால் வர இயலுவதில்லை...

"ராஜா" said...

நண்பரே நான் வேலை செய்யும் இடத்தில் அனைத்து chat வசதிகளும் block செய்யபட்டுவிட்டன.. வீட்டிர்க்கு சென்றே என்னால் chat செய்ய முடியும் ... அதனால் பெரும்பாலும் என்னால் வர இயலுவதில்லை.

Yoganathan.N said...

//ஒரு குழந்தை இயற்கையாக மாற்று திறனுடன் பிறப்பதர்க்கு காரணம் அதன் ஜீனில் உருவாகும் குளறுபடிகளே ...//
நல்ல பதிவு, வாழ்த்துகள்.

ஒரு முக்கியமான கருத்தை மறந்துவிட்டீர்கள். குறிப்பாக நம் சமுதாயத்தில் நடப்பது, அது தான் சொந்தத்திலே திருமணம் செய்து கொள்வது. சொந்த 'ரத்ததுடன்' திருமணம் செய்வதனால், பிறக்கும் குழந்தைகள் மாற்று திறனாளிகளாக பிறக்க அதிக வாய்ப்புள்ளதாக அறிவியல் கூறுகிறது. ம்ம்ம், கேட்க மாட்டோமே நாம், அக்கா மகள், அத்தைப் பையன் என சொந்தம் விட்டுப் போயிடக் கூடாதே... கொடுமை...

மு.வேலன் said...

நல்ல சிந்தனை...

மு.வேலன் said...

நல்ல அரசாங்கத்தை உருவாக்குங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails